Pages

தலைமகன்



நம் ஜனாதிபதி, அவுல் பகிர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் (Dr. A.P.J. Abdul Kalam ) அவர்களின் பதவிக்காலம் ஜீன் 2007 ம் மாதம் நிறைபெறுகிறது. அடுத்து ஜனாதிபதி யார் வர வாய்ப்பு அதிகம் என்ற செய்திகளும் வர ஆரம்பித்துள்ளன. நம்ம SurveySan-னும் ஒரு சர்வே போட்டுருக்காறு.



நம் அனைவருக்கும் தெரிந்தது போல், அப்துல் கலாம் சிறந்த விஞ்ஞானி... அமைதியானவர்....நல்ல தலைவர்... ரோல் மாடல். மாணவர்களுடன் நாட்டின் வளர்ச்சியையும், நம் கடமையும் பகிர்ந்து கொள்பவர். 'கனவு காணுங்கள்' என்ற நல்விதையை விதைத்தவர். இப்படி மற்றவர்களை விட தனித்தன்மை கொண்டவர். ஆனால்....

மற்ற ஜனாதிபதி செய்வதைப் போல, பீகார் அரசை கலைப்பதற்கு நடு இரவில் இரஷ்யாவில் இருந்து அனுமதி அளித்தவர். இதனால் மறு தேர்தல் நடந்தது. இதனால் எவ்வளவு செலவானது என்பதை நம்மால் கணிக்க முடியும். இதுபோல சில நிகழ்ச்சிகளை சொல்லலாம். 'நம் நாட்டில் ஒரு ஜனாதிபதிக்கு அவ்வளவுதான் அதிகாரம். அதற்கு மேல் அவரால் என்ன செய்ய முடியும்..? ' நிற்க!

'கனவு காணுங்கள்' என்ற கருத்து மாணவர்களுக்கு மட்டும்தான..? ஏன் நம் நாட்டை நிர்வகிக்கும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு வலியுறுத்த வேண்டாமா? பதவியில் இருக்கும் ஒருவர் வலியுறுத்தி இருந்தால், நடைமுறை படுத்த தேவையான முயற்சி செய்திருந்தால் ..... குறைந்தபட்சம் ஒரு மாற்றத்திற்கான முதல் படியாக இருந்துருக்குமே... (ம்ம்ம்... 'இவங்களைலாம் மாத்த முடியாது..... எதிர்கால இந்தியாவை செதுக்க போகும் சிற்பிகளிடம் சொல்வதுதான் சிறந்தது' என்று நினைத்தாரோ எண்ணவோ ..?!)

T.N. சேஷன், தேர்தல் ஆணையாளரா இருந்தார். அவர் வரும்வரை, இந்த பதவிக்கு இவ்வளவு அதிகாரங்கள் இருக்கிறதா-னு நமக்கு... எனக்கு தெரியாது. அனைத்து கட்சிகளும், தேர்தல் ஆணையத்திடம் 'கணக்கு' காட்டினார்கள். இரவு பத்து மணிக்கு மேல் ஒலி பெருக்கியின் 'தொல்லை' இல்லை. அடையாள அட்டை....னு ஒரு பட்டியல் போடலாம். இன்றைக்கும் நடைமுறைக்குள்ளது. அதுபோல ஒருவர் ஜனாதிபதியாக வந்து என்னென்ன அதிகாரங்கள் இருக்கிறது... அல்லது அதிகாரத்தை நல்ல முறையில் நடைமுறை படுத்தும்வரை நமக்கு 'உண்மை' தெரியப்போவதில்லை....

வெளிநாடு வந்ததுக்கப்புறம் வெளியிடங்களுக்கு செல்லும்பொழுது ரோட்டில் சிறுநீர் கழிப்பதில்லை. கழிப்பிடம் பார்த்து செல்கிறோம்.
குப்பைகளை வெளியே எறிவதில்லை. குப்பைதொட்டி எங்க இருக்குனு பார்த்து அதில போடுறோம்.
நடு இரவு காரில் செல்லும் பொழுதுகூட சாலைவிதிகளை மதிக்கிறோம்.

