Pages

கறுப்பு வெள்ளி மற்றும் சைஃபர் திங்கள்

அமெரிக்காவில் Thanksgiving க்கு அடுத்த நாள் 'கறுப்பு வெள்ளி' என்ற ஒரு கூத்து நடக்கும். இந்த 'கறுப்பு வெள்ளி'யன்று - Wal Mart, Target, JC Penny, Macys, Sears, Best Buy, Circuit Cityனு எல்லா கடைகளும் அதிகாலை 5 மணிக்கே திறந்து விடுவார்கள். சில கடைகள் இரவு 2 மணிக்கே!

கடைக்குள் ஙழைய இரவு 2, 3 மணிக்கெல்லாம் காத்துகிடந்து உள்ளே ஙழைய அடிதடி நடக்கும். முதலில் ஙழையும் 20 பேரோ..30 பேருக்கோதான் 'அந்த பாக்கியம்' கிடைக்கும்.

இந்த முறை Circuit Cityல் 250 டாலருக்கு மடிகணினி என்று அறிவித்திருந்தார்கள். நண்பர் ஒருவர் அதிகாலை 3 மணிக்கு செல்ல அவருக்குமுன் 200 பேர் காத்திருந்தனர். இவர் உள்ளே ஙழைந்தவுடன் அதே மடிகணினியை 500 டாலருக்கு ஒருவன் வித்து கொண்டிருந்தானாம்.

இந்த 'கறுப்பு வெள்ளி'யன்று மட்டும் 475 பில்லியன் டாலர் விற்பனை நடந்திருக்கிறது. போனவருடத்தை விட 6-8 சதவீதம் அதிகமாம். மார்க்கெட்டிங்கை இவர்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்.

இந்த கூத்தையெல்லாம் இரவு செய்திகளில் பார்த்தால் சிரிப்பும் ஆச்சியமுமே ஏற்படுகிறது. ஆனால், இதுபோல நம்ம ஊருக்கு வர வெகுநாட்கள் இல்லை என்றே தோன்றுகிறது.

சமீபத்தில் (இரண்டு வருடங்களாக ) "சைஃபர் திங்கள்" என்று ஒரு புது யுக்தியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஆன் லைனில் ஷாப்பிங்! 70 மில்லியன் பேர் ஆன் லைனில் ஷாப்பிங் செய்வதாக ஒரு கணக்கு சொல்கிறது. மக்கள் அலுவலகத்தில் ரொம்பவே சிரத்தை எடுத்து ஆன் லைனில் ஷாப்பிங் செய்வதால் பல மில்லியன் டாலர்கள் productvity நஷ்டமாம். CNN/MSNலும் இதையே குறிப்பிட்டார்கள்: "Workers go to work to shop."

எது எப்படியோ இதனால் அமெரிக்கா பொருளாதாரம் 'கொஞ்சம்' தலைநிமிர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள். ம்ம்ம்.. பார்க்கலாம்..வருகிற நாட்கள் எப்படி இருக்கிறாதென்று...... !!

1 மறுமொழிகள்:

  1. said...

    சைஃபர் திங்கள் அன்று நடந்த விற்பனை:
    2006 - 608 மில்லியன் டாலர்
    2007 - 700 மில்லியன் டாலர்