Pages

தப்புத் தாளங்கள்

'சிவாஜி' (நடிகர் திலகம் மன்னிப்பாராக!) படம் பார்த்தபின் 'சே...ரஜினி படம்லாம் முதல் ஆளா போய் பார்த்து இருக்கோம்.... செமஸ்டருக்கு முந்தின நாள் தளபதி பார்த்தது...நண்பனிடம் தலைவர் படம்தான் சூப்பர்னு சண்டை போட்டது....இப்ப என்னடான... 'சிவாஜி'யை 'சினிமா'தானகிற ஒரு கண்ணோட்டத்தில பார்க்கமுடியாம பெரிய இவன்கினக்கா கேள்விலாம் கேட்கதோணுதே...?!'

என்னுடைய பள்ளிகூடம் அல்லது கல்லூரி காலகட்டத்தில 'சிவாஜி' வந்திருந்தா பிடிச்சிருக்குமோ..என்னவவோ...?!!

நல்ல படம்னா அப்பாவே காசுகுடுத்து பார்த்துட்டு வரச்சொன்னாலும்...அப்பாவுக்கு தெரியாம முதலும் கடைசியுமாய் பார்த்த படம்: 'போக்கிரி ராஜா'! (தலைப்பு....அதுவா அப்படி அமைச்சிருச்சோ..?!)

ம்ம்ம்...ரஜினி படங்கள்ல எனக்கு பிடித்த ஒரு பத்து படங்கள் அப்படினு பட்டியல் போட்டால்.... உடனே நினைவில் வந்ததில்..

1. 16 வயதினிலே
2. முள்ளும் மலரும்
3. ஜானி
4. நினைத்தாலே இனிக்கும்
5. தில்லு முல்லு
6. அன்புள்ள ரஜினிகாந்த்
7. நல்லவனுக்கு நல்லவன்
8. தளபதி
9. அண்ணாமலை
10. பாட்ஷா

பார்க்கணும் நினைக்கிற ரஜினி பட(ம்)ங்கள்: 'தப்புத் தாளங்கள்' & 'அவள் அப்படிதான்'

14 மறுமொழிகள்:

  1. said...

    என்ன கொடுமையிது சரவணா... ஆறிலிருந்து 60 வரை, மூன்று முகம், எங்கே போச்சி. சூப்பர் படமாச்சே.

    எனக்கு ரொம்ப பிடிச்சது தில்லு முள்ளு தான்.

  2. said...

    வாங்க மேடம்!

    /ஆறிலிருந்து 60 வரை, மூன்று முகம், /

    ம்ம்.. அதான..
    ஆனா, அந்த பத்து படங்களை எத்தனை தடவைனாலும் பார்ப்பேன்... இப்பவும்..!

  3. said...

    வணக்கம் தென்றல்

    உங்க பட்டியலில் இருக்கும் தளபதி படத்தை மட்டும் நூறு தடவை பார்க்கலாம். தில்லு முல்லு அதிக பிரபலம் பெற்ற படமா இருந்தாலும் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை. மன்னன் படத்தையும் ரசிக்கலாம்.

  4. said...

    வாங்க, பிரபா!

    ரசிக்கும்படியான ரஜினி படங்கள் ரொம்பவே இருக்கு ;)

    நீங்க சொன்ன மன்னன், கை கொடுக்கும் கை, தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன்.... :)

  5. said...

    எங்கேயோ கேட்ட குரல்..கூட நல்லா தான் இருக்கும்...புவனா ஒரு கேள்விக்குறி

  6. said...

    2,3,4 - இது நமக்கும் ரொம்ப பிடிச்ச படம்.

    8 - இந்த படத்தை எந்த மொழில் போட்டாலும் பார்ப்போன். எத்தனை முறைன்னு எல்லாம் ஞாபகத்துல இல்ல அம்புட்டு பிடிக்கும் இந்த படம் ;)

  7. said...

    ராகவேந்ரா, வேலைக்காரன், வீரா இதுகூட நல்ல படம் தான்

  8. said...

    அப்புறம் ஒரு விஷயம் சைடுல கலைஞானி சும்மா நச்சுன்னு இருக்காரு ஆனா அந்த எழுத்துக்களை படிக்க முடியல...கொஞ்சம் பெருசு பண்ணி போடுங்க இல்லைன்னா லிங்க் இருந்த கொடுங்க ;)

  9. said...

