நான்
'நீங்க மட்டும் என்ன..... வாங்க ஒரு 'எட்டு' வந்துட்டு போங்கனு' மணிகண்டன் கூப்பிட மாதிரி, டெல்பின் மேடம் மற்றும் துளசி டீச்சர்ம் கூப்பிட .... [இவுங்க கூப்பிடலனாலும்..... கேக்காமலேயே உதவி பண்றது நம்மகிட்ட இருக்கிற "எட்டுல" ஒண்ணு..ஹி..ஹி.......;) ]
வேலையின் காரணமாக வலைப்பூ பக்கம் அதிகம் வர முடியலை..! [யாரோட சாபம்னு தெரியலை...;( ]
'ம்ம்..எட்டு (மட்டும்)தானா?னு' யோசிச்சா......அடக்கடவுளே... நினைவிற்கு ஒண்ணுகூட வர மாட்டேங்குது. சரி.. 'என்னைப்பத்தி ஒரு எட்டு (நல்ல) விசயம் சொல்லுங்க'னு மனைவிகிட்ட இல்ல நண்பர்கள்கிட்ட கேக்கலாம்னா... இதான் சாக்குனு விபரிதாம 'உண்மை'ய சொல்லிடுவாங்கனு அந்த யோசனையும் கைவிட்ட நிலையில்.....எனக்கு தோன்றியது.
ஒரு முறை சென்னை விமானநிலையத்தில் என்னுடைய பெட்டிகளை தனியா சோதனைபோடனும் தள்ளிக்கிட்டு போயிட்டாங்க... அவுங்க 'எதிர்பார்த்த' ஒண்ணும் கிடைக்கலைனு நினைக்கிறேன்.... ஆனா...என்னுடைய மடிகணினியை பார்த்துட்டு 'ஓ...இது ரொம்ப புதுசு.....சரி... இதுக்கு நீங்க வரி கட்டணும்' சொல்ல 'இல்லங்க... மறுபடியும் போறப்ப நான் எடுத்துட்டு போயிடுவேன்'னு எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன்....
கடைசியா, 'சரி 10,000 ரூபாய் வேணாம்... 3,000 குடுத்துட்டு போங்க'னு சொல்ல... பெரிய புத்திசாலிதனமா 'அப்ப நீங்க அதுக்கு receipt குடுக்கணும்'னு கேக்க... அதற்கு அந்த அதிகாரி, 'receipt வேணும்னா... 10,000 ரூபாய்! அந்த bank counterல போய் கட்டு...இல்லனா... எங்ககிட்ட 3,000 ரூபாய் குடுத்துடு கிளம்பு'னு சொல்லிட்டு போயிட்டாரு.
சிறிது யோசனைக்குபிறகு, 'சரி... நான் bank counterல கட்டிக்கிறேன்' சொல்லிட்டு அப்புறம் "receipt" வாங்கிட்டுதான் வந்தேன்... அந்த அதிகாரி பார்த்த பார்வை, பேசிய விதம்.... ம்ம்.. அனுபவித்தவர்களுக்குதான் தெரியும்..
ஆனால்... அன்று என்னிடம் எனக்கு பிடித்தது... ..அந்த "கொஞ்ச" நேர்மை!
எதைப்பற்றியும் அதிகம் கவலைப்படுவது கிடையாது. குழந்தைகள் வந்தபின் இது உண்மையல்ல என்று தோன்றுகிறது...... ஆனால், 'எது நடந்தாலும் எல்லாம் அவன் செயல்' என்ற எண்ணம் ஒரு காரணமாக இருக்கலாம்.... கவலைப்பட்டால் பிரச்சனையில் ஒரு சதவீதமாவது குறையும் என்றால் கவலைப்படுவதில் அர்த்தம் இருக்கிறது. அப்படி இல்லாத பொழுது.........!!?
யாரிடமும் தேவையில்லாமல் பேசுவதும் இல்லை.... எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரிவதும் இல்லை... ஒருவிதம் கூச்சம்னு சொல்லலாம..?! சில நேரங்களில் 'தமாசாக' பேச போக அது அதே அலைவரிசையில் மற்றவர்கள் புரிந்துகொள்ளாமல்..... மீண்டும் என்னுடைய 'அமைதி'க்கே திரும்பி விடுவது.
சினிமா பார்ப்பது.... ஒருமுறை நண்பர்களுடன் படத்திற்கு போக... மம்மூட்டி நடிப்பில் உருகி... படம் முடிந்தவுடன் தனியா உக்காந்து அழ...... நண்பர்கள் தேற்றி.... வீட்டிற்கு கூட்டி வந்தது மறக்க முடியாது...... சில படங்களை பார்க்கும்பொழுது இன்னும் அதே நிலைதான்...... :(
நம்மால் யாருக்கும் தொந்தரவு வரக்கூடாது என்று எண்ணம். அதன் விளைவு யாரிடமும் உதவி கேக்க தயங்குவது...
