Pages

வண்ண வண்ண கோலங்கள் - I

எனக்கு தமிழ் வலைப்பூ அறிமுகமாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. அதாவது வாசிக்க ஆரம்பித்து! (நானும் எழுத, கிறுக்க, CAP technology பயன்படுத்த ஆரம்பித்தது நான்கு மாதங்களுக்குப் அப்புறம்தான்!) .

இந்த ஒரு வருடத்தில், வலையுலகில் என்னை ஆச்சரியப்படுத்தியவர்களை பற்றி பதிவு செய்யலாம் என்ற எண்ணத்தில் ...... (இரண்டாவது ஆண்டும் இருந்தால் அப்பொழுதும் தொடரலாம்!)

எனக்கு முதலில் அறிமுகமானது ஜோவின் (ஜோதிகா இல்ல..நம்ம 'கடற்புறத்தான்') வலைப்பூதான். ஜோ - எங்க கல்லூரி. அவர் எழுத்தில் ... அவர் சொன்ன விசயங்கள் நேரில் பார்த்தது..அனுபவித்தது..இரசித்தது. அதனால அவருடைய பதிவை வாசிக்க ஆரம்பித்தேன். பிடித்தும் போனது!

அதிலிருந்து ஜோசப் சார், SK ஐயா, விடாது கருப்பு வலைப்பூக்கள். ஜோசஃப் சாரின், "திரும்பிப் பார்க்கிறேன்-I" SK சாரின், "பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" தொடர்களை, கல்லூரி நாட்களில் பாலகுமாரன்,வைரமுத்து மற்றும் எம்.எஸ்.உதய மூர்த்தியின் எழுத்துக்களை எந்தளவுக்கு ஆர்வமுடன் வாசித்தேனோ....அதே ஆர்வத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன்.

அதிலிருந்துதான் தமிழ்மணம் என்றதொரு தமிழ்வலைதிரட்டி அறிமுகம். இந்த பெருங்கடலில் தள்ளிவிடப்பட்டபொழுதுதான் திக்குமுக்காடி போனேன். ஏதோ இரண்டு, மூணு பேரு எழுதாறாங்க.....சில பேர் அவுங்க எழுத்தைபத்தி கருத்துக்கள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் சொல்றாங்கனு நினைத்து கொண்டிருந்த எனக்கு இந்த வலைதிரட்டி பார்த்தபொழுதுதான் ஆச்சரியமும் பிரமிப்பும் வந்தது.

துளசி 'டீச்சரின்' நியூசிலார்ந்து பதிவுகளும், மதி கந்தசாமி, சந்திரவதனா, தமிழ் நதி, செல்வநாயகியின் எழுத்தும் புது விதமான வாசிப்பு அனுபவத்தை கொடுக்க ... பல பேருடைய பதிவுகளும், கருத்து பரிமாற்றங்களும் ரொம்பவே பிடித்து போக சில நாட்கள் இந்த வாசிப்பே முழு நேர 'வேலை'யானது.

வெட்டிபயல் பதிவுகள் ஜாலி. சரி... ஒரு batchelorதான் இப்படி ஜாலியான பதிவு போடுறாருனு பார்த்தா 'குடும்ப இஸ்திரியான' கண்மணி பதிவுகள் வாசித்த பொழுது ஆச்சரியமும், தனியாக சிரித்த நாட்களும் அதிகம். கண்மணி பதிவிலிருந்து மருத்துவர் டெல்பின் அவர்களின் ஆங்கில வலைப்பூ அறிமுகம். அவருடைய கணவரும், மகனும் எங்க கல்லூரிதான் என்று தெரிய வந்தபொழுது ...ரொம்ப நெருங்கிய சொந்தங்கள் போல ஒரு உணர்வு. மாசிசாரைப் பற்றி அறிந்த பொழுது என்னையும் அறியாமல் கண்ணீர் துளிகள்.

