Pages

புதிய பூமி

"Global Warming " பத்தி அல்கோர் என்னதான் சொல்றாருனு தெரிஞ்சிக்க அவர் எழுதின "An Inconvenient Truth" புத்தகம் வாங்கி வைச்சிருக்கேன் (எப்ப படிப்பேன்னு எனக்கே தெரியல!). அல்கோர் எடுத்த டாகுமுண்டரி படத்தையாவது பார்க்கணும். போன வாரம் கூட 'டைம்' பத்திரிக்கைல முதல் பக்கத்துல வந்திருந்தது.

ராதாஸ்ரீராம் "Global Warm(n)ing " பத்தி ஒரு பயனுள்ள பதிவு ['டைம்' பத்திரிக்கைல படித்ததா] எழுதி இருந்தாங்க. அந்தப் பத்திரிக்கைல ஒரு interestingஆன தகவலும் பார்த்தேன்.

2004ல, UPSகிற கொரியர் சர்வீஷ் நிறுவனம் ஒரு வித்தியாசமான முயற்சி பண்ணிருக்காங்க!
UPS வேன்/டிரக் ஓட்டுநனர்கள் இடது பக்கம் போகாம, முடிந்தவரை வலது பக்கமே திரும்பியே கடிதங்கள்/பார்சல்களை டெலிவர்(deliver) பண்ணிருக்காங்க.

காரணம், இடது பக்கம் திரும்பிறப்ப சிக்னலுக்கு காத்துகிட்டு இருக்கிறதுனால வருடத்திற்கு மில்லியன் டாலர் எரிபொருள் (fuel) செலவாகுதாம். அதனால அவுங்களே ஒரு மென்பொருள் (software) எழுதி, முடிந்தவரை வலது பக்கம் திரும்பற மாதிரி வழி (route) கண்டுபிடிச்சி அதை பயன் படுத்திகிட்டு இருக்காங்க!

இதனால, நியூயார்க் நகரத்தில மட்டும் ஏறக்குறைய 1000 மெட்டிக் டன் CO2வை குறைச்சிருக்காங்க. இதுவரை, 83 சதவிதம் நடைமுறை படித்திருக்காங்களாம். இன்னும் ரெண்டு வருடத்தில அமெரிக்கா முழுவதும் நடைமுறைக்கு கொண்டுவர திட்டமாம்.

Hope they are heading to 'right' direction!

நம்ம எளிதா 'கடைபிடிக்ககூடிய' ஒரு விசயத்தில இந்த தகவலும் இருந்தது....

Check your tires!

* கார் engineயை ஒழுங்கா tune-up பண்ணாலே 4% க்கும் மேல காரின் எரிபொருளை சேமிக்கலாம்-னும்,

* Air filter சரியா காலஇடைவெளியில மாத்திருந்தா, 10% காரின் எரிபொருளை சேமிக்கலாம்-னும்,

** 20 கி.மீ குடுக்கிற காரு, 24 கி.மீ குடுக்குமாம்.


முயற்சி செய்து பார்ப்போம்!
முயற்சி திருவைனையாக்கும்!!


பி.கு: 1. விக்கிபசங்க "Global Warming - ஒரு பாமரனின் பார்வையில்" ஒரு சிறப்பான பதிவு போட்டிருக்காங்க!
2. ஏப்ரல் 22 - பூமி நாள்.

3 மறுமொழிகள்:

  1. said...

    தென்றல் என் பதிவுல விடுபட்ட செய்திய கொடுத்துருகீங்க.....ரொம்ப பயனுள்ளதும் கூட....கார் பற்றிய விஷயங்கள் மிகவும் முக்யமானது எல்லாராலும் கடைபிடிக்க கூடிய ஓன்று.

    உங்கள இத்தன நாளா பெண் பிலோகர் என்று நினைத்து இருந்தேன்!!:):)

  2. said...

    /உங்கள இத்தன நாளா பெண் பிலோகர் என்று நினைத்து இருந்தேன்!!:):) /

    என் நண்பரின் மகள் பெயர், தென்றல்.
    இப்படிலாம் கேள்விவரும் அப்ப தோணலை. ;)
    [நம்ம பதிவெல்லாம் யாரு படிக்கப் போறாங்க-னு ஒரு "நம்பிக்கை"யா கூட இருக்கலாம் ;);)]

  3. said...

    வாழ்த்துக்கள், Al Gore &
    Rajendra Pachauri, who chairs the U.N. panel
    !

    Doesn't matter if I'm not named as an individual in Nobel citation: Dr Pachauri

    Rajendra Pachauri's interview