Pages

வண்ண வண்ண கோலங்கள் - II

ஒரு நாள் நமக்குள் இருந்த கருத்து கந்தசாமி 'உனக்கு பிடித்த எழுத்தை மட்டும் வாசிக்கலாம்ல. நல்லா எழுதியிருந்தா ஒரு பாராட்டாவது சொல்லு'னு உசுப்பேத்த அந்த எண்ணங்களே செயலாகி .... விபரிதமானது. அப்படி ஆரம்பித்ததின் விளைவே... "தென்றல்".

'அவ்வை சண்முகி'னு என்ன ஒரு பெரிய காரணத்தில அந்த கதையின் நாயகன் பேர் வைக்க தோன்றியதோ...அதே போலதான்.. ஒண்ணும் பெருசா காரணப்பெயர்லாம் கிடையாது. ஆனால், வந்த புதிதில் சிலர் பெண் பதிவர் என்று நினைத்து கொள்ள (இப்பகூடதான்..) .. அட 'தென்றல்'னா அது பெண்ணாதான் இருக்கணுமா..ஏன் ஆண்கள் தென்றல்னு பேர் வைக்ககூடாதா ....இதனென்ன மூட நம்பிக்கை ;) !!? இப்படி நானே காரணம் கற்பித்துக்கொள்ள அதுவே தொடர்கிறது.

பதிவுக்கு பெயர்காரணம் என்றவுடன் நினைவுக்கு வருவது நம்ம கொத்ஸ்தான். இலவசக்கொத்தனார்! அவருடைய "இலவசகொத்தனாரியல்" வாசிச்சிட்டு ....... ம்ம்ம்..சொல்ல ஒண்ணும் தோணலை. அதலாம் 'அனுபவிச்சாதான்' தெரியும்..

பங்குசந்தை பற்றி, தினமும் சில குறிப்புகளோடுவந்த பங்குவணிகம் வலைப்பூ பயனுள்ளதாக இருக்க, நமக்கு தெரிந்த பங்குச்சந்தை விசயங்களை...தெரிந்ததை, படித்ததை பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ஆரம்பித்ததே 'நாணயம்'!

எங்கேயோ ஆரம்பித்து சுய புராணத்திற்கு சென்று விட்டது. நிற்க!

சிலரின் எழுத்துக்கள் படித்துவிட்டு அப்படியே பிரமிக்க வைக்கும். பாராட்டாவோ அல்லது ஒரு வார்த்தை சொல்லவோ தோன்றாமல் கடக்க நேரிடும். பல நேரங்களில் புரியாமல் போகும்!! ;) அப்படிதான் டிசே தமிழன், அய்யனார் போன்றோரின் வலை தளங்கள்.

பொருளாதாரத்தின் முக்கியதுவத்தை ஒரு பேராசிரியரைப் போல எடுத்து சொன்னது மா.சிவகுமாரின் எழுத்துக்கள்.

அவரிடம் தமிழில் ஏதேனும் அகராதி போடும் எண்ணமுன்டானு கேக்க ஆவல்!!

முழுக்க முழுக்க தமிழில்தான்(!) அவருடைய பதிவுகள். சில வார்த்தைகள் 'சுத்த தமிழில்' பயன்படுத்துவதால் கட்டுரையை படிக்கும்பொழுது அதன் 'விறுவிறுப்பு'குறைவதுபோல் எனக்கு ஓர் எண்ணம். அதனால்தான் எண்ணமோ அவருடைய சில முக்கியமான எழுத்துக்கள் (கட்டுரை) கவனம்பெறாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்குண்டு.

அடுத்தவர்களின் டைரியை படிப்பதே ஒரு 'த்ரிலிங்'தான்!! ஆனால் அதை உடைத்து போட்டது மா.சிவகுமாரின் 'உள்ள(த்)தைச் சொல்கிறேன்'. எந்த பாசாங்கும் இல்லாத அவருடைய எண்ணங்களும் எளிமையாக புரிந்து கொள்ளகூடிய எழுத்து நடையும் பிடித்து போனது.

