Pages

ஜோதா அக்பர் (வரலாறு அல்ல)




* ஜோதா அக்பர்: ஓர் அழகான காதல் கதை. பல படங்களில் பார்த்ததுதான். இந்த காதலுக்கு இயக்குநர் வரலாற்று கதாபாத்திரங்களை எடுத்துள்ளார்.

* நம்ம இயக்குநருங்கனா... இரண்டு குடும்பம் - குடும்ப ஒத்துமைக்காக கல்யாணம் - வில்லன்கள் - காதலர்கள் பிரிவு, சோகம், சேர்க்கை - முடிவு 'சுபம்'. கிட்டதட்ட இதே மாதிரிதான் ஜோதா அக்பரும்...

* மொகலாய அரசர்களில் இந்தியாவில் பிறந்த முதல் அரசர் அக்பர் (1542 - 1605).

* அக்பருக்கு எழுத படிக்க தெரியாது.

* படத்தின் இயக்குநர் ஒரு பேட்டியில்... " இந்த படம் 20% வரலாறு; 80% கற்பனை"னு சொன்னதால ரொம்ப வரலாற பத்தி ஆரய தேவையில்லை.

* படத்தின் ஆரம்பத்தில் இருந்து அங்கங்கே ஒலிக்கும் அமிதாப் பச்சனின் (கம்பீர) வர்ணனை.

* படம் இரண்டாம் பானிபட் (1556) போருடன் ஆரம்பமாகிறது.

* படம் முழுவதும் ஜலால்தான். கடைசி சில காட்சிகளில்தான் 'அக்பர்' ஆகிறார்.

* ரித்திக் நடிப்பு அபாரம்; ஜஸ்வர்யா ராய் பச்சனுக்கு முகத்தில் எப்பவுமே ஒரு சோகம். வழக்கமான 'charm' missing...

* ரித்திக் நடிப்பை பார்க்கிறப்ப நம்ம விக்ரம் நினைவுதான் வருது.

* ரித்திக் - ஐஸ் chemistry ....ம்ம்ம்... நல்லாவே workout ஆயிருக்கு.

* ரகுமான் இசை (பின்னனி இசையும் A.R.ரகுமான்..!!) அசத்தல். சூஃபி பாடலும் இன்னும் இரண்டு பாடல்களும் அருமை. டிரம்ஸ்க்கு சிவமணி ... பின்னி எடுத்திக்காரு...

* விறு விறுப்பான இறுதி காட்சி இல்லனாலும்.... அந்த சண்டைக் காட்சி நல்லா எடுத்து இருக்காங்க.

* அம்மாவுக்கு நல்ல பிள்ளையா, தங்கைக்கு நல்ல அண்ணன்னா, மனைவிக்கு (ஜோதாக்கு மட்டும்தானோ?) நல்ல கணவனா, மக்களுக்கு நல்ல அரசனா இருந்த அக்பருக்கு, தன் பையன் சலீம் காதலை மட்டும் ஏத்துக்க முடியலை.. ஏன்..??

பி.கு: திரையங்களில் பார்க்கலாம்... இல்ல HD தொலைக்காட்சியில (52" !!) பார்க்கலாம். அப்பதான் அந்த கால இடங்களின் பிரம்மாண்டத்தையும், 'ஒளி ஓவியத்தை"யும், இசையும் இரசிக்கமுடியும்!!

பர்ஸானியா

பர்ஸானியா (2005)

நம்ம ஊருல இப்படிலாம் ஒரு படம் எடுக்க முடியுமா அப்படியே எடுத்தாலும் வெளிய வருமா? நம்பவே முடிய வில்லை...

இந்தப் படம் குஜராத்தில் (கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு **) கலவரத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவாம். ம்ம்ம்....

ஓர் அழகான.. அன்பான (பார்சி ) குடும்பம். அம்மா(சரிகா) - அப்பா (நசிருதீன்ஷா) - இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவன், பர்சான் ; அவனுக்கு ஒரு தங்கை. முஸ்லிம் வாழும் காலணி குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறார்கள்.

