Pages

இந்திய பயணக் குறிப்புகள் 2009 - I

ஐந்து வாரம், ஆறு வாரம் விடுமுறைலலாம் இந்தியாவுக்கு போனது கனவாக இருக்கு. இந்த முறை இரண்டு வாரம்தான்!

* சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 'இன்டர்நெட் செக்இன்' ரொம்பவே பயனுள்ளதா இருந்தது. அந்த வரிசையில கூட்டமே இல்லை! (ஆனா சென்னைல இருந்து கிளம்பிறப்ப 'இன்டர்நெட் செக்இன்' வரிசைல பெரிய Q!!)

* Check-in luggage எடையவிட 'Hand luggage' எடையதான் கண்ணும் கருத்துமா பாக்குறாங்க. ஏழு கிலோவுக்கு மேல இருந்தா 'படுத்தி எடுத்துறானுங்க'!

* Flightல சீட்டுக்கு முன்னாடி (கொஞ்சம்) பெரிய திரை! எல்லாமே டிஜிட்டல்! பாட்டு கேக்க நமக்குன்னு 'My Favourities' பட்டியல போட்டு வைச்சுக்க வசதி. இதலாம் இந்த 12-14 நேர பயணத்திற்கு! Ipod சார்ஜ் பண்ணறதுக்குன்னு தனியா USB port!

* குழந்தைக்கான கார்ட்டூன்கள்/படங்கள் ரொம்பவே கம்மி!

* தமிழிலில் அபியும் நானும், தசாவதாரம், சரோஜா! இந்தியில ஆர்வமா பார்க்கிறமாதிரி இல்ல (ஜெனிலா நடித்த படம் இருந்தது).

* ஆங்கிலத்தில் நான் பார்க்கணும் நினைச்ச சில படங்கள் இருந்தது. The Reader, Benjamin Button, Gran Torino, Doubt, Paul Blart: Mall Cop; The Reader, Doubt பார்க்க முடிஞ்சது. Doubt - ஏமாற்றம், ஆனா Merly Streep acting amazing; 'The Reader' - விமானத்தில பார்க்ககூடிய படமல்ல. Kate Winselt க்கு ஆஸ்கார் வாங்கி குடுத்த படம். would like to watch one more time. முடிவை ஒரளவு தீர்மானிக்க முடிந்தாலும், கொஞ்ச நேரம் மனதை ஏதோ செய்த படம்.

* ஒரு தடவைக்கு மேல Vodka/Whisky....யோ கேட்டா 'ஒரு மாதியா'லாம் பாக்கிறதில்ல. ஆனா இந்த முறை 'Bloody Mary' mixing சரியில்ல.

2 மறுமொழிகள்:

  1. said...

    சுருக்கமாக சொல்லுங்கன்னு ஒரு பேச்சிக்கு சொன்னால் இப்படியா அண்ணாச்சி சுருக்கி போடுவாங்க ;)))

    \\ 'The Reader' - விமானத்தில பார்க்ககூடிய படமல்ல. Kate Winselt க்கு ஆஸ்கார் வாங்கி குடுத்த படம்\\

    நோட் பண்ணிக்கிட்டேன் ;)

  2. said...

    கோபிநாத்,

    The Visitor பார்த்துட்டீங்களா?