Pages

குமுதம் இணையதள தொலைக்காட்சி நேர்காணல்: தமிழருவி மணியன்

இந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமை ....

காங்கிரஸ் கட்சியின் தலைமை, ஜனநாயக கொள்கை, காந்தியச்சிந்தனை...

காந்தி, காமராஜ், இராஜாஜி, சோனியா ......

விடுதலைப்புலி, பிரபாகரன், இராஜீவ் காந்தி, இனப்படு கொலை, ஈழத் தமிழர் பிரச்சினை .....

போன்றவகைகளைப் பற்றி குமுதம் இணையதள தொலைக்காட்சியில் தமிழருவி மணியன் அவர்களின் மிக அருமையான, யதார்த்தமான பேச்சு!

முன்னாள் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்....மூத்த காங்கிரஸ் தலைவர்.

ம்ம்ம்...இப்படியும் ஒரு காங்கிரஸ் தலைவரா...??


இதுமாதிரி நேர்காணலில் சம்பிரயாத்துக்குக்காக கேள்விகள் கேட்கும் பேட்டியாளரை என்னென்பது..?!

சினிமா: தமிழ், ஸ்பானிஷ் மற்றும் சில

Volver (to return) -- ஒரு திகில் படத்துக்கான எல்லா சாத்தியகூறுகள் இருந்தும் ....... இந்தப் படம் வேறொரு தடத்தில் பயணிக்கிறது.

வாழ்க்கையின் (பெண்களுக்கான) சில கொடுமைகளையும் அவலங்களையும் கடந்து .... ஆண்கள் இல்லாத 'உலகில்' அவர்களால் தங்களுக்கென்று விருப்பமான ஒரு வாழ்க்கையை வாழமுடியும் என்பதை பதிவு செய்கின்றது.

கொலை, பாலியல் வன்முறைகள்.... என்று கதைகளம் பின்னப்பட்டாலும் கதாபாத்திரங்களில் அதிர்ச்சியோ அல்லது கதை முழுவதும் சோகமோ இல்லாமல் இருப்பது படத்தின் சிறப்பு. வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நம்மையும் மீறி நடக்கும் பொழுது அதன்வழி சென்று தங்களுடைய இயல்பில் வாழும் கதாபாத்திரங்கள் படத்தின் மற்றொரு சிறப்பு. அதையே பார்ப்பவர்களுக்கும் உணர்த்துவது ... ம்ம்ம்.... அதுதான் இயக்குநரின் வெற்றி [Pedro Almodóvar] !

@

ஒன்பது ரூபாய் நோட்டு -- நாவலை படித்துவிட்டு படம் பார்ப்பதில்தான் எவ்வளவு வேறுபாடு. படிக்கும்பொழுதே சத்தியராஜ்ம், அர்ச்சனாவும் வந்துவிட்டு போவது தவிர்க்கமுடியவில்லை.

நாவலைவிட பல விடயங்களை படத்தில் அழகாகவும், யதார்த்தமாகவும் அதே சமயத்தில் அழுத்தமாகவும் சொன்னதற்கு தங்கர்பச்சானுக்கு வாழ்த்துக்கள். நமது கலாச்சாரம், மண்ணின் மணம் , அந்த மண்ணின் வாழும் மனிதர்களின் இயல்பான வாழ்க்கை முறை என படத்தில் இரசிப்பதற்கு பல விடயங்கள்......

இந்தப் படத்தின் நீதி .... வறட்டு கவுரம், பிடிவாதம் இதலாம் விட்டுக் கொடுக்காம இருக்கணும் என்பதா? அல்லது அதலாம் இருந்தா இதுதான் நிலமை.... அப்படினு எடுத்துகிறதா.... என்பது போன்ற கேள்விகள் எல்லாம் படம் பார்ப்பவர்களைப் பொறுத்து......

இதையெல்லாம் மீறி...... மாதவர் படையாட்சி போல் ஒருவரை பற்றி கேள்விப்பட்டு இருக்கலாம் அல்லது நம் வாழ்க்கையில் கடந்து வந்து இருக்கலாம். கிராமங்களுக்கு சென்றால் மாதவரைப்போல நம்மிடையே சிலருண்டு..... அப்படி ஒரு பதிவாகதான் இதை பார்க்கமுடிகிறது.

