Pages

முன்னாள் சிவாஜி ராவ்க்கு கோவணாண்டி சீறல் கடிதம்

போன வாரம் ஏதோ ஒரு சந்தர்பத்தில் தோழியுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, 'தலைவரை' பற்றி பேச்சு வந்தது.

'மக்களை...குறிப்பா அவர் இரசிகர்களின் அறியாமையை நன்றாக பயன்படுத்தி ... அவர் காசு சம்பாதிச்சிகிட்டு இருக்காரு. எப்பதான் நாம ஏமாந்துகிட்டு இருக்கோம்னு புரிய போகுதோனு தெரியலை'னு சொல்ல.......

அதுக்கு அவர், 'அப்படிலாம்... யாரும் யாரையும் ஏமாத்த முடியாதுப்பா! சினிமாவை பொழுதுபோக்கா பாருங்க! பிடிக்கலான அவருடைய படத்தை புறக்கணீங்க!' னு சொல்ல .............. (வெட்டி) வாக்குவாதம் நீண்டது.

ஆனா, இந்த வார பசுமை விகடன்ல, நதி நீர் இணைப்பும்.... ஒரு கோடி ரூபாயும் மறந்து போகுமா? கவர் ஸ்டோரி வந்திருக்கு.

'ஜீரோ பட்ஜெட்'னு இன்னொரு சிறப்பு கட்டுரையும் வந்திருக்கு. அருமையான கட்டுரை! கண்டிப்பா படிச்சி பாருங்க!!

நன்றி: பசுமை விகடன்!

இப்ப இந்தக் கட்டுரையை பார்க்காதவர்களுக்காக .........
[இது ஏன் பசுமை விகடன்ல வந்ததுனுலாம் கேக்க கூடாது?]


******

நதி நீர் இணைப்பும்.... ஒரு கோடி ரூபாயும் மறந்து போகுமா?

சிவாஜிக்கு கோவணாண்டி சீறல் கடிதம்

சிவாஜியாக அவதாரமெடுத்திருக்கும் முன்னாள் சிவாஜி ராவ்... இந்நாள் 'ரஜினி அங்கிள்' அவர்களுக்கு கோவணாண்டியின் கோடானுகோடி வணக்கமுங்க.

ஒவ்வொரு படத்துலயும் ஒலிக்கற உங்க கொள்கைப் பாட்டுக்கு முன்னால எவனும் நிக்கமுடியாது. அதுலயும் இந்த 'சிவாஜி' படத்துல ‘காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா?'னு சும்மா பின்னி பெடலெடுத்திருக்கீங்க. ‘அதுக்கே டிக்கெட் காசு 50 ரூபாயும் சரியாப்போச்சுடா'னு நிச்சயமா தமிழ்நாடே பேசும்!

அப்புறம், ‘காவிரி ஆறு'னு நீங்க சொன்னதுமே... அந்த 'ஒரு கோடி ரூபாய்' வாக்குறுதி என்னோட நினைப்புக்கு வந்து தேவையில்லாம இம்சை பண்ணுதுங்க. என்னதான் யோசிச்சாலும் அதுமட்டும் மறந்து போகமாட்டேங் குதுங்க. ஆனா, உங்களுக்கு மறந்துபோயிருக்கும்... கொஞ்ச காலத்துக்கு முன்ன 'கங்கையையும் காவிரியையும் இணைக்க முதல் கல்லை நான் தூக்க தயார்'னு சொன்னீங்களே ரஜினி, அதைச் சொல்றேன்.

உங்களை ஒதுக்கின 'உங்க' கூட்டம், 'காவிரியை மீட்காம ஓயமாட்டோம்'னு நெய்வேலியில பக்காவா 'படம்' காட்டினாங்க. பொங்கி எழுந்த நீங்களோ, 'நதிகளை இணைக்காமல் ஓயமாட்டேன்' என்று பதிலுக்கு சென்னையில 'பலம்' காட்டினீங்க. 'நதிகளை இணைக்க என்னுடைய பங்காக ஒரு கோடி ரூபாயை தருகிறேன்'னு உலகப் பார்வையையெல்லாம் உங்க மேல விழும்படி பரபரப்புக் கிளப்பினீங்க. அதுக்குப் பிறகு, அந்த விஷயத்தை நட்டாத்துல விட்டுட்டு... 'காவிரி மறந்து போகுமா... கருவாடு பறந்து போகுமா'னு குத்தாட்டம் போட ஆரம்பிச்சிட்டீங்க.

'என் ஒரு துளி வியர்வைக்கு... ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழ் அல்லவா..'னு ஏற்கெனவே ஒரு பாட்டைப் பாடி வெச்சிருக்கீங்க. தங்கக்காசு மட்டுமில்ல... உங்களுக்காகத் தங்கத்துல சிம்மாசனமே கொடுக்கத் 'தங்கத் தமிழன்' தயாரா இருந்த காலம் கூட உண்டுங்க.

எங்கத் தமிழ்நாட்டுச் சனங்க ரொம்ப நல்லவங்க... அப்பாவிங்க... சாதி, மத, மொழி பேதமெல்லாம் பார்க்க மாட்டாங்க... வந்தாரை வாழவைக்கும் தமிழகம்ங்கற பெருமைக்கு பங்கம் வர்றாப்பல எப்பவும் நடந்துக்க மாட்டாங்க... இல்லனா, ஆவேசப் பேச்சுக்கும், அரிதாரப் பூச்சுக்கும் நாட்டையே எழுதி கொடுக்கும் 'ராஜ தரும பரம்பரை'னு பேரு வாங்க முடியுங் களா..? யார், யாரோ வந்து ராஜ்ய பரிபாலனம்ங்கற பேருல நாட்டை கொள்ளை அடிச்சுட்டுப் போறதை வேடிக்கைப் பார்க்க முடியுங்களா..?

