Pages

நான்கு

நான்கு வசிப்பிடம்:

1. சிவகாசி -- ஆரம்பகால பள்ளிபடிப்பு, நண்பர்கள், இன்னும் நினைவிருக்கும் கூட படித்த (அப்போதய...!) தோழிகள் .
2. திருச்சி -- கல்லூரி நாட்கள், வாழ்க்கையின் திருப்புமுனை.
3. சிகாகோ -- உலகிலேயே பெரிய கட்டிடம், LIC தான் இருந்தவனுக்கு, Sears Tower -க்கு பக்கத்து கட்டிடத்தில் வேலை கிடைத்தால்....
4. ஹைதராபாத் -- பூங்கா நகரம், வித விதமான பிரியாணி .

நான்கு அரசியல்வாதிகள்:

1. நல்லகண்ணு - இப்படியும் ஒரு மனிதரா ?
2. சோ - நக்கல், நையாண்டி, 'சோ'தனம்.
3. விஜயகாந்த் - எத்தனை வருசம்தான் கலைஞர், ஜெ. கிட்டவே ஏமாறது?
4. வாஜ்பாய் - அனுபவம், கவிதுவமான பிரதமர்.....

நான்கு படங்கள்:

1. காதலிக்க நேரமில்லை (அப்பாவோட பாக்கணும்)
2. வசீகரா (விஜய் படங்களில் பிடித்த ஒரே படம்...! )
3. அமரம் [மலையாளம்] (தனியா பாக்கணும்...)
4. புது வசந்தம் ('அதே நண்பர்கள்' பட்டாளத்துடன்...)

நாலு மட்டும்தானா.. ;(

நான்கு உணவு வகைகள்:

1. அம்மாவோட 'சுக்கா வருவல்'
2. சகியோட '[சிக்கன்] பிரியாணி'
3. மகளுடன் சாப்பிடும் 'சிக்கன் Nuggets'
4. ரசம், சோறு & ஊறுகாய்

நான்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி:

1. ER
2. The Cosby Show --
3. நீயா?நானா?
4. F.R.I.E.N.D.S - நம்ம favourite, Phoebe தான் ;)


ம்ம்ம்... சம்பந்தமேயில்லாம இப்ப ஏன் இந்த பதிவு.....
வலைப்பதிவைக் கண்டுக்காம விட்டுடகூடாதுகிறதுக்காக.... ;)

தமிழ்

பிறமொழி இலக்கியம், எழுத்தின் ரகசியம், இளம் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பதிவைப் படித்த பொழுது ஒரு பெருமூச்சு மட்டுமே பதில். அவர் குறிப்பிட்ட 50 மொழிபெயர்ப்பு புத்தகங்களில் ஒன்றோ இரண்டோதான் கேள்விப்பட்டவை!! இந்த பதிவை 'பார்க்கும் முன்' தற்செயலாக கிடைத்த புத்தகம், 'மௌப்பனி ரகசியப்பனி - சிவக்குமார் காலச்சுவடு'.....

அவர் குறிப்பிட்ட இளம் எழுத்தாளர்களில் செழியன், தமிழ்நதி, அஜயன்பாலா ... போன்ற மிக சிலரின் படைப்புகள் மட்டுமே அறிமுகம் உண்டு. வேறு சிலரின் பெயர்கள் 'சகி' மூலம் கேள்விப்பட்டதுண்டு. அதோட சரி!!



தென்றல் இதழில் முனைவர் வா செ குழந்தைசாமி அவர்களின் நேர்காணலையைப் படித்த பொழுதே ஒரு நெருடல் இருந்தது. அதையே கொத்ஸ் ஆரம்பித்து வைக்க (வழக்கம்போல) பலருடைய எண்ணச்சிதறல்கள்.

விரிவான கதைச்சுருக்கம் ரவிசங்கரின் பதிவில். ;)

ம்ம்ம்... என்னுடைய இரண்டனா...

விஜயகாந்த் இப்படி புள்ளி விவரங்களோட பேசியிருந்தா கைதட்டிட்டு 'வோட்டு(ம்)' போட்டுருக்காலாம்!!

தமிழ்ப் பற்று உள்ள... தமிழ் இணையப் பல்கலைகழகத்தின் தலைவருமான ஒருவரிடமிருந்து இப்படி ஒரு பதிலா என்பதுதான் ஆச்சரியமும், வருத்தமும். அதுவும் 12 வருடத்திற்குமுன் கிடைத்த (இருந்த) புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு பேசுவது அபத்தம்.

நவீன், இராமனாதன், அரை பிளேடு, தஞ்சாவூரான் இவர்களின் மறுமொழியும், வவ்வால், புருனோ, ரவிசங்கர் பதிவுகளும் மிக விரிவான விளக்கங்கள்.

இதற்குமேலும் தெளிவா சொல்லமுடியுமானு தெரியலை.

வேணும்னா ஒண்ணு பண்ணலாம்...

தமிழ் ஆசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு இப்ப மற்ற துறையில கிடைக்கிறமாதிரி மாசத்துக்கு இலட்சம் (!) ரூபாய் சம்பளம் கிடைச்சா அப்ப 'போட்டி போட்டுக்கிட்டு' தமிழ் படிக்க வருவாங்களோ என்னமோ........ ?!



மதியின் திரைப்பார்வை மீது எனக்கு எப்பொழும் ஒரு சிறப்பு பார்வையுண்டு ;). அப்படி அறிமுகமான படம்தான், "Into The Wild" .

ஒரு சில படங்களை பார்த்துவிட்டு... (கொஞ்ச நாளைக்கு) வேற படங்கள் ஏதும் பார்க்கதோணாது. அந்தப் படத்தைப் பற்றிய சிந்தனைகளே வந்து செல்லும். அந்த வகையைச் சேர்ந்ததுதான் இதுவும்.

