Pages

Showing posts with label கிழக்கு பதிப்பகம். Show all posts
Showing posts with label கிழக்கு பதிப்பகம். Show all posts

சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி?

ஒரு காலத்தில் சர்க்கரை நோயைப் பற்றிய எந்த விசயங்களும், செய்திகளும் முக்கியமாக பட்டதில்லை. 'அதிகமா இனிப்பு சாப்பிட்டா வரும். 40 வயசுக்கு அப்புறம் இனிப்ப குறைச்சிக்கிலாம். அதுக்கு இப்ப என்ன அவசரம்'  என்ற 'விசய ஞானத்தை' தவிர அதற்கு மேல் அதற்கு முக்கியதுவம் குடுத்ததில்லை. அலட்சியம்தான்..

பயணங்கள் முடிவதில்லை!

எப்பொழுதும் இந்திய பயணத்தின் பொழுது, மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி இருக்கும். சென்னையில் இறங்கியவுடன் பாரதிராஜா பாணியில் 'என் இனிய தமிழ் மக்களே .... ' என சொல்ல தோன்றும். என்னமோ இந்த முறை அது "missing"! ;)

ஓரளவு திட்டமிட்டு பழைய பள்ளிக்கூடம், கல்லூரி, நண்பர்கள் ...... பார்க்க செல்வதுண்டு...இல்லையென்றால் தொலைபேசியிலாவது ஒரு ஹலோ சொல்வதுண்டு. இந்த முறை அந்த பட்டியலில் வலைப்பூ நண்பர்களையும் சேர்த்திருந்தேன். குடும்பத்தில் நடந்த ஒரு சில நிகழ்வுகளால் திட்டமிட்ட எதையும் செய்யும் மனநிலையில் இல்லை!

@

NH7 -- நான்கு வழிப்பாதை இப்பொழுதுதான் சூடு பிடித்திருக்கிறது போல..... குறிப்பாக மதுரை - திருநெல்வேலி!! சில கிராமங்களே அடையாளம் தெரியாத அளவு மாறியிருக்கிறது. புதிதாக செல்பவர்களுக்கு (தற்காலிகமாக ) கஷ்டம்தான்...குறிப்பாக இரவில். எச்சரிக்கை பலகையை இன்னும் கொஞ்சம் பெரிதாக வைத்திருக்கலாம். இந்த வேலை முடிந்து விட்டால், நானோவிலிருந்து, பெரிய பெரிய வாகனங்களுக்கெலாம் ஒரு வரப்பிரசாதம்தான். ம்ம்ம்....சைக்கிள், மாட்டுவண்டியில் செல்பவர்களாம் என்ன செய்வார்கள்?

@

சிவகாசி மணி ஸ்டோர், ஊர் பொருள்காட்சி, திருநெல்வேலி RMKV, கணேஷ் ஸ்டோர் வரை கிழக்கு பதிப்பகத்தின் புத்தங்களை பார்க்கமுடிந்தது. அசோகமித்திரனிலிருந்து, அள்ள அள்ள பணம், நம்ம செல்லமுத்து குப்புசாமியின் "இழக்காதே" வரை பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

சின்ன ஸ்டோர்களில் கேட்டபொழுது பொருள்காட்சிகளில் கடைபோட்டால் ஓரளவு விற்பதாக சொன்னார்கள். RMKVல் இன்னும் இரண்டு shelf அதிகமாக வைத்திருக்கலாம்!! ஆனால் இதுவே ஒரு நல்ல முயற்சிதான். பாராட்டுக்கள், பத்ரி & டீம்!

@

(தசாவதாரம் ரீலிஸ்க்கு முன்) திருவனந்தபுரம் சென்றபொழுது மலையாள பட போஸ்டர்களைவிட தசாவதாரம் போஸ்டர்தான் பார்க்கமுடிந்தது. அட நம்ம ஊர்லகூட இந்தளவுக்கு தசாவதாரம் போஸ்டர் பார்க்கமுடியலை. அப்புறம் குருவி.. அதற்கப்புறம்தான் சமீபத்தில் வெளியான கலாபன் மணி, மம்மூட்டி படத்தை பார்க்கமுடிந்தது.

@

தமிழ்மணம் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சேனு எட்டிப்பார்த்தா ..... அட ப்ருதிவிராஜ் மாதிரி freshஆ ... புதுசா இருக்கு. . என்னென்ன எங்கங்க இருக்கு புரிபட இன்னும் இரண்டு தடவை 'வந்துபோனா' சரியாயிடும்.

@@