அந்தந்த கணத்தை இரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாமல் இருப்பது... அதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பது....
புன்னகை....
கடைசியாக ... கல்லூரியில் கிடைத்த இரண்டு மூன்று பேர்தான் என்றாலும்... அவர்கள் என்னுடைய ஆத்மார்த்தமான (பழைய) நண்பர்கள் மற்றும் இங்கே கிடைத்த புதிய நட்பும்....
கடைசியா வந்துட்டு யாரை அழைப்பது....
1. புதுசா வந்திருக்கிற விமலாவை கூப்பிடலாம்... ஆனா...அவுங்க இதை பாப்பாங்களானு தெரியலை...
2. ஜோவை கூப்பிடலாம்.. அதான் நான் ஆறு போடவே வரலையே...அப்பவே உனக்கு புரிய வேண்டாமானு கேப்பாரு.
3.காட்டாறு கூப்பிடலாம்... அவுங்களை வல்லி அம்மா கூப்பிட்டாங்க...
4 டெல்பின் மேடத்தை கூப்பிடலாம் அவுங்களையும் வல்லி அம்மா கூப்பிட்டாங்க...
5. மா.சிவகுமார் ..... அவரையும் கூப்பிட்டு இருப்பாங்க..
6. தங்கச்சி அவந்திகா....ம்ம்ம் ... மணிகண்டன் கூப்பிட்டாரு... தங்கச்சிக்கு பரிச்சை நேரம் போல....
7. 'அழகன்' செல்வேந்திரன்... அவர் பின்னுட்டத்தில மட்டும்தான் எட்டு போடுவேனு அடம் பிடிக்கிறாரு...
8.. போன முறை தமிழ் நதி என்னை மாட்டி விட்ட மாதிரி... இந்த முறை அவுங்களை... ஆனா... கவிதை தொகுக்கிறதில ரொம்ப வேலையோ? அந்த கவிதை தொகுப்பு எங்கு கிடைக்கும் கேக்கணும்.
ம்ம்ம்....இப்ப என்ன பண்ணலாம்...??
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும

18 மறுமொழிகள்:
திருப்பிக் கொண்டு போறதுக்கு பாஸ்போர்ட்லே ஒரு சீட்டு எழுதி வைப்பாங்களே.
அப்படிச் செய்யலையா?
நாம் ஒரு சமயம் வீடியோ கேமெராவுக்கு இப்படிச் செஞ்சு திருப்பிக் கொண்டு வந்தோம்.
---அன்று என்னிடம் எனக்கு பிடித்தது... ..அந்த "கொஞ்ச" நேர்மை!---
தனித்துவமான குணம்...
தண்டம் அழுதது கடுப்பேற்றியது... என்றாலும், 'எது நடந்தாலும் எல்லாம் அவன் செயல்' என்று விட்டுட வேண்டியதுதான் :)
யாரிடமும் தேவையில்லாமல் பேசுவதும் இல்லை.... எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரிவதும் இல்லை... ஒருவிதம் கூச்சம்னு சொல்லலாம..?! சில நேரங்களில் 'தமாசாக' பேச போக அது அதே அலைவரிசையில் மற்றவர்கள் புரிந்துகொள்ளாமல்..... மீண்டும் என்னுடைய 'அமைதி'க்கே திரும்பி விடுவது.
அப்படியே... நான்.
வாங்க, டீச்சர்!
நானும் அப்படிதான் நினைச்சேன்!
'அவுங்ககிட்டலாம்' ரொம்ப பேசகூடாதுனு அப்புறம்தான் கத்துகிட்டேன்.
வாங்க, பாலா!
இதுல என்ன கொடுமைனா...அடுத்த budgetல ப.சி மடிகணினிக்கு வரிவிலக்கு குடுத்தாரு!!
வாங்க, அண்ணாச்சி!
உங்களை கூப்பிட்டு இருக்கலாம். விட்டுடேனே...?!!
\\ஆனால்... அன்று என்னிடம் எனக்கு பிடித்தது... ..அந்த "கொஞ்ச" நேர்மை!\\
தென்றல் உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம்.
\\சில படங்களை பார்க்கும்பொழுது இன்னும் அதே நிலைதான்...... :(\\
ஆஹா....மிகவும் இளகிய மனம் போல ;)
/தென்றல்... எனக்கு பிடிச்சது இதுதான்.. இப்படியே வாழ்க்கையில் இருங்கப்பா.
