Pages

Showing posts with label "சொல்லாததும் உண்மை. Show all posts
Showing posts with label "சொல்லாததும் உண்மை. Show all posts

"சொல்லாததும் உண்மை" தொடரில் பிரகாஷ் ராஜ்.

இப்ப யோசிச்சா வேரைத் தேடிப் போற மாதிரிதான், சொந்த ஊரைத் தேடி ஒவ்வொருத்தரும் லீவுக்குப் போறோம்னு தோணுது. எதிர்காலம் தேடி ஓடிட்டு இருக்கிற ஒரு தலைமுறையும், எப்ப வேணாலும் எமன் ஓலைச்சீட்டு எடுத்துக்கிட்டு வந்து வாசல்படியில் நிற்கலாம்கிற கவலையோடு இருக்கிற மூத்த தலைமுறையும் சந்திச்சுக்கிற தருணம் அது.

அடுத்த தலைமுறையா வாழப் போற குழந்தைகள் சில விஷயங்களைக் கத்துக்கவும், கடந்த தலைமுறையா வாழ்ந்து முடிச்சவங்க, சில விஷயங்களைக் கத்துத் தரவும் வாய்ப்பு இருக்கிற காலம் கோடை விடுமுறைதான்.

அதைத் தவறவிடுற குழந்தைகளைப் பார்க்கும்போது ரொம்பப் பரிதாபமா இருக்கும். ‘ஏன்டா... தாத்தா& பாட்டி பார்க்க ஊருக்குப் போகலையா?’னு கேட்டா, ‘அபாகஸ் க்ளாஸ் சேர்ந்திருக்கேன் அங்கிள்’னு சொல்றான் ஒரு குழந்தை. விதவிதமான மனிதர்களையும், அவங்க வாழ்க்கையையும் பார்க்காம அதி விரைவா கணக்குப் போடக் கத்துக் கொடுக்கிற பெற்றவங்க மனநிலை நிச்சயம் மாறணும். இது அட்வைஸ் இல்லை. என் குழந்தைப் பருவ அனுபவம்.

பிழைக்கக் கத்துத் தர்றதுக்குப் பெத்தவங்க போதும். ஆனா, வாழப் பழகித் தர்றதுக்கு பெரியவங்க வேணும்.

*******
காதலும் கல்யாணமும் உரிமையாக இருக்கும்போது, வாழ்க்கை ருசியா இருக்கு. அதுவே கடமை யாகிடுச்சுன்னா, வீட்ல டி.வி, ஃப்ரிஜ், மிக்ஸி மாதிரி மனிதர்களும் பொருள்களாகிடுவாங்க.

வெட்டப்பட்டுத் துண்டாகிக் கிடக்கிற தலைகளை ஒட்டவைக்கிற வரம் கிடைச்சாலும், நம்முடைய எதிர்பார்ப்புகள் வேறொரு தலையையும், இன்னொரு உடம்பையும் விரும்பினா, உறவுகளே பாரம்தானே?

*********

பல நேரங்களில் அங்கீகாரத்தை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று கோபப்படுகிறோம், கூச்சலிடுகிறோம். ஆனால், அங்கீகாரம் என்பது எப்படி இருக்கும் அல்லது எப்படி இருக்க வேண்டும் என்ற வரையறையை எவராலும் முடிவு செய்ய முடிவதே இல்லை.
இயற்கை எதற்கும் எவரிடமும் அங்கீகாரம் கேட்பதில்லை. தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு, தனது இருப்பை நியாயப்படுத்திக்கொள்வதும் இல்லை. இவை யாவையும்விட, தன் இருப்பு குறித்து ஆயிரம் வருடப் பழைமையான மரமோ, எல்லையற்று விரிந்துகிடக்கும் கடலோ, மலையோ தம்பட்டம் அடித்துக்கொள்வதில்லை. எவரது அங்கீகாரத்துக்கும் காத்தி ருப்பதும் இல்லை.
அங்கீகாரம் பெறுவதற்கான எளிய தந்திரங்கள் நடைமுறையில் உள்ள காலத்தில் இயல்பாக அது கிடைக்கக் கூடும் என்று நினைப்பவன் முட்டாளாகவே கருதப்படுகிறான். ‘பகட்டும், தற்பெருமையும், சுயதம்பட்டமும் கொண்டவர்களுக்கு மட்டும்தான் எதிர்காலம்’ என்ற கானல் தோற்றம் நம் முன்னே விரிந்துகொண்டு இருக்கிறது.