Pages

வரலாறு

எனக்கெல்லாம் வரலாறுகிறது 5 மதிப்பெண், 10 மதிப்பெண் கேள்வி-பதில்கிறதுக்கு மேல எந்த ஞாபகமும், ஆர்வமும் இருந்ததில்லை. அக்பரின் பொற்காலம், பானிபட் போர், சேர/சோழ/பாண்டியர்கள் ...... இதுக்கு மேல அதிகம் என்ன இருக்குனு நினைச்சிருக்கேன். பள்ளிப் பருவத்தில் அதற்கு மேல் ஆர்வமும் இருந்ததில்லை. அதுக்கு நமது கல்வி முறையா, அமைந்த ஆசிரியர்களா....இல்ல நமக்கு மண்டைல அவ்வளவுதான் ஏறிச்சா-னு பட்டி மன்றம் வைச்சிதான் முடிவு பண்ண வேண்டியிருக்கும்.

கல்லூரி படிப்பை முடிச்சிட்டு, வேலைக்காக வெளிநாடு வந்தப்புறம், குறிப்பாக அமெரிக்கா வரலாறை தெரிஞ்சிக்கிற வாய்ப்பு எளிமையா கிடைத்தது. History Channel, DVD... இல்லனா நூலகத்தில் (இலவசமாய்) கிடைக்கும் வீடியோக்கள்.. னு ஒரு ஆர்வம் வந்து, 'கொஞ்சம்' பொன்னியின் செல்வன், எஸ். ராம கிருஷ்ணனின் 'தேசாந்தரி', மதனின் 'வந்தார்கள் வென்றார்கள்' நூலைப் (--படித்துவிட்டு) படிக்க ஆரம்பிச்சி வரலாறு மேல ஆர்வமும் அதற்கு மேல ஒரு பிரமிப்பும் வந்தது.

நான் சிறுவனாய் இதுக்கும் பொழுது, என் அப்பா கூட்டி சென்ற தஞ்சாவூர் பெரிய கோவில், கல்லணை, அப்புறம் பல கோவில்கள், குளங்கள்.. நினைவுக்கு வருது. அப்பாவுக்கு சிற்பம், கலை-ல ரொம்ப ஆர்வம். எதயும் நிறுத்தி, நிதானமா விளக்கமா பார்ப்பங்க. நம்ம அப்பலாம் அம்மாவோட escape ஆயிடுறது. அதலாம் நினச்சி பார்த்தா ஒரு நல்ல வாய்ப்பை இழந்திருக்கேன். அதலாம் திரும்பி கிடைக்க போறதுல்ல... சுஜாதா வசனங்கள வரமாதிரி, வாழ்க்கைல ஒரு rewind button இருந்தா ரொம்ப நல்லாதான் இருக்கும். ம்ம்ம்....

நம்ம பள்ளிக்கூடத்திலேயும், பாடத்திலேயும் கத்துக்கிறத்தைவிட இயற்கைகிட்ட இருந்து அதிகம் கத்துக்கலாம் - வாழ்க்கைய..அதுக்கு நிதானமும், ரசிப்புத்தன்மையும் தான் தேவை. அமெரிக்கா வரலாறு அதிகபட்சம் 500 வருசம் இருக்குமா? அதுக்கு அவுங்க குடுக்கும் முக்கியத்துவமும், தெரிவிக்கும் விதமும் ரொம்ப ஆச்சரியமா இருக்கும். ஆனால் நம்முடைய வரலாறோ பல கி.மு./கி.பி தாண்டியது. நம்மளோட மதிப்பு நமக்கே தெரியலையோ?