அதுவரை நான் பார்த்த..வாசித்த வலைப்பூ பதிவர்கள் .....' சே... மக்கள் இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களா'னு நினச்சப்பதான்..தமிழ்மணத்துக்கு வந்த சோதனையா... இல்ல 'நண்டு' கதையை நினைவுப்படுத்தும் விதமா தெரியலை? சில பதிவர்களைப் பற்றிய துவேசங்கள் எல்லை மீற தமிழ் வலைப்பக்கத்திற்கு ஒரு சிறிய இடைவேளை விடலாம் என்று தோன்றியது.

கறுப்பு வெள்ளி மற்றும் சைஃபர் திங்கள்

அமெரிக்காவில் Thanksgiving க்கு அடுத்த நாள் 'கறுப்பு வெள்ளி' என்ற ஒரு கூத்து நடக்கும். இந்த 'கறுப்பு வெள்ளி'யன்று - Wal Mart, Target, JC Penny, Macys, Sears, Best Buy, Circuit Cityனு எல்லா கடைகளும் அதிகாலை 5 மணிக்கே திறந்து விடுவார்கள். சில கடைகள் இரவு 2 மணிக்கே!

கடைக்குள் ஙழைய இரவு 2, 3 மணிக்கெல்லாம் காத்துகிடந்து உள்ளே ஙழைய அடிதடி நடக்கும். முதலில் ஙழையும் 20 பேரோ..30 பேருக்கோதான் 'அந்த பாக்கியம்' கிடைக்கும்.

இந்த முறை Circuit Cityல் 250 டாலருக்கு மடிகணினி என்று அறிவித்திருந்தார்கள். நண்பர் ஒருவர் அதிகாலை 3 மணிக்கு செல்ல அவருக்குமுன் 200 பேர் காத்திருந்தனர். இவர் உள்ளே ஙழைந்தவுடன் அதே மடிகணினியை 500 டாலருக்கு ஒருவன் வித்து கொண்டிருந்தானாம்.

இந்த 'கறுப்பு வெள்ளி'யன்று மட்டும் 475 பில்லியன் டாலர் விற்பனை நடந்திருக்கிறது. போனவருடத்தை விட 6-8 சதவீதம் அதிகமாம். மார்க்கெட்டிங்கை இவர்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்.

இந்த கூத்தையெல்லாம் இரவு செய்திகளில் பார்த்தால் சிரிப்பும் ஆச்சியமுமே ஏற்படுகிறது. ஆனால், இதுபோல நம்ம ஊருக்கு வர வெகுநாட்கள் இல்லை என்றே தோன்றுகிறது.

சமீபத்தில் (இரண்டு வருடங்களாக ) "சைஃபர் திங்கள்" என்று ஒரு புது யுக்தியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஆன் லைனில் ஷாப்பிங்! 70 மில்லியன் பேர் ஆன் லைனில் ஷாப்பிங் செய்வதாக ஒரு கணக்கு சொல்கிறது. மக்கள் அலுவலகத்தில் ரொம்பவே சிரத்தை எடுத்து ஆன் லைனில் ஷாப்பிங் செய்வதால் பல மில்லியன் டாலர்கள் productvity நஷ்டமாம். CNN/MSNலும் இதையே குறிப்பிட்டார்கள்: "Workers go to work to shop."

எது எப்படியோ இதனால் அமெரிக்கா பொருளாதாரம் 'கொஞ்சம்' தலைநிமிர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள். ம்ம்ம்.. பார்க்கலாம்..வருகிற நாட்கள் எப்படி இருக்கிறாதென்று...... !!

சிவாஜி

வலைப்பதிவில் பலர் சிவாஜியை அக்குவேற ஆணிவேறா பிரிச்சி மேய்ஞ்சிட்டாங்க...
இந்தப்படத்திற்கு கொடுத்த விளம்பரங்கள் மற்றும் சில... இந்த படத்தை தியேட்டரில் போய் பார்க்ககூடாதுகிற ஆர்வத்தை அதிகமாக்கியது. மெதுவா DVD கிடைச்சா பாத்துக்கலாம்னு எண்ணம். சமீபத்தில் இந்தப் படத்தை DVDல் பார்ததுட்டு எனக்கு தோன்றிய சில கேள்விகள்.... எனக்கு எனக்காக மட்டுமே....