இப்பக் கூடப்பாருங்க... 'தெலுங்குத் தமிழன்', 'பச்சைத் தமிழன்'னு சொல்லிக்கிட்டு திரும்பவும் திரையில இருந்து தெறிச்சி விழுந்து தமிழ்நாட்டைக் குத்தகைக்கு எடுத்துக்கிட்டு, கொழிக்கத் துடிக்கறவங்களுக்கு கொடி பிடிச்சிக்கிட்டுதானே நிக்கறான் அப்பாவித் தமிழன்.

சினிமா ஒரேயடியா கை கழுவிப் போற மாதிரியிருந்தா... முழுசா தேச சேவைக்கு வர்றவங்க தான் கூடுதலாயிட்டாங்க. இந்த வேஷக்காரங்களுக்கு மத்தியில உங்களப் பாத்தா மட்டும் கொஞ்சம் பாசக்காரரா தெரியுறீங்க. அதுக்குக் காரணமும் இருக்குங்க. தமிழ்நாடே உங்கமேல பைத்தியமா கிடக்குறதை விட வேற ஒரு காரணம் தேவையே இல்லை. இருந்தாலும் பழைய விஷயமொண்ணையும் எடுத்துவிடறேன்.

'கர்நாடக விவசாயிகளின் மனம் கவர்ந்த தலைவர் பேராசிரியர் நஞ்சுண்டசாமி, உடல்நிலை சரி இல்லாமல் பெங்களூரு கித்வாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டி ருந்தார். அப்போது, ஒரு அந்திப் பொழுதில் தன்னுடைய கர்நாடக சினிமா நண்பர் அசோக்கை அழைத்துக்கொண்டு நஞ்சுண்ட சாமியைப் பார்க்க வந்தார் ரஜினி. ஒரு பழைய ஜீன்ஸ் பேன்ட், ரப்பர் செருப்போடு ரஜினி வந்து, போன காட்சியைப் பார்த்து, 'அடடா.. ரஜினி எவ்வளவு எளிமையா இருக்காரு. உடம்பு நல்லானதும்.. நதி நீர் இணைப்பு விஷயத்துல ரஜினியையும் இணைச்சுக்கணும்'னு வாய் நிறைய அப்ப சொன்னார் நஞ்சுண்டசாமி.

மேற்கண்ட விஷயத்தை என்கிட்ட சொன்னது... கர்நாடக மாநில தோழர் ஒருத்தர்தான். உங்களோட காவிரி உண்ணாவிரதம்... 'ஒரு கோடி ரூபாய்' வாக்குறுதி இதையெல்லாம் கேள்விப்பட்டு ரொம்பவே நம்பிக்கையோடதான் அப்ப பேசியிருக்கார் நஞ்சுண்டசாமி. அதுக்குப் பிறகு உடல் நிலை சரியில்லாம அவர் இறந்து போயிட்டார். இடையில பல காரணங்களால நீங்களும் அதை மறந்துபோயிட்டீங்க... நம்ம ஊரும் கூட மறந்து போச்சி!
இப்ப, நகரத்துல மட்டுமில்ல... கிராமத்து மூலை முடுக்கு குட்டிச் சுவர் எல்லாத்தையும் குளிப்பாட்டி, போஸ்டர் புத்தாடை அணிவிச்சி, பொங்கி வரும் பூரிப்போட, புதுப்பொலிவோட கண்ணைச் சிமிட்டிச் சிமிட்டி... 'சிவாஜி'யை வரவேற்கத் தயாராகிட்டாங்க. தூக்கத்தையும், துக்கத்தையும் ஒரு சேர தூக்கி எறிஞ்சிட்டு, ஒரு மாச காலமா வன்னி மரம் பிளந்து... வாசல்கால் பந்தலிட்டு, தென்னை மரம் பிளந்து... தெருவெல்லாம் பந்தலிட்டு, குலைவாழை கொணர்ந்து... உங்க கட்&அவுட்டுக்கு கும்பமேளா நடத்திகிட்டு இருக்காங்க..

பெத்த ஜீவன்களை வீட்டுக்குள்ளப் பூட்டி பட்டினி போட்டுட்டு... ரோட்டுல, 'புதுஅண்ணி ஸ்ரேயா’வுக்கு மன்றம் அமைச்சி, அறுசுவை விருந்து படைக்கறாங்க. நீங்க கழுதையோடு ஆடினாலும், குதிரையோடு ஆடினாலும் எங்க இளசுங்க ‘அதை’ கடவுளாக்காம விட மாட்டாங்க. உங்க மேல அப்படி ஒரு மோகமுங்க.

ஏற்கெனவே, 'சிதம்பர பொருளாதாரம்', எங்க கிராமத்து இளசுகளோட ஒட்டுக்கோவணத் தையும் விட்டு வைக்காம உருவிக்கிட்டு போயிகிட்டிருக்கு. அப்பவும் கூட கலங்காம, அண்ணி ‘ஸ்ரேயா’வுக்கு பட்டுபுடவைக் கட்டி அழகு பார்க்கறாங்க!

பிரதமர் மன்மோகன் சிங், வர்த்தக மந்திரி கமல்நாத் ரெண்டுபேரும் வயல்ல போட்டுப் புதைச்சிட்ட விவசாயிகளோட வாழ்க்கையை, வெண்திரை மூலமா 'சிவாஜி'யில தேடிப் புடிச்சிடலாம்னு துடிக்கிறாங்க எங்க விவசாய இளசுங்க. ஆனா நீங்களோ... படம் ரிலீஸ் ஆனதும், ‘ராமன் மாண்டாலும் ராவணன் மாண்டாலும்’ எனக்கொரு கவலை இல்லேனு இமயமலைக்கோ... ஆல்ப்ஸ் மலைக்கோ ஓடிப் போயிடுவீங்க. திரையில நீங்க பாடுறதைப் பார்த்துக்கிட்டு, தானே பாடுறதா கனவுல மிதக்கற எங்க இளசுங்க, கையில காலணாவும் மிஞ்சாமா தூக்கி வீசிட்டு, 'நல்ல வாழ்க்கையைக் காட்டப் போறார் தலைவர்'னு காத்துக்கிட்டே நிக்கப்போறாங்க. இந்த முறையாவது பண்டார வேஷம் கட்டிக்கிட்டு... இமயமலைக்கு ஓடுறதை நிறுத்தப்பாருங்க.

