புதுப் புது அர்த்தங்கள்
அடுத்த நாள் (அக்டோபர் 31, 2007) ஹாலோவீன் ஆனால், மகளோ Harvest Festival என்றாள் (அவளுடைய பள்ளிக்கூடத்தில் சொல்லி கொடுத்ததாம்) .
சரி... Harvest Festivalக்கு சில பொருட்களை வாங்குவதற்காக குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தோம். கிட்டதட்ட இரவு எட்டு மணி இருக்கும். திடீரென்று கடையே ஒரு ஆட்டம். மேலே இருந்த விளக்குகள் மற்றும் கம்பிகளும் ஒரு "குலுங்கு குலுங்கியது". உடனே கடையில் இருந்த சிலர் 'பூகம்பம்..பூகம்பம் ' என்று பதறி அடித்துகொண்டு வெளியே ஓட ...... சிலர் என்றவென்று தெரியாமல் நின்று கொண்டிருக்க... கடையில் வேலை செய்பவர்கள் 'உடனே வெளியே ஓடுங்க' னு எச்சரித்து கொண்டிருந்தார்கள். சில விநாடிகளில் அந்த இடமே காலியானது.
அந்த அதிர்வு என்னமோ 15 விநாடிகள்தான் இருந்திருக்கும். ஆனால் அந்த அதிர்வின் பாதிப்பு நீங்க சில மணிநேரம் ஆனது.
ஒரு வழியாக வீட்டிற்கு வந்து செய்திகளைப் பார்த்தால் .. CNN, Fox Newsல் அதான் 'Breaking News'. 5.6 ரிக்டர் அளவு. நிலநடுக்கத்தின் மையம் வீட்டிலிருந்து 2 மைல்கள் தூரம்.
'இதுவரை எந்தச் சேதமும் இல்லை' என்று சொல்லிகொண்டிருந்தார்கள். அடுத்த நாள்...அனைத்து செய்திதாள்களிலும் இதுதான் தலைப்புசெய்தி. 5.6 ரிக்டர் அளவு ...சாதாரண நடுக்கமாம்..!!
அக்டோபர் 31, 2007 - Harvest Festival நாள். அடுத்த நாள் அலுவலகத்தில் மதியம் நான்கு மணி இருக்கும். லேசான நடுக்கம் போல இருந்தது. மன'பிராந்தியா' இருக்குமோனு நினைத்து கொண்டிருக்க ..... பக்கத்திலிருந்த நண்பர் 'மெதுவா நடப்பா..இப்படியா அலுவலகமே ஆடுற மாதிரி நடக்கிறது'னு (அப்பொழுது உண்மை தெரியாமல்) மற்றொருவரை கிண்டலடித்து கொண்டிருந்தார். அதை அப்பொழுதே மறந்தும் போனோம்.
ஆனால் அடுத்த நாள்தான் தெரிந்தது... அது அடுத்த நில நடுக்கமென்று.... இந்த முறை 3.7 ரிக்டர் அளவு ! பத்திரிக்கையில் இந்த முறை கடைசி பக்க செய்தியாக இருந்தது....
இதை ஆராய்வதோடு பல புள்ளிவிவரங்களுடன் கூடிய தகவல்கள் இந்த இணையதளத்தில் இருக்கிறது.
மறக்கவே முடியாத 2001ல் குடியரசு தினத்தன்று நடந்த குஜராத் பூகம்பம், சுனாமி, இந்தோனேசியா, சான் பிரான்சிஸ்கோனு செய்திகள் பார்த்திருந்தாலும் 5.6 ரிக்டர் அளவு நில நடுக்க 'அனுபவம்' முதல் முறை....
மேலும் கீழேயுள்ள செய்தியைப் படித்தவுடன்...
Because of extensive urban development in Northern California since 1906, the strong earthquakes expected in the coming decades may be very destructive. For example, a magnitude 7 earthquake occurring today on the Hayward Fault (a part of the San Andreas Fault system, along the densely populated eastern side of San Francisco Bay) would likely cause hundreds of deaths and almost $100 billion of damage. In 1999, the USGS reported that there is a 70% chance that one or more quakes of about magnitude 6.7 or larger will occur in the San Francisco Bay area before the year 2030.
.......... என்னையும் அறியாமல் மனதில் ஒரு பயம் வரத்தான் செய்கிறது. ஏதேதோ... தத்துவமலாம் நினைவுக்கு வந்துட்டு போகுது !
ஆனா.... இங்க.....!!!

5 மறுமொழிகள்:
ஐயா
நீரு இங்க வடகிழக்கில்தானே இருந்தீரு. அங்கன எப்ப போனீரு?
நல்லா இருக்கீரா?
\நில நடுக்க 'அனுபவம்' முதல் முறை....\\
நமக்கு ஊர்ல இருக்கும் போதுதே இப்படி ஒரு அனுபவம் வந்துடுச்சிங்க.
வாங்க கொத்ஸ்! நம்ம பொழப்பே நாடோடிதான...
இந்தப்பக்கம்வந்து இரண்டு மாசம் ஆகுதுங்க...
அப்புறம் க்விஸ் போட்டிக்கு விடைகளை பக்கத்து பெஞ்சுல இருந்து 'காப்பி' அடிக்கலாம்னு இருந்தேன்... அதுக்குள்ள ...
கோபிநாத், 2001ஆ?
---ஏதேதோ... தத்துவமலாம் நினைவுக்கு வந்துட்டு போகுது !---
இதெல்லாமும் எழுதாமப் போனா எப்படி...
//இதெல்லாமும் எழுதாமப் போனா எப்படி...//
:)
Post a Comment