Pages

32 கேள்விகள்

நம்மையும் இந்த ஜோதியில ஐக்கியமாக அழைத்த அண்ணாத்த ஸ்ரீதர் நாராயணன் க்கு நன்றி! ;)




1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

சும்மா போகிற போக்கில நம்மலா வச்துகிட்டது. அவ்வை சண்முகியில் கமலுக்கு தோணுமே அதுமாதிரினு சொல்லலாம்.

2) கடைசியா அழுதது எப்போது?
அதலாம் வெளிய சொல்லலமா....ம்ம்ம்..இலங்கை நிகழ்வுகளிலிருந்து நேற்று பார்த்த 'பசங்க' படத்தை பார்த்துட்டு கண் கலங்கின வரை..

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
பரவாயில்லமா இருக்கும்.
அதவிட என் அப்பாவின் கையெழுத்தும், என் நண்பனின் கையெழுத்தும் ரொம்ப பிடிக்கும்.
பரிட்சைலலாம் நம்ம எழுதிற முதல் இரண்டு பக்கம்தான் படிக்கிறமாதிரி இருக்கும். நண்பனோட பேப்பரை பார்த்தா முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் ஒரே மாதிரி முத்து முத்துதா இருக்கும்.

4) பிடித்த மதிய உணவு?
வெஜிடேரியன்: இரசம் சாதம் with மாங்கா ஊறுகாய்.
நான்-வெஜிடேரியன்: ஹைதராபாத் 'தம்' பிரியாணி.

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
கண்டிப்பா..! பாக்கதான் அப்படி இருப்பான். பழகினா ரொம்ப 'நல்லவன்'..!! ;)

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
அருவியில்! இந்த முறை இந்தியா போனபோது, குற்றாலத்தில் சீசன் ஆரம்பிக்கலை. ;( இப்ப சீசன் அருமையாம் இருக்காம்!

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
புன்னகை, கண் ....

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது: முடிந்தளவு உதவி செய்வது; உதவி செய்யறோமோ இல்லையோ உபத்திரம் செய்யாம இருக்குறது...... ;)
பிடிக்காதது: (இதுக்கே தனி சுயபுரணாம் பதிவு எழுதனுமே..!!) சுருக்கமா சொல்லணும்னா.. கேள்வி எண்:28 க்கு செல்லவும்... please!

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
பிடித்தது: அசாத்திய பொறுமை, புத்தகம் வாசிப்பு; எனக்கு தெரிந்த பாதி எழுத்தாளர்கள் மனைவியின் மூலம் அறிமுகம் ஆனவர்களே!.
பிடிக்காதது: அததான் 'கண்டுபிடிக்க' முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன். (அப்பாடா.... அப்படினு பெரும்மூச்சி கேக்குதா?!)

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
அப்படி குறிப்பிட்டு சொல்லும்படியா உடனே யாரும் நினைவில் வரவில்லை.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
நீலம்.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
சுதாரகுநாதனின் 'அனல் மேலே பனித்துளி...'!! இன்னும் 'வாரணம் ஆயிரம்' த்தில இருந்து வெளிய வரலை.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
பச்சை.

14) பிடித்த மணம்?
மல்லிகை, புது நோட்புக்/புத்தகத்தின் மணம்.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
அவுங்க பதிவை படிச்சி பார்த்தா நீங்களே புரிஞ்சுக்குவீங்க. இதுமாதிரி மொக்கை பதிலுக்கும் சுவாரசியமா மாத்தும் வித்தகர்கள்....

ஜோ போன தடவை இதுமாதிரி ஒரு கேள்வி-பதில் விளையாட்டுக்கு கூப்பிடா, தல வரகாணோம். அப்படியே விட்டுறோமா என்ன.....

காட்டாறு; ரொம்ப நாளா ஆளை காணோம். இப்படியாவது வருவாங்கனு நம்பிக்கைதான்!

கோபிநாத்: பட்டாம்பூச்சி விருது பெற்ற அண்ணாத்த! நம்ம எழுதிற குப்பைகளுக்கெல்லாம் பதில் போடும் நல்ல ஜூவன்! ;)

16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
எளிமையாக எழுதும் அவருடைய அனைத்துப் பதிவுகளும்..

17) பிடித்த விளையாட்டு?
கால்பந்து.

18) கண்ணாடி அணிபவரா?
இல்லை.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
பராசக்தி யிலிருந்து பசங்க வரை அனைத்து படங்களும். (விசால், பேரரசு, வாசு..இப்பொழுது விஜய், அஜித் படங்கனா ரொம்பவே அலர்ஜி...!!)