கதாபாத்திரங்களை சரியாக தேர்வு செய்தாலே படத்தின் பாதி வெற்றி என்பது போல கதாபாத்திரங்களின் தேர்வு கச்சிதம். அர்ச்சனா சில இடங்களில் கத்தல் அதிகமாக இருந்தாலும், சத்தியராஜ்க்கு சரியான போட்டி.

சத்தியராஜ்க்கு இந்த வருடம் தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பு அதிகம்!!

பல வருடங்களுக்கு முன் எழுதின நாவலை படத்திற்காக சிலதை மாத்தி இருக்கிறார் (நாசர் - ரோகினி காட்சிகள்...).

தங்கரின் பேட்டி (தமிழன், பிட்சா...) என்று சில வெறுப்பேற்றினாலும்..... இது மாதிரி படைப்புக்காக அதையெல்லாம் மறந்துடலாம்!

@

அஞ்சாதே -- டைட்டில் போடும் பொழுது படத்திற்குப் பின் இருக்கும் கலைஞர்களை முதலில் போட்டுவிட்டு நடிகர்/ நடிகைகள் பெயர்கள் கடைசியாக வரும் பொழுது ....... 'அட' !!

படத்தின் முதல் காட்சியில் 'காமிரா விளையாடும் விதம்' இது கொஞ்சம் வித்தியாசமதான் இருக்கும்போல என்ற எண்ணம் அதிகமாகிறது.

ஒரு 'தமிழ் படத்திற்கு' தேவையான எல்லா குணாம்சங்களும் இருக்கும் கதைகளம்தான். திகில் படமாகவும் எடுத்திருக்கலாம்.

இரண்டு கதாநாயகர்கள் - நரேன் & அஜ்மல், கதாநாயகி (விஜயலட்சுமி), வில்லன் [ ப்ரசன்னா (!) ], காமெடி [ பாண்டியராஜன் & குருவி கதாபாத்திரம்], குணசித்திரம் [பொன்வண்ணன்], டூயட், குத்துப்பாட்டு .... இதுவெல்லாம் இருந்தும், கதையை நாம் எதிர்பார்க்காத.... முற்றிலும் வேறொரு கோணத்தில் நகர்கிறது. கொஞ்சம் பிசகினாலும் கதை தவறாக புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருப்பினும் மிக நேர்த்தியாக ..... கதாபாத்திரங்களை நம்மில் படறவிடுவது... அதுவும் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரங்களில்..... ம்ம்ம்...இயக்குநருக்கு பாராட்டுகள்!

காவல் துறையில் சேரும் ஆரம்ப நாட்கள், அந்த பாட்டி, ஒளிஓவியம் குறிப்பாக..... மங்கலான அந்த வெளிச்சத்தில் கால்களை மட்டுமே காட்டும் காமிரா (திரையரங்குகளில் இதற்கு எப்படியான response இருந்தது என்று தெரியவில்லை..), இசை..... என்று படத்தில் ஏகப்பட்ட சமாச்சராங்கள்....

ஓரிரு பாடல்களை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா, கமல், (காணமால் போன) அகத்தியன், சேரன், அமீர், மிஷ்கின் ............. என்று தமிழ் சினிமாவில் இப்படி பட்டியல் பெரிதாக வேண்டும்!!?

உண்மைதமிழன் இந்த படத்திற்கு பதிவு எழுதினதாக நினைவில்லை... அப்படி அவர் எழுதும் பட்சத்தில் ஒரு 50 பக்கம் குறுநாவல் உறுதி... !! ;) அவ்வளவு விசயம் இருக்கு இந்தப்படத்தில்.......

@

'ஆஸ்கர்' வெளிச்சதிற்கு பிறகே பார்க்க வேண்டும் என்று தோன்றிய படங்கள் -- No Country For Old Men & Juno !

No Country For Old Men - க்ரைம் த்ரில்லர். சைக்கோ கதாபாத்திரம். கோயன் சகோதரர்களின் வேறந்த படங்களும் பார்த்ததில்லை. படத்தில் பாதி காட்சிகளுக்கு மேல் இசையில்லை.

