Pages

வாழ்த்துக்கள்!!


கொள்கையில்லாத அரசியல்
மனசாட்சியில்லாத இன்பம்
உழைப்பில்லாத செல்வம்

பண்பில்லாத அறிவு
அறநெறியில்லாத தொழில் வளர்ச்சி
மனிதாபிமானமில்லாத அறிவியல்
தியாகமில்லாத வழிபாடு

போன்ற இருள்கள் அகன்று ...

மனிதாபிமானம் செழித்தோங்க ...

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

நம்பிக்கையுடன்

அன்புடன்...

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு என்றாலே எங்கும் ஒளி வெள்ளம்தான். பெரிய கடைகளில் இருந்து, அலுவலகம், வீடு என்று எங்கு பார்த்தாலும் வண்ண வண்ண விளக்குகள். பார்க்கும்பொழுதே நமக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.


உதாரணத்திற்கு ....
மேலும் பார்க்க இங்கே சுட்டவும்.


நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்!!

தப்புத் தாளங்கள்

'சிவாஜி' (நடிகர் திலகம் மன்னிப்பாராக!) படம் பார்த்தபின் 'சே...ரஜினி படம்லாம் முதல் ஆளா போய் பார்த்து இருக்கோம்.... செமஸ்டருக்கு முந்தின நாள் தளபதி பார்த்தது...நண்பனிடம் தலைவர் படம்தான் சூப்பர்னு சண்டை போட்டது....இப்ப என்னடான... 'சிவாஜி'யை 'சினிமா'தானகிற ஒரு கண்ணோட்டத்தில பார்க்கமுடியாம பெரிய இவன்கினக்கா கேள்விலாம் கேட்கதோணுதே...?!'

என்னுடைய பள்ளிகூடம் அல்லது கல்லூரி காலகட்டத்தில 'சிவாஜி' வந்திருந்தா பிடிச்சிருக்குமோ..என்னவவோ...?!!

நல்ல படம்னா அப்பாவே காசுகுடுத்து பார்த்துட்டு வரச்சொன்னாலும்...அப்பாவுக்கு தெரியாம முதலும் கடைசியுமாய் பார்த்த படம்: 'போக்கிரி ராஜா'! (தலைப்பு....அதுவா அப்படி அமைச்சிருச்சோ..?!)

ம்ம்ம்...ரஜினி படங்கள்ல எனக்கு பிடித்த ஒரு பத்து படங்கள் அப்படினு பட்டியல் போட்டால்.... உடனே நினைவில் வந்ததில்..

1. 16 வயதினிலே
2. முள்ளும் மலரும்
3. ஜானி
4. நினைத்தாலே இனிக்கும்
5. தில்லு முல்லு
6. அன்புள்ள ரஜினிகாந்த்
7. நல்லவனுக்கு நல்லவன்
8. தளபதி
9. அண்ணாமலை
10. பாட்ஷா

பார்க்கணும் நினைக்கிற ரஜினி பட(ம்)ங்கள்: 'தப்புத் தாளங்கள்' & 'அவள் அப்படிதான்'

வாழ்த்துக்கள்: தமிழின் Craigslist!

வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் Craig's List ரொம்பவே புகழ் பெற்றது. குண்டூசி முதல் கார் வரை எல்லாம் கிடைக்கும்....புதியவை, பயன்படுத்தியவை..ஏன்....சில பொருட்கள் இலவசமாககூட கிடைக்கும். நமக்கு தேவையானதை நியாயமான விலைக்கு வாங்கலாம்...விற்கலாம்..

இதனால் என்ன பயனென்றால் நம்மிடம் உள்ள பொருளை முடிந்தவரை விற்று விடலாம். குப்பையில் போட வேண்டியதிருக்காது. ;)

இப்பொழுது Craig's List இந்தியாவிலும் வந்திருக்கிறது. (அல்லது எனக்கு இப்பொழுதுதான் தெரியும்..;)

சென்னையில் மட்டுமல்ல பெங்களூர், டெல்லி,கேரளா, ஹைதரபாத்,மும்மை,கொல்கத்தா என்று பல நகரங்களிலும் உள்ளது.

இதேபோல் சமீபத்தில் நம்ம சற்றுமுன் மக்களும் இதேபோல் ஒரு சேவையை ஆரம்பித்துள்ளார்கள். இதில் பலருடைய உழைப்பு உள்ளது என்பது என் எண்ணம். இதை அவர்கள் இலவசமாக.... ஒரு சேவையாகவே தமிழில் ஆரபித்துள்ளார்கள். அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்!!

வண்ண வண்ண கோலங்கள் - II

ஒரு நாள் நமக்குள் இருந்த கருத்து கந்தசாமி 'உனக்கு பிடித்த எழுத்தை மட்டும் வாசிக்கலாம்ல. நல்லா எழுதியிருந்தா ஒரு பாராட்டாவது சொல்லு'னு உசுப்பேத்த அந்த எண்ணங்களே செயலாகி .... விபரிதமானது. அப்படி ஆரம்பித்ததின் விளைவே... "தென்றல்".