20) கடைசியாகப் பார்த்த படம்?
நேத்துதான் 'பசங்க' பார்த்தேன்.

21) பிடித்த பருவ காலம் எது?
கோடைக்காலம்.... அதுவும், சிறிது தூரல் போட்டுவிட்டு மெதுவா எட்டிப்பார்க்கும் சூரிய வெளிச்சம்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
ரொம்ப நாளா வாசிக்கணும் நினைத்த வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
எப்பொழுதும் என்னுடைய மகள் படம்தான்.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்; , குழந்தைகளின் மழலைப்பேச்சு / சிரிப்பு.
பிடிக்காத சத்தம்: பேருந்துகளில் கைதொலைபேசிகளில் நம்ம காதுபக்கத்தில் பேசும் இரைச்சல் சத்தம்.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
வேற எங்க... 'புண்ணிய பூமி'யான அமெரிக்காதான்!!

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
இருக்கானு தேடிக்கிட்டே இருக்கேன்....

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
சொன்ன நேரத்துக்கு வராம இருக்குறது.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
முன்கோபம்..!!

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
இனிமேல்தான் கண்டுபிடிக்கணும்.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?
'முடியாது'னு சொல்றகூடிய நேரத்தில அப்படி சொல்ல கத்துக்கணும். பேசாம இருந்துட்டு அந்த வேலைய இழுத்து போட்டுகிட்டு பண்ற வேலைய விடணும்.

31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
மிஷினரிக்கு போயிடலாம்!!

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க
Life is beautiful னு சொல்ல ஆசை.....but....make it beautiful!!



பி.கு: இப்படி மொக்கையா ஒரு விளையாட்டை ஆரம்பிச்சு வைச்ச அந்த 'நல்லவரு' யாருப்பா...? அப்புறம் அதென்ன 32... !!





3 மறுமொழிகள்:

  1. said...

    8 - வது என்ன பதிலே இல்ல..எஸ்கேப்பா!! ;))

    \\புது நோட்புக்/புத்தகத்தின் மணம்.\\

    ஆகா தலைவா!!! எனக்கும் பிடித்த மணம் இது ;))

    \\கோபிநாத்: பட்டாம்பூச்சி விருது பெற்ற அண்ணாத்த! நம்ம எழுதிற குப்பைகளுக்கெல்லாம் பதில் போடும் நல்ல ஜூவன்! ;)\\

    ஏன் வந்து பின்னூட்டம் போட்டுறது ஒரு தப்பா!!...கண்டிப்பாக இந்த மாசத்தக்குள்ள போட்புடுறேன் சாமீ ;)

  2. said...

    //பிடிக்காதது: அததான் 'கண்டுபிடிக்க' முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன். (அப்பாடா.... அப்படினு பெரும்மூச்சி கேக்குதா?!)
    //
    பொழச்சிப்ப மக்கான்னு சொல்ல வைக்கும் பதில் இது.

    //10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
    அப்படி குறிப்பிட்டு சொல்லும்படியா உடனே யாரும் நினைவில் வரவில்லை.//
    ஆனா இதுல கவுந்துட்டீங்களே. மனைவி மக்களை ஊர்ல இருக்கும் போது.. இந்த பதில் இடிக்குதே. நாரதர் வேலைய ஆரம்பிச்சிர வேண்டியது தானா அப்போ. ;-)

    //நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? //
    இதுக்கு எஸ்கேப் ஆயிட்டீங்க.

    //ரொம்ப நாளா வாசிக்கணும் நினைத்த வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்//
    எத்தனை நாளா இந்த புத்தகத்தை வாசித்துக் கொண்டு இருக்குறீங்கன்னும் சொல்லிருங்க.

  3. said...

    கோபிநாத் -
    எட்டாவது கேள்விக்கும் பதில் update பண்ணியாச்சி...

    /கண்டிப்பாக இந்த மாசத்தக்குள்ள போட்புடுறேன் சாமீ ;)/
    காத்து இருக்கோம். ;)

    காட்டாறு -
    /மனைவி மக்களை ஊர்ல இருக்கும் போது.. இந்த பதில் இடிக்குதே./
    அவுங்களாம் எப்பவுமே 'என்னுள்' (இதயத்தில) இருப்பவர்கள். அதனால அவுங்களலாம் எப்பவுமே பிரியறதில்ல..
    (ஸ்..ஸ்.. கண்ண கட்டுதே...)

    உங்ககிட்ட இரண்டு கேள்விகள்:
    1) நீங்க என்ன நக்கீரன் பரம்பரையிலருந்து வந்தவங்களா?

    2) நீங்க நல்லவரா கெட்டவரா..??