Pages

Showing posts with label வாசிப்பு அனுபவம். Show all posts
Showing posts with label வாசிப்பு அனுபவம். Show all posts

வண்ண வண்ண கோலங்கள் - III

இவ்வளவு பெரிய தொடரா(!!) வரும்னு எதிர்பார்க்கலை...ம்ம்ம்..!

வண்ண வண்ண கோலங்கள் - I

வண்ண வண்ண கோலங்கள் - II


சன் தொலைக்காட்சியில் 'தில்லான மோகனாம்பாள்' பார்த்துட்டு எனக்கு தோன்றியதை எழுத அதே அலைவரிசையில் அதே திரைப்படத்தை பற்றி வந்தது 'மங்கை'யின் பதிவு. அட என்று பார்க்க.... அவருடைய மற்ற பதிவுகள் மிகுந்த சமூக அக்கறையுடனும் விழிப்புணர்வு ஏற்படுத்தகூடியதாக இருக்க அதுவும் கூகுள் ரீடரில் சேர்ந்தது.

Ghost Rider என்ற ஆங்கில படம் என்ற நினைவு. தலைப்பைவைத்தே படம் பார்க்கலாமா வேண்டாமா என்று எளிதாக தீர்மானிக்ககூடிய படங்களில், பார்க்க வேண்டாம் என்று ஒதுக்கிய படம்தான். ஆனால் அந்த படத்தைப் பார்த்துட்டு அதற்கு விறு விறுப்பா விமர்சனம் எழுத முடியுமா...படத்தைவிட அவருடைய விமர்சனம் நன்றாக இருந்தது. அதுதான் "ஜி.ரா". அதுதான் அவருடைய எழுத்துகளில் முதல் அறிமுகம்.

முதல் முதலில் கிறுக்க ஆரம்பித்த பொழுது சில தவறுகளை சுட்டிக்காட்டியது ஜெஸிலா. அதற்குமுன்னே அவர் பதிவு அறிமுகம் என்றாலும் "நன்றி" சொல்ல வைத்தது அவர் சுட்டிகாட்டியவைகள்.

'லேட்டா தெரிந்தாலும் லேட்டஸ்டா' (கூகுள்) ரீடரில் சேர்ந்த பதிவுகள்:

செப்புப்பட்டயம் -- சோழர்கள் (!!)

தருமி -- எளிமை - அனுபவம் - ஊர்கூடி தேர் இழுக்கும் முயற்சி (இந்த வயதிலும் !!)

பூக்கிரி -- ஜாலி

வவ்வால் -- அவர் தலைப்புமாதிரிதான்..

CAP டெக்னாலஜிதான என்று எளிதாக ஒதுக்கிதள்ளமுடியாதது... Snapjudgement. மனுசன் எப்படிதான் இவ்வளவு விசயங்களை சேகரிக்கனும்னு ஆவலும், நேரமும் கிடைக்குதோ.. பெரிய விசயம்! பயங்கரமான சேகரிப்பு... அவருடைய e-tamil சமீபத்தில்தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பட்டாசு பாலு மாதிரி.... பாஸ்டன் பாலா! என்ன காலுல சரவெடி கட்டிட்டு மிரட்டலை...;)

அவர் பொண்ணுகிட்ட ஒரு கேள்வி: 'அப்பா தூங்கிறத பாத்திருக்கியா?'
அவரிடம் ஒரு கேள்வி: 'நீங்க தனிஆள் இல்லையா?'

விரும்பி படிக்கும்.. ஆனால் மறுமொழி போடும் அளவிற்கு 'வளரவில்லை' என்ற காரணத்தினால் கடந்து செல்லும் சில நண்பர்கள் தமிழ்நதி, டிசே தமிழன், அய்யனார் வரிசையில் இப்பொழுது புதுசாக விமலா !

இப்போதைக்கு இது போதும்....

சுபம்!!

பதித்த நாள்: டிசம்பர் 23, 2007

வண்ண வண்ண கோலங்கள் - II

ஒரு நாள் நமக்குள் இருந்த கருத்து கந்தசாமி 'உனக்கு பிடித்த எழுத்தை மட்டும் வாசிக்கலாம்ல. நல்லா எழுதியிருந்தா ஒரு பாராட்டாவது சொல்லு'னு உசுப்பேத்த அந்த எண்ணங்களே செயலாகி .... விபரிதமானது. அப்படி ஆரம்பித்ததின் விளைவே... "தென்றல்".

'அவ்வை சண்முகி'னு என்ன ஒரு பெரிய காரணத்தில அந்த கதையின் நாயகன் பேர் வைக்க தோன்றியதோ...அதே போலதான்.. ஒண்ணும் பெருசா காரணப்பெயர்லாம் கிடையாது. ஆனால், வந்த புதிதில் சிலர் பெண் பதிவர் என்று நினைத்து கொள்ள (இப்பகூடதான்..) .. அட 'தென்றல்'னா அது பெண்ணாதான் இருக்கணுமா..ஏன் ஆண்கள் தென்றல்னு பேர் வைக்ககூடாதா ....இதனென்ன மூட நம்பிக்கை ;) !!? இப்படி நானே காரணம் கற்பித்துக்கொள்ள அதுவே தொடர்கிறது.