'அவ்வை சண்முகி'னு என்ன ஒரு பெரிய காரணத்தில அந்த கதையின் நாயகன் பேர் வைக்க தோன்றியதோ...அதே போலதான்.. ஒண்ணும் பெருசா காரணப்பெயர்லாம் கிடையாது. ஆனால், வந்த புதிதில் சிலர் பெண் பதிவர் என்று நினைத்து கொள்ள (இப்பகூடதான்..) .. அட 'தென்றல்'னா அது பெண்ணாதான் இருக்கணுமா..ஏன் ஆண்கள் தென்றல்னு பேர் வைக்ககூடாதா ....இதனென்ன மூட நம்பிக்கை ;) !!? இப்படி நானே காரணம் கற்பித்துக்கொள்ள அதுவே தொடர்கிறது.

பதிவுக்கு பெயர்காரணம் என்றவுடன் நினைவுக்கு வருவது நம்ம கொத்ஸ்தான். இலவசக்கொத்தனார்! அவருடைய "இலவசகொத்தனாரியல்" வாசிச்சிட்டு ....... ம்ம்ம்..சொல்ல ஒண்ணும் தோணலை. அதலாம் 'அனுபவிச்சாதான்' தெரியும்..

பங்குசந்தை பற்றி, தினமும் சில குறிப்புகளோடுவந்த பங்குவணிகம் வலைப்பூ பயனுள்ளதாக இருக்க, நமக்கு தெரிந்த பங்குச்சந்தை விசயங்களை...தெரிந்ததை, படித்ததை பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ஆரம்பித்ததே 'நாணயம்'!

எங்கேயோ ஆரம்பித்து சுய புராணத்திற்கு சென்று விட்டது. நிற்க!

சிலரின் எழுத்துக்கள் படித்துவிட்டு அப்படியே பிரமிக்க வைக்கும். பாராட்டாவோ அல்லது ஒரு வார்த்தை சொல்லவோ தோன்றாமல் கடக்க நேரிடும். பல நேரங்களில் புரியாமல் போகும்!! ;) அப்படிதான் டிசே தமிழன், அய்யனார் போன்றோரின் வலை தளங்கள்.

பொருளாதாரத்தின் முக்கியதுவத்தை ஒரு பேராசிரியரைப் போல எடுத்து சொன்னது மா.சிவகுமாரின் எழுத்துக்கள்.

அவரிடம் தமிழில் ஏதேனும் அகராதி போடும் எண்ணமுன்டானு கேக்க ஆவல்!!

முழுக்க முழுக்க தமிழில்தான்(!) அவருடைய பதிவுகள். சில வார்த்தைகள் 'சுத்த தமிழில்' பயன்படுத்துவதால் கட்டுரையை படிக்கும்பொழுது அதன் 'விறுவிறுப்பு'குறைவதுபோல் எனக்கு ஓர் எண்ணம். அதனால்தான் எண்ணமோ அவருடைய சில முக்கியமான எழுத்துக்கள் (கட்டுரை) கவனம்பெறாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்குண்டு.

அடுத்தவர்களின் டைரியை படிப்பதே ஒரு 'த்ரிலிங்'தான்!! ஆனால் அதை உடைத்து போட்டது மா.சிவகுமாரின் 'உள்ள(த்)தைச் சொல்கிறேன்'. எந்த பாசாங்கும் இல்லாத அவருடைய எண்ணங்களும் எளிமையாக புரிந்து கொள்ளகூடிய எழுத்து நடையும் பிடித்து போனது.

ஒருமுறை அவருடைய பதிவில் பாசமலர் பாடலுக்கா அல்லது படத்துக்கா என்று நினைவில்லை எழுதிய விமர்சனத்துக்கு 'எதிராக' என் கருத்தை சொல்ல... அவர் பதில் கூறும்முன் 'அவர் கருத்தை சொல்லிருக்காரு. அதை ஏன்னு எப்படி கேட்கலாம்'னு சில மிரட்டல்கள்...இல்ல பதில்கள் வர.... 'ஆஹா... மா.சி. தனி ஆள் இல்லபோல.. சிட்டிசன் மாதிரியோ?! ' என்ற சந்தேகம் வந்தது.

பேரே வித்தியாசமா இருக்கேனு எட்டிப்பார்த்த பதிவு காட்டாறு. நமக்கும் சில கவிதைகள் 'புரியுதுனு' நினைக்க வைத்தது அவருடைய கவிதைகள். ;)எப்பவுமே ஜாலியான லேசான கவிதைகள்!! ஆனா சில சீரியசான கவிதைகளும் கைவசம் வைச்சிருக்காங்க...எப்ப பதிய எண்ணமோ... அவர்களுக்கே வெளிச்சம்! அவரின் ஆங்கில வலைப்பூவும் அப்பப்ப எட்டிப் பார்ப்பதுண்டு. இவரும் எங்க கல்லூரி!

கவிதைனு சொல்லிட்டு காயத்ரிய சொல்லைனா எப்படி..... முதல் பதிவில் புகைப்படத்துடன் பார்த்தபொழுது... உண்மையான பேரை சொன்னாலே, "நாஸ்தி பண்ற இந்த ஏரியாவில" இந்த பொண்ணு என்னடானா... ஃபோட்டோ வேற publish பண்ணிருக்கேனு ... இணையதளத்தில புகைப்படம் போடுறது எந்தளவுக்கு புத்திசாலிதனம் தெரியலை அப்படினு அடுத்த முறை சொல்லனும் நினைச்சப்ப இன்னொரு நண்பர் அதையே குறிப்பிட்டு இருந்தார். அவருடைய கவிதைகளும், 'சிறப்பான' சினிமா விமர்சனமும் கலக்கல்.