Pages

Showing posts with label விமர்சனங்கள். Show all posts
Showing posts with label விமர்சனங்கள். Show all posts

இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக....

(தமிழ் வலைதளத்திற்கு புதியவன் என்ற முறையில் இந்த பதிவு.....)





(New Jersey is called the Garden State! அதுக்குதான் மேல இருக்கிற படம் ஒரு சின்ன உதாரணம்)

இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக.... -னு சொல்லிட்டு 'அடிதடி' , 'கிழக்கு கடற்கரை சாலை' - னு படம் போடுவாங்க பாருங்க... (இவுனுங்க தொல்லை தமிழ் மக்களாலேயே தாங்க முடியல... இதில மத்தவுங்க வேற பார்ககணும் மாக்கும்....

ஏன் பாலாஜி.... உங்க டெவில் ஷோவுக்கு இந்த மாதிரி தொலைக்காட்சிலாம் கூப்பிட மாட்டீங்களா?)

..... ஆனா எப்பயாவது 'விருமாண்டி, பாரதி'-னு போட்டா எப்படி இருக்கும்..... அது மாதிரி.....

உலக (தமிழ்) பதிவர் சந்திப்பில் முதன் முறையாக ......

  • அடுக்கு மாடு கட்டிடத்தில் ஒரு குளு குளு அறையில் பாப்-கார்ன், சிப்ஸ், க்ரீம் பிஸ்கெட்டுகள், வீ.எஸ்.கே. அய்யாவின் மைசூர்பாகு (டீச்சர் கவனிக்க! ) .... இப்படி ஏராள நொறுக்கு தீனிகள் .... [எல்லாரும் இதேயே முத சொல்லுங்க-னு சில பேர் முணு முணுக்கிறது ... கேட்குது....] வயிற்றுக்கு மட்டும் அல்ல... செவிக்கு இளையராஜாவின் திருவாசகம் சிடி (நன்றி, அய்யா) !

  • பெரிய திரையில் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம்..... (நன்றி, கொத்ஸ்! )

  • கொத்ஸ் பவர் பாயிண்ட் (Power Point)ல் கலக்குவதற்கு தாயாராக இருக்க, அவருக்கு உதவியாக கண்ணபிரான் ரவி ... எல்லாருக்கும் 'மனசு' மட்டும் இல்ல... வயிறு-ம் நிறைஞ்சிருக்கா-னு 'நல்லா' கவனிச்சாங்க...[எங்கப்பா.. மஞ்சள் சட்டையுமா... கண்ணாடியுமா யாரையும் காணோமே-னு பார்த்தா... 'தல' மாதிரி கொத்ஸ்..]

  • பாலா, சாகரன் நினைவு மலரை கொடுக்க, அனைவரையும் அறியாமல்... அந்த அறையில் நிசப்தம் சில நிமிடங்களுக்கு.... [மலரை வெளியிட்ட சென்னைப்பபட்டினம் நண்பர்களுக்கு நன்றிகள் பல!]

  • பத்மா அரவிந்த் அவர்கள் அமெரிக்க வாழ் இந்தியர்களின் தெரிந்து கொள்ள வேண்டி பயனுள்ள தகவல்கள் சொன்னார். அவர் இதைப் பற்றி ஒரு பதிவு எழுதினால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் எண்ணம்.

  • குழந்தைகளிக்கான பாடல்கள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்களை ஒலி வடிவத்திலும் இதை மேலும் பெரிய அளவில் செய்ய ஆர்வமும், ஆவலும் ரங்கா மற்றும் அவர் துணைவியார் ஜெயஸ்ரீ அவர்களிடம் இருந்தது. (வாழ்த்துக்கள் !).

  • ஜெயஸ்ரீ அவர்கள் குழந்தை நலன் பற்றி குறிப்பிடும் பொழுது அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வான கண்ணன் வந்தான் குறிப்பிட்டார். [மனதை கலக்கியது... அவர்களின் நம்பிக்கை நமக்கு வியப்பளித்தது. குடும்பத்தினருக்கு நமது பிராத்தனைகள்!]