பதிவுக்கு பெயர்காரணம் என்றவுடன் நினைவுக்கு வருவது நம்ம கொத்ஸ்தான். இலவசக்கொத்தனார்! அவருடைய "இலவசகொத்தனாரியல்" வாசிச்சிட்டு ....... ம்ம்ம்..சொல்ல ஒண்ணும் தோணலை. அதலாம் 'அனுபவிச்சாதான்' தெரியும்..

பங்குசந்தை பற்றி, தினமும் சில குறிப்புகளோடுவந்த பங்குவணிகம் வலைப்பூ பயனுள்ளதாக இருக்க, நமக்கு தெரிந்த பங்குச்சந்தை விசயங்களை...தெரிந்ததை, படித்ததை பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ஆரம்பித்ததே 'நாணயம்'!

எங்கேயோ ஆரம்பித்து சுய புராணத்திற்கு சென்று விட்டது. நிற்க!

சிலரின் எழுத்துக்கள் படித்துவிட்டு அப்படியே பிரமிக்க வைக்கும். பாராட்டாவோ அல்லது ஒரு வார்த்தை சொல்லவோ தோன்றாமல் கடக்க நேரிடும். பல நேரங்களில் புரியாமல் போகும்!! ;) அப்படிதான் டிசே தமிழன், அய்யனார் போன்றோரின் வலை தளங்கள்.

பொருளாதாரத்தின் முக்கியதுவத்தை ஒரு பேராசிரியரைப் போல எடுத்து சொன்னது மா.சிவகுமாரின் எழுத்துக்கள்.

அவரிடம் தமிழில் ஏதேனும் அகராதி போடும் எண்ணமுன்டானு கேக்க ஆவல்!!

முழுக்க முழுக்க தமிழில்தான்(!) அவருடைய பதிவுகள். சில வார்த்தைகள் 'சுத்த தமிழில்' பயன்படுத்துவதால் கட்டுரையை படிக்கும்பொழுது அதன் 'விறுவிறுப்பு'குறைவதுபோல் எனக்கு ஓர் எண்ணம். அதனால்தான் எண்ணமோ அவருடைய சில முக்கியமான எழுத்துக்கள் (கட்டுரை) கவனம்பெறாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்குண்டு.

அடுத்தவர்களின் டைரியை படிப்பதே ஒரு 'த்ரிலிங்'தான்!! ஆனால் அதை உடைத்து போட்டது மா.சிவகுமாரின் 'உள்ள(த்)தைச் சொல்கிறேன்'. எந்த பாசாங்கும் இல்லாத அவருடைய எண்ணங்களும் எளிமையாக புரிந்து கொள்ளகூடிய எழுத்து நடையும் பிடித்து போனது.

ஒருமுறை அவருடைய பதிவில் பாசமலர் பாடலுக்கா அல்லது படத்துக்கா என்று நினைவில்லை எழுதிய விமர்சனத்துக்கு 'எதிராக' என் கருத்தை சொல்ல... அவர் பதில் கூறும்முன் 'அவர் கருத்தை சொல்லிருக்காரு. அதை ஏன்னு எப்படி கேட்கலாம்'னு சில மிரட்டல்கள்...இல்ல பதில்கள் வர.... 'ஆஹா... மா.சி. தனி ஆள் இல்லபோல.. சிட்டிசன் மாதிரியோ?! ' என்ற சந்தேகம் வந்தது.

பேரே வித்தியாசமா இருக்கேனு எட்டிப்பார்த்த பதிவு காட்டாறு. நமக்கும் சில கவிதைகள் 'புரியுதுனு' நினைக்க வைத்தது அவருடைய கவிதைகள். ;)எப்பவுமே ஜாலியான லேசான கவிதைகள்!! ஆனா சில சீரியசான கவிதைகளும் கைவசம் வைச்சிருக்காங்க...எப்ப பதிய எண்ணமோ... அவர்களுக்கே வெளிச்சம்! அவரின் ஆங்கில வலைப்பூவும் அப்பப்ப எட்டிப் பார்ப்பதுண்டு. இவரும் எங்க கல்லூரி!