முதல் ஜனாதிபதி வாஷிங்டன் நினைவிடத்தையோ அல்லது ஆப்ரகாம் லிங்கன் நினைவிடத்தையோ பார்க்க ஒவ்வொரு நாளும் பல பேர் பல இடங்கள இருந்து வராங்க. அந்த நினைவிடத்தில அந்த தலைவரின் பேச்சுகள், சாதனைகள் -னு அவர்கள் வாழ்ந்த இடத்தை புதுப்பிச்சி அடுத்த தலமுறைக்கு சொல்றாங்க. ஆனா இந்தியாவில்... .நம்ம தமிழ்நாட்டில பிறந்து தமிழ்நாட்டின் முதல்வராகி, இந்தியாவின் 'King Maker'ஆன காமராஜரைப் பத்தி என் மகளுக்கு சொல்லணும்னா .... எப்படி சொல்றது...? 'விருதுநகர்-ல காமராஜர் நினைவிடம் இருக்கு. போய் தெரிஞ்சிகிட்டு வாம்மா'-னா .... அங்க எந்தளவுக்கு அவளுக்கு தகவல் கிடைக்கும்-கிறது ஒரு கேள்விக்குறிதான்...? தலைவன் என்பதற்கு அவருடைய வாழ்க்கையே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அந்த தலைவனின் சிந்தனை, பேச்சு, நிர்வாகம் நம் தலைமுறைக்கு ஒரு பாடம்.
நம்ம பாரதியைப்பத்தி.. அவர் பிறந்த ஊரைப்பத்தி எத்தனை பேருக்கு தெரியும்? எத்தனை பேர் நேரில் சென்று பார்த்திருப்போம்?
வ.உ.சி பிறந்த ஒட்டபிடாரம்....
கட்டபொம்மனை தூக்கில் போட்ட கயத்தாறு ....
சுதந்திர போரட்டத்தில் இந்தியாவை உலுக்கிய வாஞ்சிநாதனின் மணியாச்சி இரயில் நிலைய நிகழ்வுகள் ...

எனக்கு தெரிந்தே ஒரு பெரிய பட்டியல் போடலாம்.

ம்ம்ம்... நாம்தான் கடந்த 5 வருடங்களில் நடந்ததையே எளிதாக மறந்துவிட கூடியவர்கள்தானே...வரலாற்றையா நினைவில் வைத்துகொள்ளப் போகிறோம்?

இப்பொழுதெல்லாம் எனக்கு வரலாறு மிகவும் பிடித்துள்ளது. .... இனிமேல் யாரும் எனக்கு தேர்வு வைத்து மதிப்பெண் குடுக்கப்போவதில்லை!

தில்லானா மோகனாம்பாள்

மு.கு.: திரை விமர்சனம் அல்ல..!


சமீபத்தில சன் தொலைகாட்சியில 'தில்லானா மோகனாம்பாள்' 5வது தடவை பார்த்தேன். ஒவ்வொரு தடவை பாக்கிறப்பவும், முத தடவ பார்க்கிறப்ப இருந்த வியப்புதான் வருது.

ஒவ்வொரு தடவை பார்க்கிறப்பவும் ஒவ்வொருத்தங்க மேல...

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நடிப்ப சொல்லுறதா...

நாட்டியப் பேரொளி பத்மினி நாட்டியத்த சொல்லுறதா...

நடிப்புச் செல்வர் பாலையாவ சொல்லுறதா...

நாகேஷ், மனோரமா நடிப்பு,

கண்ணதாசன் பாடல்கள்,

இசை-னு ஒரு பெரிய பட்டியல் போடலாம்..

இதுக்கும் மேல திரைக்கதை, தயாரிப்பு மற்றும் படத்தை இயக்கிய AP நாகராஜன் (திருவிளையாடல் படத்துல நக்கீரனா வருவாரே) அவர்களையா...


'சிக்கல்' சண்முகசுந்தரம் - மோகனாம்பாள் இடைய உள்ள காதல்..
'சிக்கல்' சண்முகசுந்தரம் தன் திறமை-ல உள்ள நம்பிக்கைனால அவனுக்கே உரிய கோபம்....
அந்த குணம்தான் மோகனாவுக்கும் பிடிக்க மெல்லியதாய் அவள் மனதில் வரும் காதல்...