  • கொத்ஸ், தமிழில் அறிவியல் சம்பந்தப்பட்ட தேடுதல் முயற்சியின் முதல் (வெற்றி) படியாக விக்கிப்பசங்க பற்றியும் ... இரண்டு, மூன்று, நான்கு.... வது படிகளாக தமிழ் விக்கிப்பீடியாவை மிகப் பெரும் தகவற் களஞ்சியமாக உருவாக்க நமது பங்களிப்பு பற்றியும் குறிப்பிட்டார். (நம் தலைமுறைகளுக்கு நம்மாளான ஒரு (சிறிய) பங்களிப்பு. மிக நல்ல ஆரம்பமாக அமையும்)

  • மாணவர்களுக்கு பதிவுலகம் சார்பாக என்ன செய்யலாம்-னு பேச்சு வந்தப்ப வெட்டிப்பயலின் சாப்ட்வேர் இன்ஜினீயர் ஆகலாம் வாங்க மற்றும் செல்வனின் "அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்க வேண்டுமா?" போன்ற பல பதிவுகள் வந்தால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

  • இந்தக் கருத்துக்களை மாணவர்களுக்கு கொண்டு செல்ல கண்ணபிரான் ரவி சொன்னவைகள் முக்கியமானது. குறிப்பாக நமது கல்லூரி அலுமினி (Alumini)யை தொடர்பு கொள்ளுதல், கல்லூரி அறிவிப்புப் பலகைகள் மூலமாக தகவல் தெரிவித்தல்....

  • நெய்வேலி விச்சு கில்கிரிஸ்ட் (Gilchrist) மாதிரி 'அடிச்சி' ஆடா, இப்பொழுது பதிவுலக வாசகராக இருக்கும் சம்பத் விரைவில் பதிவு எழுதத் துவங்கப் போவதாகச் சொல்ல (விதி யாரை விட்டது ..?!)..... அவருக்கும் நமது வாழ்த்துக்கள்.

  • உலக (தமிழ்) பதிவர் சந்திப்பில் முதன் முறையாக...... பறந்து வந்து கலந்து கொண்ட வீ.எஸ்.கே. அய்யா ... அவர் தொடரைப் போல சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது.

  • எப்பொழுதும் புன்னகையுடன் தமிழ் சசி.....

  • திடீரென்று சில பேர் கேமரா எடுத்து 'கிளிக்' செய்ய, 'இட்லி வடை இவர்தான்.....இல்ல..இல்ல அவர்தான்' என்று சில நிமிடங்கள் சல.... சலப்பு....! அப்புறம் 'அவர்கள்' .... 'நான் அவனில்லை' னு சொன்னதுக்கப்புறம் தான் இதில ஏதும் 'தில்லு முல்லு' இல்லனு தெரிய வந்தது.

  • தொலைபேசி-ல 'புலி..புலி' -னு எல்லாரும் 'கதைக்க' எனக்கு கொஞ்சம் பயமாகதான் இருந்தது.. அப்புறம் பார்த்தா... இது 'பாசக்கார புலி' யாம்..!

ம்ம்ம்... கொத்தனாரும், கண்ணபிரானும் அனைவரையும் சரவணபவனக்கு அழைக்க.....சரவணபவனல 'அதலாம்' கிடைக்காதுப்பா-னு பாலா (மனசில) நினைச்சுட்டு.... 'உடனே கிளம்பிறோம்'-னு சொல்ல..... இப்படியாக உலக (தமிழ்) பதிவர் சந்திப்பு இனிதே நிறைவுற்றது!


பி.கு: நியூ ஜெர்சிக்கு போறப்பவும் சரி, திரும்பி வர்றப்பவும் சரி.... ஜேம்ஸ்பாண்டின் காரின் வேகத்திற்கு இணையாக பாஸ்டன் பாலாவின் கார். காரின் வேகத்துக்கு போட்டியாக பாலாஜி (வெட்டிப்பயலி) ன் பேச்சு. அவருடைய எழுத்தைப்போலவே அவருடைய பேச்சில் நக்கலும், நையாண்டியும்...... அங்கங்கே பகுத்தறிவு, கண்ணன் - கர்ணன் மாதிரியான தூறல்களும் காரில் பயணம் செய்த களைப்பே தெரியலகிறது உண்மைதான்!