Pages

ஜெயமோகன்

ஜெயமோகன் வளைகுடா பகுதிக்கு வருகிறார் என்ற செய்தியை மனைவிடம் சொன்னபோது 'கண்டிப்பாக சந்திக்க வேண்டும்' என்பதே பதிலாக வந்தது. ம்ம்ம்.... வேண்டாம்னு சொன்னாலும் ஒண்ணும் பிரஜோனமில்லை நினைச்சிகிட்டு தலையாட்டி வைச்சைன்.

மனைவி போய் சந்திக்கிறதுல அர்த்தம் இருக்கு. காடு, ஏழாம் உலகம், சங்கச்சித்திரங்கள், சிறுகதைகள் தொகுப்புனு அவரோட புத்தகங்களை படிச்சிருக்காங்க. நம்ம........அவரோட இணையத்தளத்த அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் மேயரதோட சரி.. இரண்டு முறை அவரோட நாவல வாசிக்க முயற்சி பண்ணினேன். முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன். இன்னும் முயற்சி பண்ணுவேன்.....;)

இதுக்கும்மேல ..பெரிய எழுத்தாளர்! நம்ம என்னத்தை அவர்கிட்ட பேசுறது....கேக்கிறதுனு  ஒரு சின்ன வெட்கம்..பயம்.

ஆகஸ்டு 30, 2009. மதியம் 3 மணிக்கு கலந்துரையாடல் மற்றும் சந்திப்பு. 2:55க்கு நானும், மனைவியும் சென்றோம். ஆனால், 2;45க்கே ஆரம்பமாயிருந்தது. கிட்டதட்ட 40 வாசகர்கள்; அதில் 5-6 பேர் பெண்கள்.

நாங்கள் போன பொழுது, 'திருவள்ளுவர் சமணராகத்தான் இருக்க முடியும்!' என்பதற்கான ஆதாரங்களை  சொல்லிக்கொண்டிருந்தார்.  அதன் தொடர்ச்சியாக சமணர் - சைவம் - வைணவம் என்று ஆன்மிகக் கடலில் மூழ்கி கொண்டிருந்தார்கள். ஓரளவுக்கு சீரியஷாக தான் இருக்கும் என்று போன எனக்கு, கண்ணை கட்டிக்கொண்டு வந்தது..! ஜெமோவும் சங்க இலக்கியங்களிலிருந்தும், திருக்குறளிலிருந்தும் சரளமாக பேசிக்கொண்டு இருக்க, வந்திருந்தவர்களும் விடவில்லை..அவருக்கு சமமாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு மலையாளம் பிடிக்கும் என்பதாலோ அவருடைய மலையாளவாடையோட தமிழ் பிடித்திருந்தது. மேடைப்பேச்சு போல் ஏற்றம் இறக்கம் இல்லாமல், அவருடைய பேச்சு ஒரே அலைவரிசைதான்!

வாசகர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் அவரிடம் தங்கு தடையின்றி, விளக்கங்கள் வந்து கொட்டுகின்றன. அதுவும் கோர்வையாக...எங்க ஆரம்பித்தாரோ அதோடு வந்து முடிச்சி போடுகிறார். ஆன்மிகம், வரலாறு, பொருளாதரம்......இப்படி நீங்கள் எதிலிருந்து கேள்விகள் கேட்டாலும்...சும்மா மேலோட்டமாக சொல்லாமல், பலவித மேற்கோள்களுடன், உதாரணங்களுடன்தான் விளக்கமளிக்கிறார்.

எந்த கேள்விகேட்டாலும் - திரைப்படத்தில் வரும் ஒரு காட்சிக்கு எப்படி பலமுறை ஒத்திகை பார்த்துவிட்டு பேசுவார்களோ அதுபோல கோர்வையாக, திட்டவட்டமாக பேசுகிறார்...இல்லை வார்த்தைகள் வந்து கொட்டுகிறது.

