Pages

தமிழ்

பிறமொழி இலக்கியம், எழுத்தின் ரகசியம், இளம் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பதிவைப் படித்த பொழுது ஒரு பெருமூச்சு மட்டுமே பதில். அவர் குறிப்பிட்ட 50 மொழிபெயர்ப்பு புத்தகங்களில் ஒன்றோ இரண்டோதான் கேள்விப்பட்டவை!! இந்த பதிவை 'பார்க்கும் முன்' தற்செயலாக கிடைத்த புத்தகம், 'மௌப்பனி ரகசியப்பனி - சிவக்குமார் காலச்சுவடு'.....

அவர் குறிப்பிட்ட இளம் எழுத்தாளர்களில் செழியன், தமிழ்நதி, அஜயன்பாலா ... போன்ற மிக சிலரின் படைப்புகள் மட்டுமே அறிமுகம் உண்டு. வேறு சிலரின் பெயர்கள் 'சகி' மூலம் கேள்விப்பட்டதுண்டு. அதோட சரி!!தென்றல் இதழில் முனைவர் வா செ குழந்தைசாமி அவர்களின் நேர்காணலையைப் படித்த பொழுதே ஒரு நெருடல் இருந்தது. அதையே கொத்ஸ் ஆரம்பித்து வைக்க (வழக்கம்போல) பலருடைய எண்ணச்சிதறல்கள்.

விரிவான கதைச்சுருக்கம் ரவிசங்கரின் பதிவில். ;)

ம்ம்ம்... என்னுடைய இரண்டனா...

விஜயகாந்த் இப்படி புள்ளி விவரங்களோட பேசியிருந்தா கைதட்டிட்டு 'வோட்டு(ம்)' போட்டுருக்காலாம்!!

தமிழ்ப் பற்று உள்ள... தமிழ் இணையப் பல்கலைகழகத்தின் தலைவருமான ஒருவரிடமிருந்து இப்படி ஒரு பதிலா என்பதுதான் ஆச்சரியமும், வருத்தமும். அதுவும் 12 வருடத்திற்குமுன் கிடைத்த (இருந்த) புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு பேசுவது அபத்தம்.

நவீன், இராமனாதன், அரை பிளேடு, தஞ்சாவூரான் இவர்களின் மறுமொழியும், வவ்வால், புருனோ, ரவிசங்கர் பதிவுகளும் மிக விரிவான விளக்கங்கள்.

இதற்குமேலும் தெளிவா சொல்லமுடியுமானு தெரியலை.

வேணும்னா ஒண்ணு பண்ணலாம்...

தமிழ் ஆசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு இப்ப மற்ற துறையில கிடைக்கிறமாதிரி மாசத்துக்கு இலட்சம் (!) ரூபாய் சம்பளம் கிடைச்சா அப்ப 'போட்டி போட்டுக்கிட்டு' தமிழ் படிக்க வருவாங்களோ என்னமோ........ ?!மதியின் திரைப்பார்வை மீது எனக்கு எப்பொழும் ஒரு சிறப்பு பார்வையுண்டு ;). அப்படி அறிமுகமான படம்தான், "Into The Wild" .

ஒரு சில படங்களை பார்த்துவிட்டு... (கொஞ்ச நாளைக்கு) வேற படங்கள் ஏதும் பார்க்கதோணாது. அந்தப் படத்தைப் பற்றிய சிந்தனைகளே வந்து செல்லும். அந்த வகையைச் சேர்ந்ததுதான் இதுவும்.

படத்தின் இயக்குநரான Sean Penn யை Mystic River மற்றும் சில தலைப்புச்செய்திகளின் மூலம் அறிமுகம் உண்டு. நடிப்பு, ஒளி ஓவியம், பாடல்கள், இசை என இரசிப்பதற்கு பல விசயங்கள் படத்தில் இருந்தாலும் படத்தின் வசனம்........ ம்ம்ம்.. இந்த நாவலை படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாயுள்ளது.

5 மறுமொழிகள்:

 1. said...

  என்னது நீங்களும் தென்றல் படிக்கறீங்களா? அப்போ தமிழறிஞர் ஆகிட்டீங்க போல!! கங்கிராட்ஸ்!! :))

 2. said...

  சில பதிவுகள் பார்க்கவில்லை...அதுக்கு ஒரு நன்னி ;))

 3. said...

  வாங்க கோபி!

  @ கொத்ஸ்

  /அப்போ தமிழறிஞர் ஆகிட்டீங்க போல!!/

  ஆ..ஹா.... எல்லாரும் ஒரு மார்க்கமாதான் இருக்காங்க.... போல..

  /என்னது நீங்களும் தென்றல் படிக்கறீங்களா?/

  அப்புறம் கொத்ஸ்...
  தென்றல் எடுக்கிறதுக்காகவே(!) கடைக்கு போனதுண்டு.....;)

 4. said...

  In to the wild பார்த்தாச்சா? ஒரு முக்கியமான விஷயம் கவனிச்சிங்களா? அந்த நபர் பிறந்த தேதி. :) எல்லா அக்வேரியன்ஸும் இப்படித்தானா?

 5. said...

  புதுப்புது புத்தகங்களைப் பார்த்து, படித்துச் சலித்துப் போன நான்
  இப்போது தமிழ் வலைப்பதிவுகளைப் பார்க்கத் துவங்கியிருக்கிறேன்.
  புதிதாக வரும் புத்தகங்களில் புதிதாக ஏதும் இருக்கிறதா !
  தெரியவில்லை. ஆனால், தமிழ்ப்பதிவுகளில் சிலவற்றில்
  புதியன நோக்கி ஒரு வேகம் தெரிகிறது.
  இது ஆறுதலாக இருக்கிறது.

  சுப்பு ரத்தினம்