Pages

கமல் 50

என்னதான் நிமிடத்திற்கு பலமுறை விஜய் தொலைக்காட்சி 'உலக நாயகன்'னு சொல்வதை கேட்க சலிப்பாக இருந்தாலும், இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எந்த பகுதியாலவது சினிமாவில் 50 வருடங்கள் நிலைத்து நின்று, வித விதமான அவதாரங்கள் எடுத்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை!





பாலசந்தர், ரஜினிலிருந்து சந்தனு வரை அந்த மாபெரும் கலைஞனுக்கு 'புகழ்ப்பா' பாடினாலும், அவருடைய வளர்ச்சி மகத்தானது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. எத்தனை படங்களில் எத்தனை காட்சிகளுக்கு ஒத்திகை பார்த்தவர்..இந்த விழாவிற்கும் கண்டிப்பாக ஒத்திகை பார்த்திருப்பார்! உணர்ச்சிகளை வெளியே காட்டிக்கொள்ளமல் கட்டுக்கோப்போடுதான் உட்காந்திருந்தைபோல் இருந்தது.

இருப்பினும், கவுதமியை மேடையேற்றி அவர் அருகில் உட்கார வைத்ததாகட்டும், தன் மகள் பாடிய 'நீ பார்த்த பார்வைக்கு நன்றி' என்று பாடிய பொழுதும் அவருடைய முகபாவனையும் சரி, ரஜினியுடன் தன் நட்பை பற்றிக் சவால்விடும்பொழுதும் சரி....அவருக்கு நிகர் அவர்தான்!

படங்களில் என்னதான் பக்கம் பக்கமாக பேசினாலும், சொந்தமாக இரண்டு வரிகள் பேசுவதென்பது எவ்வளவு கஷ்டகிறத சரத்குமார் போல சில பேர் பேசும் பொழுது பார்க்க முடிந்தது.  ஜெயராம் மிகவும் யதார்த்தமாக பேசியதாக இருந்தது. ராதிகா ரஜினி,கமலையை கலாய்த்ததும்  கலக்கல். மற்ற இரண்டு 'உலக நாயகர்கள்' (மம்முட்டி & மோகன்லால்) பேசியது OK!





பாலசந்தர், மம்முட்டி, மோகன்லால் போன்ற பல ஜாம்பவான்கள், பிரகாஷ்ராஜ், மிஷ்கின், பிரசன்னா வரை பலரும் அந்த விழாவில் கலந்து கொண்டிருந்தாலும், பாரதிராஜா, மணிரத்னம், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, அமிதாப், ஷாருக், ரிஷிகபூர்.... இப்படி பலபேர் வந்திருந்தால் அந்த விழா இன்னும் அபாரமாக இருந்திருக்கும்.

4 மறுமொழிகள்:

  1. said...

    அட சூப்பரு ;)

    \\இந்த விழாவிற்கும் கண்டிப்பாக ஒத்திகை பார்த்திருப்பார்\\

    பின்ன ராதிகா கலாய்ச்சிக்கிட்டு இருக்காங்க...இங்க பார்க்குற நமக்கே வயறு வலிக்க சிரிப்பு..ஆனா அவரு..ம்ம்..ஊர்வசி சொன்னது மாதிரி வுட்கார்ந்துக்கிட்டு இருக்கார்.

    நீங்க சொன்னவுங்களும் வந்திருக்கலாம்.இன்னும் நல்லாயிருந்திருக்கும்.

    எனக்கு பிடித்தது..ராசா, ராதிகா,பிரகாஷ், ம்மமுக்கா தான் ;)

    நம்ம ராசா பாட்டு படியதை சொல்லவேல்ல...அதுக்கு ஒரு கிர்ர்ர்ர்ர் ;))

  2. said...

    பிரகாஷ் மேடையில பேசியதை விட வெளியில அவருக்கிட்ட பேட்டியில சொல்லியிருப்பாரு..அதை கேட்டிங்களா அண்ணாச்சி...கலக்கியிருப்பான் மனுஷன் ;)

    அப்புறம் நேரம் கிடைக்கும் போது இதையும் படிங்க

    கமல்: அரைநூற்றாண்டு அதிசயம்

    http://www.thenaali.com/thenaali.aspx?A=717

    பிரகாஷ் புதுசாக எழுதிக்கிட்டு இருக்காரு இந்த இடத்துல நேரம் கிடைக்கும் போது பாருங்கோ ;))

    கடைசியாக

    வாழ்க கலைஞானி ! ! !

  3. said...

    அண்ணாச்சி இதை மறந்துட்டேன் இந்தாங்க இதையும் படிங்க

    தீபம் மட்டும் அல்ல. தீக்குச்சி

    http://www.thenaali.com/thenaali.aspx?A=1094

    கலைஞானி பற்றி பிரகாஷ் ;)

  4. said...

    கோபி - தெனாலில வர பிரகாஷ்ராஜ் தொடர் படிச்சிட்டு வரேன். ரொம்பவே உருகி, அனுபவிச்சி எழுதியிருப்பாரு. சுட்டிக்கு நன்றி!

    /பிரகாஷ் மேடையில பேசியதை விட வெளியில அவருக்கிட்ட பேட்டியில சொல்லியிருப்பாரு.../

    உண்மைதான்!