அவர்கள் வசிக்கும் காலணி குடியிருப்பில் தீ வைக்கப்படுகிறது. யார் இதற்கு காரணம் என்று அப்பட்டமாக காட்டுகிறார்கள். முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் னு கொஞ்சம்கூட ஈவு இரக்கமில்லாமல் வெட்டி சாய்கிறார்கள். இதில் பெண்களை பலாத்காரம் வேறு.....

அந்த பார்சி குடும்பமும் தப்பித்து ஓடுகிறது. உயிருக்காக ஓடும் கும்பலில் அந்த சிறுவன் அவன் குடும்பத்தில் இருந்து தொலைந்து போகிறான்.

அவன் குடும்பத்தார் மறுபடியும் அவனை கண்டுபிடித்தார்களா, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைத்ததா என்பதுதான் மீதி கதை..

இதற்கிடையில் (காந்தியக் கருத்துகளை கொண்ட) வெளிநாட்டு மாணவன் இந்த பார்சி குடும்பத்திற்கு நல்ல பழக்கம். அவன் அந்த குடும்பத்திற்கு உதவுகிறான். அங்கங்கே காந்திய கொள்கைகள் ....

அரசாங்கத்தையும், மக்களையும் அப்பட்டமாய் தோலுரித்து காட்டுகிறார்கள். இந்த மாதிரி சம்பவங்களில் இரண்டு பக்க கருத்துகளையும் பதிவு செய்திருக்க வேண்டும். இருப்பினும் நம்ம ஊரில் இந்தப்படம் வெளிவந்ததே மிகப் பெரிய ஆச்சரியம்.




பாடல்கள், நீண்ட (& பன்ச்) வசனங்கள், காமெடி இப்படி படத்தில் எதுவும் இல்லை. படம் முழுவதும் சரிகா, நசிருதீன்ஷா தான். அருமையான நடிப்பு.

சரிகாவுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது.. ஏன் ஷாவுக்கு மட்டும் கிடைக்கவில்லை?

இயக்குநர் ராகுல் (Rahul Dholakia) க்கு இது இரண்டாவது படம். அவருடைய தைரியத்திற்கு ஒரு சபாஷ்.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.


--------------------

** பெப்ரவரி 27, 2002 -- அயோத்தியிலிருந்து கிளம்பின, சபர்மதி எக்ஸ்பிரஸ் காலை 6:30 மணியளவில் தீ 'வைக்கப்டுகிறது'. இந்த கொடிய சம்பத்தில் 58 கரசேவகர்கள் உயிர் இழந்தனர்.

இந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் குஜராத்தில் கலவரம் வெடிக்கிறது. 10,000க்கும் மேலான கரசேவர்கள் அலகாபாத் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நுழைந்து நடந்த அட்டூழியங்கள் நாடு அறியும். [அதில் பிரபலமான வழக்கொன்று - "பெஸ்ட் பேக்கரி" ]

இந்த கலவரத்தில் 1044 பேர் உயிர் இழந்தனர்.

790 - முஸ்லீம்கள்; 254 - இந்துகள்

233 பேர் காணவில்லை.

606 குழந்தைகள் பெற்றோர்களை இழந்தனர்.

ஜோதா அக்பர் & மொஹல்- இ- அசாம்

(ஐஷ்வர்யா ராய் பச்சன் புண்ணியத்தில்) வரலாற்றை 'கொஞ்சம்' நினைவுபடுத்திய வவ்வால், வாழ்க!!

[அவரின் பதிவில் பின்னூட்டமாய் போட்டது... இங்கே பதிவாய் ]

முகலாய வரலாறு பல ஆச்சரியங்களையும் பல கேள்விகளும் கொண்டது (பொதுவா வரலாறே இப்படிதானோ?).

"ஆனால் சலிமின் மனைவியை எப்படி இப்போ அக்பருக்கு மனைவியாக மாற்றினார்கள் என்பது தெரியவில்லை. இல்லை ஒரே பெயரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள் என்று எடுத்துக்கொள்வதா? "

ஒரே பெயரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள் என்றுதான் படித்ததாக நினைவு. இன்னும் அந்த சந்தேகமும், விவாதமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

1) அக்பரின் மனைவி ஜோதா பாய். இவர் ஆம்பரை சேர்ந்த ராஜபுத் இளவரசி. ராஜா பர்மல் (Raja Bharmal of Amber)ன் மகள்.