ஏன்..? முதலில் அரசாங்க சட்டம் பின்பு தனிமனித ஒழுக்கம்.

ரோட்டில் சிறுநீர் கழித்தாலோ, குப்பைகளை வெளியே எறிந்தாலோ, சாலைவிதிகளை மதிக்கிவில்லையென்றாலோ ...... கண்டிப்பாக அபராதம் உண்டு. அது அந்நாட்டின் சட்டம். முதலில் 'சட்டம்' என்று பின்பற்ற ஆரம்பித்து அதுவே நமது பழக்கமாகிறது. அதனால்தான், காவல்துறை அதிகாரிகள் இல்லையென்றாலும், சாலைவிதிகளை மதிக்கிறோம். தேவையான இடங்களில் கழிப்பிடம், குப்பைதொட்டிகளும் இருக்கும்....சுத்தமாகவும்... என்பதும் ஒர் உண்மை.

இதேபோல், நம் ஜனாதிபதி நினைத்திருந்தால் அரசு இயந்திரங்களை மாற்றுவதற்கு ஒரு முயற்சி எடுத்திருக்கலாம். 'கனவு காணுங்கள்'னு மாணவர்களுக்கும் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு அரசு துறைக்கும் ஒரு திட்டம் கொண்டுவந்து நடைமுறை படுத்த முயன்றிருக்கலாம்.



ஒரு மாற்றத்திக்குவது T.N. சேஷன் ஜனாதிபதியாக வந்தால் இப்படி ஒரு வாய்ப்புள்ளதோ? இல்லை வேற யார்தான் இருக்கா? சட்டென்று யாரும் நினைவுக்கு வரவில்லை.......

5 மறுமொழிகள்:

  1. said...

    தென்றல்,

    நல்ல கருத்துக்கள். கலாம் ஒரு நல்ல சாதனையாளர். மற்ற ஜனாதிபதிகளை விட சாதித்தவரும் கூட.

    நீங்கள் சொல்லும் டி.என் சேஷன் வந்தால், இதுவரை யாரும் செய்யாத மாற்றங்களை கொண்டு வருவார். அவருக்கு இந்த முறை வாய்புக் கிடைக்குமா தெரியவில்லை.

    எங்கேயோ யாரோ, அமிதாப், அடுத்த ஜனாதிபதி ஆகலாம் என்று படித்தேன்.
    ஜடங்கள் திருந்தாது.

    நல்ல விவரம் அறிந்த பெரியவர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், ஜனாதிபதியை தேர்ந்தெடுத்து முன்மொழிவதும் வழிமொழிவதும், காட்டாளர்களின் கையில் அல்லவா இருக்கிறது.

  2. said...

    உங்கள் கருத்துக்கு நன்றி, badnewsindia!

    /எங்கேயோ யாரோ, அமிதாப், அடுத்த ஜனாதிபதி ஆகலாம் என்று படித்தேன்.
    ஜடங்கள் திருந்தாது.
    /
    நல்லா சொன்னிங்க! சோனியா இருக்கிறவரைக்கும் அதுவும் நடக்காது ;)

    /ஜனாதிபதியை தேர்ந்தெடுத்து முன்மொழிவதும் வழிமொழிவதும், காட்டாளர்களின் கையில் அல்லவா இருக்கிறது./
    உண்மைதாங்க!

  3. said...

    தென்றல்

    அருமையான பதிவு.....உங்கள் கருத்துக்களுக்கு நானும் ஒத்துபோகிறேன்.

    டி.என்.சேஷன் தான் சரி.

    \எங்கேயோ யாரோ, அமிதாப், அடுத்த ஜனாதிபதி ஆகலாம் என்று படித்தேன். ஜடங்கள் திருந்தாது.\\

    அய்ய்யோ....நானும் இதை கேள்விப்பட்டேன்....தலையே சுத்திரிச்சி எனக்கு ;-)))

  4. said...

    கோபிநாத்,
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

  5. said...

    சோதனை பி....;)