Pages

வார இறுதி ......... ;)

(இலவச) ஙாலக அட்டை விண்ணப்பித்தால் 50 அமெரிக்க வெள்ளி,
பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக்கு சென்றால் 25 அமெரிக்க வெள்ளி,
குழந்தைகள் பள்ளி தேர்வில் பாஸ் ஆனால் 600 அமெரிக்க வெள்ளி

இப்படி வருடத்திற்கு 6000 அமெரிக்க வெள்ளி கிடைத்தால் ...

இந்த கூத்துதான் Opportunity NYC என்ற திட்டத்தின் மூலம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ம்ம்ம்.. உலகில் ஒரு பக்கம் ...... ஙாலகத்திற்கு வருவதற்கும், தேர்ச்சி பெற்றதற்கும் காசு கொடுத்து கொண்டிருக்க......
மற்றொரு பக்கம் ஙாலகங்கள் எங்க இருக்குனு தேடவேண்டிய கொடுமை!

@

கச்சா எண்ணெய் விலை மற்றுமொரு 'சாதனையாய்' 105 அமெரிக்க வெள்ளியாக உயர , இதே சாதனை தொடர்ந்தால் இன்னும் அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5 அமெரிக்க வெள்ளிக்கு சென்று விடும் என்றுதான் தோன்றுகிறது.

இதற்கிடையில் புஷ் OPEC (Organisation of Petroleum Exporting Countries) கூட்டமைப்பை கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்ள.... அவர்கள் என்ன ஐ.நா வா உடனே 'தலையாட்ட' .....

'இதற்கு காரணம் உலக சந்தையில் அமெரிக்க வெள்ளியின் வீழ்ச்சியும், உங்களின் கவனக்குறைவும் (the mismanagement of the U.S. economy) தான் காரணம். கச்சா எண்ணெய் உற்பத்தி அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது' OPEC தலைவர் சொல்ல அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள்.

@

தங்கர் பச்சானின் 'ஒன்பது ரூபாய் நோட்டு' நாவல் படிக்க கிடைத்தது. இந்தப் படத்தின் விளம்பரத்தை பார்த்துட்டு படம் பாக்கணும் எண்ணம் இருந்தது. இதுவரை பார்க்காததால் சரி.... நாவலை முதலில் படிக்கலாம் என்ற ஆவலினால் படிக்க ஆரம்பித்தது. மாதவ படையாச்சின் பாசத்தையும், வெகுளிதனத்தையும் சொன்னவர் அவருடைய முன் கோபத்தையும் வறட்டு கவுரத்தையும் அந்தளவுக்கு அழுத்தமாக சொல்லவில்லை என்றே தோன்றுகிறது.

ஒரு பின்தங்கிய கிராமத்து மக்களின் வாழ்க்கை முறை, பலா, முந்திரி தோப்பு என்று பல இடங்களில் மண்ணின் வாசனை.

ஆனால் ஒளி ஓவியமும், இயக்கமும் தொழிலாக இருக்க அவரிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு நாவல் எனும்போது ஆச்சரிமே அதிகமாகிறது.

@

குமுதம் சினிமாவில் பருத்தி வீரனுக்காக பெர்லின் சென்று விருது வாங்கி வந்த அமீர் பேட்டி மிகவும் யாதர்த்தமாக இருந்தது. மனதில் கோபமும், மறக்கப்படுதலின் வலி இருந்தாலும் அதையும் தாண்டி அவருடைய பேச்சு மனதில் இருந்து வந்ததினால் உண்மையாக எதையும் சொல்ல முடிகிறது. வாழ்த்துகள், அமீர்!!

மார்ச் 8 - மகளிர் தினமாம்! அதற்காக 'மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி -- சாதனை பெண்களின் கருத்து' மற்றும் நடிகை ஷகிலாவிடம் சில கேள்விகள்.

பல "சாதனை பெண்கள்" பதில் சொன்னாலும் - மருத்துவர் ஷாலினி, ஃபாத்திமா பாபு, நடிகை சரண்யா மற்றும் கூலி வேலை செய்யும் பெண்ணின் பதில்கள் அழுத்தமும், அழகும்!!

சரி.... அப்படி என்னதான் ஷகிலா சொல்ல போறாங்கனு பார்த்தா..... ம்ம்ம்..... எதிர்பார்த்ததைவிட நல்லாவே பதில் சொல்லி இருந்தாங்க.

வார இறுதி ... யாரும் ஏமாந்து போகக்கூடாது. அதனால் ........





2 மறுமொழிகள்:

  1. said...

    வார இறுதி கதை தொகுப்பு நல்ல்ல்ல்ல்லாவே இருக்குது. ;-)

    9 ரூபாய் நோட்டு நாவல் எங்கே கிடைக்குதுன்னு சொன்னா நாங்களும் வாங்குவோமில்ல.

  2. said...

    /9 ரூபாய் நோட்டு நாவல் எங்கே கிடைக்குதுன்னு சொன்னா நாங்களும் வாங்குவோமில்ல./

    'எங்க ஊரு' ஙாலகத்தில கிடைச்சது. நம்ம ஊருல எங்க கிடைக்குதுனு விசாரிச்சி சொல்றேனே....!