Pages

Showing posts with label rajini. Show all posts
Showing posts with label rajini. Show all posts

கமல் 50

என்னதான் நிமிடத்திற்கு பலமுறை விஜய் தொலைக்காட்சி 'உலக நாயகன்'னு சொல்வதை கேட்க சலிப்பாக இருந்தாலும், இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எந்த பகுதியாலவது சினிமாவில் 50 வருடங்கள் நிலைத்து நின்று, வித விதமான அவதாரங்கள் எடுத்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை!





பாலசந்தர், ரஜினிலிருந்து சந்தனு வரை அந்த மாபெரும் கலைஞனுக்கு 'புகழ்ப்பா' பாடினாலும், அவருடைய வளர்ச்சி மகத்தானது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. எத்தனை படங்களில் எத்தனை காட்சிகளுக்கு ஒத்திகை பார்த்தவர்..இந்த விழாவிற்கும் கண்டிப்பாக ஒத்திகை பார்த்திருப்பார்! உணர்ச்சிகளை வெளியே காட்டிக்கொள்ளமல் கட்டுக்கோப்போடுதான் உட்காந்திருந்தைபோல் இருந்தது.

இருப்பினும், கவுதமியை மேடையேற்றி அவர் அருகில் உட்கார வைத்ததாகட்டும், தன் மகள் பாடிய 'நீ பார்த்த பார்வைக்கு நன்றி' என்று பாடிய பொழுதும் அவருடைய முகபாவனையும் சரி, ரஜினியுடன் தன் நட்பை பற்றிக் சவால்விடும்பொழுதும் சரி....அவருக்கு நிகர் அவர்தான்!

படங்களில் என்னதான் பக்கம் பக்கமாக பேசினாலும், சொந்தமாக இரண்டு வரிகள் பேசுவதென்பது எவ்வளவு கஷ்டகிறத சரத்குமார் போல சில பேர் பேசும் பொழுது பார்க்க முடிந்தது.  ஜெயராம் மிகவும் யதார்த்தமாக பேசியதாக இருந்தது. ராதிகா ரஜினி,கமலையை கலாய்த்ததும்  கலக்கல். மற்ற இரண்டு 'உலக நாயகர்கள்' (மம்முட்டி & மோகன்லால்) பேசியது OK!





பாலசந்தர், மம்முட்டி, மோகன்லால் போன்ற பல ஜாம்பவான்கள், பிரகாஷ்ராஜ், மிஷ்கின், பிரசன்னா வரை பலரும் அந்த விழாவில் கலந்து கொண்டிருந்தாலும், பாரதிராஜா, மணிரத்னம், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, அமிதாப், ஷாருக், ரிஷிகபூர்.... இப்படி பலபேர் வந்திருந்தால் அந்த விழா இன்னும் அபாரமாக இருந்திருக்கும்.