Pages

அறிமுகம்

அனைவருக்கும் வணக்கம்!

..ச்சும்மா ஒரு சுயபுராணம் தான்!!

கொஞ்ச நாட்களாகத் தான் தமிழ் blog எனக்கு அறிமுகம்.

சில மாதங்களுக்கு முன்பு, என் நண்பனிடமிருந்து ஒரு மின் அஞ்சல் - அவனுடைய blog முகவரியுடன் ....

அவன் அனுப்பிய சில நாட்களுக்கு அப்புறம்-தான் அவனுடைய பதிவை படிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஒரே ஆச்சரியம்...அட நம்ம ஆளா இது இப்படி கலக்குறது-னு..?!

கல்லூரியில் படிக்கிறப்ப ...

அவன் கலைஞரை பத்தி பேசினா, நம்ம MGR பத்தி பேசுறது.. (ஆன சனி, ஞாயிறுகளில் இன்னும் இரண்டு நண்பர்களோட MGR/சிவாஜி படத்துக்கு கிளம்பிடறது),

அவன் கமலப் பத்தி பேசினா, நம்ம ரஜினிப் பத்தி பேசுறது...

அவன் மணிரத்தினத்தை பத்தி பேசினா, அதுக்கு விதண்ட வாதம பேசி....
வெட்டி கத அடிச்சிக்கிட்டு இருப்போமே......அவனா....

அது வரைக்கும் சுயமுன்னேற்றம் புத்தகங்களை படிச்சுக்கிட்டு இருந்த எனக்கு பாலகுமாரன், சுஜாதா புத்தகங்கள் என அறிமுகம்... ஆன அதுலலாம் ஆர்வமே இல்லாத ... அவனா....

அவனுடைய மற்ற பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன். என் ஆச்சரியம் இன்னும் அதிகமாயிற்று...

அப்படி ஒண்ணும் இலக்கிய நடை இல்லை. ஆனால் சுவார்ச்சியமாக இருந்தது.
அட! நம்ம ஆளுக்கு இவ்வளவு திறமையா-னு பெருமை பட்டுகிட்டு பின்னூட்டம் இட்ட மற்ற பதிவர்களின் வலைப் பூ பக்கம் மேய ...

என்னுடைய ஆச்சரியம் பிரம்மிப்பாக மாறியது.

என் தோழி மூலம் எனக்கு அறிமுகமான சாரு நிவேதிதா, ஜெயமோகன், S. ராம கிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், மாலன்...... இப்படி நேரம் கிடைக்கும் போதலாம் வாசிக்கும் எனக்கு, எல்லாம் ஒரே இடத்தில் கிடைத்தால் ....., 'நம்ம இருட்டு கட அல்வா' கிடச்சா மாதிரி தான்..... மேய ஆரம்பித்தேன்.

அப்படி அறிமுகமானது தான் .....

பல முறை ...... பின்னூட்டமாவது இடவேண்டும் என்று நினைத்தாலும் சந்தர்ப்பம் அமைந்ததில்லை.

அப்படி படித்ததுதான்,
ஜோசஃப் சாரின், "திரும்பிப் பார்க்கிறேன்-I"
SK சாரின், "பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" தொடரும்,
விடாதுகருப்பு அவர்களின் ஆனித்தரமான கருத்தும்
செல்வநாயகி அவர்களின் ஆழ்ந்த சிந்தனை-யும்,
ஜோ அவர்களின் நல்ல நடையும்
[(பல பேர் இருப்பினும்) இப்படி உடனே நினைவுக்கு வருபவர்கள்.] என்னை கவர ஆரம்பித்தது.

அதன் பின், Yahoo! 360-ல போய் தமிழ்-லில் தட்ட ஆரம்பித்தேன். சரியாக வரவில்லை. இதலாம் நமக்கு சரிப்பட்டு வராது-னு விட்டுடேன்.

அப்புறம் திடீரென்று ஒரு நாள் விழிப்புணர்வு...
ஏன்...பிடித்த பதிவு-களில், (atleast) ஒரு பாரட்டாவது சொல்ல கூடாதா-னு என் மனசாட்சி கேட்க அதுவும் சரிதானு ஆரம்பிச்சேன்.

'அதலாம் சரி....உனக்கு தமிழ் blog -ல பிடிச்சது பத்தி சொல்லவே இல்ல..' இது என் மனசாட்சி...

ஆமா... சரி.. அதப்பத்தி அடுத்த பதிவு-ல...

3 மறுமொழிகள்:

  1. said...

    இன்னிக்குத்தான் இந்தப் பதிவைப் படித்தேன்.

    //ஒரே ஆச்சரியம்...அட நம்ம ஆளா இது இப்படி கலக்குறது-னு..?!//

    இப்படி ஆச்சரியப்பட வைத்த உங்க நண்பரோட blog முகவரி என்ன ?

  2. said...

    கதிரவன்,

    இப்படி வம்புள மாட்டி விடுறீங்களே?

    மூன்று மாதங்களுக்கு முன் இத படிச்சிட்டு, இப்பதான் கொஞ்சம் இத மறந்து இருக்கான். மறுபடியும் அவன் 'கோபத்திற்கு' ஆளாகனுமா?

    உங்களுக்கு மட்டும் தனியா சொல்றேன் ..;)

  3. said...

    "vrkathir at gmail dot com" க்கு அந்த முகவரியை அனுப்பி வைங்க, தென்றல் :-)