இவுங்க சந்திக்கிற ஒவ்வொரு இடமும் ஒரு கவிதை!


இரண்டு பேரு முதல சந்திக்கிற இடம்.....
சண்முகம் நாதஷ்வரம் வாசிச்சிகிட்டு இருக்கறப்ப, மோகனா வண்டி-ல வந்து இறங்கினதும் தன் தம்பிக்கிட்டயும், பாலையா கிட்டயும் கண்ணாலயே ஜாடை காட்டிடு மறுபடியும் வாசிக்கிற காட்சி...,

Trainல இரண்டு கோஷ்டியும் போறப்ப இவுங்க இரண்டு பேரு கண்கள் மட்டும் மணிகணக்கா பேசுமே அந்த காட்சி...

...இப்படி சொல்லிகிட்டே போகலாம்.


அருமையான நடிப்பு, ஆழத்தமான கதை, அழகான திரைக்கதை, மனதை வருடும் இசை, எத்தனை ஆண்டுகளனாலும் கேட்க ஆவலை துண்டும் பாடல்கள்....


மூணு மணி நேரமே போறதே தெரியாது.
ம்ம்ம்....இனிமேல் இப்படி ஒரு படம்தான் வருமா?


பிகு:

1. இந்தப்படம் 1968-ல வந்தது-னு அப்பா சொன்னதா <>பகம்.

2. "மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன..." இந்த்ப் பாட்டிற்கு பத்மினி நடனமாடுறப்ப, அவர் மூன்று மாதம் கர்ப்பிணி என்று என் தோழி சொன்னாள். உண்மையா என்று தெரிய வில்லை?

எனக்கு பிடித்த தொடர்கள்

DDல ஒலியும், ஒளியும், சித்ரகார் (எப்படா, தமிழ் பாட்டு வரும்னு காத்துகிட்டு இருந்த காலம்) மட்டும் பார்த்துகிட்டு இருந்த காலகட்டத்திலேயே, அப்பா 11ம் வகுப்பிலேயே விடுதி-யல போய் சேர்த்து விட்டுடாங்க. அதனால, சன் அப்புறம் மற்ற சேனல்களை பாக்கிற 'பாக்கியம்' கிடைக்கலை. வீட்டுக்கு போன அம்மாவோட சேர்ந்து கொ ச நேரம் பார்க்கிறதுண்டு.

வேலையின் காரணமாக அமெரிக்கா வந்தபின், சாயந்திரம் நேரங்களில வேற வேல வெட்டி இல்லாததானால இங்க வர தொடர பார்க்க ஆரம்பிச்சது...

அதுல நான் விரும்பி பார்த்தவைகள்:

1. 7th Heaven (சேனல்: WB; நாள்: திங்கட்கிழமை )
2. Seinfeld (சேனல்: FOX; நாள்: -- )
3. Dawson's Creekshow (சேனல்: WB; நாள்: புதன் )
4. ER (சேனல்: NBC; நாள்: வியாழன்)
5. Friends (சேனல்: NBC; நாள்: -- )
6. The Cosby Show (சேனல்: PBS; நாள்: -- )

1. 7th Heaven (1996):

Protestant pastor, Stephen. அவர் மனைவி, Catherine . இவுங்களுக்கு 5 குழந்தைகள்(!) [வயது: 16,14,12,9,4]. இரண்டு பசங்க; மூணு பொண்ணுங்க. இவுங்களுக்கு வர பிரச்சனைகள் அத அவுங்க எப்படி சமாளிக்கிறாங்கனு கத போகும். சந்தோஷம், துக்கம், கிண்டல்னு பொதுவா வாழ்க்கையில நடக்கிற சம்பவங்களை நல்லா நேர்த்தியா ஜாலியா சொல்லிருப்பாங்க. அப்புறம் twins (!!)[பசங்க] கூட பிறக்கும்.

இப்ப கடைசியா பார்த்து ஒரு வருடத்திறகு மேல இருக்கும் !! அதனால இன்னும் WBல வருதா-னு தெரியலை...