'The Silence Of the Lambs' ல் Anthony Hopkins பார்த்து மிரண்டு போனது (படம் பார்த்த பின்பும்..) ஒருவகையான சைக்கோ. இந்தப் படத்தில் வருவது மற்றொரு வகை. முற்றிலும் வித்தியாசமானது. படத்தில் திடீர் திருப்பங்கள் என்று எதுவும் இல்லாமல் ஆனால் பார்ப்பவங்களுக்கு ஒரு திகிலை உண்டாக்குகிறது.

இறுதி காட்சி என்றால் அடிதடி, சண்டை அல்லது 'வீர' வசனங்கள் என்றே பழக்கப்பட்ட நமக்கு ....காவல்துறை அதிகாரி (பெல்) தன் மனைவியிடம் அவருடைய கனவைப்பற்றி சொல்லும் இறுதி வசனங்கள்...... படத்திற்கே ஒரு அழுத்ததை குடுப்பதாகவே தோணுகிறது. [இரண்டு மூன்று முறை இறுதி காட்சியைப் பார்த்த பிறகுதான் புரிந்தது என்பது என்னுடைய தனி கதை !! ]

Juno - ரொம்ப எதிர்பார்ப்புகளுடன் பார்த்த படம் என்பதால் ஏமாற்றம். இவர்களுடைய வாழ்க்கை முறைகளை கொஞ்சம் தெரிந்து கொண்டு பார்த்தால் படம் பிடிக்கலாம். இல்லையென்றால் தூக்கம் வருவதை தவிர்க்க முடியாது. படத்தில் எனக்கு பிடித்தது... அந்த இறுதி காட்சி பாடலுடன்!!

@@

கல்லூரி - II

கல்லூரி - I

நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த பஜ்ஜி, சொஜ்ஜி, சூடான காபிக்கு பின்..... கலந்துரையாடல் தொடர்ந்தது...கொஞ்சம் 'காரமாகவே' ...

160 வருடம் பழமைவாய்ந்த ஒரு கல்லூரி......

ஒரு காலத்தில் தொழில்ஙட்ப கல்லூரிகளில் மட்டுமே இருந்த MCA போன்ற வகுப்புகள் முதல்முறையாக கலைக்கல்லூரியில் ஆரம்பித்த பெருமை தூயவளனார் கல்லூரிக்கு உண்டு.

எப்படி LIBA ஆரம்பித்த சில வருடங்களில் அதன் தரம் உயர்ந்து இப்பொழுது 'டாப் 10' ல் இருக்கிறது. ஆனால் தூயவளனார் கல்லூரியின் கணிப்பொறி பாடத்திட்டங்கள் மற்றும் இன்னும் பல துறைகளின் செயல்பாடுகள் 'கவலைக்கிடமாக' இருப்பதன் காரணம் என்ன.....?

கல்லூரியின் கடைசி வருடம் அல்லது படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்தவுடனாவது அடுத்து என்ன பண்ணலாம்கிற தெளிவை அந்த மாணவ/மாணவிக்கு கல்லூரியால் கொடுக்க முடியவில்லையே.....ஏன்....??

முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த இதுவரை ஒரு துறையோ...திட்டமோ ஏன் இல்லை....?

இப்படி கொஞ்சம் சூடாகவே திசை திரும்பியது....

இதற்கு சேசு சபையின் திட்டங்கள், கொள்கைகள்னு எளிதாக புறந்தள்ளிவிடக் கூடியவைகள் அல்ல...

அனைவரும் ஒருமித்த கருத்தாக சொன்னது.......
  • Active Carrier Guidance, student counseling/counsellors ...
  • More seminars, motivational speakers & industrial exposure
  • Planned campus interviews & get sponsorship
  • Improve communication/contacts between Alumi & College/School

* இதற்கு 'பிள்ளையார் சுழியாக ' முன்னாள் மாணவர்களுக்கென்று ஒரு துறை ஆரம்பித்தல்....