2)(சலிம்) ஜெஹான்கீர் மனைவி ஜோத் பாய் அல்லது ஜோத் பிபி (Jodhi Bibi ). இவர் ஜோத்பூர் ராஜபுதான அரசர் உதய் சிங்கின் மகள்.

ஜோதா பாய் அக்பருக்கு மூன்றாவது மனைவி. முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி சல்மா சுல்தான் - விதவை; பைராம்கானின் (Bairam Khan*) மனைவி. மூன்றாவதுதான் நம்ம ஐஷ்வர்யா பச்சன்..சே..ஜோதா பாய்.

இதுவரை....அக்பரின் மனைவிகளுக்கு பிறந்தவுடன் குழந்தைகள் இறந்துவிட "தவமாய் தவமிருந்து" பிறந்தவர்தான் (சலிம்) ஜெஹான்கீர். அக்பருக்கும் ஜோதா பாய்க்கும் 22 வயது (தான்!) வித்தியாசம். திருமணத்துக்குப் பின்னும் இந்து முறைப்படி வாழந்தார் ஜோதா பாய்.

இப்பொழுது .....

(சலிம்) ஜெஹான்கீர்க்கு பல மனைவிகள் இருந்தாலும் ஒரு நாலு பேர் முக்கியமானவர்கள்.
1.ராஜா பஹவான் தாஸ் என்ற ராஜபுதான அரசரின் மகள், மான் பாய் [அக்பரின் மனைவி, ஜோதா பாயின் அண்ணன் மகள்]
2. நூர்ஜகான் - அறிவும், அழகும் நிறைந்தவள். ஜெஹான்கீரோட one of the favourites!
3. ஜோத்பூர் ராஜபுதான அரசர் உதய் சிங்கின் மகள், இளவரசி மன்மதி என்ற பேகம் ஜோத் பாய் அல்லது ஜோத் பிபி (Jodhi Bibi ). - இவர்களுக்கு பிறந்தவர்தான் ஷாஜகான்.
4. அனார்கலி ** (வரலாற்றில் புகழ்பெற்ற காதல் ஜோடி, சலிம்-அனார்கலி).

இந்த கதையைவைத்துதான் "மொஹல்- இ- அசாம்" என்ற திரைப்படம். அனார்கலி கதாபாத்திரமே முகலாய வரலாற்றில் இல்லை என்ற கருத்தும் உண்டு!!!

1960களில் மிகப் பெரிய பொருட்செலவிலும் 'Box office'ல் ..... ஏன்.. 1975ல் ஷோலே (Sholay) வரும்வரை......பல சாதனைகளை நிகழ்த்திய காட்டிய கறுப்பு-வெள்ளை படம், மொஹல்- இ- அசாம்.

கதை: (சலிம்) ஜெஹான்கீர் (திலீப் குமார்)க்கும் அனார்கலி (அந்த காலத்து மதுபாலா) க்கும் உள்ள காதல்தான்.

** அனார்கலி முகலாய அரசில் இருக்கும் பல அடிமை பெண்ணில் ஒருவள். நடனமாடுவது அவருடைய தொழில்.(சலிம்) ஜெஹான்கீர்க்கு பார்த்தவுடன் அவளை பிடித்து விடுகிறது(!!).

அப்பா அக்பருக்கு பிடிக்கவில்லை. அனார்கலியை சிறையில் வைத்துவிடுகிறார்.

சலிமோ அனார்கலியை நினைத்து நினைத்து ஏங்குகிறார். (பட்டத்துக்கு வந்தபிறகுதான் ஜெஹான்கீர் ஆகிறார். அதுவரை சலிம்தான்). அனார்கலியும் சலிமை மற(று)க்க முடியவில்லை.

அக்பர் பார்த்தார்.... உயிருடன் 'புதைக்க' சொல்லி ஆணையிடுகிறார்.. அதுவும் மக்கள் கூடும் சந்தை போன்ற பொதுஇடத்தில், நாலு சுவர் எழுப்பி அதில் அனார்கலியை விட்டு விடுகின்றனர். அதிலேயே அனார்கலி இறந்து விடுகிறார்.

