Pages

ஜோதா அக்பர் & மொஹல்- இ- அசாம்

(ஐஷ்வர்யா ராய் பச்சன் புண்ணியத்தில்) வரலாற்றை 'கொஞ்சம்' நினைவுபடுத்திய வவ்வால், வாழ்க!!

[அவரின் பதிவில் பின்னூட்டமாய் போட்டது... இங்கே பதிவாய் ]

முகலாய வரலாறு பல ஆச்சரியங்களையும் பல கேள்விகளும் கொண்டது (பொதுவா வரலாறே இப்படிதானோ?).

"ஆனால் சலிமின் மனைவியை எப்படி இப்போ அக்பருக்கு மனைவியாக மாற்றினார்கள் என்பது தெரியவில்லை. இல்லை ஒரே பெயரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள் என்று எடுத்துக்கொள்வதா? "

ஒரே பெயரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள் என்றுதான் படித்ததாக நினைவு. இன்னும் அந்த சந்தேகமும், விவாதமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

1) அக்பரின் மனைவி ஜோதா பாய். இவர் ஆம்பரை சேர்ந்த ராஜபுத் இளவரசி. ராஜா பர்மல் (Raja Bharmal of Amber)ன் மகள்.

2)(சலிம்) ஜெஹான்கீர் மனைவி ஜோத் பாய் அல்லது ஜோத் பிபி (Jodhi Bibi ). இவர் ஜோத்பூர் ராஜபுதான அரசர் உதய் சிங்கின் மகள்.

ஜோதா பாய் அக்பருக்கு மூன்றாவது மனைவி. முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி சல்மா சுல்தான் - விதவை; பைராம்கானின் (Bairam Khan*) மனைவி. மூன்றாவதுதான் நம்ம ஐஷ்வர்யா பச்சன்..சே..ஜோதா பாய்.

இதுவரை....அக்பரின் மனைவிகளுக்கு பிறந்தவுடன் குழந்தைகள் இறந்துவிட "தவமாய் தவமிருந்து" பிறந்தவர்தான் (சலிம்) ஜெஹான்கீர். அக்பருக்கும் ஜோதா பாய்க்கும் 22 வயது (தான்!) வித்தியாசம். திருமணத்துக்குப் பின்னும் இந்து முறைப்படி வாழந்தார் ஜோதா பாய்.

இப்பொழுது .....

(சலிம்) ஜெஹான்கீர்க்கு பல மனைவிகள் இருந்தாலும் ஒரு நாலு பேர் முக்கியமானவர்கள்.
1.ராஜா பஹவான் தாஸ் என்ற ராஜபுதான அரசரின் மகள், மான் பாய் [அக்பரின் மனைவி, ஜோதா பாயின் அண்ணன் மகள்]
2. நூர்ஜகான் - அறிவும், அழகும் நிறைந்தவள். ஜெஹான்கீரோட one of the favourites!
3. ஜோத்பூர் ராஜபுதான அரசர் உதய் சிங்கின் மகள், இளவரசி மன்மதி என்ற பேகம் ஜோத் பாய் அல்லது ஜோத் பிபி (Jodhi Bibi ). - இவர்களுக்கு பிறந்தவர்தான் ஷாஜகான்.
4. அனார்கலி ** (வரலாற்றில் புகழ்பெற்ற காதல் ஜோடி, சலிம்-அனார்கலி).

இந்த கதையைவைத்துதான் "மொஹல்- இ- அசாம்" என்ற திரைப்படம். அனார்கலி கதாபாத்திரமே முகலாய வரலாற்றில் இல்லை என்ற கருத்தும் உண்டு!!!

1960களில் மிகப் பெரிய பொருட்செலவிலும் 'Box office'ல் ..... ஏன்.. 1975ல் ஷோலே (Sholay) வரும்வரை......பல சாதனைகளை நிகழ்த்திய காட்டிய கறுப்பு-வெள்ளை படம், மொஹல்- இ- அசாம்.