2. Seinfeld (1990):

பழைய தொடர். இரண்டு மூணு சேனல வருது. நாலே கதாபாத்திரம் தான். ரொம்ப அருமையான காமெடி பண்ணுவாங்க. அதிகப்படிபோனா ... ஒரு Resturant அப்புறம் ஒரு Apartment. எப்ப பார்த்தாலும் புரியும்; எப்ப பார்த்தாலும் சிரிக்கலாம்;

Emmy அவார்ட் வாங்கிருக்கு!

3. Dawson's Creekshow (1998):

ஒரே வகுப்பில் படிக்கும் எட்டு நண்பர்கள் (4 பசங்க; 4 பொண்ணுங்க). இவுங்களுக்குள்ள வர போட்டி, பொறமை, dating, gay -னு romaticஆ போகும். அந்த மூணு பொண்ணுங்கள ஒருத்திதான் Kate Homes. இப்ப Tom Cruise வோட இரண்டாவது மனைவி. Romanticஆ பிளிந்து எடுத்தாலும் நட்பைபத்தி சொல்ற சில இடங்கள் நல்லா ரசிக்கும் படியா இருக்கும். Title song நல்லா இருக்கும். Kate Homes யை பார்த்து கொ<>ச நேரம் ஜொள்ளு விடலாம்.

4. ER (1994):

சிக்காகோவில் உள்ள ஒரு மருத்துவமனை Emergency வார்டுல நடக்கிற சீரியஷான கதைகளம். ஆறு மருத்துவர்கள். தினமும் நடக்கிற அவுங்களோட வேலை முறைகள், அதில் வரும் பிரச்சனைகள், வாழ்க்கை முறை, அதில ஏற்படுற காதல், சோகம், நட்பு-னு ரொம்ப த்ரிலிங்கா எடுத்துருப்பாங்க. Title இசை நல்லா இருக்கும். George Cloney ரொம்ப நல்லா நடிச்சிருப்பார். இப்ப வேற ஆறு பேரு [கால்சீட் பிரச்சனையோ?!]. இப்ப நீலா (அ) நிலாவா (?) கிற டாக்டர் கதாப்பாத்திரத்தில Bend it Like Becham-ல நடிச்ச பொண்ணு நடிக்கிது. விறுவிறுப்பா போகும். காமிராவுக்காகவே இந்த தொடர பார்க்கலாம். ரொம்ப அருமையான ஒளிப்பதிவு. Emergency வார்டுல நடக்கிறத ரொம்ப நேர்த்தியா படம் பிடிச்சிருப்பாங்க!

இந்த கதையை உருவாக்கியவர், புகழ் பெற்ற எழுத்தாளர், Michael Crichton. இவர் எழுதிய fictions: Congo, Sphere, Jurassic Park, Rising Sun, The Lost World .........

நாலு Emmy அவார்டும், ஒரு Golden Globe அவார்ட் வாங்கிருக்கு.

5. Friends (1994):

இதுவும் ஒரு கலக்கலான காமெடி. ந்து நண்பர்கள். அதிகப்படியா... ஒரு வீடு இல்லனா coffee shop. சென்டிமெண்டும் உண்டு.... காதலும் உண்டு. Phoebe காரெக்டர் ரொம்ப பிடிக்கும். இதுவும் எப்ப பார்த்தாலும் புரியும்; எப்ப பார்த்தாலும் சிரிக்கலாம்; இந்த தொடர் முடி<>சதால இப்ப இரண்டு மூணு சேனல வ்ருது.

ஒரு Emmy அவார்ட் வாங்கிருக்கு. தொடர்ந்து ஆறு தடவை People's Choice அவார்ட் வாங்கிருக்கு.

6. The Cosby Show (1984):

இதுவும் கிட்டதட்ட 7th Heaven மாதிரிதான்.

