Pages

போகிற போக்கில் - டிசம்பர் 24, 2009

கோபன்ஹாகனில்(டென்மார்க்)  193 நாடுகள் கலந்து கொண்ட தட்ப,வெப்ப மாநாடு எந்தவொரு 'பெரிய' உடன்பாடு இல்லாமல் முடிந்தது.  மாநாட்டின் ஆரம்பத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் 'லடாய்', மாநாட்டிற்கு வெளியே மக்கள் ஆர்ப்பாட்டம், காவல்துறையின் கண்ணீர் புகை உபயோகம்.... னு இருந்தாலும், இறுதியில் 'நாட்டாமையாக'  ஒபாமா வந்து சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில்  ஆகிய நாடுகளுடன் ஓர் ஒப்பந்ததில் கையெழுத்து போட்டுவிட்டு சென்றிருக்கிறார். அந்த ஒப்பந்ததின் பிரதியின் சுருக்கப்பட்ட தமிழாக்கம் இங்கே!

போகிற போக்கில் - டிசம்பர் 11,2009

லேட்டா வாசிச்சாலும் லேட்டஸ்டா வாசிச்ச பதிவு வாத்தியாரின் (நம்ம தருமிதான்) கடவுள் என்றொரு மாயை ! 5 பகுதி! வழக்கம்போல் அவருடைய பதிவு யோசிக்க வைச்சது.

ஆனா இந்த ஐந்து பதிவுலேயும் நடந்த கலந்துரையாடல் அருமை!  தருமி, ஜெயபாரதன், கோவி.கண்ணன், வோட்டாண்டி தெகா,கல்வெட்டு, இளவஞ்சி ... Hats off to all!

இதில நம்ம எந்த வகைனு யோசிச்சா இளவஞ்சியோடதான் கூட்டணி!  ஏன்னா நம்ம வளர்க்கப்பட்ட முறை.....அதுல இருந்து மாறுறது கஷ்டம்தான்! யாருக்கு தெரியும்...... 'மாயை'ல இருந்து வெளியவும் வரலாம்...

எல்லாம் அவன் செயல்....!!
@
சமீபத்தில் 'ஆதவன்' பார்த்துட்டு எங்கேயாவது போய் முட்டிகிணும் தோணாத குறைதான்...20 வருசத்துக்கு முன்னாடி வந்திருக்க வேண்டிய படம்!

என்ன சந்தேகம்னா....இயக்குநர் இந்த படத்தோட கதையை(!?) சூர்யாகிட்ட எப்படி சொல்லிருப்பாரு...நினைச்சி பார்த்தாலே 'காமெடி'யா இருக்கு...

'அய்யா' நயனுக்கும் 'ஆதவன்' நயனுக்கும்தான் எவ்வளவு மாற்றம்? ஆதவன்ல பார்க்கலை சகிக்கலை!


கலைஞர் பேரன்கிட்ட காசு இருக்கு...என்ன பண்றது தெரியலை..
நம்மகிட்ட நேரம் இருக்கு...எப்படி பயன்படுத்துறதுனு தெரியலை...
@

உலகில் இருவகையான மனிதர்கள்....
    முதல் வகை, தன் அனுபவங்களை, தனக்கு ஏற்பட்ட நல்லது,கெட்டதுகளை அடுத்த தலைமுறைக்கு/அடுத்தவர்க்கு சொல்லி, 'இப்படி பண்ணினா இப்படி ஏற்படலாம் பார்த்துக்க..' அப்படினு சொல்லி தருதல்.

அடுத்த வகை, 'என் அனுபவம் எனக்கு மட்டும்! நீயே பட்டு திருந்து. இதில நான் சொல்ல என்ன இருக்கு' அப்படினு வேடிக்கை பார்ப்பது...

இதலாம், 'நம்ம சொல்றதை அடுத்தவங்க கேக்குறத பொறுத்து இருக்கு....'  அப்படினு சொல்றவங்க எந்த வகை...?!
@


சமீபத்தில் படித்தது...

Life is a string of disappointments and a bag of compromises.
@@