1. வழக்கமா ரஜினி படத்தில் இருக்கும் விறு விறுப்பு மிஸ்ஸிங்! ரஜினி என்ன பண்ணினாலும் கேள்விகேட்ககூடாதுகிறதுக்காக அமெரிக்கா return - 200 கோடி சொத்து/சம்பாத்தியம் - கறுப்பு பணம் வெள்ளை பணமா மாத்திறது - தமிழ்செல்வியின் பாடல் காட்சிகள் ...இதலாம் ரொம்ப ஓவர். அது ஏன் தமிழ்செல்வினு பேரு...இதே மாதிரிதான் அருணாச்சலத்திலும் (வேதவள்ளி) படையாப்பாவிலும்.. தமிழ்பற்றோ?

2. நயன் தாரா நடிகை.... அது அவர்களுடைய தொழில். ஆனால் தமிழ்செல்வி அப்பாவா பேராசிரியர் ராஜா எதுக்கு? வேற நடி்கர்களே இல்லையா?

3. சங்கவை, அங்கவை அப்பாவாக பேராசிரியர் சாலமன் பாப்பையா. 'பழகலாம் வாங்கனு' காமெடியாம்!? இது காமெடினு வச்சிகிட்டாலும் அதுக்கு எதுக்கு சாலமன் பாப்பையா? கவுண்டமணியோ.. செந்திலோ போதாதா?

4. "பன்றிகள் தான் கூட்டமா வரும், சிங்கம் தனியாகதான் வரும்" எழுத்தாளர் சுஜாதாவின் வசனம்......மக்களோட பல்ஸ்யை நல்லாவே தெரிஞ்சி வைச்சிருக்காரு....(ரூம் போட்டு யோசிப்பாங்களோ!....)

5. இயக்குநர்... 'காதல்', 'வெயில்' தயாரிப்பாளார் சங்கர். ஒவ்வொரு படத்திலேயும் அவருடைய அபத்தங்கள் அதிகமாயிகிட்டே இருக்கு? ["காதலனி"ல் அப்பாவே மகளின் கற்பை சந்தேகப்பட்டு டாக்டரிடம் சோதனை செய்ய சொல்வதில் இருந்து ஆரம்பம்...]

6. கறுப்பு பணத்தை அமெரிக்காவுக்கு அனுப்ப விவேக் கேட்கும் உதவியில் அது ஏன் ஒரு மதத்தின் அடையாளம்?

7. AVM நிறுவனம்... "உயர்ந்த மனிதன்" மாதிரி படங்கள் தந்த அதே AVMமா? அந்த காலத்தில 'AVM' தயாரிப்பினா குடும்பத்தோட பார்க்கலாம்..முத்திரை பதிக்கும் படங்களா இருக்கும்னு ஒரு நம்பிக்கை இருந்தது..அது அந்த காலம்..நம்ம அம்மா, அப்பாலாம் கொடுத்து வைச்சவங்க...

இந்தப்படைத்தை பார்க்க மு.க, ஜெ. ப.சி. சந்திரபாபு நாயுடு ஆர்வமாக இருந்ததாகவும் இவுங்களுக்கெல்லாம் தனித்தனியா படத்தை போட்டு காண்பிச்சிருக்காங்க.... நமக்குதான் வேலை வெட்டி இல்லை... நம்ம முதல்வருக்கும், நிதி அமைச்சருக்குமா.... அட கடவுளே!!

ம்ம்ம்...இது ஒரு தேவையில்லாத பதிவுதான்.

புதுப் புது அர்த்தங்கள்

அடுத்த நாள் (அக்டோபர் 31, 2007) ஹாலோவீன் ஆனால், மகளோ Harvest Festival என்றாள் (அவளுடைய பள்ளிக்கூடத்தில் சொல்லி கொடுத்ததாம்) .

