Pages

ரசித்தது...

சமீபத்தில் நண்பனிடமிருந்து ஒரு மின் அஞ்சல்..

Car, Train . Lorry , Bus or Omnibus , Jeep --- இதலாம் தமிழ்ல என்ன..எப்படி சொல்றது..?

Car - மகிழுந்து
Train -- தொடருந்து
Lorry -- சரக்குந்து
Bus or Omnibus -- பேருந்து
Jeep -- வல்லுந்து

ஏன்னா.....

"Motor என்பதற்கான தமிழ்ச்சொல் - "உந்து" என்பதுதான். அதாவது உந்தித் தள்ளுவது என்று பொருள்படும்."

"I listened to music chosen Randomly in my Car audio cassette"? இதை எப்படி தமிழ்ல சொல்வனு கேள்விவேற... ம்ம்ம்

@


குளிர்சாத பெட்டியின் உள்ள வெள்ளை பலகையில், 'இந்த வாரம் என்ன வாங்க வேண்டும் ' என்று எழுதி வைப்பது என் மனைவியின் வழக்கம். அந்த பட்டியலில் என் ஐந்து வயது மகள் அவளுடைய விருப்பத்தையும் சேர்த்திருந்தாள்.

1. Cordless phone
2. Ipod Cover

3. toyrus
4. kitten
5. baby brother
6.doctor kit
7.yes india

@@


தமிழாக்கம்: "மகிழுந்து ஒலிப் பேழையில் எழுந்தமானமாக தெரிவு செய்யப்பட்ட இசையை செவிமடுத்தேன்."

(இதயும் அவனே சொல்லிட்டால ...தப்பித்தேன்;) ... ம்ம் கஷ்டம்தான்....)

3 மறுமொழிகள்:

  1. said...

    ரசித்தேன்..;))

    \\என் ஐந்து வயது மகள் அவளுடைய விருப்பத்தையும் சேர்த்திருந்தாள்.

    1. Cordless phone
    2. Ipod Cover

    3. toyrus
    4. kitten
    5. baby brother
    6.doctor kit
    7.yes india\\

    ;))) படிச்சிட்டு ஒரே சிரிப்பு தான்...கடைசியில இருக்குறது என்ன தல?

  2. said...

    நண்பன் ஒருவனிடம் மோட்டார்ன்னா உந்து அப்படின்னு சொன்னா... உந்து எந்துன்னு ஏம்பா பிரிச்சி பாக்குறன்னு நக்கலடிக்கிறான்.

    அப்போ ஊர்தின்னா என்னாங்கோ?

    எனக்கு வல்லுந்து ரொம்ப பிடிக்கும். :-)

    அனுபவக்கதை சூப்பர். பாப்பா கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்துருங்க. அப்படியே இந்தியாவுக்கு இனிஷியல் கிடையாதுன்னும் புள்ளைக்கு சொல்லிக் கொடுங்க. ;-)

  3. said...

    கோபி,
    /படிச்சிட்டு ஒரே சிரிப்பு தான்...கடைசியில இருக்குறது என்ன/

    இந்தியாவுக்கு போறதுபத்திய அவளுடைய விருப்பம்!

    காட்டாறு,
    /அப்போ ஊர்தின்னா என்னாங்கோ?/
    Bus ;)

    /எனக்கு வல்லுந்து ரொம்ப பிடிக்கும். :-) /

    அதான் வித விதமா "சரக்குந்து" படங்கள போட்டு 'மிரட்டினீங்களே'!!