Upper Middle Class குடும்பம். "Cliff" Huxtable (Bill Cosby) ஒரு டாக்டர். அவர் மனைவி, Clair Huxtable வழக்கறி ர். நாலு பொண்ணுங்க; ஒரு பையன். குழந்தைக வளக்கிறதுல உள்ள கஷ்டங்கள், சந்தோஷங்கள்-னு ரொம்ப பயனுள்ளதா அதே நேரத்துல காமெடியாவும் கொண்டு போயிருப்பாங்க. கதப்படி, Cliffக்கு 'nature of humor' உண்டு. [நம்ம தமிழ் படம், "ஆஹா" ல வர கதாபாத்திரங்க மாதிரி]

இதுவும் ஆறு Emmy, மூணு Golden Globe அவார்ட்லாம் வாங்கிருக்கு.


இதலாம் நான் திருமணத்துக்கு முன்பு பார்த்த தொடர்கள். கல்யாணத்துக்கு அப்புறம், என் மனைவிக்கு பொதுவா எந்த சீரியலேயும் (!?) ஆர்வம் இல்லாததால, எப்பயாவது ரெண்டு பேரும் சேர்ந்து ER, 7th heaven பாக்கிறதுண்டு.

குழந்தைக பிறந்ததுக்கப்புறம் அதுவும் பார்க்க நேரம் கிடைப்பதில்லை.

அறிமுகம் - 2

இந்த வாரம் இன்னும் ரொம்ப வலைப்பூ மேய்ச்சிட்டு வந்த பிறகு, கொ<>சம் பயமாதான் இருக்குது.

அவசப்பட்டு இந்த பெருங்கடல குதிச்சிட்டோமா-னு? இங்க பெரிய பெரிய ஜாம்பாவான்கள் திமிங்கலம்-லா இருக்கிறப்போ நீ இங்க வந்து என்ன பண்ணப்போறனு மனதுகுள்ள இருந்து ஒரு அசிரீ.

உண்மைதான். இதலாம் தேவையில்லாத அதிகபிரசங்கித்தனம்தான்.

அதனாலன்ன, நம்ம குட்டி மீன் 'Nemo' போல ஒரு பக்கம் நீந்தலாம்-னு
கடற்கரைக்கு போனா, 'surfing' ...அது இது-னு ஒரு கூட்டம் பட்டைய கிளப்பிகிட்டு இருக்கிறப்போ...சின்ன குழந்தைங்க எப்படி கரைல நின்னுகிட்டு காலமட்டும் நனச்சிகிட்டு சந்தோஷமா இருப்பாங்களே அது மாதிரி..

எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.

அது சரி... ஏன் இந்தப் பக்கம் வந்தேன்னா...

இங்க இருக்கிற கட்டற்ற சுதந்திரத் தன்மை.... மொழி, இலக்கியம், புத்தகங்கள், அரசியல், விளையாட்டு, சினிமா..னு ஒன்னையும் விட்டு வைக்கிறதில்ல. எல்லாத்தையும் அக்கு வேரு, ஆணி வேரு-னு பிச்சி போட்டு உனக்கு எது தேவையோ அத எடுத்துக்கோ-னு சொல்லிட்டா ... அங்கதான் பிரச்சனையே!

எது சரி, எது தவறு-கிறத பாகுபடுத்தி சரியானத சரியா தெரி<>சிக்கணும் பாருங்க ...அங்கதான்...

ம்ம்ம்.. பார்க்கலாம்..

சோதனை பதிவு

இது ஒரு சோதனை பதிவு..

அறிமுகம்

அனைவருக்கும் வணக்கம்!

..ச்சும்மா ஒரு சுயபுராணம் தான்!!

கொஞ்ச நாட்களாகத் தான் தமிழ் blog எனக்கு அறிமுகம்.

சில மாதங்களுக்கு முன்பு, என் நண்பனிடமிருந்து ஒரு மின் அஞ்சல் - அவனுடைய blog முகவரியுடன் ....