கதை: (சலிம்) ஜெஹான்கீர் (திலீப் குமார்)க்கும் அனார்கலி (அந்த காலத்து மதுபாலா) க்கும் உள்ள காதல்தான்.

** அனார்கலி முகலாய அரசில் இருக்கும் பல அடிமை பெண்ணில் ஒருவள். நடனமாடுவது அவருடைய தொழில்.(சலிம்) ஜெஹான்கீர்க்கு பார்த்தவுடன் அவளை பிடித்து விடுகிறது(!!).

அப்பா அக்பருக்கு பிடிக்கவில்லை. அனார்கலியை சிறையில் வைத்துவிடுகிறார்.

சலிமோ அனார்கலியை நினைத்து நினைத்து ஏங்குகிறார். (பட்டத்துக்கு வந்தபிறகுதான் ஜெஹான்கீர் ஆகிறார். அதுவரை சலிம்தான்). அனார்கலியும் சலிமை மற(று)க்க முடியவில்லை.

அக்பர் பார்த்தார்.... உயிருடன் 'புதைக்க' சொல்லி ஆணையிடுகிறார்.. அதுவும் மக்கள் கூடும் சந்தை போன்ற பொதுஇடத்தில், நாலு சுவர் எழுப்பி அதில் அனார்கலியை விட்டு விடுகின்றனர். அதிலேயே அனார்கலி இறந்து விடுகிறார்.

லாகூரில் அந்த இடத்தை 'அனார்கலி பஜார்' என்று அழைக்கிறார்களாம்.

அனார்கலி என்ற கதாபாத்திரமே உண்மையல்ல என்று ஒருபக்கமும்...
மறுபக்கம்.... அனார்கலி இறக்கவில்லை அங்கிருந்து தப்பிவிடுகிறார் என்றும் சொல்கிறார்கள்.

எது உண்மையோ.... வரலாற்றில் சலிம்-அனார்கலி காத(ல்)லர்களை மறக்க முடியாது.

அந்த படத்தில் இடம் பெற்ற திலிப் குமார் மற்றும் லதா மங்கேஷ்கர் தவிர இப்பொழுது யாரும் உயிடன் இல்லை.

இந்தப்படம் 2004ல் கலர்கூட வந்தது. படத்தில் சபையில் மதுபாலா ஆடும் பாடல், Pyar Kiya to Darna Kya (I have loved, so what is there to fear?) மிக பிரபலம்.

அருமையான நடனம்....இந்தி புரியலைனாலும் மறுமுறையும் கேட்க வைக்கும் பாடல்......
* பைராம் கான் - முகலாய வரலாற்றில் ஒரு முக்கியமான நபர்; குமாயுன் (Humayun)க்கும் அவருடைய மகன் அக்பரின் சபையில் இருந்தவர்.முதல் அமைச்சர். இரண்டாம் பானிபட் போரின் (1556) வெற்றிக்கு காரணமானவர் . (அந்த போர் நடந்தபொழுது அக்பருக்கு 13 வயது!). இவரைப்பற்றியே ஒரு தனி பதிவு போடமாமே!!

4 மறுமொழிகள்:

 1. said...

  யப்பா...இப்பவே எனக்கு கண்னை கட்டுது (எத்தனை மனைவிகள்)...

  எப்படி எல்லாம் வாழ்த்திருக்காங்க!!!

 2. said...

  தென்றல்,
  விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி!
  என் பதிவில் உங்களுக்கு அளித்த பதிலையே மீண்டும் இங்கும் போடுகிறேன்(பெரிய பின்னூட்டமாக இருக்கேனு திட்டாதிங்க, என்னைப்பொருத்தவரை இது சின்னப்பின்னூட்டம் :-)) )

  //1) அக்பரின் மனைவி ஜோதா பாய். இவர் ஆம்பரை சேர்ந்த ராஜபுத் இளவரசி. ராஜா பர்மல் (ஸிணீழீணீ ஙிலீணீக்ஷீனீணீறீ ஷீயீ கினீதீமீக்ஷீ)ன் மகள்.//

  நீங்க ஆஷுதோஷ் கோவ்ரிகர் கதையை அப்படியே சொல்றிங்க, அதைத்தான் மக்கள் ஏற்கவில்லையே, மேலும் ராஜா பார்மல் ,அல்லது பிகாரிமால் என்றாலும் ஒன்று தான் அவரது மகள் பேர் எப்படி ஜோதா பாய் என்று வரும், அவர் ஆம்பர் அரசர் அல்லவா.

