Pages

புது வசந்தம்

இந்தப் படம் வந்தப்ப, கல்லூரியில் அடியெடுத்து வைத்த நேரம். விக்கிரமனின் முதல் படம்கூட. படம் பார்த்துவிட்டு வந்து விக்கிரமனின் இரசிகன் ஆயிட்டதாகூட சொல்லலாம். அந்தப் படத்தின் சுவரொட்டிகளில் இருக்கும் வசனங்களையெல்லாம் டைரியில் எழுதி வைத்திருந்த காலம்...

அப்படி அந்த படத்தில் எனக்கு என்ன பிடிச்சது.... புது இயக்குநர் என்பதலாயா, படம் எடுத்த விதமா, கதையா, நட்பா - காதலானு கதாநாயாகி பேசும் இறுதிகாட்சியின் வசனங்களா.... தெரியலை.. இப்படி விக்கிரமனின் "எல்லா" படங்களையெல்லாம் பார்த்தவன்... 'பூவே உனக்காக' வரை...[அப்ப இதுக்கு முன்னாடி அவர் எடுத்த படம்லாம் நல்லாருக்குகிறியானுலாம் கேக்காதீங்க...;) ] அப்பொழுது அந்தப் படத்தை பார்த்த பொழுது எனக்கு ஏற்பட்ட சில எண்ணங்கள் நந்தாவுக்கும் ..... அதில் வந்த மறு மொழிகளையும் படித்து விட்டு கொஞ்சம் நேரம் சிரிச்சேன்கிறது உண்மைதான்.

ஒரேமாதிரியான கதை களம், 'லலலல ....லாலா...' னு வருகிற பின்னனி இசை - முக்கியமா கதாநாயாகன் பேசுறப்ப, குமுதம், ஆ.வி ல வந்த காமெடி துணுக்குகள்னு ரொம்பவே அழுத்துப் போனது. அகத்தியன், சேரன், அமீர் போன்ற இயக்குநர்களின் வரிசையில் வர வேண்டியவ்ர்... .இன்னும் அதே 'புது வசந்தம்' நிலையில் இருக்கிறாரோ என்ற எண்ணமும் உண்டு.

சில வருடங்களுக்கு முன்பு, 'விக்கிரமனின் இரசிகன் ' கதையை என் மனைவிடம் சொல்ல இன்றுவரை ஒவ்வொரு முறையும் விக்கிரமன் படம் வரும்பொழுது... என்னை செய்யும் கிண்டலில் இருந்து 'தப்பிக்க' வழி தேடி கொண்டிருக்கிறேன்.

ஆனால் ஒன்னு மட்டும் உண்மை... 'சின்னத்தம்பி' பி.வாசு, 'சிவகாசி' பேரரசு போன்ற இயக்குநர்கள் மாதிரி கலாச்சார சீரழிவு அவர் படங்களில் இல்லை. அந்த வகையில் மட்டும் இப்பொழுது எனக்கு விக்கிரமன் OK.

இப்பொழுதலாம் தொலைக்காட்சியில் விக்கிரமன் படம் வந்தாகூட பார்க்கிறதில்லை.... 'புது வசந்தம்' மட்டும் விதிவிலக்கு......

13 மறுமொழிகள்:

  1. said...

    தென்றல் எனக்கும் அவரோட படம் பிடிக்கும். முக்கியமா, புது வசந்தம் ரொம்ப பிடிக்கும். உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் வரைக்கும் நானும் வெறியா பார்த்தவன்தாங்க.

    இதெல்லாம் சும்மா உல்லல்ல்லாகாட்டி.

    என்ன இப்போதான் அவரோட டெம்ப்ளேட் டைப் பிடிக்கலை. ஆனா பேரரசுக்கு 1000 1000 டைம்ஸ் பெட்டர்.

  2. said...

    தென்றல்,

    எனக்கும் புதுவசந்தம் படம் பிடிக்கும். உங்க ரசனையில் குற்றமில்லை. அது நல்ல படம்தான். நீங்க சொல்லுரது போல பக்க மசாலா படத்துக்கு விக்கிரமன் படம் எவ்வளவோ தெவல!!

  3. said...

    /என்ன இப்போதான் அவரோட டெம்ப்ளேட் டைப் பிடிக்கலை/

    உண்மைதான், நந்தா!

  4. said...

    வாங்க, அருண்சிவா!

    "குட்டிபிசாசு"கிற பெயருக்கு 'திகிலா'ன ஏதும் காரணம் உண்டா?

  5. said...

    //அந்தப் படத்தின் சுவரொட்டிகளில் இருக்கும் வசனங்களையெல்லாம் டைரியில் எழுதி வைத்திருந்த காலம்...
    //

    இப்படியுமா?????

  6. said...

    குட்டிபிசாசுக்கு திகில் காரணம் ஒன்னுமில்லை. அம்மா சின்னவயசில் அப்படித்தான் கூப்பிடுவாங்க!!

  7. said...

    /இப்படியுமா????? /

    காட்டாறு, இதுக்கேவா???!

  8. said...

    /அம்மா சின்னவயசில் அப்படித்தான் கூப்பிடுவாங்க!!
    /

    வீட்டில ரொம்ப "செல்லப்பிள்ளை"யா, நீங்க?!

  9. said...

    same blood :) இப்ப அதே படங்கள் பார்த்தால் அதிகம் blood தான் வருது ;)

  10. said...

    கத்தி மேல நடக்கிற மாதிரி.. கொஞ்சம் பிசகினாலும் காதல் கதையாயிடும்.. நல்லா செஞ்சிருந்தார் விக்கிரமன்.

  11. said...

    அவர் கடைசியாய் எடுத்த இரண்டு படங்கள் அய்யோ! அவர் தொலைகாட்சி பக்கம் போனால் அங்கு இப்பொது இருக்கும் வக்கிரம் குறையும். (அவர் எடுத்த தொடர் ஒளி பரப்பாகும் போதாவது)

  12. said...

    வாங்க பொன்ஸ் & சேதுக்கரசி!

    /கத்தி மேல நடக்கிற மாதிரி.. கொஞ்சம் பிசகினாலும் காதல் கதையாயிடும்../

    ஆமாங்க.. முத படம் வேற....Compromise பண்ணாம, நல்லாவே இயக்கி இருப்பாரு.

  13. said...

    வாங்க, முரளி!

    /அவர் தொலைகாட்சி பக்கம் போனால் அங்கு இப்பொது இருக்கும் வக்கிரம் குறையும்./

    நல்ல யோசனையாதான் இருக்கு!
    அவர்கிட்ட யாராவது சொன்னா தேவலை!;)