ஜெயமோகன்
ஜெயமோகன் வளைகுடா பகுதிக்கு வருகிறார் என்ற செய்தியை மனைவிடம் சொன்னபோது 'கண்டிப்பாக சந்திக்க வேண்டும்' என்பதே பதிலாக வந்தது. ம்ம்ம்.... வேண்டாம்னு சொன்னாலும் ஒண்ணும் பிரஜோனமில்லை நினைச்சிகிட்டு தலையாட்டி வைச்சைன்.
மனைவி போய் சந்திக்கிறதுல அர்த்தம் இருக்கு. காடு, ஏழாம் உலகம், சங்கச்சித்திரங்கள், சிறுகதைகள் தொகுப்புனு அவரோட புத்தகங்களை படிச்சிருக்காங்க. நம்ம........அவரோட இணையத்தளத்த அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் மேயரதோட சரி.. இரண்டு முறை அவரோட நாவல வாசிக்க முயற்சி பண்ணினேன். முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன். இன்னும் முயற்சி பண்ணுவேன்.....;)
இதுக்கும்மேல ..பெரிய எழுத்தாளர்! நம்ம என்னத்தை அவர்கிட்ட பேசுறது....கேக்கிறதுனு ஒரு சின்ன வெட்கம்..பயம்.
ஆகஸ்டு 30, 2009. மதியம் 3 மணிக்கு கலந்துரையாடல் மற்றும் சந்திப்பு. 2:55க்கு நானும், மனைவியும் சென்றோம். ஆனால், 2;45க்கே ஆரம்பமாயிருந்தது. கிட்டதட்ட 40 வாசகர்கள்; அதில் 5-6 பேர் பெண்கள்.
நாங்கள் போன பொழுது, 'திருவள்ளுவர் சமணராகத்தான் இருக்க முடியும்!' என்பதற்கான ஆதாரங்களை சொல்லிக்கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக சமணர் - சைவம் - வைணவம் என்று ஆன்மிகக் கடலில் மூழ்கி கொண்டிருந்தார்கள். ஓரளவுக்கு சீரியஷாக தான் இருக்கும் என்று போன எனக்கு, கண்ணை கட்டிக்கொண்டு வந்தது..! ஜெமோவும் சங்க இலக்கியங்களிலிருந்தும், திருக்குறளிலிருந்தும் சரளமாக பேசிக்கொண்டு இருக்க, வந்திருந்தவர்களும் விடவில்லை..அவருக்கு சமமாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
எனக்கு மலையாளம் பிடிக்கும் என்பதாலோ அவருடைய மலையாளவாடையோட தமிழ் பிடித்திருந்தது. மேடைப்பேச்சு போல் ஏற்றம் இறக்கம் இல்லாமல், அவருடைய பேச்சு ஒரே அலைவரிசைதான்!
வாசகர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் அவரிடம் தங்கு தடையின்றி, விளக்கங்கள் வந்து கொட்டுகின்றன. அதுவும் கோர்வையாக...எங்க ஆரம்பித்தாரோ அதோடு வந்து முடிச்சி போடுகிறார். ஆன்மிகம், வரலாறு, பொருளாதரம்......இப்படி நீங்கள் எதிலிருந்து கேள்விகள் கேட்டாலும்...சும்மா மேலோட்டமாக சொல்லாமல், பலவித மேற்கோள்களுடன், உதாரணங்களுடன்தான் விளக்கமளிக்கிறார்.
எந்த கேள்விகேட்டாலும் - திரைப்படத்தில் வரும் ஒரு காட்சிக்கு எப்படி பலமுறை ஒத்திகை பார்த்துவிட்டு பேசுவார்களோ அதுபோல கோர்வையாக, திட்டவட்டமாக பேசுகிறார்...இல்லை வார்த்தைகள் வந்து கொட்டுகிறது.
இந்திய, சீன, ஐரோப்பிய, அமெரிக்க வரலாறா, சமணம், வைணவம், இந்து...மத வரலாறுகளா, கலை, ஓவியம் பற்றிய கேள்விகளா, தமிழ், மலையாள சினிமாவைப்பற்றியா, பாலா, மீரா, வசந்தபாலன், லோகி....யாரைப்பற்றி கேட்டாலும்..இதை சொல்லலாமா...வேண்டாமா என்ற எந்த சிந்தனையும் இல்லாமல் பதில்கள் வந்து விழுகிறது.
இரண்டாவது சந்திப்பு கடந்த சனிக்கிழமை, செப்டம்பர் 5, 2009 ஃப்ரீமாண்ட் நகரில்! அடுத்த நாள் இந்தியா கிளம்பும் முன் ஆற்றிய சொற்பொழிவு. சுமார் 100 பேர் வந்திருந்தனர்.
அருமையான, செறிவான உரை. அது அவருடைய இணையதளத்தில் இங்கே!
அதன் தொடர்ச்சி...
முடிந்தால் இன்னொரு முறை 'இங்கிருந்து தொடங்குவோம்…' பதிவையும் படியுங்கள்!
@

3 மறுமொழிகள்:
ம்ம்...சந்திப்பு பதிவையும் அவரோட நாவல வாசிக்கிற முயற்சி செய்ற மாதிரி போட்டுட்டிங்க போல ;)
கோபிநாத், இந்த பதிவை பார்த்தீங்களா?
ஜெயமோகனுடன் கொஞ்ச நேரம்"
jeyamohanukku islamiyarkal endral etti kaayayitre.pin eppadi islaamiyarkal vazum valaikuda pakuthikku vandaar.achchariyam thaan.
Post a Comment