வரலாறு
எனக்கெல்லாம் வரலாறுகிறது 5 மதிப்பெண், 10 மதிப்பெண் கேள்வி-பதில்கிறதுக்கு மேல எந்த ஞாபகமும், ஆர்வமும் இருந்ததில்லை. அக்பரின் பொற்காலம், பானிபட் போர், சேர/சோழ/பாண்டியர்கள் ...... இதுக்கு மேல அதிகம் என்ன இருக்குனு நினைச்சிருக்கேன். பள்ளிப் பருவத்தில் அதற்கு மேல் ஆர்வமும் இருந்ததில்லை. அதுக்கு நமது கல்வி முறையா, அமைந்த ஆசிரியர்களா....இல்ல நமக்கு மண்டைல அவ்வளவுதான் ஏறிச்சா-னு பட்டி மன்றம் வைச்சிதான் முடிவு பண்ண வேண்டியிருக்கும்.
கல்லூரி படிப்பை முடிச்சிட்டு, வேலைக்காக வெளிநாடு வந்தப்புறம், குறிப்பாக அமெரிக்கா வரலாறை தெரிஞ்சிக்கிற வாய்ப்பு எளிமையா கிடைத்தது. History Channel, DVD... இல்லனா நூலகத்தில் (இலவசமாய்) கிடைக்கும் வீடியோக்கள்.. னு ஒரு ஆர்வம் வந்து, 'கொஞ்சம்' பொன்னியின் செல்வன், எஸ். ராம கிருஷ்ணனின் 'தேசாந்தரி', மதனின் 'வந்தார்கள் வென்றார்கள்' நூலைப் (--படித்துவிட்டு) படிக்க ஆரம்பிச்சி வரலாறு மேல ஆர்வமும் அதற்கு மேல ஒரு பிரமிப்பும் வந்தது.
நான் சிறுவனாய் இதுக்கும் பொழுது, என் அப்பா கூட்டி சென்ற தஞ்சாவூர் பெரிய கோவில், கல்லணை, அப்புறம் பல கோவில்கள், குளங்கள்.. நினைவுக்கு வருது. அப்பாவுக்கு சிற்பம், கலை-ல ரொம்ப ஆர்வம். எதயும் நிறுத்தி, நிதானமா விளக்கமா பார்ப்பங்க. நம்ம அப்பலாம் அம்மாவோட escape ஆயிடுறது. அதலாம் நினச்சி பார்த்தா ஒரு நல்ல வாய்ப்பை இழந்திருக்கேன். அதலாம் திரும்பி கிடைக்க போறதுல்ல... சுஜாதா வசனங்கள வரமாதிரி, வாழ்க்கைல ஒரு rewind button இருந்தா ரொம்ப நல்லாதான் இருக்கும். ம்ம்ம்....
நம்ம பள்ளிக்கூடத்திலேயும், பாடத்திலேயும் கத்துக்கிறத்தைவிட இயற்கைகிட்ட இருந்து அதிகம் கத்துக்கலாம் - வாழ்க்கைய..அதுக்கு நிதானமும், ரசிப்புத்தன்மையும் தான் தேவை. அமெரிக்கா வரலாறு அதிகபட்சம் 500 வருசம் இருக்குமா? அதுக்கு அவுங்க குடுக்கும் முக்கியத்துவமும், தெரிவிக்கும் விதமும் ரொம்ப ஆச்சரியமா இருக்கும். ஆனால் நம்முடைய வரலாறோ பல கி.மு./கி.பி தாண்டியது. நம்மளோட மதிப்பு நமக்கே தெரியலையோ?
முதல் ஜனாதிபதி வாஷிங்டன் நினைவிடத்தையோ அல்லது ஆப்ரகாம் லிங்கன் நினைவிடத்தையோ பார்க்க ஒவ்வொரு நாளும் பல பேர் பல இடங்கள இருந்து வராங்க. அந்த நினைவிடத்தில அந்த தலைவரின் பேச்சுகள், சாதனைகள் -னு அவர்கள் வாழ்ந்த இடத்தை புதுப்பிச்சி அடுத்த தலமுறைக்கு சொல்றாங்க. ஆனா இந்தியாவில்... .நம்ம தமிழ்நாட்டில பிறந்து தமிழ்நாட்டின் முதல்வராகி, இந்தியாவின் 'King Maker'ஆன காமராஜரைப் பத்தி என் மகளுக்கு சொல்லணும்னா .... எப்படி சொல்றது...? 'விருதுநகர்-ல காமராஜர் நினைவிடம் இருக்கு. போய் தெரிஞ்சிகிட்டு வாம்மா'-னா .... அங்க எந்தளவுக்கு அவளுக்கு தகவல் கிடைக்கும்-கிறது ஒரு கேள்விக்குறிதான்...? தலைவன் என்பதற்கு அவருடைய வாழ்க்கையே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
அந்த தலைவனின் சிந்தனை, பேச்சு, நிர்வாகம் நம் தலைமுறைக்கு ஒரு பாடம்.
