Pages

(அமெரிக்க) தேர்தல் 2008!

மகளின் பள்ளியில் இந்த வார முழுவதும் அமெரிக்க தேர்தலைப் பற்றிதான்! ஜனாதிபதினா யாரு, துணை ஜனாதிபதி, கவர்னர், செனட் னா என்ன, யாரு? அவங்க வேலை என்ன... தலைவர்னா யாரு, தலைவர்கள்னா எப்படி இருக்கணும், எப்படியான குணங்கள், நீங்க தலைவர்களுக்கிட்ட எதிர்பார்க்கிற குணம் என்ன...... இப்படியாக இருந்தது.

இறுதியாக பள்ளியில் அனைவரும் ஓட்டு போடலாம்... 'மாதிரி' தேர்தல்!

'யாருக்கும்மா ஓட்டு போட்ட?' 

'ஜான் மெகய்ன்'

'ஏன்?'

'because he is older. எங்க கிளாஸ்ல எல்லாரும் ஜான் மெகய்னுக்கு தான் போட்டோம்'

'ஆனா ஒபாமா is young. dynamic.good leader' 

'But, Older people is good.   See....  I can draw pictures, my sister can't.   You can sign. I can't. '

'Obama can do lot of things'

'may be.. ஆனா ஒபாமா brownஆ இருக்காரு!'




பின் குறிப்பு: இந்த 'மாதிரி' ஓட்டுகளை எல்லாம் கனடிக்கெட் மாநிலத்திற்கு அனுப்பி, நேற்று இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது.

இறுதியில் மகளின் பள்ளியில் வெற்றி பெற்றது: பராக் ஒபாமா!!

2 மறுமொழிகள்:

  1. said...

    ஆகா...இப்பவேவா!!! ;)

  2. said...

    இது சூப்பர்! இப்பவே பிள்ளைகளுக்கு ஓட்டு போடுவது பற்றி சொல்லிக் கொடுக்காமல் சொல்லித் தாராங்க. குட்.