கோடிகோடியா உங்களுக்குக் கொட்டிக் கொடுத்த தமிழகத்துக்கு நன்றிக் கடன் செய்றதுக்கு ஒரு வழியைப் பார்க்கப் போறீங்களா... பொதுமக்கள் வசதிக்காக ஒரு கல்யாண மண்டபம் இடிபடறதையே கலர் கலரா பல கோணங்களில் படம் பிடிச்சு வெச்சுக்கிட்டு ‘தியாக பில்டப்’ பண்ணி தமிழகத்தையே குத்தகைக்கு கேட்கிறவங்க பட்டியல்ல சேரப்போறீங்களா?
ஆந்திரத்து சாமியார், சாய் பாபாவோட பக்தருங்க கொஞ்ச பேரு சென்னையில இருக்காங்க. அதுக்காகவே 200 கோடி செலவு செய்து கிருஷ்ணா நதிநீர் கால்வாயை சீரமைச்சி குடிநீர் கொடுக்கற வேலையில இறங்கியிருக்கார் சாய்பாபா.

ஆனா, தமிழகமே எதிர்பார்க்கற இந்த 'சூப்பர் ஸ்டார் பாபா' தண்ணீருக்காக ஏதாவது செய்யறதுதானே நியாயம்.

'அரசியல்வாதிங்க யாரும் முன் வரல... நான் என்ன பண்றது?'னு ஈஸியா கேட்டுத் தப்பிச்சிடலாம்னு நினைக்காதீங்க. இப்பக் கூட தமிழக முதல்வர் கருணாநிதி, நதி நீர் இணைப்பு விஷயத்தை கையில எடுத்திருக்கார்... அவரோட கைகோத்தாவது... காரியத்தை முடிக்கப் பாருங்க. 'அதெல்லாம் முடியவே முடியாத காரியம்'னு சொல்ல நினைச்சா... இனி, 'காவிரி... கருவாடு'னு உசுப்பேத்தறதையாவது நிறுத்திக்கங்க!

இப்படிக்கு
கோவணாண்டி

@

42 மறுமொழிகள்:

 1. said...

  இது கோவணாண்டி மட்டுமல்ல எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்வி.
  செய்ய முடியலைன்னா சொல்லக்கூடாது.
  சொல்லிட்டா வார்த்தையக் காப்பாத்தனும்.புரிஞ்சா சரி.
  பை த பை தென்றல் உங்களுக்கு நிறைய [-] குத்து விழும் பாருங்க.தலைவர சொன்னா மக்களுக்கு கோபம் 'காவிரி' மாதிரி பொங்கும்.

 2. said...

  //இனி, 'காவிரி... கருவாடு'னு உசுப்பேத்தறதையாவது நிறுத்திக்கங்க!//

  முடியாதே! "அது" இல்லைன்னா கை காலெல்லாம் உதறலெடுத்துக்கும் :-)

  நான் சொன்னது காவிரியை...

 3. said...

  வாங்க கண்மணி!

  /பை த பை தென்றல் உங்களுக்கு நிறைய [-] குத்து விழும் பாருங்க.தலைவர சொன்னா மக்களுக்கு கோபம் 'காவிரி' மாதிரி பொங்கும்./

  எனக்கா... கோவணாண்டி க்காங்க?

  தலைவர் படத்துக்கு நம்மதான் ஏற்கனவே டிக்கெட் புக் பண்ணியாச்சேங்க!!!!

 4. said...

  /முடியாதே! "அது" இல்லைன்னா கை காலெல்லாம் உதறலெடுத்துக்கும் :-)

  நான் சொன்னது காவிரியை...
  /

  வாங்க உதயகுமார்!

  நானும் 'அதையே' தான் நினைச்சேன்ங்க...;)

 5. said...

  யார் இந்த கோவணாண்டி ? பாமரனா?

  1 கோடி என்றவுடன் எல்லோரும் ஞாபகம் வைத்துள்ளார்கள்.:)

 6. said...

  /யார் இந்த கோவணாண்டி ? பாமரனா?/

  தெரியவில்லை, தீவு!கட்டுரையின் 'நடை'யை வைத்தா சொல்கீறீர்கள்......

 7. said...

  சிவாஜி வரும் நேரம் பார்த்து, இதுன் போன்ற சலசலப்புகள் வருவது சஹஜமப்பா!

  யாருகிட்ட கொடுக்கச் சொல்றாங்க இந்த ஒரு கோடியை?

  டெல்லி போன நேரத்துல இதைப் பத்திப் பேசின கருணாநிதி, திரும்பி வந்து என்ன முயற்சிகள் எடுத்திருக்கிறார் எனக் கேட்பார்களா?

 8. said...

  சொன்ன தேதிக்கு ஒரு கோடி ரூபாயை பேங்கில் போட்ருந்தா இன்னேரம் ஒன்னரைக் கோடியாயிருக்கும்.
  ம்ம்ம்...கொடுக்குற மனசிருந்தா அன்னக்கே கொடுத்துருப்பாருல்லே.
  வெறும் வாக்குறுதிகளை நம்பியே ஆட்சியெத் தங்கத் தட்டில் வச்சுக் கொடுக்குற பாவி மக்களாச்சே.

 9. said...

  'ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி'ன்னு சொன்னா போதாது செயல்ல காட்டணும். எங்கையோ வந்தத இங்க வந்து போட்டமைக்கு நன்றி தென்றல்.

 10. said...

  இதுபோல ஆயிரம் எண்ணங்கள் கொட்டித்தீர்த்தாலும், தமிழக இளிச்சவாயர்கள் திருந்தப்போரது இல்ல!!
  சிவாஜிராவோட நிலைய தக்கவச்சிக்க, நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடிங்கிரது ஒரு ஸ்டண்ட்! ஒரு கோடி வச்சி அடையாறயும், கூவத்தையும் கூட இணைக்க முடியாது!!

 11. said...

  தென்றல், கோவணாண்டி சொன்னத எங்க கவனத்துக்கு கொண்டு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க! கோவணாண்டி பாமரர்கள் இப்பிடி செய்யிறாங்க, அப்படி சொல்லுறாங்க, இப்பிடி நெனைக்கிறாங்கன்னு சொல்லுயிருக்குறாருங்க.... படித்த மக்களுக்கு எல்லாம் புரியுதே... உங்க தோழி சொன்ன மாதிரி... படித்த, எல்லாம் புரிந்த..... எல்லாரும் சேர்ந்து தலைவர் படம் பார்க்குறத புறக்கணிச்சா....

  நாமெல்லாம் அவரு இப்பிடி செய்தாரு, அப்படி சொன்னாருன்னு சொல்லிட்டு இருக்குறதுக்கு தான் லாயக்கு....

  பி.கு:
  இப்படி சொல்லுறதால தலைவருக்கு சப்போர்ட் பண்ணுறேன்னு அர்த்தம் இல்லை

 12. said...

  வாங்க ஐயா!

  /சிவாஜி வரும் நேரம் பார்த்து, இதுன் போன்ற சலசலப்புகள் வருவது சஹஜமப்பா!/

  /யாருகிட்ட கொடுக்கச் சொல்றாங்க இந்த ஒரு கோடியை?/

  அவர் யாருகிட்ட குடுப்பேன் சொன்னாறோ... அவுங்ககிட்டதான், ஐயா!

  /டெல்லி போன நேரத்துல இதைப் பத்திப் பேசின கருணாநிதி, திரும்பி வந்து என்ன முயற்சிகள் எடுத்திருக்கிறார் எனக் கேட்பார்களா?
  /

  ஏன் ஐயா.... கேட்கக்கூட கூடாதா?

  நீங்க எந்த அர்த்ததில்ல இந்த கேள்வி கேட்கிறீங்கனு சரியா புரியலை..?!
  /

 13. said...

  வாங்க, சர்வாதிகாரி! கருத்துக்கு
  நன்றி!

  BTW, உங்க பேரை பார்த்தா கொஞ்சம் பயமாதான் இருக்கு...?! ஆனா... பேருக்கும் உங்க Profileக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கும்போலேயே...!!

 14. said...

  வாங்க, ஜெஸிலா! கருத்துக்கு நன்றி!

 15. said...

  வாங்க, குட்டிபிசாசு!!!!

  /ஒரு கோடி வச்சி அடையாறயும், கூவத்தையும் கூட இணைக்க முடியாது!! /

  அதச் சொல்லுங்க! ;(

 16. said...

  இந்த முயற்சி எப்போது ஆக்கபூர்வமாகத் தொடங்கப்பட்டாலும், தான் ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக ரஜினி சொல்லியிருக்கிறார்.

  இதுவரை அப்படிப்பட்ட ஆக்க பூர்வ நடவடிக்கை என்ன அரசு தரப்பில் எடுக்கப்பட்டிருக்கிறது...... வெறும் வாய்ச் சவடால்களைத் தவிர..... என்பதே என் கேள்வி.

  அந்த சவடால்களை முதலில் கேட்ட பின்னர், இந்த சவடாலைத் தொடலாம் என்பதே என் கருத்து.
  :))

 17. said...

  ரஜினி சம்பாதிச்சத விட
  ரஜினி ய வச்சு இந்த பத்திரிக்கைகள் சம்பாதிச்சது அதிகம்.

  ரஜினி முடிய கூட காசாக்க துடிக்கும் இந்த பத்திரிக்கைகளின் கேவலத்தன்மய என்னவென்று சொல்வது,

  பசுமை விகடன் ஆசிரியரே அடுத்த வாரம் என்ன தலைப்பு . . . . . . .?

  நச்சுன்னு நாற்று நடும் நமீதா (இது எப்படி இருக்கு)

  (எப்படிப் பட்ட போட்டோ போடனும்னு உங்களுக்கு தெரியாதா என்ன, . . .)

 18. said...

  /தென்றல், கோவணாண்டி சொன்னத எங்க கவனத்துக்கு கொண்டு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க! கோவணாண்டி பாமரர்கள் இப்பிடி செய்யிறாங்க, அப்படி சொல்லுறாங்க, இப்பிடி நெனைக்கிறாங்கன்னு சொல்லுயிருக்குறாருங்க.... படித்த மக்களுக்கு எல்லாம் புரியுதே... உங்க தோழி சொன்ன மாதிரி... படித்த, எல்லாம் புரிந்த..... எல்லாரும் சேர்ந்து தலைவர் படம் பார்க்குறத புறக்கணிச்சா.... /

  சமீபத்தில 'பாபா' படம் பார்த்தீங்களா என்ன..? ரொம்ப சூடா இருக்கீங்களே...?! வாங்க காட்டாறு!

  எனக்கு தோன்றுவது இரண்டு எண்ணங்கள்தான்ங்க!

  1. கமல் போன்ற கலைஞர்களிடம் இருந்து மக்கள், 'இவர் வந்து நமக்கு ஏதாவது நல்லது செய்சிருவாரு. இவரு காவிரிக்காக ஒரு கோடி குடுப்பாரா?' அப்படிலாம் கேள்வி கேக்கிறதில்லை......ஒரு எதிர்பார்ப்புகூட இருக்கிறதா தெரியலை... ஏன்? கமலும் ரொம்ப தெளிவா பல இடங்களில சொல்லிருக்காரு. மக்களை 'உசுப்பேத்திறதில்லை'ம் இல்லை.

  2. விவேக் மூட நம்பிக்கையபத்தி படத்தில சொல்றதனால உடனே அவரை, 'இவர்தான் நம்மளோட (அடுத்த)பெரியார்'னு நினைச்சி அவரை நம்பி 'அவர் எப்ப பொது வாழ்க்கைக்கு வருவாரு?'னு யாரும் எதிர்பார்க்கிறதுல்லை.
  மக்கள் தெளிவாதான் இருக்கிறாங்க.....

  அரசியல்வாதிகளும், நடிகர்களும் குழப்பும்வரை....

  /நாமெல்லாம் அவரு இப்பிடி செய்தாரு, அப்படி சொன்னாருன்னு சொல்லிட்டு இருக்குறதுக்கு தான் லாயக்கு..../

  ;(

 19. said...

  தலைவர் படத்த புறக்கணிக்கிறதா.. இது எல்லாம் நடக்கிற காரியமா காட்டாறு.. இன்னும் ஆவர் படம் வந்துட்டே தான் இருக்கும்..பூஜை போட்ட நாள்ல இருந்து அந்த படத்துக்கு நாமளே விளம்பரம் குடுத்து, பத்திரிக்கைகள் அதுல குளிரு காயப்போறாங்க. இருந்தாலும் இப்ப நடக்குறது எல்லாம் ரொம்ப ஓவர்.. அப்படி என்ன பெரிய சரித்திரம் ப்டைக்க போறார்னு தெரியலை...

  ராசாத்தி நீ சொன்ன மாதிரி இப்படி பேசீட்டேதான் இருப்போம்...

  ஆமா தென்றல்..என்ன 'நீங்களும்' செய்தி விமர்சனம் செய்ய ஆரம்பிச்சிடீங்களா..:-)

 20. said...

  தென்றல் அவர்களுக்கு,

  கோவணாண்டியின் கடிதத்தில் எனக்கு சில சந்தேகங்கள்:

  1. காவிரி ஆறு கைகுத்தல் அரிசி - பாடலை எழுத சொன்னவர் - ஷங்கர்
  எழுதியவர் - வைரமுத்து
  காசு கொடுத்தவர் - சரவணன்
  இசை அமைத்தவர் - ரஹ்மான்
  வாயசைக்க மட்டும் போவது ரஜினி - இந்த வரிகளுக்கு ரஜினி மட்டும்தான் பொறுப்பா?

  2. நதி நீர் இணைப்பிற்கென்று முறையான அமைப்புகள் ஏதேனும் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா? அல்லது ஏதேனும் நிதிகள் திரட்டுப்பட்டு வருகின்றதா? அந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை தென்றலாகிய உங்களிடம் கொடுக்க வேண்டுமா அல்லது கோவணாண்டியிடம் கொடுத்து ரசீது பெற்றுக்கொள்ளவேண்டுமா?

  3. பெற்ற தாயை வீட்டுக்குள்ள பூட்டி பட்டினி போட்டுட்டு புது அண்ணி ஸ்ரேயாவுக்கு மன்றம்னு எழுதியிருக்கே அது எங்கன்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க..

  4. இமய மலைக்கோ, ஆல்ப்ஸ் மலைக்கோ ரஜினி ஓடிப்போனால் உங்களுக்கென்ன? தமிழ்நாட்டில் நடந்துவரும் அரசியல் கூத்துக்கள், குடும்ப சண்டைகளை விட இவரது இமயமலைப் பயணத்தால் தமிழனுக்கு ஆபத்து வந்து சேர்ந்துவிடுமா?

  5. "பண்டாரம் வேஷம் கட்டிகிட்டு இமயமலைக்கு ஒடுறத..." ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைவனாக தன்னைக் காட்டிக்கொண்டு தமிழகத்தை குடும்பசொத்தாக்குவதை விட இது மேலானதா? கீழானதா?

  6. மத்தியில் 13 மந்திரிகள், 40 எம்.பிக்கள வச்சுருந்தாலும், சுத்தி இருக்கிற கேரள, கர்நாடக, ஆந்திர மாநிலங்கள்கிட்ட பப்பு வேக மாட்டேங்குதே அதுக்கு ரஜினிதான் காரணமா?

  7. ரஜினி நாளைக்கு காலைல ஒரு கோடி ரூபாய் செக் கொடுத்தா... இணைப்பு வேலையை என்னைக்கு ஆரம்பிப்பிங்க?

  8. தொடரட்டும் இந்த பொற்காலம்னு கழுத்துல போர்டு மாட்டிகிட்டு திரிஞ்ச ஐந்து வருஷமும், இப்ப ஆட்சிக்கு வந்த பின்னாடியும் தமிழ்நாட்டில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது, எத்தனை குளங்கள் தூர்வாறப்பட்டுள்ளது. காவிரியை மட்டும் நம்பியுள்ள பகுதிகளில் அதற்கு மாற்று விவசாய வழிமுறைகள் ஏதேனும் புகுத்தப்பட்டுள்ளதா?

  9. ஒரு நடிகன் வந்துதான் நதிகளை இணைத்துக் கொடுக்க வேண்டும் என்றால் இவர்கள் ஏதற்கு?

  10. ரஜினி நடிக்கிறார். அது அவரது தொழில். பணம் சம்பாதிக்கிறார். மக்கள் ரசிக்கிறார்கள். நீங்கள் அரசியல்வாதிகள். உங்களது பணி மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவது. நீங்கள் அதை எப்போது செய்யப்போகிறீர்கள்.

  செம கடுப்புடன்,
  செல்வேந்திரன்.

 21. said...

  வாங்க மங்கை! கருத்துக்கு நன்றி!

  /ஆமா தென்றல்..என்ன 'நீங்களும்' செய்தி விமர்சனம் செய்ய ஆரம்பிச்சிடீங்களா..:-)
  /
  போனவாரம் பேசிக்கிட்டு இருந்ததை... அது சம்பந்தமா பாத்தவுடன...
  'அட!'னு ஓர் ஆச்சரியம்!

 22. said...

  பார்த்துங்க தென்றல், உங்களுக்கும் முத்திரை குத்திடப் போறாங்க :)

 23. said...

  /அந்த சவடால்களை முதலில் கேட்ட பின்னர், இந்த சவடாலைத் தொடலாம் என்பதே என் கருத்து.
  /

  உங்களின் விளக்கத்திற்கும், கருத்திற்கும் நன்றி, VSK ஐயா!

 24. said...

  /நச்சுன்னு நாற்று நடும் நமீதா (இது எப்படி இருக்கு)
  /

  வாங்க, வெங்கட்ராமன்!

  நல்லாதான் இருக்கு... இதுக்கும் 'அவுங்களுக்கு' பசுமை விகடன்தான கிடைச்சதா... ம்ம்ம் !!

 25. said...

  செல்வேந்திரன்,

  உங்கள் கருத்துக்கு நன்றி!

  காட்டாறு, மங்கை குறிப்பிட்டது போல 'நாமலாம் சொல்லிட்டு இருக்குறதுக்கு தான் லாயக்கு....'னு நினைக்கிறப்ப...... நம்முடைய... என்னுடைய இயலாமையின் வெளிப்பாடா மனசில ஒரு கோபமும், வலியும்தான் வருது. எந்த ஒரு பிரச்சனையிலும் ... இங்கே நடிகர்கள், அரசியல்வாதிகள்னு கை காட்டிகிட்டு இருக்காம, என்னால் ஒரு சிறு முயற்சி செய்ய முடிந்தால் அதுவே மகிழ்ச்சிதான்!

  ["அப்ப, நீங்க உங்க பங்குக்கு ஒரு ஆயிரம் ரூபாய்தாங்க"னு கேட்டா... நீங்க சொன்னதுமாதிரி - நதி நீர் இணைப்பிற்கென்று முறையான அமைப்புகள் அமைத்து, நிதிகள் திரட்டுப்பட்டால் கண்டிப்பாக தரலாம்!]

  மற்றபடி உங்கள் மறு மொழியின் நோக்கம் (எனக்கு) புரிந்தது என்றே எண்ணுகிறேன்.

 26. said...

  தென்றல் "மறுமொழியின் நோக்கம்"னு பூடகமாக சொல்லியிருக்கீங்க... எந்த அர்த்தத்துலன்னு சத்தியமா புரியலீங்க...

 27. said...

  செல்வேந்திரன் அவர்கள் நச்சுன்னு எடுத்து வைத்த 10 பாயிண்டுகளுக்கும் பத்தாயிரம் நன்றிகள்!


  //["அப்ப, நீங்க உங்க பங்குக்கு ஒரு ஆயிரம் ரூபாய்தாங்க"னு கேட்டா... நீங்க சொன்னதுமாதிரி - நதி நீர் இணைப்பிற்கென்று முறையான அமைப்புகள் அமைத்து, நிதிகள் திரட்டுப்பட்டால் கண்டிப்பாக தரலாம்!]
  //

  முறையாக திட்டம் தொடங்கப்பட்டால் ரஜினி என்னங்க! எல்லாருமே கொடுப்பாங்க!

  கோவையில் சிறுதுளி திட்டத்திற்கு எத்தனையோ பேர் கொடுத்திருக்காங்க!

 28. said...

  //தென்றல் "மறுமொழியின் நோக்கம்"னு பூடகமாக சொல்லியிருக்கீங்க... எந்த அர்த்தத்துலன்னு சத்தியமா புரியலீங்க... //

  தலைவரை மட்டும் ஏன் தனியா வம்புக்கு இழுக்கறீங்கன்னு நீங்க கேக்குறது தெளிவா புரிஞ்சிகிட்டாங்களாம்!

  :)

 29. said...

  எதையும் நாமக்கல்லார் மாதிரி ஒரு பெரிய மனுஷன் எடுத்துச் சொன்னாதான் உள்ளர்த்தமே புரியுது. என்ன தென்றல் நான் சொல்றது கரெக்ட்தானே!

 30. said...

  வாங்க, மணிகண்டன்!

  என்னங்க... இதுதான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து சொல்றதா?!

 31. said...

  வாங்க நாமக்கல் சிபி!

  செல்வேந்திரன்,

  இங்க மறுமொழியில சொன்னது புரியலையா!? உங்களுக்கு புரியிற மாதிரி சொன்ன நாமக்கல் சிபிக்கு நன்றி!

 32. said...

  //ஆந்திரத்து சாமியார், சாய் பாபாவோட பக்தருங்க கொஞ்ச பேரு சென்னையில இருக்காங்க. அதுக்காகவே 200 கோடி செலவு செய்து கிருஷ்ணா நதிநீர் கால்வாயை சீரமைச்சி குடிநீர் கொடுக்கற வேலையில இறங்கியிருக்கார் சாய்பாபா// தார்மீகமாக இவர் கன்டிப்பாக ஏதாவது செய்து தான் ஆகவேன்டும். அவர் குடும்பத்தை மட்டும் தான் பார்க்கிறார்.தமிழர்களுக்கு என்று தான் புரியப் போகிறதோ

 33. said...

  வாங்க முரளி! கருத்துக்கு நன்றி!!

 34. said...

  Thanglishku mannikavum...
  Rajiniyidam neenga yethai yethirparkindreergal..Kathayin Nayaganaga avar seytha koothukalai kai thatti rasithuvittu avar screen ulley irunthu yenna seytharo athai veliyey vanthu seyvar yendru yethai vaithu ninaikindreergal..
  Naam Yethai thindral Pitham Theliyum yendru, nammudaya pirachanaiku nadigargalidam vazhi thedugirom. Nammudaya arasiyal vathigalidam naam yendru ippadi kelvi kekka pogindrom..Yaar ithai seyavendum...Rajini santharpavathiya, illai suyanalavathiya yenbathu tamil nattuku mukkiyamana visayam kidaiyathu....Pattai yeluthiyathu oruvar, iyakiathu oruvar..athi rajiniyin pangu 25% irunthalum...mandayai sutri thirivathu naamey...so...Vannga agura kariyatha pathi pesalam.

  Disci First : Naan Rajini padangalai parpavan. Avarai Rasipavan. Mandayiley ulla moolaya..paguthuarivuku konjam konjam payan paduthubavan.

 35. said...

  ரஜினி பரபரப்பை விரும்பும் ஒரு மெண்டல் ஏ கே ஏ நடிகன் அவனிடம் ப்ரமாதமான நடிப்பை எதிர்பார்ப்பதே தவறு...நீங்கள் வேறு எதையோ அல்லவா எதிர்பார்க்கரீர்கள்

 36. said...

  வாங்க, TBCD...:)!

  ABCD கேள்விப்பட்டு இருக்கேன்! ம்ம்ம்... TBCDயா...!!

  நீங்கள் சொன்னவைகளில் எனக்கு மாற்று கருத்தில்லை...

  /..Kathayin Nayaganaga avar seytha koothukalai kai thatti rasithuvittu avar screen ulley irunthu yenna seytharo athai veliyey vanthu seyvar yendru yethai vaithu ninaikindreergal.. /
  பாட்சாவுக்கு முன் மக்கள் அவரிடம் இருந்து நீங்கள் சொல்லும் அவருடைய 'கூத்துக்களை' அதாவது நடிப்பை மட்டும்தான் இரசித்தார்கள்..... இரசித்தோம்......இரசித்தேன்...ஆனால், மக்களின் 'pulse' தெரிந்துகொண்டு உசுப்பேத்தி ..... கைதட்டு வாங்கி, தொலைக்காட்சியில் 'என்னுடைய ஆதரவு' என்று பரபரப்பாக்கி, சோ போன்றவர்கள் இன்னும் அதை பெரிதாக ஊதி... அவருடைய 'நடிப்பாற்றலை' வெளிப்படுத்தும் பொழுது அதை நாம் நடிப்பு என்று தெரிந்து கொண்டோமா...?

  /Rajini santharpavathiya, illai suyanalavathiya yenbathu tamil nattuku mukkiyamana visayam kidaiyathu..../
  ஏங்க... நம்மளை யார் ஏமாத்துறாங்க... நம்முடைய முட்டாள்தனத்தை யார் முழுமையாக பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பது தெரிந்துகொள்வது முக்கியமில்லையா..?

  /Pattai yeluthiyathu oruvar, iyakiathu oruvar..athi rajiniyin pangu 25% irunthalum/
  இது எத்தனை பேர் புரிஞ்சி இருக்கு? அப்படி பார்த்தா... பாட்சா படத்தில வர்ற வசனத்தில பாலகுமாரன் அல்லவா 'பெரிய ஆளாகிருக்க' வேண்டும்!!

  /Vannga agura kariyatha pathi pesalam./ இத நீங்க முதலேயே சொல்லி இருக்கலாம் ..... ;( !

  கருத்துக்கு நன்றி!

 37. said...

  /*பாட்சாவுக்கு முன் மக்கள் அவரிடம் இருந்து நீங்கள் சொல்லும் அவருடைய 'கூத்துக்களை' அதாவது நடிப்பை மட்டும்தான் இரசித்தார்கள்..... இரசித்தோம்......இரசித்தேன்...ஆனால், மக்களின் 'pulse' தெரிந்துகொண்டு உசுப்பேத்தி ..... கைதட்டு வாங்கி, தொலைக்காட்சியில் 'என்னுடைய ஆதரவு' என்று பரபரப்பாக்கி, சோ போன்றவர்கள் இன்னும் அதை பெரிதாக ஊதி... அவருடைய 'நடிப்பாற்றலை' வெளிப்படுத்தும் பொழுது அதை நாம் நடிப்பு என்று தெரிந்து கொண்டோமா...?
  */
  Ammam therinthu kondu than innum sivajiku atharavu kodukindrom. indru sivaji parpavargal rajini aatchiku varuvar and parkavillai..they are going for shear entertainment value...itharku rajini mattum porupaga mudiyathu..MGR seyavillaya..ithai vida patta varthanamaga..MGR aatchiyile paalum thenum odiyatha yenna..So..dont single out individual..issue is not individual..issue is we dont expect right things from right people..

  /*ஏங்க... நம்மளை யார் ஏமாத்துறாங்க... நம்முடைய முட்டாள்தனத்தை யார் முழுமையாக பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பது தெரிந்துகொள்வது முக்கியமில்லையா..?*/
  Avasiyamma therinjukanum...atha than vaanga seyalam...inga unga thoguthiyila yenna nadakanum..yenna nadathuranga innu aaka poorvama..yeluthunga..

  /*இது எத்தனை பேர் புரிஞ்சி இருக்கு? அப்படி பார்த்தா... பாட்சா படத்தில வர்ற வசனத்தில பாலகுமாரன் அல்லவா 'பெரிய ஆளாகிருக்க' வேண்டும்!!*/

  Infact yenaku therinju batsha padathila aatchiku vara muyarchi pannura mathiri avar onnum seyyala..padam mudinju JJ vitta arkai than yellam hot aga karanam.


  /*இத நீங்க முதலேயே சொல்லி இருக்கலாம் ..... ;( !*/
  vaanga velaya pakkalam mattum sollita..yennoda confusion kurayathey...:)


  /*கருத்துக்கு நன்றி! */
  நன்றிku நன்றி

  TBCD-ithu ABCD parthu..avanga mattum confused illa naama koodathanu thonichu...athuthan..yenna sollureenga..intha confusiona athigapadutha thaney intha blog reading yellam...hahahah

 38. said...

  வாங்க, Pot"tea" kadai!

  /ரஜினி பரபரப்பை விரும்பும் ஒரு மெண்டல் ஏ கே ஏ நடிகன்.../

  Shh..hh.... கொஞ்சம் மெதுவா பேசுங்க... இதலாம் சத்தமா சொல்லக்கூடாது... ;)

 39. said...

  /itharku rajini mattum porupaga mudiyathu..MGR seyavillaya..ithai vida patta varthanamaga..MGR aatchiyile paalum thenum odiyatha yenna..So..dont single out individual../
  உண்மைதான் பாலும் தேனும் ஓடலை... ஆனா, MGR 'இப்ப வருவேன், அப்ப வருவேன்' பூச்சாண்டி காம்பிக்கலையே?

  /issue is not individual..issue is we dont expect right things from right people../
  அட... .... ஆனாபட்ட நம் நாட்டின் பிரதமர்..... டாக்டர்... அவரே 'சரியான ஆள்' கண்டுபிடிக்க முடியாம 'முழிச்சிட்டு' 'சரியான ஆள்கிட்ட' மாட்டிக்கிட்டு இருக்கிறாரு. அது அவ்வளவு எளிதானதா என்ன?

  /TBCD-ithu ABCD parthu..avanga mattum confused illa naama koodathanu thonichu...athuthan..yenna sollureenga..intha confusiona athigapadutha thaney intha blog reading yellam...hahahah /
  :) ஒரு முடிவாதான் இருக்கீங்கபோல... ;)
  ஏதாவது "ஒரு புள்ளி"யில் தெளிவான சரிதான்!

 40. said...

  /*உண்மைதான் பாலும் தேனும் ஓடலை... ஆனா, MGR 'இப்ப வருவேன், அப்ப வருவேன்' பூச்சாண்டி காம்பிக்கலையே? */
  Naan solla vanthathu..MGR aatchiku varum munney cinemavil, avar uttamar aga nadithathai....Yenn parvaiyil MGR seythathai Rajini thodargirar..MGR intention mothalil padam oda vendum, pinnar aatchiyil thodara vendum..Rajiniku (director, producer) padam oda vendum, meendum meendum padam oda vendum..Avar pannathu, our advt utthi..Vaanga moonuku polam nu sonna mathiri...Namma than yenna athu, yenna athu nu oru post pottu araichi pannurom...Makkal yendrum pagadai kaithan..athu MGR agattum, Rajini Agattum, JJ agattumm,KK agattum....Athuku avana niruthasollu nu nayagan vasanam pesakoodathu..Naama than sir niruthanum...

  samathichavanga yellam nattuku kudukanuminna, neenga naan yellam yenna kuduthirukom.....
  yemaruravanga irukira varaikum yemathuravanga irunthukittu than iruppanga..

 41. said...

  /Naan solla vanthathu..MGR aatchiku varum munney cinemavil, avar uttamar aga nadithathai....Yenn parvaiyil MGR seythathai Rajini thodargirar..MGR intention mothalil padam oda vendum, pinnar aatchiyil thodara vendum..Rajiniku (director, producer) padam oda vendum, meendum meendum padam oda vendum.........
  ... JJ agattumm,KK agattum....Athuku avana niruthasollu nu nayagan vasanam pesakoodathu..Naama than sir niruthanum.../

  சரியாதான் சொல்லி இருக்கீங்க! ஒரு சின்ன திருத்தம்...

  எம்.ஜி.ஆர் சினிமாவில உத்தமனா நடிச்சாரு. எப்படி.... புகை பிடிக்க மாட்டாரு, அம்மாவை எப்பவுமே தெய்வமா மதிப்பாரு, உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் விதங்களில் சில காட்சி அமைப்புகள், நல்ல பாடல்கள் (பாடல் ஆசிரியர்களிடம் அதை வலியுறுத்தவும் செஞ்சாரு... அதற்கு வேறு 'அரசியல்' காரணங்களும் இருக்கலாம் !)..... ஆனா.. அதைப் பார்த்து 'திருந்தி'னவர்களும், அதை கடைபிடித்தவர்களும் எனக்கு தெரியும்....

  /samathichavanga yellam nattuku kudukanuminna, neenga naan yellam yenna kuduthirukom...../

  நியாயமான கேள்வி! என்ன மாதிரி, எப்படி குடுக்கலாம்/பண்ணலாம்னு சொல்லிருந்திங்கனா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்.

  கருத்துக்கு (மீண்டும்) நன்றி!

 42. said...

  /*நியாயமான கேள்வி! என்ன மாதிரி, எப்படி குடுக்கலாம்/பண்ணலாம்னு சொல்லிருந்திங்கனா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்.*/

  Naan solli neenga therinjikira nilamayila neenga illanu naan ninaikiren...irunthalum, samuthayam munneruvathrku ungalal ana siru siru uthaviyum seyalam...
  Yevvalavu nalaiku than kurai solli kondey iruppathu...Therthalil kuthikalam..(auto varum..!!)
  Mothalla govt tax olunga kattalam..
  pesama...ippadi oru kelviya pottu oru post podalam...hahahaha


  /*கருத்துக்கு (மீண்டும்) நன்றி! */
  ithil ull kuthu yethuvum illayey..