Pages

Showing posts with label நசிருதீன்ஷா. Show all posts
Showing posts with label நசிருதீன்ஷா. Show all posts

பர்ஸானியா

பர்ஸானியா (2005)

நம்ம ஊருல இப்படிலாம் ஒரு படம் எடுக்க முடியுமா அப்படியே எடுத்தாலும் வெளிய வருமா? நம்பவே முடிய வில்லை...

இந்தப் படம் குஜராத்தில் (கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு **) கலவரத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவாம். ம்ம்ம்....

ஓர் அழகான.. அன்பான (பார்சி ) குடும்பம். அம்மா(சரிகா) - அப்பா (நசிருதீன்ஷா) - இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவன், பர்சான் ; அவனுக்கு ஒரு தங்கை. முஸ்லிம் வாழும் காலணி குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறார்கள்.

அவர்கள் வசிக்கும் காலணி குடியிருப்பில் தீ வைக்கப்படுகிறது. யார் இதற்கு காரணம் என்று அப்பட்டமாக காட்டுகிறார்கள். முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் னு கொஞ்சம்கூட ஈவு இரக்கமில்லாமல் வெட்டி சாய்கிறார்கள். இதில் பெண்களை பலாத்காரம் வேறு.....

அந்த பார்சி குடும்பமும் தப்பித்து ஓடுகிறது. உயிருக்காக ஓடும் கும்பலில் அந்த சிறுவன் அவன் குடும்பத்தில் இருந்து தொலைந்து போகிறான்.

அவன் குடும்பத்தார் மறுபடியும் அவனை கண்டுபிடித்தார்களா, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைத்ததா என்பதுதான் மீதி கதை..

இதற்கிடையில் (காந்தியக் கருத்துகளை கொண்ட) வெளிநாட்டு மாணவன் இந்த பார்சி குடும்பத்திற்கு நல்ல பழக்கம். அவன் அந்த குடும்பத்திற்கு உதவுகிறான். அங்கங்கே காந்திய கொள்கைகள் ....

அரசாங்கத்தையும், மக்களையும் அப்பட்டமாய் தோலுரித்து காட்டுகிறார்கள். இந்த மாதிரி சம்பவங்களில் இரண்டு பக்க கருத்துகளையும் பதிவு செய்திருக்க வேண்டும். இருப்பினும் நம்ம ஊரில் இந்தப்படம் வெளிவந்ததே மிகப் பெரிய ஆச்சரியம்.




பாடல்கள், நீண்ட (& பன்ச்) வசனங்கள், காமெடி இப்படி படத்தில் எதுவும் இல்லை. படம் முழுவதும் சரிகா, நசிருதீன்ஷா தான். அருமையான நடிப்பு.

சரிகாவுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது.. ஏன் ஷாவுக்கு மட்டும் கிடைக்கவில்லை?

இயக்குநர் ராகுல் (Rahul Dholakia) க்கு இது இரண்டாவது படம். அவருடைய தைரியத்திற்கு ஒரு சபாஷ்.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.


--------------------

** பெப்ரவரி 27, 2002 -- அயோத்தியிலிருந்து கிளம்பின, சபர்மதி எக்ஸ்பிரஸ் காலை 6:30 மணியளவில் தீ 'வைக்கப்டுகிறது'. இந்த கொடிய சம்பத்தில் 58 கரசேவகர்கள் உயிர் இழந்தனர்.

இந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் குஜராத்தில் கலவரம் வெடிக்கிறது. 10,000க்கும் மேலான கரசேவர்கள் அலகாபாத் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நுழைந்து நடந்த அட்டூழியங்கள் நாடு அறியும். [அதில் பிரபலமான வழக்கொன்று - "பெஸ்ட் பேக்கரி" ]

இந்த கலவரத்தில் 1044 பேர் உயிர் இழந்தனர்.

790 - முஸ்லீம்கள்; 254 - இந்துகள்

233 பேர் காணவில்லை.

606 குழந்தைகள் பெற்றோர்களை இழந்தனர்.