    //# அகல்யா - பாலகுமாரன்
    # இரும்பு குதிரைகள் - பால குமாரன்
    # தண்ணீர் தேசம் - வைரமுத்து
    # இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள் - வைரமுத்து//

    //'சிவாஜி'யை 'சினிமா'தானகிற ஒரு கண்ணோட்டத்தில பார்க்கமுடியாம பெரிய இவன்கினக்கா கேள்விலாம் கேட்கதோணுதே...?!'//

    உங்களின் நூல்வேலி பகுதியைப்பார்த்த போதும் இப்படித்தான் தோனியது, நீங்கள் போட்ட விருப்ப பட்டியல் ஆனாலும் அம்புட்டுத்தானா உங்கள் வாசிப்பின் ஆழம்னு பெரிய இவன் கணக்கா கேட்க தோன்றியது, ஆனாலும் அது உங்கள் விருப்பம் என்பதால் உங்கள் ரசிப்பு தன்மைக்கே விட்டு விடுகிறேன்.

    என்னைப்பற்றிலாம் நீ என்ன பெரிய இவனானு கேட்டா ஆமாம்னு தான் சொல்வேன்(எனக்கு என்மீதே அதீத நம்பிக்கை உண்டு)

    மேலே வானம் கீழே பூமி என எல்லைகளற்ற வெளியில் சஞ்சரிக்கும் வவ்வால் நான் :-))

  10. said...

    /மங்கை said...
    எங்கேயோ கேட்ட குரல்..கூட நல்லா தான் இருக்கும்...புவனா ஒரு கேள்விக்குறி
    /
    மங்கை,
    ம்ம்... இதுவே ஒரு பெரிய பட்டியல் போடலாம்போல...

    'தளபதி' கோபிநாத்:

    "நம்ம அண்ணாத்த" வலைப்பூல இருந்துதான்..

    http://milakaai.blogspot.com/2007/11/blog-post_1452.html

  11. said...

    வாங்க வவ்வால்!

    உங்க பதிவு மட்டுமில்ல மறுமொழியும் பொறுப்பாவும், புத்திசாலிதனமாவும் இருக்கும் என்ற எண்ணம் 'இப்பொழுதும்' எனக்குண்டு.....

    ஆனா சமீபத்திய உங்கள் கேள்விகளும், மறுமொழிகளலாம்...

    ~~ உங்க வேலை கும்மி பதிவுகள் என்று பிரகடணப்படுத்திக்கொண்டவர்கள் ஆச்சே, என்ன இப்படிலாம், பதிவு போடுறிங்க? யாரும் உங்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்ற ஆதங்கமா? ~~

    அப்படினு கேள்விகேக்குறீங்க...அதற்கு விளக்கம் கொடுத்தா
    ~~ உங்க பதிவில தலையக்காட்டி எனக்கு இருக்க கொஞ்ச நஞ்ச இமேஜும் அடிப்படத்தான் செய்யும்! ~~

    ~~ யாராவது எந்த பதிவையாவது கும்மினு சொல்லிட்டா உடனே கும்மினா மட்டமானு ஏன் பொங்கல் வைக்குறிங்க!(நம்பிக்கை இருந்தா செய்யமாட்டாங்க) ~~

    ~~ ஆனா அப்படிலாம் இல்லாம உங்களுக்கே பயம் ஆகி , ஏதேதோ சுய விளக்கம் தருகிறாப்போல பதிவும் போடுறிங்க! ~~


    அப்படினு எதிர்கேள்வி கேக்குறீங்க...

    இங்க வந்து..

    ~~ நீங்கள் போட்ட விருப்ப பட்டியல் ஆனாலும் அம்புட்டுத்தானா உங்கள் வாசிப்பின் ஆழம்னு பெரிய இவன் கணக்கா கேட்க தோன்றியது, ஆனாலும் அது உங்கள் விருப்பம் என்பதால் உங்கள் ரசிப்பு தன்மைக்கே விட்டு விடுகிறேன்.~~

    நீங்க கேக்குற கேள்வில என்ன புத்திசாலிதனம் இருக்கு.... அதனால் உங்களுக்கு எந்த வகையில் பயன்... உங்க புத்திசாலிதனத்தை காட்டவா.. இல்ல 'நீ இவ்வளவுதான்..தெரியுமா?'னு சொல்லவா...

    நான் ஃபிரைடா காலோ, அகிரா குரோசோவா .... பற்றி பதிவுபோட்டா மத்தவங்ககிட்ட நீங்க சொன்னீங்களே அந்த 'கொஞ்ச நஞ்ச இமேஜும்' ஏறவோ... நான் இங்க கிறுக்குல...

    என்னைப்பத்தி எனக்கு தெரியும்.. உங்களைப்பத்தி உங்களுக்கு தெரியுமா?

    //மேலே வானம் கீழே பூமி என எல்லைகளற்ற வெளியில் சஞ்சரிக்கும் வவ்வால் நான் :-))
    //
    அதனாலதான் எதையும் நேரா பார்க்திறதில்லையோ...

