Pages

கல்லூரி - I

இந்தியாவில் மட்டுமல்ல உலகில் பல பகுதிகளில் சேசு சபையின் கல்விப்பணி பிரமிக்கதக்கது. குறிப்பாக இந்தியாவில் Xavier Institute of Management, Bhubaneswar (XIMB), Xavier Institute of Social Service (XISS), லயோலா (Loyola), தமிழ்நாட்டில் திருச்சி தூய வளனார் (St. Joseph's), சென்னை லயோலா (Loyola) , பாளையங்கோட்டை தூய சவேரியர் (St.Xavier's) ......
இப்படி அங்கு படித்த மாணவர்களுக்கும், சேசு சபைக்கும் பெருமை சேர்த்த... பெருமை சொன்ன கல்வி நிறுவனங்கள்.

இந்த முன்குறிப்புலாம் எதுக்குன்னா.... வார இறுதியில் (ஏப்ரல் 5, 2008) கலிபோர்னியா வளைகுடா பகுதியில் சேசு சபையின் கல்வி நிறுவனங்களில்# படித்த (பழைய) மாணவ-மாணவியர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது.

தொடர்புள்ள 30 மாணவ-மாணவியர்களுக்கு அழைப்பிதழ் (evite..!) வந்தது. அதில் சுமார் 18 பேர் கலந்து கொண்டனர். அதிலிருந்து (எனக்கு நினைவில் இருந்த வரை) சில துளிகள்...

* படித்த நாட்களில் கற்றுக்கொண்டவைகள் பின்னாளில் வாழ்வை செழுமைப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருந்தது. (Life Values, Respect, Commitment, Sincerity, Shaping Life style....)

* ஷெப்பர்ட் திட்டம்

* மிகக்குறைந்த கல்வி கட்டணம்.

* ஒழுக்கம் [பள்ளிகூடத்திற்கும், கல்லூரிக்கும்கூட வித்தியாசம் தெரியாது.... அப்படியொரு கண்டிப்பு...;( ]

* Moral Education [வகுப்பு வாத்தியாருக்கு பயப்படுவதைப் போல 'நீதி மொழி' வகுப்பு ஆசிரியருக்கும் பயப்படுவோம்... ;( ]

* சுய விமர்சனம் செய்து கொள்ள உதவிய தியானங்கள், முகாம்கள்.

* சாதி, மதம் என்று பிரித்து பார்க்காத கல்வி முறை/அமைப்பு, ஆசிரியர்கள்.


இங்கு வலைப்பூவில் தூய வளனார் கல்லூரியில் படித்தவர்கள் மூன்று...நான்கு பேர் மட்டுமே(!) எனக்கு தெரியும். அதுவும் அவர்கள் கவிதைகள், கட்டுரைகள் என்று கலக்கி கொண்டிருப்பவர்கள்.

அவர்களைத்தவிர சேசு சபையின் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் கண்டிப்பாக இங்கு நிறைய பேர் உண்டு என்பது எனது எண்ணம். இதைப் பார்ப்பவர்கள் உங்கள் எண்ணங்கள்/அனுபவங்கள் பகிர்ந்து கொண்டாலோ அல்லது வந்ததிற்கு ஒரு 'ஹலோ'(!) சொன்னாலோ மிக்க மகிழச்சி அடைவேன்.

-- தொடரும்

# St. Joseph's College, Trichy
Loyola College, Chennai
St. Xavier's College, Palayamkottai
Arul Anandhar College, Karumathur
DeBritto Hr. Sec School, Devakottai
St. Mary's Hr. Sec. School, Madurai
Carmel Hr. Sec. School, Nagercoil

4 மறுமொழிகள்:

  1. said...

    நான் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் படித்தவன் தான். என்னுடைய பதிவில் "யு ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்" தலைப்பில் 01/08/07 ல் எழுதியதைப் படியுங்கள். மறக்க முடியாத நாட்கள் அவை.
    சகாதேவன்.

  2. said...

    வருகைக்கு மிக்க மகிழ்ச்சி, சார்!

    மலரும் நினைவுகள் சுட்டிக்கு நன்றி.
    எந்த வருசம் சார் படிச்சீங்க?

  3. said...

    நான் படித்த St. Joseph's College
    பற்றி ஒரு வலைப்பதிவா ?
    படிப்பதற்கே பெருமிதமாக இருக்கிறது.
    1957 முதல் 1961 வரை எனது கல்லூரி வாழ்க்கை இன்னமும் என்
    மனதில் பசுமையாக இருக்கிறது எனின் தலையான காரணம்
    வகுப்புகளில் முதன்மையாக இருந்த நீதி, ஒழுக்கம், கட்டுப்பாடு குறித்த
    moral science classes வகுப்புகள் தான். நான் ஃபாதர் ஸிக்வீரா
    அவர்கள் எனக்கு moral science வகுப்பும் ஆங்கிலமும் போதித்தார்கள்.
    ஃபாதர் எர்ஹார்ட் எகனாமிக்ஸ், ஃபாதர் கன்ஸால்வஸ் ப்யூர் ஜ்யோமிதி,
    ஃபாதர் பேஸ் ஆன்சிலரி பிஸிக்ஸ், பேராசிரியார் ஃப்ரான்ஸிஸ் ராஜ் அவர்கள்
    ஸ்டாடிஸ்டிக்ஸ் எடுத்தனர். ப்ரொஃபசர் தாமஸ் ஸ்ரீனிவாசன் பாலிடிக்ஸ் எடுத்தார்.
    நான் கணித அறிவைப் பெற்றதை விட எனது மதிப்பிற்குரிய பேராசிரியர்களிடமிருந்து
    வாழ்வியல் எப்படி அறம் சார்ந்ததாக இருத்தல் வேண்டும் எனக்கற்றதுதான் அதிகம்.
    அந்த 4 வருடங்கள் பொன்னான நாட்கள். 45 வருடங்கட்குப் பின்னே அதே லாலி
    ஹாலில் சிறிது நேரம் உட்கார்ந்து அந்த நாட்களை நினைவு கூர்ந்தேன்.
    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    http://vazhvuneri.blogspot.com
    http://meenasury.googlepages.com/home

  4. said...

    ஐயா.. நீங்களும் தூய வளனார் கல்லூரி மாணவரா....!!
    நீங்க சொன்ன ஃபாதர் கள் பெயரலாம் கேள்விப்பட்டதுண்டு....

    நான் படித்த ஆண்டு 1987-1995 ! +1 ல இருந்து அங்கதான்....!! 8 ஆண்டுகள்...
    மறக்க முடியாத நினைவுகள்..... என்றென்றும்.... :)

    இதில ஒரு சோகம்(!?) என்னன்னா.... நம்ம (தமிழ்) படங்கள வர கல்லூரி மாதிரிலாம் என்னால கற்பனைகூட பண்ணமுடியலை....

    /அந்த 4 வருடங்கள் பொன்னான நாட்கள். 45 வருடங்கட்குப் பின்னே அதே லாலி
    ஹாலில் சிறிது நேரம் உட்கார்ந்து அந்த நாட்களை நினைவு கூர்ந்தேன். /
    லாலி ஹாலை பாத்தாலே தேர்வு பயம் மனசுக்குள்ள வந்திருது.... பல ஆண்டுகளுக்குப் பின் மனைவியை அழைத்துகொண்டு போனபோது ... 'அந்த' பயம் கொஞ்சம் குறைஞ்சதுனு சொல்லலாம்....;)

    பி.கு: உங்க favourite கவிதாயினி (பதிவர்) 'நம்ம' கல்லூரிதான்....!!