Pages

Paa

நடிப்பு: அபிஷேக்,வித்யா பாலன்....அறிமுகம்: அமிதாப்
ஒளிப்பதிவு: பிசி ஸ்ரீராம்
இசை: இளையராஜா



இப்படி ஒரு விளம்பரத்தை பார்த்தவுடன் இந்தி புரியவில்லையென்றாலும் சப்டைட்டிலோடு இந்தப் படத்தை பார்க்கணும் தோணிச்சி!

இதே கூட்டணியோட (ராஜா, பிசி ஸ்ரீராம், அமிதாப்....) 'சீனி கம்'  இப்படித்தான் பார்க்கபோய் ஏமாற்றம்தான் மிச்சம்! அதுவும் இளையராஜா மீது ரொம்பவே! தனது எண்பதுகளில் வந்த மெட்டுக்களை அப்படியே போட்டு ஏதோ ஒப்பேத்தி இருந்தார். ஆனால் இந்தப் படத்திற்கு அப்படியில்லாமல் புசுசா கம்போஸ் செய்யப்பட்டவையாம். பவதாரிணி, அமிதாப் லாம் பாடியிருக்காங்க!


டிசம்பர் 4 படம் ரீலிஸ்!!




ஒருபக்கம் 'பழசிராஜா', இன்னொரு பக்கம் 'பா' .... நீங்க பட்டைய கிளப்புங்க, ராஜா!!

மற்ற இணைப்புகள்:

படத்தோட இணையதளம்
டிவிட்டர்
Facebook


பாடல்கள்


அமிதாப் வலைப்பூ

2 மறுமொழிகள்:

  1. said...

    \\அதுவும் இளையராஜா மீது ரொம்பவே! \\

    ஒருவகையில நீங்கள் சொல்வது போல தான். ஆனா இயக்குனர் பால்கியோ ராசாவின் 80களில் பாடல்களைளே தான் வேண்டும் என்று வேண்டி படத்தில் இணைக்கிறார். ராஜா என்ன செய்ய முடியும்

    இந்த பா படத்தில் கூட 3 பாடல்கள் தமிழ்லில் வந்த பாடல்கள் தான்.

    எனக்கு எப்படி தோணுதுன்னா...சில இசையமைபாளர்கள் இந்தியில் போட்ட இசையை தமிழ் கொடுப்பார்கள். நம்ம ராஜா தமிழில் போட்ட இசையை இந்தியில் கொடுக்கிறார் ;))

  2. said...

    /ஆனா இயக்குனர் பால்கியோ ராசாவின் 80களில் பாடல்களைளே தான் வேண்டும் என்று வேண்டி படத்தில் இணைக்கிறார்.
    /
    ஓ...அப்ப இது இயக்குநரோட சதியா..?;(
    ஆனா..'சீனிகம்'ல அமிதாப்-தபு க்கு அந்த மெட்டுகள் எடுபடலை!!


    /இந்த பா படத்தில் கூட 3 பாடல்கள் தமிழ்லில் வந்த பாடல்கள் தான்./
    கேட்டேன் கோபிநாத்!
    ஒரு பாட்டு அலைகள் ஓய்வதில்லை மெட்டு; இன்னொரு பாட்டு விஜயகாந்த் படம்னு நினைவு; மூணாவது....?