  12. said...

    தென்றல்,

    நான் சொன்னேனா புத்திசாலித்தனாமா பின்னூட்டம் போடுவேன்னு :-))

    ////'சிவாஜி'யை 'சினிமா'தானகிற ஒரு கண்ணோட்டத்தில பார்க்கமுடியாம பெரிய இவன்கினக்கா கேள்விலாம் கேட்கதோணுதே...?!'//

    //என்னுடைய பள்ளிகூடம் அல்லது கல்லூரி காலகட்டத்தில 'சிவாஜி' வந்திருந்தா பிடிச்சிருக்குமோ..என்னவவோ...?!!//

    இங்கே இருக்க எல்லாருமே சிவாஜி படத்த பார்க்கிறாங்க ஆனா அப்புறம் அது ஒரு படமா ஏன் என்னால அப்படத்த சராசரி தமிழ் சினிமா பார்வையாளானாகவோ, இல்லை தமிழ் சினிமா இப்படித்தான் இருக்கும்னு தெரிஞ்ச பிறகும் கேள்வி கேட்கிறோன்னோ தெரியவில்லைனு ஒரு ஜம்பமா உங்களைப்போல ஸ்டேட்மெண்ட் விடுறாங்க? (அறிவுச்சீவித்தனம்கிறது இதை தானா?)

    அதனால் தான் சரி இப்படி சொல்ற உங்க வாசிப்பு மட்டும் தமிழ் சினிமா போல இருக்கிற நூல்களாக தானே இருக்கு , இந்த லட்சணத்தில சிவாஜி படம் உங்களுக்கு மட்டமா ரசிக்க முடியாத படமா தெரியுதானு கேள்வி கேட்க தான் அப்படிக்கேட்டேன்!நான் எப்படி தொடர்பு படுத்தி என்ன சொன்னேன் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ளவில்லை!

    விமர்சன கருத்து சொல்வது உங்கள் விருப்பம் , அதே அதுக்கும் ஒரு விமர்சன கருத்து சொல்வது எனது விருப்பம் இல்லையா, கருத்துக்கு எதிர் கருத்து வர வேண்டும் என்பதற்கு தானே பிலாக்.

    அதே போல நீங்க கண்மணி பதிவில் நான் சொல்லி இருப்பதை எல்லாம் இங்கே இழுத்து வரிங்க இது எல்லை தாண்டிய பயங்கரவாதம் :-))

    அதுக்கு விளக்கம் இருக்கு, அவங்களே அடிக்கடி நாங்க கும்மி பதிவு தான் போடுவோம் இஷ்டமிருக்கவங்க படிக்க போறாங்க சொல்லிப்பாங்க, அப்புறம் "நாங்க அடிப்பதெல்லம் கும்மியும் இல்லை பதிவெல்லாம் மொக்கையும்" இல்லைனு ஒரு பதிவும் போடுறாங்க(அவர்களின் முந்திய பதிவு தலைப்பு இதான்) சரி என்னடா முன்னுக்கு பின் முரணாக வருதே கலாய்ப்போம்னு கேட்டது தான் அது!

    அதே போல இப்படி எப்போதும் கலாய்த்துக்கொண்டும் இல்லையே , ஒருவர் நன்றாக ஒன்றை செய்தால் முதல் ஆளாகப்பாராட்டுவேன், அது எல்லாம் நீங்கள் பார்க்க மாட்டிங்களே!(ஒரு வேளை நான் பாராட்டியவர்கள் எல்லாம் உங்களுக்கு ஆகாதவங்களோ)

    இதை எல்லாம் கலாய்க்க நீ யாரு பெரிய இவினானு நீங்க கேட்கலாம், கேட்டா நான் ஆமாம்னு தான் சொல்லிப்பேன் :-))

    நாங்கலாம் ஊருக்குள்ளவே சண்டியர்னு பேரு வாங்கினவங்க தெரியும்ல :-))

    //என்னைப்பத்தி எனக்கு தெரியும்.. உங்களைப்பத்தி உங்களுக்கு தெரியுமா?//

    இப்படிலாம் கேள்வி வரும்னு தான் அப்போவே,என்னைப்பத்தி சொல்லி இருக்கேனே,

    //மேலே வானம் கீழே பூமி என எல்லைகளற்ற வெளியில் சஞ்சரிக்கும் வவ்வால் நான் :-))
    //

  13. said...

    தென்றல்,
    இடது பக்கம் ரஜினி...வலது பக்கம் கமல் படம் ..

    நல்லா இருக்கு...

  14. said...

    /தருமி said...
    தென்றல்,
    இடது பக்கம் ரஜினி...வலது பக்கம் கமல் படம் ../

    அட...! ;)