ஒருமுறை அவருடைய பதிவில் பாசமலர் பாடலுக்கா அல்லது படத்துக்கா என்று நினைவில்லை எழுதிய விமர்சனத்துக்கு 'எதிராக' என் கருத்தை சொல்ல... அவர் பதில் கூறும்முன் 'அவர் கருத்தை சொல்லிருக்காரு. அதை ஏன்னு எப்படி கேட்கலாம்'னு சில மிரட்டல்கள்...இல்ல பதில்கள் வர.... 'ஆஹா... மா.சி. தனி ஆள் இல்லபோல.. சிட்டிசன் மாதிரியோ?! ' என்ற சந்தேகம் வந்தது.

பேரே வித்தியாசமா இருக்கேனு எட்டிப்பார்த்த பதிவு காட்டாறு. நமக்கும் சில கவிதைகள் 'புரியுதுனு' நினைக்க வைத்தது அவருடைய கவிதைகள். ;)எப்பவுமே ஜாலியான லேசான கவிதைகள்!! ஆனா சில சீரியசான கவிதைகளும் கைவசம் வைச்சிருக்காங்க...எப்ப பதிய எண்ணமோ... அவர்களுக்கே வெளிச்சம்! அவரின் ஆங்கில வலைப்பூவும் அப்பப்ப எட்டிப் பார்ப்பதுண்டு. இவரும் எங்க கல்லூரி!

கவிதைனு சொல்லிட்டு காயத்ரிய சொல்லைனா எப்படி..... முதல் பதிவில் புகைப்படத்துடன் பார்த்தபொழுது... உண்மையான பேரை சொன்னாலே, "நாஸ்தி பண்ற இந்த ஏரியாவில" இந்த பொண்ணு என்னடானா... ஃபோட்டோ வேற publish பண்ணிருக்கேனு ... இணையதளத்தில புகைப்படம் போடுறது எந்தளவுக்கு புத்திசாலிதனம் தெரியலை அப்படினு அடுத்த முறை சொல்லனும் நினைச்சப்ப இன்னொரு நண்பர் அதையே குறிப்பிட்டு இருந்தார். அவருடைய கவிதைகளும், 'சிறப்பான' சினிமா விமர்சனமும் கலக்கல்.

4 மறுமொழிகள்:

 1. said...

  மாசி பத்தி சொல்லிருக்கிறதைப் படிச்சிட்டு சிரிச்சிகிட்டே இருந்தேன்..
  அண்ணன் மா.சிக்காக உயிரைக் கொடுக்கும் அணி வேற ஏதாச்சும் இருக்கா, இல்லை, எதிரணியினரின் சதியான்னு தெரியலை.. லிங்க் கொடுத்தீங்கன்னா கண்டுபிடிக்க வசதியா இருக்கும் - இப்படிக்கு அ.மா.உ.கொ.அ ;-)

  ஏன் வேற பின்னூட்டங்கள் எதுவுமே வரலை இந்த இடுகைகளுக்கு?

 2. said...

  /இப்படிக்கு அ.மா.உ.கொ.அ ;-) /

  ஓ... இப்படிலாம்வேற இருக்கா..?!!

  அந்த பதிவு கிடைச்சா தரேன்..

  இந்த இடுகை தமிழ்மணத்தில வரலை..நீங்க மறுமொழி போடும்வரை...

 3. said...

  //தென்றல் said...
  இந்த இடுகை தமிழ்மணத்தில வரலை..நீங்க மறுமொழி போடும்வரை...
  //

  ஐயா தென்றல் அவர்களே, இது உங்களுக்கே நல்லா இருக்கா... தமிழ்மணத்துல போட ஒரு ஆள் ஏற்பாடு பண்ணித்தரவா?

  //சிலரின் எழுத்துக்கள் படித்துவிட்டு அப்படியே பிரமிக்க வைக்கும். பாராட்டாவோ அல்லது ஒரு வார்த்தை சொல்லவோ தோன்றாமல் கடக்க நேரிடும். பல நேரங்களில் புரியாமல் போகும்!!//
  நமக்கும் இதிலே பெரிய லிஸ்ட் இருக்குதுங்க.

  //பேரே வித்தியாசமா இருக்கேனு எட்டிப்பார்த்த பதிவு காட்டாறு. //
  ஐய்.. நம்ம பேரு... அது சரி... இப்படி தான் தடுக்கி விழுந்தீங்களா? :-)

 4. said...

  /நமக்கும் இதிலே பெரிய லிஸ்ட் இருக்குதுங்க.
  /

  பதிவு(தொடர்) எதிர்பார்க்கலாமா?