Pages

சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி?

ஒரு காலத்தில் சர்க்கரை நோயைப் பற்றிய எந்த விசயங்களும், செய்திகளும் முக்கியமாக பட்டதில்லை. 'அதிகமா இனிப்பு சாப்பிட்டா வரும். 40 வயசுக்கு அப்புறம் இனிப்ப குறைச்சிக்கிலாம். அதுக்கு இப்ப என்ன அவசரம்'  என்ற 'விசய ஞானத்தை' தவிர அதற்கு மேல் அதற்கு முக்கியதுவம் குடுத்ததில்லை. அலட்சியம்தான்..


உலகிலேயே இந்தியாதான் சர்க்கரை நோய்க்கான தலைநகரம்னு படிச்சிருந்தாலும்.....சில வருடங்களுக்கு முன், நண்பர் ஒருவருக்கு இந்த நோய் இருப்பதானால் திருமணம் நின்றுபோகும் அளவுக்கு போன செய்தியை கேள்விப்பட்ட பொழுது அதிர்ச்சியாகவே இருந்தது.

சமீபத்தில் அப்பாவிற்கு சர்க்கரை நோய் இருப்பதாக தெரிய வந்த பொழுது இந்த நோயைப் பற்றிய 'பின்னனி'யையும், அதன் தீவிரத்தையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம்  வந்தது. ஏனெனில், அப்பாவிற்கு சர்க்கரை நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லை. தினமும் உடற்பயிற்சி, காயகல்பம், ஆரோக்கியமான வீட்டு சாப்பாடு, நொறுக்கு தீனியா 'நோ' ..என்று தனக்குதானே கட்டுப்பாட்டுடன் இருந்தவருக்கு சர்க்கரை நோயா.....? இரண்டாவது டாக்டரும் 230 என்று சொன்ன பொழுதுதான் வேறு வழியே இல்லாமல் நம்ப வேண்டியிருந்தது. (ஆனால் அப்பாவோட அம்மா - அப்பாவிற்கு இருந்தது!)

இந்தப் புத்தகத்தில் மருத்துவர் என்ற கண்டிப்பு இருந்தாலும் அதற்கும்மேல் மனிதாபமானம் தெரிவதாலும், எளிமையான வாசிப்பு நடையினாலும் புத்தகத்தை ஒரே அமர்வில் படித்து முடித்துவிடலாம் (200 பக்கங்கள்தான்)!

சர்க்கரை நோய்
  •    அம்மா - அப்பாவிற்கு இருந்தால் பிள்ளைகளுக்கும் கண்டிப்பாக வரும். எ..ன்...ன... உணவுக் கட்டுப்பாட்டு மற்றும் உடற்பயிற்சி மூலம் கொஞ்ச காலம் தள்ளி போடலாம்.
  •     அம்மா, அப்பா இருவரில் ஒருவருக்கு இருந்தால் பிள்ளைகளுக்கு வர அதிக வாய்ப்புள்ளது.
  •    உயிரையே பறிக்கும் கொடுமையான நோய்.
இந்த நோய்க்கான அறிகுறிகள் வைத்து இதை கண்டறிவது கடினமே!

மருத்துவ பெயர்கள் போட்டு ரொம்ப குழப்பாமல் அனைவருக்கும் புரியும்படி மிகவும் எளிமையாக கொடுத்துள்ளார்கள்.  'ஃபோரடிக்காமல்'  படிக்க முடிகிறது.

பொதுவாக அலோபதி மருத்துவர்கள் யோகா,ஹோமியோபதி...போன்ற விசயங்களை பற்றி அதிகம் ஆர்வம் காட்ட மாட்டார்கள்! ஆனால் இதில் எளிய யோகா பயிற்சிகள், கட்டுப்பாட்டான உணவு முறை, பொதுவாக நமக்கு ஏற்படும் சந்தேகங்களை கேள்வி-பதிலாக  ஓர் அத்தியாம்......என்று சொல்லி கொண்டே போகலாம்!



இந்த நோயைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அல்லது  இந்த நோயைப்பற்றி ஒரு விழிப்புணர்வு தரும் அருமையான புத்தகம்!

சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி?
டாக்டர் எம். மருதுபாண்டியன்
[எழுத்து வடிவம்: அய். ஜெயச்சந்திரன்]
பக்கங்கள்:200 விலை ரூ. 100
நலம் வெளியிடு. [நீயூ ஹாரிசன் மீடியா]

1 மறுமொழிகள்:

  1. said...

    ஆகா...இதுவேற இருக்கா!!..ம் ரைட்டு