Pages

Showing posts with label உப பாண்டவம். Show all posts
Showing posts with label உப பாண்டவம். Show all posts

உப பாண்டவம்

நமது வாழ்வில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை,  ஏதோ ஒரு புத்தகமாய் வாசிக்கும் பொழுது நம்மையும் அறியாமல் மனதில் மறைந்து செல்லும் அந்த சின்ன சின்ன சந்தோஷங்கள், வலிகள்....

பெரிய திட்டங்கள் இல்லாமல், மனம் போன போக்கில் சோழர்கள் வாழ்ந்த இடங்கள் ,  ஒரு காலத்தில வெளிநாடு மாணவர்களலாம் படிக்க வந்த அந்த புகழ்மிக்க நாலந்தா பல்கலைக்கழகம் இப்படி பல இடங்களுக்கு  சுத்த போணும் ஆசை....

'ஆட்டோகிராப்'  மாதிரி பழைய நண்பர்களை பார்க்க போணும் என்கிற எண்ணங்கள் ........

இப்படி வாழ்வில் இருக்கும் சில உன்னதமான பக்கங்களை நினைவில் கொண்டுவருபவை  எஸ். ராமகிருஷ்ணன் எழுத்துக்கள்!

@

'பத்து பக்கம்கூட தாண்ட மாட்டீங்கனு நினைச்சேன். பரவாயில்லையே...' உப பாண்டவம் படித்து முடிச்சவுடன் மனைவி அடித்த கமெண்ட்!

நம் அனைவருக்கும் தெரிந்த மகாபாரதக் கதைதான்!

மகாபாரதக் கதையை தூர்தர்ஷன் நாட்களிலிருந்தே ஆர்வமாக பார்த்ததுண்டு. அதுவும் டைட்டிலிருந்தே நான் பார்த்த ஒரே மெகா சீரியல் இதுவாகதான் இருக்கும். இந்தியின் புண்ணியத்தினால், சனிக்கிழமையே துக்ளக்கை படித்துவிட்டு அடுத்த நாள் விதுரணரும், திருதராஷ்டனும் இப்படிதான் பேசியிருப்பார்கள் என்று மொழி பெயர்த்து கொள்வதுண்டு.






எப்பொழுதும் பாண்டவர்கள் நல்லவர்கள், கெளரவர்கள் கெட்டவர்கள் என்ற பிம்பம் கட்டப்பட்டிருந்தாலும், கதைகளில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு ஒரு பெரும் "வரலாறு" இருப்பதாலும் அதன் ஙட்பங்களிலிருந்து விலகி செல்லும் சாத்தியக்கூறுகள் அதிகம்.(சே...எனக்கே புரியலை.. இதுதான் 'ஆர்வக் கோளாறோ'....)

எஸ்.ராமகிருஷ்ணனின் 'உப பாண்டவம்' ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அதன் ஙட்பத்தை மிக அழகாக எடுத்துரைக்கிறது. ஏகலைவன் - துரோணாச்சாரியார் - அர்ச்சுனன் எண்ண ஓட்டங்கள், பாண்டவர்கள் - திரெளபதி வாழ்க்கை, அஸ்தினாபுரம், இந்திர நகரங்களைப் பற்றியும் அந்த மக்களின் வாழ்க்கை முறை ..... இப்படி ஒரு பட்டியலே போடலாம். அனைத்தும் கவித்துவமாக சொல்லிய விதம் அழகு.

கெளரவர்களும், சகுனியும் பாண்டவர்களுக்கு மட்டும்தான்(!) கெட்டவர்கள். கெளரவர்களில் துரியோதனன், துச்சாதனன் தவிர மற்றவர்கள் பேரை கேள்விகூடப்பட்டதில்லை.  100 பேரின் பட்டியலே குடுத்துள்ளார். அதிலும் இவர்களின் ஒரே தங்கை, துச்சலை. இவளுக்கு பாசமிகு சகோதரர்களாகவும், கெளரவர்களில் ஒருவனான விகர்ணன் பற்றியும், மற்ற எந்தவொரு கதாபாத்திரங்களை விவரிக்கும் விதமும், சகுனி மற்றும் பீஷ்மருடைய கடைசி நாட்களில் அவனுடைய உரையாடலும் மீண்டும் ஒரு முறை வாசிக்க தூண்டுபவை.

அவர்களின் கடைசி உரையாடலிருந்து ஒரு பகுதி்....

'காந்தார அரசன் சகுனியே, நீ இரவை விடவும் சப்தமில்லாமல் நடக்கப் பழகி விட்டாய்'.

'பரிகாசம் உங்களிடமிருந்து எனை நோக்கிப் பிறப்பது இன்றல்ல பீஷ்மரே. நான் உங்களது ரதம் காந்தார நாட்டினுள் பிரவேசித்த நாளிலே அது துவங்கி விட்டதை அறிவேன். உங்கள் பரிகாசம் மிகுந்த கசப்பேறியது. '

'சகுனியே நீ எனை எப்போதுமே நெருங்கி வராதவனாகவே இருக்கிறாய். எனது பரிகாசம் உனக்கு சூட்டப்படும் வெகுமதி. அது ஒரு போதும் ஒரு துளி பொய்மையைக்கூட ஏந்துவதில்லை.'

.................................... ....................................   

.................................... ....................................   


'விதுரன் உங்களை மீற முடியாதவனாக இருந்தான். அவன் பரிதாபத்திற்குரியவன். பாண்டுவின் விதவையை நேசிப்பவன்.'

'சகுனியே நீ வெறுப்பை உமிழ்ந்தபடியிருக்கிறாய்.'

'எனது உடலில் அது மட்டுமே நிரம்பியிருக்கிறது. நாம் ஒருவரையொருவர் வெறுப்பினால் மட்டுமே நேசிக்க முடியும் போலும்.'

நிகழ்காலத்தினோடு வாழும் ஒருவனை அந்த கால நகர வீதிகளில் நடக்க விட்டு, பாண்டவர்களுடனும், கெளரவர்களுடனும் உலவ விட்டிருப்பது அருமை! நாவல் முழுவதும் ஒரு மெலிதான சோகம்  இருப்பதை உணரமுடிகிறது.

நமக்கெல்லாம் அதிகம் தெரிந்த கர்ணனைப் பற்றி அதிகம் சொல்ல வில்லை?  இல்ல.... மகாபாரத்திலேயே கர்ணன் அதிகம் பேசப்படவில்லையா....?

இந்த நாவல் முழுவதும்  இருக்கும் எஸ். ரா வின்  உழைப்பு பிரமிப்பையே தருகிறது. 

@@

எழுதிய நாள்:  செப்டம்பர் 11, 2008