Pages

இந்திய பயணக் குறிப்புகள் 2009 - II

எப்பொழுதும் இந்தியா வரும்பொழுது, விமான நிலையத்தில் சாஷ்டாங்கமா விழுந்து 'தாய் மண்ணே வணக்கம்'  ரகுமான் மாதிரி பாட ஆசைதான்! ( 'சின்ன சின்ன ஆசை' பட்டியலில் இதயும் சேர்த்துக்கணும்.).

ஒவ்வொரு முறையும் போறப்ப ஏகப்பட்ட மாற்றங்கள்! பிடிச்ச விசயங்கள் இருந்தாலும்,  டாப் 5 பிடிக்காத விசயங்கள் என்னனு பார்த்தா..

1)  'சென்னை ஆட்டோகாரர்களிடம் பேசுவது எப்படி?' Dummy series ஏதும் இருந்தா அத வாங்கி படிக்கணும். வர வர நம்ம மக்கள்கிட்ட சகிப்புத்தன்மை குறைஞ்சிகிட்டே வருது.

தீவிரவாதம்கிறது என்ன....மனுசனை மனுசனை மதிக்காமல் இருப்பதுதான....!

ஆட்டோ ஓட்டுநர்கள், நடத்துனர்கள்னு ஆரம்பிச்சி கோயில், குளம்னு தொடர்ந்து, திரையங்குகள், சரவணா ஸ்டோர்ஸ் வரைக்கும் யாரும் யாரையும் மனுசனா மதிச்சி பேசுறதில்ல. குறைந்தபட்ச மரியாதகூட கிடையாது. சின்ன விசயங்களுக்கலாம் எரிந்து விழுவது, ஏமாற்றுவது.

இலட்சம் இலடசமா சம்பாதிரிக்காங்களே குடுத்தா என்னகிற மாதிரிதான் பேச்செல்லாம். எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டலாம்கிற எண்ணம்!

2) 'நானே பிரதானம்'கிற எண்ணம்! பொது இடங்களில், சக மனிதனைப்பற்றிய அக்கறை குறைந்துகொண்டே வருவது.

3) நம்ம ஊரில இருக்கிற குப்பைகள்! கோயில்கள்,   மருத்துவனை என்று குப்பை தொட்டிகளுக்கு பஞ்சம். மக்களுக்கும் அதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லை. அரசாங்கமும் அதற்கான விழிப்புணர்வு எடுப்பதற்கான அறிகுறியும் இல்லை.

4) வார நாட்கள்னா தொலைகாட்சி மெகா தொடர்கள்,  வார இறுதி அல்லது விடுமுறையென்றால் சினிமா, சினிமா, சினிமா....!  வேற பொழுது போக்கே இல்லை.

5) உலகில் ஒரு பக்கம்,  சொந்த பிள்ளைங்க தண்ணி எடுத்து வந்து கொடுத்தாலும், மூச்சுக்கு முன்னுரு முறை நன்றி சொல்லும் மக்கள்! அதற்கு மறுபக்கம் 'சாரி', நன்றிகிற வார்த்தைகளையே மறந்த நம்மவர்கள்!


பி.கு: இந்த பட்டியலில் சாதி, மதம், ஏழ்மை, இலஞ்சம் போன்ற 'சின்ன சின்ன' விசயங்களைலாம் கணக்கில எடுத்துக்கலை!.

4 மறுமொழிகள்:

 1. said...

  அண்ணாச்சி உங்களோட 4 விஷயத்துக்கு ஒரு ரீப்பிட்டே..;)

  5வது பழக்கம் அங்கையே இருக்காட்டும் என்பது என் கருத்து. மேல இருக்குற முக்கியமான விஷயமான மனுசனை மனுசனாக நினைக்க ஆரம்பிச்ச எல்லாம் சரியாகிடும்.

  பணம் தான் அண்ணாச்சி இப்ப எல்லாம்.தேர்தலை பார்த்திங்களல்ல ;)

 2. said...

  அப்புறம் ஒரு சின்ன விண்ணப்பம். நீங்கள் பார்த்த ஆங்கில படங்களின் பட்டியலை போடுங்களேன். உங்க selection நல்லாயிருக்கு அதான்.

  இந்த பதிவை நேரம் கிடைக்கும் போது பாருங்கள்

  http://hollywoodbala.blogspot.com

 3. said...

  32 கேள்விகள் - தொடரில் பங்குபெற உங்களையும் அழைத்துள்ளேன். உங்கள் சிறப்பான பதில்களோடு உங்கள் நண்பர்களையும் பங்குகொள்ள செய்யவும். நன்றி!

 4. said...

  கோபிநாத் - சுட்டிக்கு நன்றி!

  /அப்புறம் ஒரு சின்ன விண்ணப்பம். நீங்கள் பார்த்த ஆங்கில படங்களின் பட்டியலை போடுங்களேன்./

  நான் உங்ககிட்ட கேக்கணும் நினைச்சிகிட்டு இருந்தேன்..நீங்க முந்திகிட்டீங்க..! ;(