Pages

வேட்டையாடு விளையாடு

எனது (நான்கு வயது) மகளுடன் தியேட்டரில் 'பார்த்த' முதல் தமிழ் திரைப்படம். ;(

ஒரு சாயந்திரம் என் நண்பர் தொலைபேசியில் 'இன்று இரவு பத்து மணிக்காட்சிக்கு இரண்டு டிக்கெட் இருக்கு வர்றீங்களா?'-னு கேட்க..... ஆஹா... கமல் படம்.....அதுவும் முதல் நாள் வேற... உற்சாகத்தில் 'கண்டிப்பா வந்துடுறோம்.'-னு சொல்லிட்டேன். 'என்னங்க.... படம் எப்படிங்க? ரொம்ப voilentஆ இருந்துச்சின்னா குழந்தைய கூட்டிட்டு எப்படி போறது'-னு என் மனைவி கேட்டவுடன்தான்... 'அடடா... படம் எப்படி இருக்கும்?'-னு கேட்க மறந்துட்டோமே?-னு தோணிச்சி.

சரி.. போலாம்.. அங்க போய் பார்த்துக்கலாம்-னு போயிட்டோம். எங்களைவிட என் பொண்ணு ரொம்ப ஆர்வமாயிருந்தா. தியேட்டர் வாசலில கொஞ்சம் குழந்தைகளை பார்த்தவுடன் கொஞ்சம் நிம்மதி. படம் ஆரம்பமானது.

முதல் காட்சிலேயே வச்சாங்க ஆப்பு... இராகவன் வந்தாரு... அதுக்கப்புறம்தான் நமக்கு கதைதெரியுமே.... என் பொண்ணை பார்த்து, 'மடியில படுத்துக்க.. பயமாயிருக்கும்.. பார்க்கவேண்டாம்'-னு சொல்ல அவ எனக்கு மேல ஆர்வமா பார்க்கிறா.... ஆஹா..இது என்னட வம்பாபோச்சி நினைச்சிகிட்டு ... 'சரி... வெளியே போய் chocalate வாங்கிட்டு வரலாம்'-னு கூப்பிட்டா... 'இருக்கப்பா ... படம் முடிஞ்சதும் வாங்கித்தாங்க'-னு எனக்கு 'அறிவுரை'!! அப்புறம் எப்படியோ சமாதனம் சொல்லி தியேட்டருக்கு வெளிய வந்து அவ கேட்கிறத வாங்கி குடுத்து, நானும் அவளும் கத பேசிக்கிட்டு இருந்தோம். அவ இதுவரை பார்த்த காட்சிகள கேள்விகளால் 'வேட்டை'யாட, நான்.. நம்ம கிரிக்கெட் teamபோல அவ கேள்விக்கு 'திறமையா' பதில் சொல்லி 'விளையாடி'கிட்டு இருந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து... சரி... இப்ப என்ன காட்சி ஓடுது-னு உள்ள போனோம்.

திருநெல்வேலி ரோட்டுல.. கமலும். கமலினியும்... 'பார்த்த நாள் முதலாய்...'-னு பாடிட்டு (பைக்கில போய்கிட்டு) இருந்தாங்க.... பாட்டு முடிந்தவுடம், மறுபடியும் வெளிய வந்து எங்க கதய தொடர்ந்தோம். வழக்கமா... இரண்டு கதை சொன்னா தூங்கிருவா.. இன்னிக்கு பார்த்து அந்த அறிகுறிய காணோம். இடைவேளை விட்டு மறுபடியும் படம் ஆரம்பமானது. அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி தூங்கிட்டா.

எனக்கு சில எண்ணங்கள்... படத்துல ஏன் இவ்வளவு violence? அது சரி... தமிழ் படங்களில இதுமட்டும் விதிவிலக்கா என்ன.... இப்ப வர படங்கள எதிலதான் violence கம்மியா இருக்கு? ஹாலிவுட் படங்களிலயும் இவ்வளவு violence உண்டுதான். ஆனா, அங்க varietyஆ படங்கள் வருது. த்ரில்லர், காமெடி, குடும்பம், குழந்தைகளுக்கு-னு விதவிதமா வருது. Psyco படம்னா இவங்களைப்போல யாரும் கொடுரமா காண்பிக்க முடியாது. உதாரணத்துக்கு 'The Silence of the Lambs' .. இப்படி ஒவ்வொன்லேயும் ஒரு பெரிய பட்டியலே போடலாம். ஆனா இந்த மாதிரி படங்களை சின்ன பசங்க பார்க்க முடியாது. தியேட்டரில அதற்கு அனுமதியும் கிடையாது.

