Pages

புரியாத புதிர்

சில வாரங்களுக்கு முன்னால், சில பள்ளிக் குழந்தைகள் (இந்திய) தேசியக் கொடியும், மெழுகுவர்த்தியும் வைத்துக்கொண்டு பிராத்தனை செய்தவாறு இருக்கும் புகைப்படத்தை செய்திதாளில் பார்த்த பொழுது.... சுனிதா வில்லியம்ஸ் சென்ற விண்கலம் நல்லபடியாக தரையிறங்க நடக்கும் பிராத்தனை. படித்தவுடன் 'நமக்கு என்னவாயிற்று?' என்றுதான் தோன்றியது. செய்திதாள்களும் வரிந்து கட்டிக்கொண்டு முதல் பக்க செய்தியாக வெளியிட்டது. காரணம்...அவருடைய பெற்றோர் இந்தியர் மற்றும் அவர் இந்திய வம்சவழியில் வந்தவர் என்பதாலும்!

சில வருடங்களுக்கு முன்னால், மனோஜ் சியாமளன் இயக்கிய திரைப்படம் சக்கைபோடு போட்டு ஆஸ்காருக்கு தேர்வாகியபோது, நம்மூர் பத்திரிக்கைகள் இந்திய வம்சவழியில் வந்தவர் என்ற ஒரே காரணத்தினால் அவரைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது கல்பனா சவ்லா பெயரில் விருது கொடுக்கப்பட்டபொழுதும் 'சாதனை பெண்' மட்டும் காரணமல்ல அவர் இந்திய வம்சவழியில் வந்தவர் என்பதே பெரியதாக இருந்தது.

இதுபோல் பாபி சிண்டால் [அமெரிக்கா மாநிலத்தின் முதல் இந்திய அமெரிக்க ஆளுநர்] மற்றும் நோரா ஜோன்ஸ் [கிராமி விருது சாதனையாளர்] இவர்களும் இந்த பட்டியலில் அடங்குவர்.

இவர்கள் பாராட்டுக்குறியவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இவர்களால் நமக்கும் நம் நாட்டுக்கும் பெருமை, 'Indian Idol' என்பதுபோல 'அதிகப்படுத்தி' காட்டுது புரியாத புதிராகவே இருக்கிறது. எப்படி இவர்களால் இந்தியாவுக்கு பெருமை..?!

சுனிதா வில்லியம்ஸ் தந்தை மட்டும்தான் இந்தியாவில் பிறந்தவர். சுனிதா வில்லியம்ஸ் பிறந்தது மற்றும் அவருடைய வாழ்க்கைமுறை அனைத்தும் அமெரிக்காவில்தான். எந்த வகையில் 'நமக்கு பெருமை'? விண்கலத்தில் சென்றபொழுது பகவத் கீதையும், சமோசாவும் எடுத்துச் சென்றதாலா?

அதேபோல் மனோஜ் சியாமளன். பிறந்தது புதுச்சேரியில். மற்றபடி அவருடைய வாழ்க்கைமுறை அனைத்தும் அமெரிக்காவில்தான். அவரிடம் " 'சின்ன தம்பி மாதிரி' படங்களை மேற்கோள்காட்டி இந்திய திரைபடங்களை பற்றிய உங்கள் கருத்துனென்ன? இந்திய திரைப்படங்களை இயக்கும் எண்ணம் உண்டா?"' என்ற பேட்டியில் ..... அவர் சொன்னது "என்னால் அப்படி ஒரு படத்தை இயக்குவது ரொம்ப கஷ்டமான விசயம்! இந்திய மக்களின் இரசனைக்கு ஏற்றவாறு என்னால் திரைப்படங்களை இயக்குவது இயலாததொன்று" .

சில வாரங்களுக்கு முன்னால் நம் நாட்டிற்காக... நமக்காக இறந்த ஜீனியர் கமிஷன் ஆபிசர் (JCO) - சுபேதார் லால் (Naib Subedar Chunni Lal) க்காக நாம் பிராத்தனை கூட்டம் நடத்தினோமா? இல்லை அப்படி ஒரு செய்தியை நான் கவனிக்க தவறிவிட்டேனா? அவருடைய பெயரில் ஏதேனும் விருது கொடுக்கும் எண்ணம் நம் அரசாங்கத்திற்கு உண்டா? ம்ம்.. அவர் அமெரிக்காவில் வளர்ந்து ஈராக் போருக்கு சென்று உயிர் துறந்திருந்தால்தான் நமக்கு பெரிய விசய்மாக இருந்திருக்குமோ?