MIT போன்ற கல்லூரிகளில் இருப்பதுபோல ஒவ்வொரு (முன்னாள்) மாணவ/மாணவிகளுக்கென்று ஓர் எண் (Numbering System). உதாரணத்திற்கு 95CS12345 என்றால் எந்த வருடம் முடித்தவர், எந்த துறை மற்றும் அவரது வகுப்பு எண் அந்த கல்லூரியில் படித்தவர்களால் கண்டு கொள்ளமுடியும்.

டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் MITயின் அவருடைய எண்ணை குறிப்பிட்டால் MITல் படித்த எவரும் எளிதாக அவர்களுடைய சீனியர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

* இளங்கலை வகுப்புகளின் பாடத்திட்டங்கள் மற்றும் கண்டிப்பு OK... ஆனால் அதைபோல் முதுகலை வகுப்புகளிலும் இருப்பது .... உதாரணத்துக்கு .. (இதை நம்பிதான் ஆகணும்....) வகுப்பில் படிக்கும் பையனோ அல்லது பொண்ணோ கல்லூரி வளாகத்திலோ அல்லது வெளியவோ 'கடலை' போடுவது தெரியவந்தால் துறை தலைவரிடம் 'விளக்கம்' சொல்லும் அளவுக்கு சீரியசான matter....... !!

* பழைய மாணவ/மாணவிகள் நல்ல நிலையில், உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ seminar, campus interview, indutrial expert speakers போன்ற ஏதாவதொரு வகையில் 'திருப்பி தர' நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள ஒருவரை நியமித்தல்...

* (Atleast) முதுகலை மாணவ/மாணவிகளையாவது inter-college competition, paper presentation போன்றவைகளில் கலந்து கொள்ள ஆசிரியர்கள் உற்சாகப்படுத்துதல்...

* வலைதளம், மின்னஞ்சல் மூலம் தொடர்பில் இருத்தல்..

* வருடத்திற்கு ஒரு முறையாவது இப்படியானதொரு கலந்துரையாடலில் கலந்து கொள்வது... அதை கல்லூரிக்கு தெரிவிப்பது.....

இப்படி சில ஆக்கபூர்வமான எண்ணங்களாக எதிரொலித்தது.

Photo sessionனோடு இனிதே நிறைவுற்றது.

இங்கு ஒன்றை குறிப்பிடவேண்டும். எந்தவொரு திட்டத்திற்கும் காசு தேவை. ஆனால் சேசு சபை நிறுவனங்களில் கல்வி கட்டணம் மிகக்குறைவு. புது கட்டிடம் அது இதுவென்று எந்த கட்டணமும் வாங்க மாட்டார்கள். பெரிய நிறுவனங்களில் இருந்தும் sponsorship வாங்க மாட்டார்கள். இந்த sponsorship பற்றி கொஞ்சம் பரிசீலனை செய்யலாம்!

ஜூன் 2007ல் தூய வளனார் கல்லூரி, திருச்சி என்றதொரு (கூகிள்) குழுமம் ஆரம்பித்துள்ளார்கள். மேலும் விவரங்களுக்கு josephites_trichy@googlegroups.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்

குழுமத்தின் மூலம் இதுவரைவந்துள்ள newsletters இங்கே..

சேசு சபை நிறுவனங்களில் படித்த நண்பர்களின் பெயரை இங்கு இணைக்க/தொகுக்க எண்ணம்...

எனக்கு தெரிந்தவரை இங்கு பட்டியல் இடுகின்றேன்.... உங்களுக்கு தெரிந்தவர்களையும் சொல்லுங்கள்.
(விருப்பமில்லையென்றால் தெரிவிக்கவும்....... )

1. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம்
2. எழுத்தாளர் சுஜாதா
3. வை.கோ
4. சுப்பு ரத்தினம் ஐயா, தஞ்சை
5. எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்
6. சகாதேவன் ஐயா, பாளையங்கோட்டை
7. ஜோ
8. ஜான் பீட்டர் பெனடிக்

....... வளரும்

கல்லூரி - I

இந்தியாவில் மட்டுமல்ல உலகில் பல பகுதிகளில் சேசு சபையின் கல்விப்பணி பிரமிக்கதக்கது. குறிப்பாக இந்தியாவில் Xavier Institute of Management, Bhubaneswar (XIMB), Xavier Institute of Social Service (XISS), லயோலா (Loyola), தமிழ்நாட்டில் திருச்சி தூய வளனார் (St. Joseph's), சென்னை லயோலா (Loyola) , பாளையங்கோட்டை தூய சவேரியர் (St.Xavier's) ......
இப்படி அங்கு படித்த மாணவர்களுக்கும், சேசு சபைக்கும் பெருமை சேர்த்த... பெருமை சொன்ன கல்வி நிறுவனங்கள்.