/
நன்றி, மேடம்!
\\தென்றல் said...
வாங்க, பாலா!
இதுல என்ன கொடுமைனா...அடுத்த budgetல ப.சி மடிகணினிக்கு வரிவிலக்கு குடுத்தாரு!!\\
ஆஹா.....இதுதான் விஷயமா.....சமிபத்தில் நான் கொண்டு போகும் போது இப்படி ஏதும் நடக்கவில்லை.
எட்டுக்கே மேட்டர் குறையுது போல.
அது சரி எந்தப் படம் பார்த்து தம்பி அழுதீங்க.
வாங்க கோபிநாத்!
(தாமதமான) பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
என்ன இருந்தாலும் அந்த 'விருந்து படையல்' (படம் மட்டும்) போட்டு ரொம்பவே ஏமாத்திட்டீங்க...;(!
வாங்க கண்மணி!
என்னங்க பண்றது...
------- இருந்தாதான ------ வரும்!!
/அது சரி எந்தப் படம் பார்த்து தம்பி அழுதீங்க. /
ஒண்ணா...ரெண்டா சொல்ல.. 'டாப் 10' மாதிரி நமக்கும் ஒரு பட்டியல் தேறும்னு நினைக்கிறேன்... க்கா!
//சிறிது யோசனைக்குபிறகு, 'சரி... நான் bank counterல கட்டிக்கிறேன்' சொல்லிட்டு அப்புறம் "receipt" வாங்கிட்டுதான் வந்தேன்... அந்த அதிகாரி பார்த்த பார்வை, பேசிய விதம்.... ம்ம்.. அனுபவித்தவர்களுக்குதான் தெரியும்..
ஆனால்... அன்று என்னிடம் எனக்கு பிடித்தது... ..அந்த "கொஞ்ச" நேர்மை!
//
நல்ல விஷயம் செஞ்சிருக்கிங்க தென்றல். இதுமாதிரி எல்லாரும் செய்யலைன்னாலும் ஒரு 75% பேர் பண்ணாலே நிலைமை மாற ஆரம்பிச்சிடும்.
//யாரிடமும் தேவையில்லாமல் பேசுவதும் இல்லை.... //
அப்போ தேவையிருந்தா பேசுவீங்களா? ;-)
//நம்மால் யாருக்கும் தொந்தரவு வரக்கூடாது என்று எண்ணம். அதன் விளைவு யாரிடமும் உதவி கேக்க தயங்குவது...
//
அப்படியா?
//புன்னகை//
என்னங்க தென்றல் ஒத்த வார்த்தைல சொல்லீட்டீங்க. விரிவா சொல்லியிருக்கலாமில்ல.
//தென்றல் said...
ஒண்ணா...ரெண்டா சொல்ல.. 'டாப் 10' மாதிரி நமக்கும் ஒரு பட்டியல் தேறும்னு நினைக்கிறேன்... க்கா!
//
நாங்க காத்திருக்கோம் பட்டியல் போடுங்க. விக்ரமன் படமும் உண்டுன்னு தெரியும்.
வாங்க மணிகண்டன்!
'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா.....' அப்படினு பன்ஞ் டயலாக்லாம் சொல்லமாட்டீங்களா, மணிகண்டன்.... பரவாயில்லை நானே சொல்லிகிறேன்.... ;(
/காட்டாறு said...
அப்படியா?
//புன்னகை//
என்னங்க தென்றல் ஒத்த வார்த்தைல சொல்லீட்டீங்க. விரிவா சொல்லியிருக்கலாமில்ல. /
/..... பட்டியல் போடுங்க. விக்ரமன் படமும் உண்டுன்னு தெரியும். /
உள்குத்து, வெளிகுத்து... எந்த குத்தா இருந்தாலும் சொல்லிட்டு செய்யுங்க...
எதுனாலும் பேசி தீத்துக்கலாம்...
//அன்று என்னிடம் எனக்கு பிடித்தது... ..அந்த "கொஞ்ச" நேர்மை!//
//யாரிடமும் தேவையில்லாமல் பேசுவதும் இல்லை.... எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரிவதும் இல்லை... ஒருவிதம் கூச்சம்னு சொல்லலாம..?! சில நேரங்களில் 'தமாசாக' பேச போக அது அதே அலைவரிசையில் மற்றவர்கள் புரிந்துகொள்ளாமல்..... மீண்டும் என்னுடைய 'அமைதி'க்கே திரும்பி விடுவது.
//
அட! நம்ம அலைவரிசை!!;-)
Post a Comment