Pages

போகிற போக்கில் - டிசம்பர் 24, 2009

கோபன்ஹாகனில்(டென்மார்க்)  193 நாடுகள் கலந்து கொண்ட தட்ப,வெப்ப மாநாடு எந்தவொரு 'பெரிய' உடன்பாடு இல்லாமல் முடிந்தது.  மாநாட்டின் ஆரம்பத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் 'லடாய்', மாநாட்டிற்கு வெளியே மக்கள் ஆர்ப்பாட்டம், காவல்துறையின் கண்ணீர் புகை உபயோகம்.... னு இருந்தாலும், இறுதியில் 'நாட்டாமையாக'  ஒபாமா வந்து சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில்  ஆகிய நாடுகளுடன் ஓர் ஒப்பந்ததில் கையெழுத்து போட்டுவிட்டு சென்றிருக்கிறார். அந்த ஒப்பந்ததின் பிரதியின் சுருக்கப்பட்ட தமிழாக்கம் இங்கே!




இங்க நம்ம ஊருல தெலுங்கானவை தொடர்ந்து. டார்ஜிலிங், பீகார், மஹாராஷ்ரானு போயி, கோவையை பிரித்து 'கொங்கு நாடு' வேணும் காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க!

தெலுங்கானானு பிரிச்சா  ஹைதராபாத் அந்தப் பக்கம் போயிரும். இப்படி ஒரு செய்தி வர ஆரம்பித்தவுடன்  ஹார்லிக்ஸைத் தயாரிக்கும் கிளாஸ்கோஸ்மித்லைன் நிறுவனம் தற்காலிகமாக தனது உற்பத்தியை நிறுத்திவிட்டது.

நமக்கு தேவை,  தீர்க்கமான முடிவெடுக்கூடிய ஒரு தலைவர். அவர் மன்மோகன் சிங் அல்ல!
@

பன்ச் டயலாக், ஹீரோயிசம், வில்லன், தாதா, கூலிப்படை, உருட்டுக்கட்டை, வீச்சருவா, மதுரை ...இப்படி எதுவும் இல்லாமல் டிவீடிவியில் பார்த்த படம், 'திருதிரு துறுதுறு'. ரொம்ப லாஜிக்க பத்தியெல்லாம் யோசிக்கமா குடும்பத்தோட இந்தப் படத்தை பார்க்கலாம்.  'அஞ்சாதே'வில் நடித்த அஜ்மலா..இது..! கலக்கல்!

முதல் படத்தையை இப்படி வித்தியாசமான கதைகளமும், காமெடியாகவும் தந்த இயக்குநர் நந்தினிக்கு வாழ்த்துக்கள்!

படம் பார்த்துவிட்டு, 'பெண் இயக்கநர்களால்தான் இப்படி ஒரு படம் எடுக்கமுடியும்' என மனைவி சபாஷ் சொல்ல...
'இல்லையே...அந்த காலத்து ஸ்ரீதரிலருந்து இப்ப இருக்கிற சிம்புதேவன் வரை 'நம்ம ஆளுங்களும்' இப்படி படம் பண்ணிருக்காங்களே....!' '

--------

இதுவரை யாரும் முயற்சிக்காத கதைக்களத்தை தேர்ந்தெடுப்பது, எஸ்.பி. ஜனநாதன் தனித்திறமை! உதாரணம்; இயற்கை, ஈ! அதை எதிர்ப்பார்ப்போடு படம் பார்த்தால், ஏமாற்றம்! சென்சார் ஒரு காரணம். பழங்குடி இனத்தைத் பற்றி படமா இல்ல, 'நாட்டுப் பற்று'ள்ள அர்ஜீன் நடிக்க வேண்டிய ஆக்சன் படமானு குழப்பம்!  'ஜெயம்'ரவிக்கு விஜயகாந்த்கிட்ட 'வசன உச்சரிப்பு'க்கு பயிற்சி எடுத்துகிலாம்.

'மெட்டி ஒலி' திரு மாதிரி. இந்தப் படத்தோட ஹீரோ ரொம்பவே நல்லவர். நமக்கு எரிச்சல்தான் வருகிறது.  பேராண்மை - ஏமாற்றம்தான்!

RV & பக்சும் டாப் டென் உலக சினிமா லிஸ்ட் குடுத்துருக்காங்க! ;
இதுல எதையும் பார்த்ததில்ல. ஒருமுறை 'ராஷோமான்' எடுத்துட்டு வந்து, பார்க்காம திருப்பி குடுத்தாச்சு!

@

ஒரு நண்பரின் வலைப்பூவில் பார்த்ததுதான்....




@

கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

@@

0 மறுமொழிகள்: