Pages

மகளிர் மட்டும்

ஒரு வழியாக, பிரதிபா பாட்டீல் அடுத்த குடியரசுத் தலைவராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளில், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு பெண்ணைத் தேர்வு செய்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று சோனியா காந்தி வர்ணித்துள்ளார். என்னமோ, 'அடுத்த குடியரசுத் தலைவர் ஒரு பெண்தான் வரவேண்டும்' என்று முதலில் இருந்து சொன்னது போலவும் 'அதற்கு பிரதிபா பாட்டீல் அவர்கள்தான் சரியான தேர்வாக இருக்கும்' என்பது போலவும் விளக்கம் அளிக்கிறார்கள்.

அர்ஜுன் சிங், சிவராஜ் பாட்டீல், சுசில் குமார் ஷிண்டே, கரண் சிங் - இப்படி பட்டியலில் கடைசியாக, 'ஏன் ஒரு பெண் வேட்பாளராக இருக்ககூடாது?' என்ற கேள்வி வந்தவுடன் இறுதியாக பிரதிபா பாட்டீல் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இப்பொழுது உள்ள நம் கலாமும், பிரதிபாவும் முதல் தேர்வு இல்லையே! 'கேலிக்கூத்தான' நிர்பந்த அரசியல்தான் காரணம்.

முதலில், பிரதிபா பாட்டீல் அவர்கள் பைரோன் சிங் ஷெகாவத்க்குதான் நன்றி சொல்லணும். தாக்குர் சமூகத்தவர் என்றதும் 'இந்திய குடியரசுத் தலைவர்' தகுதி கிடைத்து விட்டது.

குடியரசுத் தலைவராக வரவேண்டியவரின் நேர்மை, கல்வி, அனுபவம், சேவை, விருப்பு, வெறுப்பு இல்லாத போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்திருந்தால் அவருக்கும் அழகு.... அந்த பதவிக்கும் அழகு. தெரிந்தோ தெரியாமலோ அப்படிப்பட்ட ஒருவரைதான் தேர்வு செய்திருக்கிறார்கள் என்கிற செய்தி ஓர் ஆறுதல்.

இப்பொழுது புது கதையாக, ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி(!) அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அப்துல் கலாம் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இருந்தாலும், அவரை நேரில் சந்தித்து தேர்தலில் மீண்டும் போட்டியிட வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்று ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி தெரிவித்துள்ளது. விடமாட்டாங்க போல...

இதில் காமெடி என்னவென்றால், இந்த புதிய ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (8 கட்சிகள்)க்கு உள்ள மொத்த வாக்குகள் தோரயமாக 1.10 லட்சம் (தான்). தற்போதைய நிலையில் இந்த வாக்குகளைக் கொண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தி விட முடியாது. இதில் யார் காமெடியில் சிறந்தவர்கள் என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும் போல!

இதைத் தொடர்ந்து, வழக்கம்போல நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது. உண்மையிலேயே அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு ஈடுபாடு இருக்கிறது என்பது சந்தேகத்துக்குரிய கேள்வியாகவே இருக்கிறது.

கட்சிக்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் இதில் உண்மையான ஈடுபாடு இருக்கும்பட்சத்தில் தேர்தலின் போது, தகுதியும் திறமையும் உள்ள பெண் வேட்பாளர்களை நிறுத்திருக்கலாம். அல்லது அந்த கட்சியின் தேர்தல் நேரத்தில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்காக ஒதுக்கி இருக்கிறார்களாம். சும்மா இதில் எல்லா கட்சிக்கும் அக்கறை இருப்பதைப்போல, 'வழக்கம்போல' நம்மை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்.

எப்பொழுதும் அடுத்தவர்களுக்கு உபதேசம் பண்ணுவது ரொம்ப எளிதானதுதானே!

6 மறுமொழிகள்:

  1. said...

    ---கட்சிக்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் இதில் உண்மையான ஈடுபாடு இருக்கும்பட்சத்தில் ---

    இதை பிரதிபலிக்கும் விதத்தில் வெளியான சமீபத்திய தினமணி தலையங்கம்: 33% Reservation for women in Indian Parliament - Double Standards « ஊருக்கு உபதேசம்

    ---தற்போதைய நிலையில் இந்த வாக்குகளைக் கொண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தி விட முடியாது.---

    அப்படி சொல்ல முடியாது... இது தொடர்பான செய்தி: சற்றுமுன்...: பிரதிபாவுக்கு எதிராக ஷெகாவத்

    President of India (Election 2007).pdf :

    After calculating the total value of votes polled by each candidate, the Returning Officer totals up the value of all valid votes polled. The quota for declaring a candidate as elected is determined by dividing the total value of valid votes by 2 and adding one to the quotient, ignoring the remainder, if any. For example, assuming the total value of valid
    votes polled by all candidates is 1,030,970. The quota required for getting elected is: -
    (1,030,971 + 1)/2 = 515,485.5 + 1 (Ignore.50)

    Quota = 515,485+1 = 515,486.
    --------------------------------------------

    If no candidate gets the quota on the basis of first preference votes, then the
    Returning Officer proceeds further to second round of counting during which the candidate having lowest value (Probably ஷெகாவத்?) of votes of first preference is excluded and his votes are distributed among the remaining candidates according to the second preference marked on these ballot papers.

    The other continuing candidates (Probably கலாம் & பிரதிபா?) receive the votes of excluded candidate at the same value (Probably 200,000?!) at which he/she received them in the first round of counting.

    --------------------------------------------

    தெளிவாக்க சில கணக்குகள்:
    (பிரதிபா வெல்லக்கூடிய வாய்ப்பு)
    பிரதிபா: 5,70,000
    ஷெகாவத்: 3,54,689 - சிவ சேனா
    கலாம்: 1,06,281

    (1,030,971 + 1)/2 = 515,485.5 + 1
    தேவை = 515,485+1 = 515,486.
    பிரதிபா: 5,70,000
    பிரதிபா வெற்றி

    (கலாம் வெல்லக்கூடிய வாய்ப்பு)
    பிரதிபா: 5,70,000 ( - கருங்காலிகள் + பேரம் படியாதவர்கள் இன்ன பிற) ==> 515,000

    ஷெகாவத்: 1,54,689 + சிவ சேனா
    கலாம்: 3,06,281 + 55,000 (கருங்காலிகள் + பேரம் படியாதவர்கள் இன்ன பிற)

    (1,030,971 + 1)/2 = 515,485.5 + 1
    தேவை = 515,485+1 = 515,486.

    இரண்டாம் சுற்று:
    பிரதிபா: 515,000
    கலாம்: மீதம்
    கலாம் வெற்றி

  2. said...

    How cross voting can upset calculations (from Hindustan Times) - Anil Anand

    The system of preferential rounds came into play for the first time in 1969 after the standoff between Indira Gandhi and the old Congress syndicate.

    The official Congress nominee Neelam Sanjiva Reddy lost after his rival VV Giri garnered the fixed quota of votes after eliminating the remaining 13 candidates in preferential rounds. After this there has been no need to invoke the system.

    Significantly, cross voting had helped Giri secure 4,01,515 votes against Reddy’s 3,13,548. The victory target for that poll was 4,18,169 votes. Once in contention, Giri gained in the preferential counting to emerge victorious.

  3. said...

    தெளிவு படுத்தியமைக்கு நன்றி, பாலா!

  4. said...

    பாபா வின் விளக்கம் அருமை... இப்ப புரியுது ஷெகாவத் ஏன் ஜகா வாங்குறார்னு....

  5. said...

    அர்ஜுன் சிங், சிவராஜ் பாட்டீல், சுசில் குமார் ஷிண்டே, கரண் சிங், அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல், ஷெகாவத் - வேட்பாளருக்கு அடிபடுற பெயர்கள் எல்லாம் அறுபது வயசை கடந்தவங்களாவே இருக்காங்களே. நரை கூடி கிழ பருவம் எய்தினாதான் இந்தியால ஜனாதிபதி ஆகமுடியுமா தென்றல்?

  6. said...

    வாங்க, சிவா & செல்வேந்திரன்!

    இதில நட்வர்சிங் பேரும் இருந்தது..... ?!

    ம்ம்.... 35 வயசுக்கு மேல உள்ள இந்திய குடிமகன் போட்டியிடலாம்... ஆனா ரொம்ப 'கேள்விலாம் கேக்ககூடாது' கிறதால இப்படி தேர்தெடுக்கிறாங்களோ என்னவோ?

    முதல் குடியரசு தலைவரைத் தவிர இதுவரை வேறு யாரும் 5 வருடத்திற்கு மேல இந்த பதிவியில் இருந்ததில்லை.
    ம்ம்ம்.. பார்க்கலாம்... யாரு 12 வது குடியரசு தலைவராக வராங்கனு..?!