  ராஜா பார்மல் மகள் பெயர் ஹிரா குன்வாரி, அவரை அக்பர் மணந்த பின் மரியம் ஸமானி என்று பெயர் மாற்றிவிட்டார், அவர்களுக்கு பிறந்தவர் தான் சலிம். இது தான் உண்மையான வரலாறு என்று இப்போது ராஜ்புத் சொல்வது, இப்படித்தான் பல புத்தகங்களிலும் இருக்கு முக்கியம ஸீநீமீக்ஷீt தீஷீஷீளீs ல மாணவர்கள் படிப்பது இதைத்தான்.

  மேலும் பைராம்கானின் விதவை மனைவித்தான் அக்பருக்கு முதல் மனைவி என்று நினைக்கிறேன், ஏன் எனில் பைராம் கான் இறந்த பின்(கொல்வதற்கு ஏற்பாடு செய்ததே அக்பர் என்றும் சொல்வார்கள்) அப்போது தான் அக்பரே அரசப்பதவிக்கு வருவார், அதற்கு முன்னர் அவர் சும்மா கைப்பாவையாக இருந்தார். எனவே பதவி ஏற்றதும் நடந்த முதல் மணம் பைராம் கான் மனைவியுடன் என்று தான் நினைக்கிறேன்.அப்துல் ரஹீம் என்ற பைராம் கான் மகனை தளபதியாகவும் வைத்துக்கொண்டார்.

  சலிம் கதையும் கொஞ்சம் குழப்பும் தான், அனார்கலி என்பவரே இல்லை என்று தான் சொல்வார்கள்.

  அனார்கலிக்கதைக்கு ஈடான மர்மம் கொண்ட காதல் தான் நூர்ஜஹான் , சலிம் காதல்.எனக்கு என்னமோ நூர்ஜெஹான் பெயரை கொஞ்சம் மாற்றித்தான் அனாகலி கதை உருவாகி இருக்க வேண்டும்.

  சுருக்கமாக சொல்கிறேன்,

  நூர்ஜஹான் மெஹ்ருன்னிசா என்ற பெயரில் முதலில் அக்பரின் அரண்மனையில் பணிப்பெண்ணாக இருந்தார், அவள் மீது சலிம் காதல் கொண்டார், அது அக்பருக்கு பிடிக்காமல் நூர்ஜெஹானை ஷேர்கான் என்ற ஆப்கானை பொறுப்பில் இருந்த ஒரு தளபதிக்கு மணம் செய்து வைத்து அரண்மனையை விட்டு வெளியேற்றி,தந்திரமாக சலிமின் காதலை பிரித்துவிடுவார்.

  பின்னர், சலிம் , "நூருதின் ஜெஹான்கீர்" என்றப்பெயரில் அரசன் ஆனதும் நூர்ஜஹானை அவரது கணவருடன் அரண்மனைக்கு வர வைத்து ஒரு பதவிக்கொடுத்து பக்கத்தில் வைத்துக்கொள்கிறார். பின்னர் ஒரு சதி செய்து ஷேர்கானை ஒரு சண்டையில் கொல்ல வைத்து , நூர்ஜெஹானை கல்யாணம் செய்துக்கொள்வதாக வரலாறு போகிறது.

  கல்யாணம் செய்த பிறகே நூர்ஜஹான் - உலகின் ஒளி என்ற பொருள் படும் படி தன் பெயருக்கு ஏற்ப ஜெஹான்கீர் பெயர் மாற்றினார். அதன் பின்னர் ஜெஹான்கீர் நூர்ஜஹானின் கைப்பாவையாக இருந்து தான் ஆட்சி செய்தார்.