சரி.... 'பெரிய தலைவர்கள்'தான் கேட்கவில்லை.. பெரிய கடவுளாவது கேட்கட்டும் என்று நம் இலங்கை சகோதர, சகோதரிகளுக்கு பள்ளிகளில் தினமும் பிராத்தனைகூட்டம் நடத்திருப்போமா?

மகேந்திரன் போன்ற இயக்குநர்களை நம்மால் ஏன் கொண்டாட முடிவதில்லை? MSV போன்ற கலை<>ர்களுக்கு ஒரு முறைகூட தேசிய விருது கிடைக்கவில்லையே? ஏன்?? வெளிநாட்டில் பிறக்காமல், இந்தியாவில் பிறந்த ஒரே காரணாத்தினாலா?

கன்னியாகுமாரியில் முதல் பெண் பேருந்து ஓட்டுநரை, ஜெயலலிதா ஊக்கப்படுத்தியிருந்தால் இன்று பல பெண்கள் அதில் ஆர்வம் காட்டிருப்பார்களே? ஏன் செய்யவில்லை?!

ம்ம்..வாழ்க்கையில் சில புதிர்கள் எப்பொழுதுமே புரிவதில்லை..!

16 மறுமொழிகள்:

  1. said...

    நியாயமான கேள்விகள்.

  2. said...

    ஒரு வேளை இது போல் வரும் (இந்திய) செய்திகளை நாம் பெரிது படுத்துவதில்லை என்றே நினைக்கிறேன். அமெரிக்கா என்றவுடன் கவனித்து வாசிக்க ஆரம்பிக்கிறோமோ?

    ஆனாலும் உங்கள் கேள்விகள் அனைத்தும் நியானமானவையே.

  3. said...

    உண்மை.இங்கே நமக்காக பாடுபடுபவர்களை ஆராதிக்காமல் மேர்கூறியவர்களை சிறப்பிக்கிறோம்.நல்ல பதிவு

  4. said...

    தென்றல், நன்றாக கேட்டீர்கள்

  5. said...

    ெதன்றல்!் இவர்கள் ஆராதிக்கும் அெமாிக்க வாழ் இந்தியர்கள் பின் புலத்ைத ஆராய்ந்தால் ஒரு ஒற்றுைம இருக்கும் அந்த நுண்ணரசியல் நாம் ெதாிந்து ெகாள்ளாமல் இருக்கிேறாம்.

    தமிழ்நாட்டு தமிழர் ஒருவர் நாசா ஆராய்ச்சி பிாிவில் பல சிறப்பான சாதனைகள் ெசய்துள்ளர் ஆனால் அவர் இங்குள்ள ஆட்சி அதிகார வர்க்கங்களால் ெகாண்டப்படுவதில்ைல, ஏெனன்றால் இவர்களின் அந்த குறிப்பிட்ட எல்ைலக்குள் வருவதில்ைல.

    பின்னாளில் ஒரு விாிவான பதிவு எழுதுகிேறன்

  6. said...

    வாங்க ரவிசங்கர், காட்டாறு, முரளி, செல்வேந்திரன் & பாரி.அரசு!

    /காட்டாறு said...
    அமெரிக்கா என்றவுடன் கவனித்து வாசிக்க ஆரம்பிக்கிறோமோ?/

    அரசாங்கம், பத்திரிக்கைகளிலிருந்து நம்மைப்போல பொதுமக்கள் வரை அதே மனநிலைதான் போல! கருத்துக்கு நன்றி, காட்டாறு!

  7. said...

    /ஏெனன்றால் இவர்களின் அந்த குறிப்பிட்ட எல்ைலக்குள் வருவதில்ைல.

    பின்னாளில் ஒரு விாிவான பதிவு எழுதுகிேறன் /

    கண்டிப்பாக எழுதுங்கள், பாரி.அரசு! நன்றி!

  8. said...

    தென்றல் இது போன்ற விஷயங்களிற்கு தமிழ் ஆங்கில ஊடகங்கள் மிகைப்படுத்தப்பட்ட ஒரு எதிர் பாப்பை கிளப்பும் போது சில சமயம் மெல்லியதாய் கோபம் கூட வந்திருக்கிறது.

    சுனிதா வில்லியம்ஸ் விண்கலம் தரை இறங்க கவுண்ட் டவுன் போட்டு ஒரு பெரிய்ய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டார்கள்.

    என்ன செய்வது கொடி சாய்ந்து கொள்ள கொழு கொம்பை தேடுவது போல நாமும் எப்படியாஅவது உரிமை கொண்டாடி வருகிறோம்.

    http://blog.nandhaonline.com

  9. said...