படத்தின் இயக்குநரான Sean Penn யை Mystic River மற்றும் சில தலைப்புச்செய்திகளின் மூலம் அறிமுகம் உண்டு. நடிப்பு, ஒளி ஓவியம், பாடல்கள், இசை என இரசிப்பதற்கு பல விசயங்கள் படத்தில் இருந்தாலும் படத்தின் வசனம்........ ம்ம்ம்.. இந்த நாவலை படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாயுள்ளது.

வார இறுதி ......... ;)

(இலவச) ஙாலக அட்டை விண்ணப்பித்தால் 50 அமெரிக்க வெள்ளி,
பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக்கு சென்றால் 25 அமெரிக்க வெள்ளி,
குழந்தைகள் பள்ளி தேர்வில் பாஸ் ஆனால் 600 அமெரிக்க வெள்ளி

இப்படி வருடத்திற்கு 6000 அமெரிக்க வெள்ளி கிடைத்தால் ...

இந்த கூத்துதான் Opportunity NYC என்ற திட்டத்தின் மூலம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ம்ம்ம்.. உலகில் ஒரு பக்கம் ...... ஙாலகத்திற்கு வருவதற்கும், தேர்ச்சி பெற்றதற்கும் காசு கொடுத்து கொண்டிருக்க......
மற்றொரு பக்கம் ஙாலகங்கள் எங்க இருக்குனு தேடவேண்டிய கொடுமை!

@

கச்சா எண்ணெய் விலை மற்றுமொரு 'சாதனையாய்' 105 அமெரிக்க வெள்ளியாக உயர , இதே சாதனை தொடர்ந்தால் இன்னும் அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5 அமெரிக்க வெள்ளிக்கு சென்று விடும் என்றுதான் தோன்றுகிறது.

இதற்கிடையில் புஷ் OPEC (Organisation of Petroleum Exporting Countries) கூட்டமைப்பை கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்ள.... அவர்கள் என்ன ஐ.நா வா உடனே 'தலையாட்ட' .....

'இதற்கு காரணம் உலக சந்தையில் அமெரிக்க வெள்ளியின் வீழ்ச்சியும், உங்களின் கவனக்குறைவும் (the mismanagement of the U.S. economy) தான் காரணம். கச்சா எண்ணெய் உற்பத்தி அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது' OPEC தலைவர் சொல்ல அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள்.

@

தங்கர் பச்சானின் 'ஒன்பது ரூபாய் நோட்டு' நாவல் படிக்க கிடைத்தது. இந்தப் படத்தின் விளம்பரத்தை பார்த்துட்டு படம் பாக்கணும் எண்ணம் இருந்தது. இதுவரை பார்க்காததால் சரி.... நாவலை முதலில் படிக்கலாம் என்ற ஆவலினால் படிக்க ஆரம்பித்தது. மாதவ படையாச்சின் பாசத்தையும், வெகுளிதனத்தையும் சொன்னவர் அவருடைய முன் கோபத்தையும் வறட்டு கவுரத்தையும் அந்தளவுக்கு அழுத்தமாக சொல்லவில்லை என்றே தோன்றுகிறது.

ஒரு பின்தங்கிய கிராமத்து மக்களின் வாழ்க்கை முறை, பலா, முந்திரி தோப்பு என்று பல இடங்களில் மண்ணின் வாசனை.

ஆனால் ஒளி ஓவியமும், இயக்கமும் தொழிலாக இருக்க அவரிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு நாவல் எனும்போது ஆச்சரிமே அதிகமாகிறது.

@

குமுதம் சினிமாவில் பருத்தி வீரனுக்காக பெர்லின் சென்று விருது வாங்கி வந்த அமீர் பேட்டி மிகவும் யாதர்த்தமாக இருந்தது. மனதில் கோபமும், மறக்கப்படுதலின் வலி இருந்தாலும் அதையும் தாண்டி அவருடைய பேச்சு மனதில் இருந்து வந்ததினால் உண்மையாக எதையும் சொல்ல முடிகிறது. வாழ்த்துகள், அமீர்!!

மார்ச் 8 - மகளிர் தினமாம்! அதற்காக 'மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி -- சாதனை பெண்களின் கருத்து' மற்றும் நடிகை ஷகிலாவிடம் சில கேள்விகள்.

பல "சாதனை பெண்கள்" பதில் சொன்னாலும் - மருத்துவர் ஷாலினி, ஃபாத்திமா பாபு, நடிகை சரண்யா மற்றும் கூலி வேலை செய்யும் பெண்ணின் பதில்கள் அழுத்தமும், அழகும்!!

சரி.... அப்படி என்னதான் ஷகிலா சொல்ல போறாங்கனு பார்த்தா..... ம்ம்ம்..... எதிர்பார்த்ததைவிட நல்லாவே பதில் சொல்லி இருந்தாங்க.

வார இறுதி ... யாரும் ஏமாந்து போகக்கூடாது. அதனால் ........





மனதிலே.....

எத்தனை ஆண்டுகள் வாழ்வு பயணம் செய்தோம் என்பதைவிட, எத்தனை முறை பயணத்தினிடையே நின்று இன்னலுற்ற பிறர்க்கு உதவினோம் என்பதே பெரிது!

அடைந்த புகழினை வைத்து வாழ்வை அளப்பதைவிட
புரிந்த நன்மையை வைத்து அளவிடுதலே பொருத்தமாகும்.

@

உற்றாரை யான் வேண்டேன்
ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன்
கற்பனவும் இனிமையும்

உன்குரைகழறகே கற்றாலின் மனம்போலத்
கசிந்திருக வேண்டுவவே!

- திருவாசகம்