Pages

தில்லு முல்லு

நேற்று வரை தி.மு.கவிற்காக சன் தொலைகாட்சி இருந்தது.
இன்றுமுதல் 'அந்த கடமை'யை ராஜ் தொலைகாட்சி ஏற்றுக் கொண்டது.

என்றும் ஜெயலலிதாவிற்கென்று ஜெயா தொலைகாட்சி.

பா.ம.க. க்கு மக்கள் தொலைகாட்சி. மற்ற சேனல்களைவிட பரவாயில்லை என்று கேள்விப்பட்டதுண்டு.

விஜய் தொலைகாட்சியில் சில நல்ல நிகழ்ச்சிகள் இருந்தாலும், செய்திகள் இல்லை.

ஆகஸ்ட் 15ம் தேதியிலிருந்து 'கலைஞர்' (களு)க்கென்று கலைஞர் தொலைகாட்சி.
ஆகஸ்ட் 17ம் தேதியிலிருந்து காங்கிரஸ்காக 'ஜெய்கிந்த்' தொலைகாட்சியாம்.

நடுநிலையான...... அழுகாச்சி இல்லாம...... மக்களுக்கென்று ஒரு தொலைகாட்சி இருக்கானு தெரியல.

******

NBA இறுதிப்போட்டி San Antonio Spurs Vs Cleveland Cavaliers அணிகளுக்கிடையே இன்னும் இரண்டு நாட்களில் (ஜீன் 7, 2007) ஆரம்பமாக உள்ளது.

அதாவது "கூடைப்பந்து உலகக் கோப்பை - இறுதி ஆட்டங்கள்".
இதில வெற்றி பெற்ற அணி 'World Champion'. திறமையான அணிகள், வீரர்கள்தான் சந்தேகம் இல்லை.

ஆனால், இது அமெரிக்காவிலுள்ள இரண்டு மாநிலங்களுக்குகிடையில் நடக்கும் போட்டி. 'உப்புக்கு சப்பாணியாக' கனடாவில் இருந்து ஒரு அணி. இந்த போட்டியை பல நாட்டு விளையாட்டு இரசிகர்களும் ஆவலோடு பார்க்கிறார்கள். இதில் புரளும் பணங்கள் ஏராளம். ம்ம்ம்.....

தமிழ் நாடும் மேற்கு வங்காளமும் விளையாடும் கால்பந்து அல்லது ஹாக்கி போட்டிகளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தால்..... நினைத்துப்பார்க்க மட்டும்தான் முடியும்.

நம் நாட்டில் ஏன் எந்தவொரு விளையாட்டையும் திறம்பட திட்டமிட்டு செயல்படுத்த முடியவில்லை? நம் அரசியலும், மக்களின் கல்வி அறிவும்தான் காரணமோ?

********

இரண்டு வாரங்களாக ஈராக்கில் காணமல் போன நான்கு அமெரிக்கா வீரகர்களை அமெரிக்கா இராணுவம் ஒரு குழு அமைத்து ஒவ்வொரு இடமாக, வீடு வீடாக தேடினார்கள். ஒரு பயனும் இல்லாத நிலையில், நேற்று Sunni insurgent குழு, 'நாங்கள்தான் கொன்றோம்' என்று இணைய தளத்தில் அறிவித்துள்ளது.

வழக்கம்போல (அமெரிக்கா) பத்திரிக்கைகள் , மீடியாவில் முக்கிய செய்தியாக இருந்தது. அதிலொன்றும் தவறில்லைதான். ஆனால், பல அப்பாவி ஈராக் மக்களை நிலையை பற்றி ஒரு சாதரண செய்தியாக சொல்கிறார்கள். இவர்கள் உயிர்ரென்றால் முதல் பக்க செய்தி... மற்றவர்களென்றால் கடைசி பக்கம்தான்.

ம்ம்ம்ம்.... உயிரின் விலைகூட பிறந்த அல்லது இருக்கிற நாட்டைப் பொறுத்து மாறுகிறதுபோல......

********

'Koffee with Anu'வில் தன் தந்தை அடிக்கடி சொல்வதாக 'டெல்லி' கணேஷ் மகள் கூறியது:


"வருவதுதான் வரும்.
வருவது........... தானே வரும். "

@

3 மறுமொழிகள்:

  1. said...

    //நம் நாட்டில் ஏன் எந்தவொரு விளையாட்டையும் திறம்பட திட்டமிட்டு செயல்படுத்த முடியவில்லை? நம் அரசியலும், மக்களின் கல்வி அறிவும்தான் காரணமோ?//

    இருக்கலாம்..

    NBA, NFL போன்ற போன்ற விளையாட்டுகM பிரபலமாக இருப்பதற்கு இங்கு இருக்கும் மார்க்கெட்டிங்கும் ஒரு காரணம்..

    இந்தியாவிலும் இதைப் போல் மார்க்கெட்டிங், ரசிகர்களை கவர்வது போல் போட்டி விதிகள் என்று செயல்படுத்தினால் வெற்றி பெற வாய்ப்பு உண்டு (நிச்சயம் என்று சொல்ல முடியாது)....

  2. said...

    சிங்கம்லே ACE !!

    /NBA, NFL போன்ற போன்ற விளையாட்டுகM பிரபலமாக இருப்பதற்கு இங்கு இருக்கும் மார்க்கெட்டிங்கும் ஒரு காரணம்../

    உண்மைதான்!

  3. said...

    ஃப்ரென்ச் ஓப்பன் பார்ப்பதில்லையா?

    கூடவே விளம்பரம் போட்டுக்கறேன் :)
    Sports « Snap Judgment