அவன் அனுப்பிய சில நாட்களுக்கு அப்புறம்-தான் அவனுடைய பதிவை படிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஒரே ஆச்சரியம்...அட நம்ம ஆளா இது இப்படி கலக்குறது-னு..?!

கல்லூரியில் படிக்கிறப்ப ...

அவன் கலைஞரை பத்தி பேசினா, நம்ம MGR பத்தி பேசுறது.. (ஆன சனி, ஞாயிறுகளில் இன்னும் இரண்டு நண்பர்களோட MGR/சிவாஜி படத்துக்கு கிளம்பிடறது),

அவன் கமலப் பத்தி பேசினா, நம்ம ரஜினிப் பத்தி பேசுறது...

அவன் மணிரத்தினத்தை பத்தி பேசினா, அதுக்கு விதண்ட வாதம பேசி....
வெட்டி கத அடிச்சிக்கிட்டு இருப்போமே......அவனா....

அது வரைக்கும் சுயமுன்னேற்றம் புத்தகங்களை படிச்சுக்கிட்டு இருந்த எனக்கு பாலகுமாரன், சுஜாதா புத்தகங்கள் என அறிமுகம்... ஆன அதுலலாம் ஆர்வமே இல்லாத ... அவனா....

அவனுடைய மற்ற பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன். என் ஆச்சரியம் இன்னும் அதிகமாயிற்று...

அப்படி ஒண்ணும் இலக்கிய நடை இல்லை. ஆனால் சுவார்ச்சியமாக இருந்தது.
அட! நம்ம ஆளுக்கு இவ்வளவு திறமையா-னு பெருமை பட்டுகிட்டு பின்னூட்டம் இட்ட மற்ற பதிவர்களின் வலைப் பூ பக்கம் மேய ...

என்னுடைய ஆச்சரியம் பிரம்மிப்பாக மாறியது.

என் தோழி மூலம் எனக்கு அறிமுகமான சாரு நிவேதிதா, ஜெயமோகன், S. ராம கிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், மாலன்...... இப்படி நேரம் கிடைக்கும் போதலாம் வாசிக்கும் எனக்கு, எல்லாம் ஒரே இடத்தில் கிடைத்தால் ....., 'நம்ம இருட்டு கட அல்வா' கிடச்சா மாதிரி தான்..... மேய ஆரம்பித்தேன்.

அப்படி அறிமுகமானது தான் .....

பல முறை ...... பின்னூட்டமாவது இடவேண்டும் என்று நினைத்தாலும் சந்தர்ப்பம் அமைந்ததில்லை.

அப்படி படித்ததுதான்,
ஜோசஃப் சாரின், "திரும்பிப் பார்க்கிறேன்-I"
SK சாரின், "பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" தொடரும்,
விடாதுகருப்பு அவர்களின் ஆனித்தரமான கருத்தும்
செல்வநாயகி அவர்களின் ஆழ்ந்த சிந்தனை-யும்,
ஜோ அவர்களின் நல்ல நடையும்
[(பல பேர் இருப்பினும்) இப்படி உடனே நினைவுக்கு வருபவர்கள்.] என்னை கவர ஆரம்பித்தது.

அதன் பின், Yahoo! 360-ல போய் தமிழ்-லில் தட்ட ஆரம்பித்தேன். சரியாக வரவில்லை. இதலாம் நமக்கு சரிப்பட்டு வராது-னு விட்டுடேன்.

அப்புறம் திடீரென்று ஒரு நாள் விழிப்புணர்வு...
ஏன்...பிடித்த பதிவு-களில், (atleast) ஒரு பாரட்டாவது சொல்ல கூடாதா-னு என் மனசாட்சி கேட்க அதுவும் சரிதானு ஆரம்பிச்சேன்.

'அதலாம் சரி....உனக்கு தமிழ் blog -ல பிடிச்சது பத்தி சொல்லவே இல்ல..' இது என் மனசாட்சி...

ஆமா... சரி.. அதப்பத்தி அடுத்த பதிவு-ல...