நம்ம ஊரில எப்பவும் ஒரே மாதிரியான படம்தான்.. இந்த மாதிரி படங்களலாம் நம்ம குழந்தைகள் பார்த்தாங்கனா... நமக்கு அதலாம் ஒரு பெரிய விசயமே கிடையாது. அப்படி ஒரு விழிப்புணர்வு வந்திருக்காகிறதாகிறதே தெரியல....

எல்லாமே நமக்கு take it easyதான்...
அலட்சியம்...
அக்கறைஇன்மை..
எல்லா பிரச்சனைகளியும் அரசியல்...

இல்லனா.. நொய்டாவில நடந்த பயங்கரம்லாம் நமக்கு (ம் mediaவுக்கும்) ஒரு செய்திமட்டும்தான.... எந்த பிரச்சனைக்கு எப்படி, எவ்வளவு முக்கியத்துவம் குடுக்கணும்-னு நமக்கு தெரியலையா?

விளையாட்ட விளையாட்டாவும் எடுத்துக்க மாட்டோம்.. பிரச்சனைய பிரச்சனையாவும் எடுத்துக்க மாட்டோம்... இதுதான் நம்ம பலவீனமா?

....ம்ம்ம்ம்

சரி....ன்னு தியேட்டருக்குள்ளா போனா கமல் நியூயார்க்-ல 'யாரையோ' சுடுறதுக்கு ஓடிக்கிட்டு இருந்தாரு. எப்படியோ நமக்கு இனிமேல் படம் புரியப் போறதுல்ல..னு நினைச்சிகிட்டு படம் முடியும் வரை இருந்துட்டு வீட்டுக்கு வந்தோம். 'இனிமேல் படம் எப்படி-னு தெரியாம குழந்தைய கூட்டிடு போகக்கூடாது'-னு நானும் என் மனைவியும் முடிவு பண்ணிருக்கோம்.

ஒருவாரம் கழித்து, 'பார்த்த நாள் முதலாய்...' பாடல் வீட்டுல பாடிக்கிட்டு இருக்கிறப்ப .. விளையாடிகிட்டு இருந்த பொண்ணு வேகமா வந்து, முழு பாடலையும் கேட்டுட்டு அதுக்கப்புறந்தான் விளையாட போறா.. இப்பொழுதும் தொலைகாட்சில இந்த பாடல் வந்தா முழுவதும் பார்த்துட்டு/கேட்டுட்டு தான் போறா?

இதுதான் கலிகாலமோ?

8 மறுமொழிகள்:

 1. said...

  திரையரங்கிலும் சரி, தொலைக்காட்சியிலும் சரி, குழந்தைகள் பார்க்கலாமா வேண்டாமா என்பதற்கான சான்றிதழ்கள் (PG-13 என்பது போன்ற)முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுக் கடைபிடிக்க வேண்டும். பெற்றோர்களும் குழந்தைகள் இருக்கும் நேரங்களில் "பெரியவர்களுக்கான" நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். தமிழ்ப்பாட்டுக்களில் முக்காலுக்கும் மேல் விரசம் நிரம்பி வழிவதாகவே இருக்கின்றன. மக்கள் எல்லோரும் சேர்ந்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எழுத வேண்டும்.

 2. said...

  கருத்துக்கு நன்றி, சுந்தரவடிவேல்!

  /...சான்றிதழ்கள் (PG-13 என்பது போன்ற)முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுக் கடைபிடிக்க வேண்டும்./

  இதப்பத்தி நம்மகிட்ட எந்தளவுக்கு விழிப்புணர்வு இருக்குனு தெரியல.. ;(

  /மக்கள் எல்லோரும் சேர்ந்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எழுத வேண்டும். /

  சினிமா-னா தணிக்கை குழு (censor board) க்கு எழுதலாம். அதிலேயும் அரசியல் உண்டு!
  தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எழுதுனா... எந்த அளவுக்கு அதுக்கு முக்கியம் கொடுப்பாங்கனு தெரியல..
  'மக்கள் விரும்பி பார்க்குறாங்க, நாங்க ஒளிபரப்புரோம்'-னு சொல்லுவாங்க...
  அவுங்களா பொறுப்பை உணர்ந்து நடந்துக்கணும்... இல்ல நாம அந்த நிகழ்ச்சியை அல்லது தொலைக்காட்சிய புறக்கணிக்கணும்...