    தென்றல்,
    இந்த 'இந்திய வம்சாவளியில் வந்த' என்ற சொல்லைக் கேட்கும்போது அப்பப்ப நினைச்சிக்கிறதுண்டு... அதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களுக்கே நினைவிருக்குமோ என்னவோன்னு..

    இப்படி ஏகத்துக்கும் புகழ்ந்து தூக்க வேண்டியது, அப்புறம் நம்ம இளைஞர்கள் வெளிநாட்டு மோகம் பிடித்து அலைகிறார்கள்னும் எழுத வேண்டியது..

    சில வேளை இவர்களைப் புனிதப்படுத்தும் போது அவர்கள் வாழ்க்கையின் 'இந்தியக் கலாச்சார மீறல்களையும்' புனிதப்படுத்தி சில விசயங்களில் நல்லது பண்றாங்கன்னும் நினைக்கிறதுண்டு...

  10. said...

    சரியான கேள்வி தென்றல். ஆனால் கேட்க வேண்டிய இடம் இதுவான்னுதான் தெரியலை ;-(

  11. said...

    வாங்க நந்தா & பொன்ஸ்!

    பெரியாரும், விவேகானந்தரும் வாழ்ந்த... பார்த்த நம் சமூகம் இன்று நம்முடைய சுய மரியாதைக்கும், உரிமைக்கும் 'அடுத்தவர்களின்' அங்கிகாரத்திற்கு ஏங்கி நிற்கிற நிலை!?

    வேதனையான விசயம்!

  12. said...

    தென்றல்...

    ஆஹா..நான் நினச்ச மாதிரியே எழுதிட்டீங்க..எழுதனும்னு நினச்சு, எழுத தைரியமில்லாமல் போச்சு... நமக்கு இந்த ஆர்க்யூ பண்ற மாதிரி கஷ்டமான காரியம் ஒன்னும் இல்லை..
    :-))))..கையாலாது அது தான் உண்மை

    நன்றி தென்றல்...

  13. said...

    வாங்க, ஜெஸிலா & மங்கை! நன்றி!!

    /ஆனால் கேட்க வேண்டிய இடம் இதுவான்னுதான் தெரியலை ;-( /

    எங்க கேட்டிருக்கணும் நினக்கிறீங்க..?

    /நமக்கு இந்த ஆர்க்யூ பண்ற மாதிரி கஷ்டமான காரியம் ஒன்னும் இல்லை..
    :-))))../

    நமக்கும் அதேபிரச்சனைதாங்க!

    ஆனா இங்கு சில நண்பர்கள்/பதிவர்கள் எதிர்மறையான கருத்துக்களையும் தோழமையுடன் விவாதிக்கும்போது ஆச்சரியமா இருக்கும்! வாழ்க, அவர்கள்!!

  14. said...

    ithukellam orey karanam ingey nerya news channel agi pochu..Mothalla yellam incidents nadantha athu news..ippo...Incident nadakapoguthuna...new, Yeppadi Incident nadthalam nu news, Incidentla irukiravar nai kutti yenna sollichu nu news...so..ippadi yellam cover panniyum news time micham irukirathala, oru kuppan ,suppan americavil vetti kattina kooda newsah kattuvanga...ana athey kuppan, suppan kovanam katta kooda vazhi illama iruntha, atha katta mattanga yenna ..oru velai atha than namma thinamum neruley pakkuromey..nu irukkummo..
    Sensation has become like a athiseshan...we need some kannan to dance on its head and kill it.

  15. said...

    வாங்க TBCD!
    (வேலையின் காரணமாக தாமதம்.... :( !)

    வாய்ப்பு கிடைத்தால், ரவிசங்கரின்
    சிறந்த தமிழ் விசைப்பலகை எது? பதிவைப் பாருங்கள்.

    நன்றி!

  16. said...

    இங்க சுத்துற எல்லோருக்குமே வேலை இருக்காது என்று நான் நினைக்கவில்லை

    /*தென்றல் said...

    வாங்க TBCD!
    (வேலையின் காரணமாக தாமதம்.... :( !)*/

    பாக்குறேனுங்க..... நீங்க கூட என் பதிவ படிச்சி பாருங்க..(வேலை இல்லாதபோது..)

    /*வாய்ப்பு கிடைத்தால், ரவிசங்கரின்
    சிறந்த தமிழ் விசைப்பலகை எது? பதிவைப் பாருங்கள்.*/