லாகூரில் அந்த இடத்தை 'அனார்கலி பஜார்' என்று அழைக்கிறார்களாம்.

அனார்கலி என்ற கதாபாத்திரமே உண்மையல்ல என்று ஒருபக்கமும்...
மறுபக்கம்.... அனார்கலி இறக்கவில்லை அங்கிருந்து தப்பிவிடுகிறார் என்றும் சொல்கிறார்கள்.

எது உண்மையோ.... வரலாற்றில் சலிம்-அனார்கலி காத(ல்)லர்களை மறக்க முடியாது.

அந்த படத்தில் இடம் பெற்ற திலிப் குமார் மற்றும் லதா மங்கேஷ்கர் தவிர இப்பொழுது யாரும் உயிடன் இல்லை.

இந்தப்படம் 2004ல் கலர்கூட வந்தது. படத்தில் சபையில் மதுபாலா ஆடும் பாடல், Pyar Kiya to Darna Kya (I have loved, so what is there to fear?) மிக பிரபலம்.

அருமையான நடனம்....இந்தி புரியலைனாலும் மறுமுறையும் கேட்க வைக்கும் பாடல்......








* பைராம் கான் - முகலாய வரலாற்றில் ஒரு முக்கியமான நபர்; குமாயுன் (Humayun)க்கும் அவருடைய மகன் அக்பரின் சபையில் இருந்தவர்.முதல் அமைச்சர். இரண்டாம் பானிபட் போரின் (1556) வெற்றிக்கு காரணமானவர் . (அந்த போர் நடந்தபொழுது அக்பருக்கு 13 வயது!). இவரைப்பற்றியே ஒரு தனி பதிவு போடமாமே!!

பிடிச்சிருக்கு...

முதன் முதலில் தமிழ் வலையுலக அறிமுகம் ஆனபோது, தமிழ்மணத்தில "ஆறு" விளையாட்டு ஓடிக் கொண்டிருந்தது. ஓரமா நின்னு விளையாட்டை பார்த்துகிட்ட இருந்தவனை தமிழ்நதி 'வம்புல' மாட்டி விட, 'கொஞ்சம் வேர்த்து விறு விறுத்து' அவுங்ககிட்ட இரண்டு நாள் அவகாசம் கேட்டு, ஏதோ கிறுக்கி, "எழுதிட்டேன் படிச்சிட்டு சொல்லுங்கனு" சொல்லி ....... ம்ம்.. இப்ப நினைச்சாலும் ... ;)

இப்ப காட்டாறு பிடித்த பதிவு எதுனு கேக்க, இப்ப 'சீனியர்' ஆயிட்டதால... 'ம்ம்ம்... வரேன்' னு சொல்லிட்டு ஓடியாச்சி..

ஆசைதான்... என் பதிவில் பிடிச்சதுனு ஒரு பெரிய பட்டியல் போடணும்னு. அப்படி இருந்தாதான போடுறது...

ரொம்ப பின்னூட்டங்கள் வந்திருந்தா அது பிடிச்ச பதிவுனா அமிர்கான் எந்த பதிவ பிடிச்ச பதிவுனு சொல்லுவாரு...

சரி.. பூங்காவுலதான் நம்ம பதிவு வந்திருக்கே அத சொல்லாம்னா.... 'அந்த வாரம் நீ மட்டும்தான் "சம்மதம்"னு சொல்லிருப்ப அதனால வேற வழியில்லாம உன் பதிவு வந்திருக்கும்' அப்படினு உள்ளயிருந்து சின்னதா ஒரு மிரட்டல்...

நம்ம குமார் அண்ணாச்சி மாதிரி ஒரு பிடிச்சதா எழுதிட்டு, "இதுதான் எனக்கு பிடிச்சதுனு" சொல்லலாம்னு பார்த்தா அத்தனை வருடம் யார் காத்திருப்பா.....

ஆனால்.. பூங்காவிலும், வலைச்சரத்திலும் நண்பர்கள் குறிப்பிட்ட... ஏதோ சிறிய அளவிலாவது பயனுள்ளதா இருந்ததுனு சொன்ன பரஸ்பர நிதி தொடர்((!)