சரி... Harvest Festivalக்கு சில பொருட்களை வாங்குவதற்காக குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தோம். கிட்டதட்ட இரவு எட்டு மணி இருக்கும். திடீரென்று கடையே ஒரு ஆட்டம். மேலே இருந்த விளக்குகள் மற்றும் கம்பிகளும் ஒரு "குலுங்கு குலுங்கியது". உடனே கடையில் இருந்த சிலர் 'பூகம்பம்..பூகம்பம் ' என்று பதறி அடித்துகொண்டு வெளியே ஓட ...... சிலர் என்றவென்று தெரியாமல் நின்று கொண்டிருக்க... கடையில் வேலை செய்பவர்கள் 'உடனே வெளியே ஓடுங்க' னு எச்சரித்து கொண்டிருந்தார்கள். சில விநாடிகளில் அந்த இடமே காலியானது.

அந்த அதிர்வு என்னமோ 15 விநாடிகள்தான் இருந்திருக்கும். ஆனால் அந்த அதிர்வின் பாதிப்பு நீங்க சில மணிநேரம் ஆனது.

ஒரு வழியாக வீட்டிற்கு வந்து செய்திகளைப் பார்த்தால் .. CNN, Fox Newsல் அதான் 'Breaking News'. 5.6 ரிக்டர் அளவு. நிலநடுக்கத்தின் மையம் வீட்டிலிருந்து 2 மைல்கள் தூரம்.

'இதுவரை எந்தச் சேதமும் இல்லை' என்று சொல்லிகொண்டிருந்தார்கள். அடுத்த நாள்...அனைத்து செய்திதாள்களிலும் இதுதான் தலைப்புசெய்தி. 5.6 ரிக்டர் அளவு ...சாதாரண நடுக்கமாம்..!!

அக்டோபர் 31, 2007 - Harvest Festival நாள். அடுத்த நாள் அலுவலகத்தில் மதியம் நான்கு மணி இருக்கும். லேசான நடுக்கம் போல இருந்தது. மன'பிராந்தியா' இருக்குமோனு நினைத்து கொண்டிருக்க ..... பக்கத்திலிருந்த நண்பர் 'மெதுவா நடப்பா..இப்படியா அலுவலகமே ஆடுற மாதிரி நடக்கிறது'னு (அப்பொழுது உண்மை தெரியாமல்) மற்றொருவரை கிண்டலடித்து கொண்டிருந்தார். அதை அப்பொழுதே மறந்தும் போனோம்.

ஆனால் அடுத்த நாள்தான் தெரிந்தது... அது அடுத்த நில நடுக்கமென்று.... இந்த முறை 3.7 ரிக்டர் அளவு ! பத்திரிக்கையில் இந்த முறை கடைசி பக்க செய்தியாக இருந்தது....

இதை ஆராய்வதோடு பல புள்ளிவிவரங்களுடன் கூடிய தகவல்கள் இந்த இணையதளத்தில் இருக்கிறது.

மறக்கவே முடியாத 2001ல் குடியரசு தினத்தன்று நடந்த குஜராத் பூகம்பம், சுனாமி, இந்தோனேசியா, சான் பிரான்சிஸ்கோனு செய்திகள் பார்த்திருந்தாலும் 5.6 ரிக்டர் அளவு நில நடுக்க 'அனுபவம்' முதல் முறை....

மேலும் கீழேயுள்ள செய்தியைப் படித்தவுடன்...

Because of extensive urban development in Northern California since 1906, the strong earthquakes expected in the coming decades may be very destructive. For example, a magnitude 7 earthquake occurring today on the Hayward Fault (a part of the San Andreas Fault system, along the densely populated eastern side of San Francisco Bay) would likely cause hundreds of deaths and almost $100 billion of damage. In 1999, the USGS reported that there is a 70% chance that one or more quakes of about magnitude 6.7 or larger will occur in the San Francisco Bay area before the year 2030.


.......... என்னையும் அறியாமல் மனதில் ஒரு பயம் வரத்தான் செய்கிறது. ஏதேதோ... தத்துவமலாம் நினைவுக்கு வந்துட்டு போகுது !

ஆனா.... இங்க.....!!!