நம்ம பாரதியைப்பத்தி.. அவர் பிறந்த ஊரைப்பத்தி எத்தனை பேருக்கு தெரியும்? எத்தனை பேர் நேரில் சென்று பார்த்திருப்போம்?
வ.உ.சி பிறந்த ஒட்டபிடாரம்....
கட்டபொம்மனை தூக்கில் போட்ட கயத்தாறு ....
சுதந்திர போரட்டத்தில் இந்தியாவை உலுக்கிய வாஞ்சிநாதனின் மணியாச்சி இரயில் நிலைய நிகழ்வுகள் ...
எனக்கு தெரிந்தே ஒரு பெரிய பட்டியல் போடலாம்.
ம்ம்ம்... நாம்தான் கடந்த 5 வருடங்களில் நடந்ததையே எளிதாக மறந்துவிட கூடியவர்கள்தானே...வரலாற்றையா நினைவில் வைத்துகொள்ளப் போகிறோம்?
இப்பொழுதெல்லாம் எனக்கு வரலாறு மிகவும் பிடித்துள்ளது. .... இனிமேல் யாரும் எனக்கு தேர்வு வைத்து மதிப்பெண் குடுக்கப்போவதில்லை!

4 மறுமொழிகள்:
//இப்பொழுதெல்லாம் எனக்கு வரலாறு மிகவும் பிடித்துள்ளது. .... இனிமேல் யாரும் எனக்கு தேர்வு வைத்து மதிப்பெண் குடுக்கப்போவதில்லை!
//
நல்ல பஞ்ச். எனக்கு சின்ன வயசில இருந்தே வரலாறுல ஆர்வம் ஜாஸ்தி. ஆனா வருடத்த யாரால நினைவு வச்சுக்க முடியும். அதனால வெறுப்பு வரும். இப்போ வருடம் நினைவு வைக்கனுமின்னு அவசியம் இல்லாததால, திரும்பவும் பிடிப்பு வந்துருக்கு.
//இந்தியாவின் 'King Maker'ஆன காமராஜரைப் பத்தி என் மகளுக்கு சொல்லணும்னா .... எப்படி சொல்றது...? 'விருதுநகர்-ல காமராஜர் நினைவிடம் இருக்கு. போய் தெரிஞ்சிகிட்டு வாம்மா'-னா .... அங்க எந்தளவுக்கு அவளுக்கு தகவல் கிடைக்கும்-கிறது ஒரு கேள்விக்குறிதான்...? //
நீங்க வருத்தப் படுற அளவுக்கு மோசமா இல்ல. விஷயங்கள் அறியும் அளவுக்கு இருக்குது தான். ஆனா எந்த அளவுக்கு interesting-ஆ சொல்லியிருப்பார்கள்ன்னு தெரியாது.
உங்கள் கருத்துக்கு நன்றி, காட்டாறு!
/எனக்கு சின்ன வயசில இருந்தே வரலாறுல ஆர்வம் ஜாஸ்தி. /
interesting-ஆன தகவல் கிடச்சா சொல்லுங்க!
இப்போதைக்கு அலெக்ஸாண்டர் தி க்ரேட் பத்தி கரைத்து குடித்துக் கொண்டிருக்கிறேன். என்னவோ அவர் மேல ஒரு ஈர்ப்பு.
படிச்சிட்டு 'கதை' சொல்லிவீங்கதான..?
தினமலரில காமராஜர் நினைவு இல்லம் பற்றி சுற்றுலா மலர்-ல வந்திதுக்கு.
http://www.dinamalar.com/TouristMalar07/p21.asp
Post a Comment