Pages

(அமெரிக்க) தேர்தல் 2008!

மகளின் பள்ளியில் இந்த வார முழுவதும் அமெரிக்க தேர்தலைப் பற்றிதான்! ஜனாதிபதினா யாரு, துணை ஜனாதிபதி, கவர்னர், செனட் னா என்ன, யாரு? அவங்க வேலை என்ன... தலைவர்னா யாரு, தலைவர்கள்னா எப்படி இருக்கணும், எப்படியான குணங்கள், நீங்க தலைவர்களுக்கிட்ட எதிர்பார்க்கிற குணம் என்ன...... இப்படியாக இருந்தது.

இறுதியாக பள்ளியில் அனைவரும் ஓட்டு போடலாம்... 'மாதிரி' தேர்தல்!

'யாருக்கும்மா ஓட்டு போட்ட?' 

'ஜான் மெகய்ன்'

'ஏன்?'

'because he is older. எங்க கிளாஸ்ல எல்லாரும் ஜான் மெகய்னுக்கு தான் போட்டோம்'

'ஆனா ஒபாமா is young. dynamic.good leader' 

'But, Older people is good.   See....  I can draw pictures, my sister can't.   You can sign. I can't. '

'Obama can do lot of things'

'may be.. ஆனா ஒபாமா brownஆ இருக்காரு!'




பின் குறிப்பு: இந்த 'மாதிரி' ஓட்டுகளை எல்லாம் கனடிக்கெட் மாநிலத்திற்கு அனுப்பி, நேற்று இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது.

இறுதியில் மகளின் பள்ளியில் வெற்றி பெற்றது: பராக் ஒபாமா!!

பள்ளிக்கூடம்

போன வாரம், மகள் படிக்கும் பள்ளியின் வகுப்புக்கு உதவி (Helper) தேவை என்பதால்,  'நம்மாளு' போயிருந்தாங்க!

* 22 பிள்ளைகள்; 2 ஆசிரியர்கள்.

* 'Aid teacher' நம்ம ஊரு ஆயாதான்.. என்ன கொஞ்சம் Professional.....

* நாளின் ஆரம்பத்தில் 'Anything to share..news, activities' னுதான் ஆரம்பிக்கிறாங்க.

* ஒவ்வொரு வாரமும் ஒருத்தர் 'Star Of The Week'. எல்லாரும் அடுத்து யார் என்று ஆவலோடு இருக்கிறார்கள். 'Star Of The Week' செலக்ட் ஆகலைனா upset ஆக வேண்டாம்...... போன்ற ஆசிரியரின் முன்னுரை!

* வகுப்பில் தேர்வு நடக்கிறது. பாதி பேர்  கேள்வியை கவனித்து பதில் எழுதுகிறார்கள். 2- 3 பேர் கவனிப்பதே இல்லை. ஏதோ எழுதுகிறார்கள். தேர்வு முடிகிறது. ஒரு மாணவன் மட்டும் 'Mrs. Medal, I didn't get the question # 3. ' அவனுக்குமட்டும் மீண்டும் ஒரு முறை கேள்வி வாசிக்கப்படுகிறது. பதில் எழுதுகிறான். நினைவு வைத்து கேள்வியை கேட்டதற்காக அவனுக்கு 'appreiction silp' கிடைக்கிறது.

* தப்பு செய்தால் 'guilty' feeling வரமாதிரியோ, பயப்படுற மாதிரியோ பேசுவதில்லை.

* பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் மேல் 'பயம்' என்பது துளியும் இல்லை.

* ஆசிரியர்களுக்கு அசாத்திய பொறுமை தேவை!

~~~~~~~

"அதலாம் சரி.... பொண்ணு எந்த வகுப்பு படிக்கிறாள்?"
"KinderGarten.. ;) "

சினிமா

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

1957ல் (10வயதில்) பாட்டியுடன் பார்த்த கல்யாண பரிசு என்று நினைவு. A. நாகேஷ்வரராவ் மேல் கோபமும், ஜெமினி - சரோஜா தேவி மேல் அனுதாபமும் ஏற்பட்டது.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம் (அமெரிக்காவில் பார்த்த முதல் படமும் கூட)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

குசேலன் -- குப்பை!

4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

ஒண்ணா..ரெண்டா..

பாசமலர் - அண்ணன் தங்கை பாசம்

கை கொடுத்த தெய்வம் - நட்பு

மகாநதி - தந்தை மகள் பாசம்

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

அப்படி ஏதுவும் நினைவில்லை...

6. தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

பொம்மை, பேசும் படத்திலிருந்து எல்லா பத்திரிக்கைகளும்

7.தமிழ் சினிமா இசை?

இப்ப வர படங்கள மெலோடியஸ் இல்லை... 'கர்ணா'வில் வரும் மலரே மவுனமா..    நல்லா இருக்கும்.

மிகவும் இரசிப்பது பழைய படங்களின் இசை ... உதாராணத்திற்கு தீர்க்க சுமாங்கலி, அபூர்வ ராகங்கள்... இப்படி ஒரு பெரிய பட்டியலே இருக்கு.

 8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

உலக சினிமா பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை!

இந்தியில் ஆராதனா

தெலுங்கில் சங்கராபரணம்

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஒருத்தரையும் தெரியாது.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

Technical side நல்லா இருக்கும்

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

கண்டிப்பாக கவலைபடமாட்டேன். தமிழர்களுக்கு ஒன்றும் ஆகாது.

~~~~~~~~
ஒரு மாறுதலுக்கு, இந்த கேள்விகளை அப்பாவிடம் கேட்டால் என்ன என்று தோன்றியதன் விளைவு!

அப்பா - 38 வருட வங்கி வேலைக்குப் பின் இப்பொழுதான் ஓய்வு பெற்றிருக்கிறார்கள்.  'எங்கள் கல்விக்காக' பதவி உயர்வு வேண்டாம் என்று சொன்னவர்.

எம்ஜியார், சிவாஜி, எம்.ஆர்.ராதாவின் பயங்கர இரசிகர். 'பகவத்கீதையும், பைபிளும் மூலம் கற்றுக்கொண்டதைவிட எம்ஜியார், சிவாஜி படங்கள் மூலம் கற்றுக்கொண்டது அதிகம்' என்று அடிக்கடி சொல்லுவார். பழைய படங்களிலிருந்து ஒரு பாட்டோ, வசனமோ சொன்னால் அது வெளியான வருடம், நடிகர் - நடிகைகள், இசை, வசனம், ஒளிப்பதிவு, இயக்குநர் என்று 'தகவல்கள்' வந்து கொட்டும்!

அப்பா படம் பார்த்துவிட்டு வந்து கதை சொன்னால், அந்த படத்தை பார்க்க தேவையில்லை. அப்படியே காட்சி பை காட்சியாக, கேமரா ஆங்கிள் முதற்கொண்டு விளக்குவார். உதாரணத்திற்கு நினைவிற்கு வருவது 'நிறம் மாறாத பூக்கள்' !

'தில்லானா மோகனாம்பாள்' படம் எத்தனை முறை பார்த்திருப்பார் என்று அப்பாவுக்கே தெரியாது.
எத்தனை முறை 'பாசமலர்' பார்த்தாலும், பக்கத்தில் துண்டு தேவை. படம் முடியும் பொழுது கண்கள் சிவந்து போயிருக்கும்.
இதைவைத்து நாங்கள் கேலி செய்யாத நாளே இல்லை!!

ஆனால், சில படங்களை அப்பாவுடன் சேர்ந்துதான் பார்க்கவேண்டும்! அது ஒரு சுகமான அனுபவம்!!