இந்த முன்குறிப்புலாம் எதுக்குன்னா.... வார இறுதியில் (ஏப்ரல் 5, 2008) கலிபோர்னியா வளைகுடா பகுதியில் சேசு சபையின் கல்வி நிறுவனங்களில்# படித்த (பழைய) மாணவ-மாணவியர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது.

தொடர்புள்ள 30 மாணவ-மாணவியர்களுக்கு அழைப்பிதழ் (evite..!) வந்தது. அதில் சுமார் 18 பேர் கலந்து கொண்டனர். அதிலிருந்து (எனக்கு நினைவில் இருந்த வரை) சில துளிகள்...

* படித்த நாட்களில் கற்றுக்கொண்டவைகள் பின்னாளில் வாழ்வை செழுமைப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருந்தது. (Life Values, Respect, Commitment, Sincerity, Shaping Life style....)

* ஷெப்பர்ட் திட்டம்

* மிகக்குறைந்த கல்வி கட்டணம்.

* ஒழுக்கம் [பள்ளிகூடத்திற்கும், கல்லூரிக்கும்கூட வித்தியாசம் தெரியாது.... அப்படியொரு கண்டிப்பு...;( ]

* Moral Education [வகுப்பு வாத்தியாருக்கு பயப்படுவதைப் போல 'நீதி மொழி' வகுப்பு ஆசிரியருக்கும் பயப்படுவோம்... ;( ]

* சுய விமர்சனம் செய்து கொள்ள உதவிய தியானங்கள், முகாம்கள்.

* சாதி, மதம் என்று பிரித்து பார்க்காத கல்வி முறை/அமைப்பு, ஆசிரியர்கள்.


இங்கு வலைப்பூவில் தூய வளனார் கல்லூரியில் படித்தவர்கள் மூன்று...நான்கு பேர் மட்டுமே(!) எனக்கு தெரியும். அதுவும் அவர்கள் கவிதைகள், கட்டுரைகள் என்று கலக்கி கொண்டிருப்பவர்கள்.

அவர்களைத்தவிர சேசு சபையின் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் கண்டிப்பாக இங்கு நிறைய பேர் உண்டு என்பது எனது எண்ணம். இதைப் பார்ப்பவர்கள் உங்கள் எண்ணங்கள்/அனுபவங்கள் பகிர்ந்து கொண்டாலோ அல்லது வந்ததிற்கு ஒரு 'ஹலோ'(!) சொன்னாலோ மிக்க மகிழச்சி அடைவேன்.

-- தொடரும்

# St. Joseph's College, Trichy
Loyola College, Chennai
St. Xavier's College, Palayamkottai
Arul Anandhar College, Karumathur
DeBritto Hr. Sec School, Devakottai
St. Mary's Hr. Sec. School, Madurai
Carmel Hr. Sec. School, Nagercoil

வெள்ளிக்கிழமை (சிறப்பு) படங்கள் ... ;)










திருமணமான என் தோழிக்கு -- பாலகுமாரன்

கல்லூரி நாட்களில் நான் படித்த முதல் நாவல் "இரும்புக் குதிரைகள்". இன்றும் குதிரையைப் பார்த்தால் அந்த கம்பீரம் பிடிக்கும். பாலகுமாரன், கதை சொல்வதில் வல்லவர்.

'.....................என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும்.' என்று சொல்லும் எழுத்தாளர்களுக்கு மத்தியில்........ வாசகர்களுக்கு, தான் எதிர்கொண்ட பிரச்சனைகளையும், தன்னுடைய அனுபவங்களையும்...... வாழ்க்கையில் நாம் தினமும் சந்திக்கின்ற பிரச்சனைகளை அவர் அலசி ஆராய்ந்து எளிமையாய் சொல்வதில் தேர்ந்தவர்.