எனக்கும் பிடித்தது. இதையே இன்னும் விரிவாகவும் எழுத ஆசை. பொறுமையின்மையும், நேரமும் ஒத்துவராததால் அதோட நிறுத்தியாச்சி.

விதியை மீறகூடாதில்லையா... நான் அழைக்கும் நண்பர்கள்
1. ரொம்ப நாளாய் காணாமல் போன -- ஜோ
2. மோகன்தாஸ் மற்றும் மிளகாய்க்கு ஈடுகொடுத்து 'படம்' காட்டும் - மங்களூர் சிவா
3. சமீபத்தில் பார்த்த.... படித்த பதிவர்- "மழை" பிரதீப்

பி.கு: ஆட்டத்தின் விதி முறைகள் நம்ம கண்மணியக்கா பதிவுல...


நம்மையும் ஆட்டதுக்கு கூப்பிட்ட காட்டாறுக்கு நன்றிகோவ்!

SUPERBOWL - 2008

வாவ்..வாவ்...!!

நியூயார்க் Giants Vs நியூ இங்கிலாந்து Patroits.
17-14!!
யாருமே எதிர்பார்க்காத முடிவு.

தொலைக்காட்சி, பத்திரிக்கை, விளையாட்டு 'வல்லுநர்கள்' , விளையாட்டு இரசிகர்கள்/வெறியர்கள் என எல்லாரும், "New England Patriots எத்தனை புள்ளிகள் வித்தியாசத்தில் ஜெயிக்கபோகுது"னு கணக்கும், betting கட்டிக் கொண்டு இருக்க ..... இந்த அதிசயம் நடந்திருக்கிறது.

நியூயார்க் Giants - 42வது SuperBowl Winner!! இரண்டு மாநிலங்களுக்கு இடையே நடந்தாலும், இவர்களைப் பொறுத்தவரை.. இதுதான் உலக சாம்பியன்!!

Wildcardல் இருந்த ஒரு அணி, GreenBay Packers போன்ற பெரிய அணிகளுடன்லாம் மோதி வெற்றி பெற்று, இந்த வருடம் ஒரு போட்டியில்கூட தோற்காத நியூ இங்கிலாந்து Patroits யை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுவது என்பது ஒரு பெரிய சாதனைதான்.

ஒரு பக்கம் நியூ இங்கிலாந்து Patroits Quarterback, Tom Brady....
மூன்று முறை Superbowl வெற்றி பெற்ற அனுபவம்.
அவருடைய அமைதியும், நம்பிக்கையும், determinationம் எனக்கு பயங்கர ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Amazing...!!

இன்னொரு பக்கம் நியூயார்க் Giants Quarterback, Eli Manning 'கொஞ்சம் சொதப்பல்'க்கு பேர்போனவர்! ஆனால் பார்க்க குழந்தைமாதிரி இருப்பார்! அதனால்தான் என்னமோ NY Giants ஜெயிக்கவேண்டும் என்று தோன்றியது. ;)



ஒருபக்கம் இப்படியென்றால், இன்னொரு பக்கம் Superbowl விளம்பரங்கள்....!!

ரொம்பவே பிரபலமானது. 30 வினாடிக்கு 2.7 மில்லியன் அமெரிக்க வெள்ளிகள் என்றால் சும்மாவா....!

இந்த நாளில்(மட்டும்) ஒளிபரப்பவுதற்காகவே - Budlight, FedEx, Gramin, Audi, Pepsi, CocoCola, Dell, Toyota, CareerBuilder.com, Sobe, Victoria's Secret போன்ற பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டிகொண்டு விளம்பரங்களை தயாரிக்கும்.

YouTubeல் பார்த்த சில விளம்பரங்கள்:

1. PEPSI: (நம்ம ஊரு இசை மாதிரிருக்கு ;)





2. PEPSICO






முழு விளம்பரங்கள் இங்கே!!

கண்டிப்பாக பார்க்கவேண்டிய சில விளம்பரங்கள்: Budlight, Pepsi, Cocacola, Sobe, ETrade & Victoria's Secret ;)