கவிதைனு சொல்லிட்டு காயத்ரிய சொல்லைனா எப்படி..... முதல் பதிவில் புகைப்படத்துடன் பார்த்தபொழுது... உண்மையான பேரை சொன்னாலே, "நாஸ்தி பண்ற இந்த ஏரியாவில" இந்த பொண்ணு என்னடானா... ஃபோட்டோ வேற publish பண்ணிருக்கேனு ... இணையதளத்தில புகைப்படம் போடுறது எந்தளவுக்கு புத்திசாலிதனம் தெரியலை அப்படினு அடுத்த முறை சொல்லனும் நினைச்சப்ப இன்னொரு நண்பர் அதையே குறிப்பிட்டு இருந்தார். அவருடைய கவிதைகளும், 'சிறப்பான' சினிமா விமர்சனமும் கலக்கல்.

வண்ண வண்ண கோலங்கள் - I

எனக்கு தமிழ் வலைப்பூ அறிமுகமாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. அதாவது வாசிக்க ஆரம்பித்து! (நானும் எழுத, கிறுக்க, CAP technology பயன்படுத்த ஆரம்பித்தது நான்கு மாதங்களுக்குப் அப்புறம்தான்!) .

இந்த ஒரு வருடத்தில், வலையுலகில் என்னை ஆச்சரியப்படுத்தியவர்களை பற்றி பதிவு செய்யலாம் என்ற எண்ணத்தில் ...... (இரண்டாவது ஆண்டும் இருந்தால் அப்பொழுதும் தொடரலாம்!)

எனக்கு முதலில் அறிமுகமானது ஜோவின் (ஜோதிகா இல்ல..நம்ம 'கடற்புறத்தான்') வலைப்பூதான். ஜோ - எங்க கல்லூரி. அவர் எழுத்தில் ... அவர் சொன்ன விசயங்கள் நேரில் பார்த்தது..அனுபவித்தது..இரசித்தது. அதனால அவருடைய பதிவை வாசிக்க ஆரம்பித்தேன். பிடித்தும் போனது!

அதிலிருந்து ஜோசப் சார், SK ஐயா, விடாது கருப்பு வலைப்பூக்கள். ஜோசஃப் சாரின், "திரும்பிப் பார்க்கிறேன்-I" SK சாரின், "பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" தொடர்களை, கல்லூரி நாட்களில் பாலகுமாரன்,வைரமுத்து மற்றும் எம்.எஸ்.உதய மூர்த்தியின் எழுத்துக்களை எந்தளவுக்கு ஆர்வமுடன் வாசித்தேனோ....அதே ஆர்வத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன்.

அதிலிருந்துதான் தமிழ்மணம் என்றதொரு தமிழ்வலைதிரட்டி அறிமுகம். இந்த பெருங்கடலில் தள்ளிவிடப்பட்டபொழுதுதான் திக்குமுக்காடி போனேன். ஏதோ இரண்டு, மூணு பேரு எழுதாறாங்க.....சில பேர் அவுங்க எழுத்தைபத்தி கருத்துக்கள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் சொல்றாங்கனு நினைத்து கொண்டிருந்த எனக்கு இந்த வலைதிரட்டி பார்த்தபொழுதுதான் ஆச்சரியமும் பிரமிப்பும் வந்தது.

துளசி 'டீச்சரின்' நியூசிலார்ந்து பதிவுகளும், மதி கந்தசாமி, சந்திரவதனா, தமிழ் நதி, செல்வநாயகியின் எழுத்தும் புது விதமான வாசிப்பு அனுபவத்தை கொடுக்க ... பல பேருடைய பதிவுகளும், கருத்து பரிமாற்றங்களும் ரொம்பவே பிடித்து போக சில நாட்கள் இந்த வாசிப்பே முழு நேர 'வேலை'யானது.

வெட்டிபயல் பதிவுகள் ஜாலி. சரி... ஒரு batchelorதான் இப்படி ஜாலியான பதிவு போடுறாருனு பார்த்தா 'குடும்ப இஸ்திரியான' கண்மணி பதிவுகள் வாசித்த பொழுது ஆச்சரியமும், தனியாக சிரித்த நாட்களும் அதிகம். கண்மணி பதிவிலிருந்து மருத்துவர் டெல்பின் அவர்களின் ஆங்கில வலைப்பூ அறிமுகம். அவருடைய கணவரும், மகனும் எங்க கல்லூரிதான் என்று தெரிய வந்தபொழுது ...ரொம்ப நெருங்கிய சொந்தங்கள் போல ஒரு உணர்வு. மாசிசாரைப் பற்றி அறிந்த பொழுது என்னையும் அறியாமல் கண்ணீர் துளிகள்.

அதுவரை நான் பார்த்த..வாசித்த வலைப்பூ பதிவர்கள் .....' சே... மக்கள் இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களா'னு நினச்சப்பதான்..தமிழ்மணத்துக்கு வந்த சோதனையா... இல்ல 'நண்டு' கதையை நினைவுப்படுத்தும் விதமா தெரியலை? சில பதிவர்களைப் பற்றிய துவேசங்கள் எல்லை மீற தமிழ் வலைப்பக்கத்திற்கு ஒரு சிறிய இடைவேளை விடலாம் என்று தோன்றியது.