 3. said...

  //எப்படி எல்லாம் வாழ்த்திருக்காங்க!!!//

  கோபி, "வாழ்ந்து" கெட்டவர்கள்!! ;(

  வவ்வால்,

  //பெரிய பின்னூட்டமாக இருக்கேனு திட்டாதிங்க, என்னைப்பொருத்தவரை இது சின்னப்பின்னூட்டம் :-)) )
  //

  ;)

  //எனக்கு என்னமோ நூர்ஜெஹான் பெயரை கொஞ்சம் மாற்றித்தான் அனாகலி கதை உருவாகி இருக்க வேண்டும்.//

  ம்ம்...
  பட்டத்திற்கு வரும்முன் ஜெஹான்கீரோட பேரு சலிம்.

  சலிமாய் இருக்கும்பொழுது(தான்)அவர் அனார்கலியை(!) பார்த்திருக்க வேண்டும். அதனால்தான் "சலிம்-அனார்கலி" பிரபலம்...

  இல்லையென்றால் "ஜெஹான்கீர்-நூர்ஜஹான்"ல இருந்திருக்கணும்!

  /..... பின்னர் ஒரு சதி செய்து ஷேர்கானை ஒரு சண்டையில் கொல்ல வைத்து , நூர்ஜெஹானை கல்யாணம் செய்துக்கொள்வதாக வரலாறு போகிறது. ..../

  இது எனக்கு புதிய செய்தி!

  கருத்து பகிர்வுக்கு நன்றி!

 4. said...

  தென்றல்.
  நன்றி!

  சலிமாக இருக்கும் போதே நூர்ஜஹானை , அவள் இயற்பெயரான மெஹ்ருன்னிசா என்றப்பெயரில் சலிம்(ஜெஹாங்கீர்) சந்தித்துள்ளார் என்று சொல்லி இருக்கேன் பாருங்க.

  நூர்ஜெஹான் என்று மணத்திற்கு பின்னர் தான் சலிம்(ஜெஹாங்கீர்)மாற்றினார் என்பதையும் சொல்லியுள்ளேன்.

  புனைவாக சொல்லும் பொழுது கொஞ்சம் முன் பின்னாக மாற்றி ஆகவேண்டுமே, எனவே தான் சலிம் அனார்கலி என்று போட்டிருக்கலாம் என்று சொன்னேன்.

  அனார்கலி நாட்டியப்பெண், மெஹ்ருண்ணிசா ஒரு பணிப்பெண், தகுதி ஒத்துவராது, எனவே அப்பா அக்பர் பிரிக்க பார்த்தார், அதே போல மெஹ்ருண்ணிசாவை வேறு ஒருவருக்கு அவரே முன் வந்து செலவு செய்து கல்யாணம் செய்து வைத்து ஊரை விட்டு அனுப்புகிறார்,சலிம், மெஹ்ருண்ணிசாவை பிரிக்கிறார் என்பது கொஞ்சம் ஒத்துப்போறாப்போல இல்லை?

  அனார்கலி என்பது செவி வழிக்கதை(folk story) என்றே பல வரலாற்று ஆசிரியர்களும் சொல்கிறார்கள், அப்படி ஒரு கதை உருவாக நூர்ஜெஹான், சலிம் காதல் அடிப்படையாக இருந்திருக்கலாம் என்பதே எனது அரிய கண்டுபிடிப்பு!அப்படி ஒரு வாய்ப்பு இருந்திருக்கலாம் என சில வரலார்று ஆய்வாளர்களும் சில சமயங்களில் சொல்லி இருக்கிறார்கள்.

  இது சரியா , தவறா என்று எனக்கும் தெரியாது.

  நூர்ஜெஹானின் சொந்த கதை மிக சோகமானது. அதை சந்தர்ப்பம் வாய்த்தால் பிறகு சொல்கிறேன்.