நம் சமுதாயத்தில் திருமணம் என்பது சம்பிரதாய சடங்காக இருந்தாலும், மனதில் ஏற்படும் மகிழ்ச்சியும், சந்தோக்ஷமும்.... வீட்டில் களைகட்டத் தொடங்கும். அதை அனுபவித்தவர்களுக்கு தெரியும். ஆனால் பெண்களுக்கு அது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. சிலர் 'அடிபட்டு' திருந்தகூடும். சிலர் மற்றவர்களின் அனுபவங்கள் மூலமாக...

'திருமணமான என் தோழிக்கு..' நாவல் அல்ல! கட்டுரை. நான்கு விதமான குடும்பங்கள். அந்த குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்கள். அதைக் குறித்து பொதுவாக வைத்துக் கொள்ள வேண்டிய கவனம், தெளிவு பற்றி அவருக்கே உரிய பாணியில் சொல்கிறார்.

படிக்கும் பொழுது ... கதைகளில் செயற்கைதனம் இருந்தாலும், சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்லி இருக்கிறார் ..... எப்பொழுதும் போல்!!

தோழிகள் மட்டுமல்ல தோழர்களும் படிக்கலாம்!

கட்டுரையிலிருந்து சில வரிகள் .....

"வெற்றி போதும் என்று தோன்றியவர்கள், வெற்றி பெற்றவர்கள் என்று விலகியவர்கள் சமுதாயத்தின் மிகப் பெரிய விஷவிருட்சங்கள். அவர்கள் தானும் வளர்வதில்லை. மற்றவர்களையும் வளரவிடாதவர்கள். அதிகமிருப்பாதால்தான் மிகப் பெரிய பிரச்சனையாக வாழ்க்கை இருக்கிறது. மற்றவர்களுடைய வெற்றியைப்பற்றி குமுறுகிறவர்கள்தான் இந்த தேசத்தில் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் சோம்பேறிகளாகவும் இருக்கிறார்கள். அந்த சோம்பேறிகள் தானும் ஜெயிக்காது, மற்றவர்களையும் ஜெயிக்கவிடாது ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவைகளை அப்புறப்படுத்தினால் இந்த தேசம் நன்றாக இருக்கும்."

"வீட்டுச் சண்டைகளை மறக்க சினிமாவுக்கோ, நாடகத்திற்கோ செல்பவன் முட்டாள். அவன் வீட்டுக் கூச்சலை மறக்க இன்னொரு கூச்சலுக்குப் போகிறானே தவிர தனிமையில் தன்னுடைய பிரச்சனை என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாதவனாகவே போய் விடுகிறான். தன் பிரச்சினை என்ன என்று சொல்லமுடியாதவன் பிறர் மீது ஆளுமை செலுத்துவது என்பது என்ன. அடித்து உதைத்தலா, அகங்காரத்துடனும், ஆத்திரத்துடனும் பேசுவதா, இல்லை. அவர் சொன்னால் மற்றவர்கள் கேட்க வேண்டும், இவன் சொன்னால் அதில் அர்த்தமிருக்கும் என்று மற்றவர் காது கொடுக்க வேண்டும். அதற்கு பெயர்தான் ஆளுமை. அந்த ஆளுமை உன்னிடம் இருக்கிறதா. நீ சொன்னால் காது கொடுத்துக் கேட்கிறார்களா ஏன் கேட்க வில்லை. உனக்கே உன்னைப் பற்றி புரியவில்லை."

