Pages

பிடிச்சிருக்கு...

முதன் முதலில் தமிழ் வலையுலக அறிமுகம் ஆனபோது, தமிழ்மணத்தில "ஆறு" விளையாட்டு ஓடிக் கொண்டிருந்தது. ஓரமா நின்னு விளையாட்டை பார்த்துகிட்ட இருந்தவனை தமிழ்நதி 'வம்புல' மாட்டி விட, 'கொஞ்சம் வேர்த்து விறு விறுத்து' அவுங்ககிட்ட இரண்டு நாள் அவகாசம் கேட்டு, ஏதோ கிறுக்கி, "எழுதிட்டேன் படிச்சிட்டு சொல்லுங்கனு" சொல்லி ....... ம்ம்.. இப்ப நினைச்சாலும் ... ;)

இப்ப காட்டாறு பிடித்த பதிவு எதுனு கேக்க, இப்ப 'சீனியர்' ஆயிட்டதால... 'ம்ம்ம்... வரேன்' னு சொல்லிட்டு ஓடியாச்சி..

ஆசைதான்... என் பதிவில் பிடிச்சதுனு ஒரு பெரிய பட்டியல் போடணும்னு. அப்படி இருந்தாதான போடுறது...

ரொம்ப பின்னூட்டங்கள் வந்திருந்தா அது பிடிச்ச பதிவுனா அமிர்கான் எந்த பதிவ பிடிச்ச பதிவுனு சொல்லுவாரு...

சரி.. பூங்காவுலதான் நம்ம பதிவு வந்திருக்கே அத சொல்லாம்னா.... 'அந்த வாரம் நீ மட்டும்தான் "சம்மதம்"னு சொல்லிருப்ப அதனால வேற வழியில்லாம உன் பதிவு வந்திருக்கும்' அப்படினு உள்ளயிருந்து சின்னதா ஒரு மிரட்டல்...

நம்ம குமார் அண்ணாச்சி மாதிரி ஒரு பிடிச்சதா எழுதிட்டு, "இதுதான் எனக்கு பிடிச்சதுனு" சொல்லலாம்னு பார்த்தா அத்தனை வருடம் யார் காத்திருப்பா.....

ஆனால்.. பூங்காவிலும், வலைச்சரத்திலும் நண்பர்கள் குறிப்பிட்ட... ஏதோ சிறிய அளவிலாவது பயனுள்ளதா இருந்ததுனு சொன்ன பரஸ்பர நிதி தொடர்((!)

எனக்கும் பிடித்தது. இதையே இன்னும் விரிவாகவும் எழுத ஆசை. பொறுமையின்மையும், நேரமும் ஒத்துவராததால் அதோட நிறுத்தியாச்சி.

விதியை மீறகூடாதில்லையா... நான் அழைக்கும் நண்பர்கள்
1. ரொம்ப நாளாய் காணாமல் போன -- ஜோ
2. மோகன்தாஸ் மற்றும் மிளகாய்க்கு ஈடுகொடுத்து 'படம்' காட்டும் - மங்களூர் சிவா
3. சமீபத்தில் பார்த்த.... படித்த பதிவர்- "மழை" பிரதீப்

பி.கு: ஆட்டத்தின் விதி முறைகள் நம்ம கண்மணியக்கா பதிவுல...


நம்மையும் ஆட்டதுக்கு கூப்பிட்ட காட்டாறுக்கு நன்றிகோவ்!

9 மறுமொழிகள்:

 1. said...

  உங்க “அட” சூப்பராக இருக்கு.

 2. said...

  மோகந்தாஸ் மற்றும் மிளகாய்க்கு ஈடு கொடுக்கும் சிவா - சூப்பருங்க

 3. said...

  http://aamirkhan.com/blog.htm

  இந்த ப்ளாக் உங்களோடதா!?!?
  சொல்லவே இல்லை.

 4. said...

  //
  ஆனால்.. பூங்காவிலும், வலைச்சரத்திலும் நண்பர்கள் குறிப்பிட்ட... ஏதோ சிறிய அளவிலாவது பயனுள்ளதா இருந்ததுனு சொன்ன பரஸ்பர நிதி தொடர்((!)
  //
  நல்ல தொடர்தான். புதியவர்களுக்கு மிக பயனுள்ள தொடர்.

 5. said...

  //
  மோகன்தாஸ் மற்றும் மிளகாய்க்கு ஈடுகொடுத்து 'படம்' காட்டும் - மங்களூர் சிவா
  //
  அவ்வ்வ்வ்

 6. said...

  எப்போயிருந்து இப்படி புரியாம பேச ஆரம்பிச்சீங்க?

  //இப்ப 'சீனியர்' ஆயிட்டதால... 'ம்ம்ம்... வரேன்' னு சொல்லிட்டு ஓடியாச்சி// விளக்கவும்? வீட்டுல எதுனாச்சும் விசேஷங்களா? பாப்பா வேற குட்டி ப்ரதர் கேட்டு ஃப்ரிட்ஜ்லஎழுதியிருக்கான்னு போன பதிவுல சொன்னீங்க. சொல்லுங்க..

  நல்ல ஐடியா தான். ஒரு பதிவு கேட்டா... தெடரையே கொடுத்து கலக்கிட்டீங்க. எனக்கு புரியாத புதிர் அந்த பதிவுகள் என்பதால், சொன்ன பேச்சு கேட்டு ஒரு பதிவு எழுதுனதுக்கு ஒரு டாங்க்கு சொல்லி, ஜகா வாங்கிக்கிறேன். ;-)

 7. said...

  @ வடுவூர் குமார்,
  /உங்க “அட” சூப்பராக இருக்கு./

  அட.. இப்பதான் பார்க்கிறீங்களா?

  வாங்க, cheena (சீனா) சார்!
  /மோகந்தாஸ் மற்றும் மிளகாய்க்கு ஈடு கொடுக்கும் சிவா - சூப்பருங்க/
  ;)

 8. said...

  சிவா,

  //http://aamirkhan.com/blog.htm

  இந்த ப்ளாக் உங்களோடதா!?!?
  சொல்லவே இல்லை.//

  பாருங்க.... உங்களுக்கே இவ்வளவு 'தாமதாமாதான்' தெரிஞ்சிருக்கு..! ;)

  /அவ்வ்வ்வ்/
  இதுக்கேவா.... சீக்கிரம் படம்...sorry.. பதிவு போடுங்க..
  ரொம்ப வேலையா?

 9. said...

  காட்டாறு,

  ~~ எப்போயிருந்து இப்படி புரியாம பேச ஆரம்பிச்சீங்க? ~~

  அப்ப இதுவரைக்கும் பேசினதுலாம் புரிஞ்சதுகிறீங்க... கேக்க சந்தோஷமா இருக்குங்க..!

  ~~ //இப்ப 'சீனியர்' ஆயிட்டதால... 'ம்ம்ம்... வரேன்' னு சொல்லிட்டு ஓடியாச்சி// விளக்கவும்? ~~

  :(