  என்ன பண்றது சொல்லுங்க!

 3. said...

  //தமிழ்ப்பாட்டுக்களில் முக்காலுக்கும் மேல் விரசம் நிரம்பி வழிவதாகவே இருக்கின்றன. மக்கள் எல்லோரும் சேர்ந்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எழுத வேண்டும்.// பாட்டுல படத்துல மட்டுமா விரசம் குழந்தைகள் விரும்பி பார்க்குற விளம்பரத்திலும்தான். நாங்க வேட்டையாடு விளையாடு போய் பார்க்கும் போது என் மகள் சண்டை காட்சிகளில் ம்மா கண்ணை மூடிக்கொள் என்று என்னை சொல்லி அவளும் கண்ணை மூடிக் கொண்டாள். படம் பிடிக்கலன்னு ஒரே அழுகை. நீ பார்க்காதே தூங்கு என்று சமாதானம் செய்தேன். வன்முறை நிறைந்த காட்சிகளுக்கு கூடவே வரும் ஒலி அதிர்வுதான் பிஞ்சுகளை பயப்பட செய்கிறது. ஆனால் அவள் வன்முறை காட்சிகளை பார்த்து பயந்தது எனக்கு அதிசயமாகத்தான் இருந்தது. என் மகளுக்கும் 'பார்த்த முதல் நாளே' பாட்டு மிகவும் பிடிக்கும்.

 4. said...

  வாங்க, ஜெஸிலா!

  /பாட்டுல படத்துல மட்டுமா விரசம் குழந்தைகள் விரும்பி பார்க்குற விளம்பரத்திலும்தான்./

  ரொம்ப சரியா சொன்னீங்க, ஜெஸிலா!

  இப்பலாம் Animal Planet, "குழந்தைகளுக்கான கார்டூன்" சேனல்களைதான் பார்க்க மட்டும்தான் அனுமதி!

  /என் மகளுக்கும் 'பார்த்த முதல் நாளே' பாட்டு மிகவும் பிடிக்கும்.
  /
  :)

 5. said...

  இதை படித்தவுடன் என் வீட்டில் சொல்லும் கதை நியாபகம் வருகிறது. நான் குழந்தையாக இருக்கும்போது என்னை "மூன்றாம் பிறை" படம் பார்க்க கூப்பிட்டு சென்றார்களாம். அந்த படத்தில் கதாநாயகிக்கு விபத்து நடக்கற சீன் பார்த்துட்டு நான் ஓ என்று அழ ஆரம்பித்து விட,என் அப்பா படம் முடியும்வரை என்னை வெளியே கூட்டிச்சென்று விட்டாராம்!! அந்த படத்துக்கே அப்படி!!

  "வேட்டையாடு விளையாடு" படத்தை கம்ப்யூட்டரில் பார்த்தேன். முகம் சுளித்து சுளித்து,ஒரு வாரமாக முகம் கோணலாகிப்போனது தான் மிச்சம்(எப்பவுமே கொஞ்சம் கோன்லாத்தான் இருக்கும்,ஆனா அது வேற விஷயம்! :-)) !!

 6. said...

  வாங்க, CVR!

  /நான் குழந்தையாக இருக்கும்போது என்னை "மூன்றாம் பிறை" படம் பார்க்க கூப்பிட்டு சென்றார்களாம். அந்த படத்தில் கதாநாயகிக்கு விபத்து நடக்கற சீன் பார்த்துட்டு நான் ஓ என்று அழ ஆரம்பித்து விட,என் அப்பா படம் முடியும்வரை என்னை வெளியே கூட்டிச்சென்று விட்டாராம்!! அந்த படத்துக்கே அப்படி!!
  /
  ரொம்ப இளகின மனசா உங்களுக்கு? ;)
  குழந்தைனா எத்தனை வயசு-ங்க?

 7. said...

  //குழந்தைனா எத்தனை வயசு-ங்க? //

  சினிமாவை பார்த்து பயப்படற வயசு இருக்கும்னு நெனைச்சுக்கோங்களேன்!! ;)

 8. said...

  /சினிமாவை பார்த்து பயப்படற வயசு இருக்கும்னு நெனைச்சுக்கோங்களேன்!! ;) /

  இப்பவும் உங்களுக்கு The Exorcist, Hannibal.. படங்களை (தனியா) பார்த்தா பயம்தான...CVR? ;)
  அப்ப உங்களுக்கு வயசு.... 24.