"பயணம் மேற்கொள்ளுகிறபோது வாழ்க்கையின் நிலையாமை ஒரு மனிதனுக்கு புரிகிறது. பயணம் மேற்கொள்ளுகிறபோது உலகத்தினுடைய பிரமாண்டம் புரிகிறது. பயணம் மேற்கொள்கிறபொழுது எத்தனை விதமான மக்கள், எத்தனை விதமான வாழ்க்கை, எத்தனை விதமான முயற்சிகள், எத்தனை விதமான தோல்விகள், எத்தனை விதமான வெற்றிகள் என்பது தெரிந்து போகின்றன. நல்லதும், கெட்டதும் முகத்திற்கு நேரே வந்து பயணத்தின்போது ஓடுகின்றன. நம்முடைய பிரச்சனை ஒன்றுமே இல்லை. நம்மைவிட வேதனைப்படுகிறவர்கள் அதிகம் என்பதும் புரிந்து போகிறது. பூமியின் பரப்பு புரியப் புரியதான் தூசினும் தூசாக இருப்பது தெரிந்து விடுகிறது. ஒரு தூசு இன்னொரு தூசோடு சண்டைப்போடுவதற்கு என்ன இருக்கிறது. என்ன காரணம் இருக்கிறது என்ற தெளிவு வருகிறது."

"இந்திய விவசாயம் இயற்கையோடு நடக்கின்ற சூதாட்டம். இந்தியப் பெண்களின் வாழ்க்கை ஆண்களோடு நடக்கும் போராட்டம். எத்தனை புராணங்கள் விவரித்து விளக்கியபோதும் சக்தி, தாய் எல்லாம் வல்லவள் என்று உரத்த குரலில் பலபேர் பல காலமாக முழங்கியபோதும் இந்த கணம் வரை இந்தியப் பெண் அடிமையாகத்தான் இருக்கிறாள். ஆணின் அட்டகாசத்திற்கு அடங்கியவளாகத்தான் இருக்கிறாள். "

"................ திருமணமாகிய பெண்ணை தன் அம்மாவுக்கு வேலை செய்ய அனுப்புவது என்பது பல ஆண்களின் குறிக்கோளக இருக்கிறது. எனக்கு மட்டும் அனுசரித்தால் போதாது. என் அம்மாவிற்கும், அம்மாவின் அம்மாவுக்கும், அம்மாவின் உறவினர்களுக்கும், அப்பாவின் உறவினர்களுக்கும், எதிர்வீட்டு நண்பர்களுக்கும் இன்னபிற வகையறாக்களுக்கும் அனுசரிச்சதுப் போகவேண்டும் என்று ஒரு முன்னூறு ஆட்களை எடுத்தவுடனே அவள் முன்னே காண்பித்து, அவளை திணறடிப்பது திருமணத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

அனுசரித்து அனுசரித்துப்போய் அவளுக்கென்று சொந்த விருப்பு வெறுப்புகள் எதுவும் இல்லாமல் வெறும் மரக்கட்டையாகவே பெண் முப்பது நாற்பது வயதில் மாறி விடுகிறாள்.

அவளுடைய கலைத்திறனோ, அறிவுத்திறனோ கூர்மைபெறாமல் மழுங்கிப் போய்விடுகிறது. எனவே முடிவெடுக்கத் தெரியாத பேதையாகவே முதிர்ந்த வயதுவரை அவள் வாழ்கிறாள். எல்லா விஷயத்திற்கும் பிறரை நம்பி இருக்கிறாள். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடம் போவதிற்குகூட அவளுக்கு ஆண்களின் துணை தேவைப்படுகிறது. அப்படிப் போகிறவளே நல்ல பெண் என்கிற நிலைமையும் இங்கு இருக்கிறது. அவள் சற்று திமிராகவும், தன்னுடைய அபிப்ராயம் இது என்று சொல்பவளாகவும் இருந்தால் அவள் வாயாடியாக, அகங்காரியாக மற்றவர்களுக்கு காட்சி தருகிறாள்."

"பிரச்சனை எதுவாயினும் பிரச்சனையை தீர்த்து ஜெயித்து விட்டால், ஆண்கள் பதக்கம் குத்துகிறார்கள். தோல்வி என்றால் பெண்களை சுட்டிகாட்டுகிறார்கள். இந்த அவலம் காலகாலமாக நடந்து வருகின்ற ஒரு சோகம்."



இந்த தலைமுறையில் பெண்களுக்கான சில சோகங்கள் மறைந்திருக்கின்றன. முற்றிலுமாக மறைய எத்தனை தலைமுறைகள் ஆகுமோ?