இந்திய, சீன, ஐரோப்பிய, அமெரிக்க வரலாறா, சமணம், வைணவம், இந்து...மத வரலாறுகளா, கலை, ஓவியம் பற்றிய கேள்விகளா, தமிழ், மலையாள சினிமாவைப்பற்றியா, பாலா, மீரா, வசந்தபாலன், லோகி....யாரைப்பற்றி கேட்டாலும்..இதை சொல்லலாமா...வேண்டாமா என்ற எந்த சிந்தனையும் இல்லாமல் பதில்கள் வந்து விழுகிறது.






இரண்டாவது சந்திப்பு கடந்த சனிக்கிழமை, செப்டம்பர் 5, 2009 ஃப்ரீமாண்ட் நகரில்! அடுத்த நாள் இந்தியா கிளம்பும் முன் ஆற்றிய சொற்பொழிவு. சுமார் 100 பேர் வந்திருந்தனர்.

அருமையான, செறிவான உரை.  அது அவருடைய இணையதளத்தில் இங்கே!
அதன் தொடர்ச்சி...

முடிந்தால் இன்னொரு முறை 'இங்கிருந்து தொடங்குவோம்…' பதிவையும் படியுங்கள்!

@

தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை

பாரதி தமிழ் சங்கம்
தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை

தமிழகத்தின் முன்ணணி எழுத்தாளரும், சிந்தனையாளரும், திரைப்பட வசனகர்த்தாவும் ஆகிய திரு.ஜெயமோகன் அவர்களை, சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் இயங்கி வரும் தமிழ் கலாச்சார அமைப்பான பாரதி தமிழ் சங்கம் வரவேற்று கவுரவிக்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜெயமோகன் அவர்களது சொற்பொழிவும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம் பெற உள்ளது. அனைவரும் வருக.
நாள்: செப்டம்பர் 5ம் தேதி, சனிக்கிழமை
இடம்: ஃப்ரீமாண்ட் நகர நூலகம்
நேரம்: மாலை 2:00 -5:00 அனுமதி: இலவசம்
நவீனத் தமிழ் இலக்கிய உலகின் முக்கிய எழுத்தாளரான ஜெயமோகன் பன்முக ஆளுமை படைத்தவர். 1990 வருடம் வெளி வந்த அவரது ரப்பர் என்ற நாவல் அவர் மீது தமிழ் இலக்கிய உலகின் முழுக் கவனத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றார். தொடர்ந்து அவரது முக்கியமான நாவலாகிய விஷ்ணு புரம் மாபெரும் வரவேற்பையும், கவனத்தையும் விமர்சனங்களையும் பெற்று தமிழின் முக்கியமான படைப்பானது. பின் தொடரும் நிழலின் குரல், காடு, கன்யாகுமரி, ஏழாவது உலகம், கொற்றவை ஆகிய பெரும் நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
ஜெயமோகன் தமிழ் திரைப்பட உலகத்திலும் முக்கியமான பங்களிப்பை ஆற்றி வருகிறார். அவரது ஏழாவது உலகம் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரபல இயக்குனர் பாலா இயக்கிய "நான் கடவுள்" திரைப்படத்தில் ஜெயமோகன் அவர்களின் கூரிய வசனங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து திரைத்துறையில் பல படங்களிலும் ஜெயமோகன் பங்களித்து வருகிறார்.
தத்துவம், வரலாறு, பயணம், நகைச்சுவை, இலக்கியம், என்று பரந்துபட்ட தலைப்புகளில் தன் சிந்தனைகளை தனது இணைய தளமான www.jeyamohan.in மூலமாக பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் பகிர்ந்து வருகிறார்.
வரும் சனிக்கிழமை, செப் 5ம் தேதி ஃப்ரீமாண்ட் நகர நூலகத்தில் திரு.ஜெயமோகன் தமிழ் இலக்கியத்திற்கும், இந்திய மரபுகளுக்கும் ஆற்றி வரும் தொண்டினைப் பாராட்டி வளைகுடாப் பகுதி தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கவுரவிக்க இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் ஜெயமோகன் அவர்களது சொற்பொழிவும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம் பெற உள்ளது. அனைவரும் வருக.
Mr.Jeyamohan is an accomplished writer of several best selling novels in Tamil. As a reputed writer, Jayamohan has enriched the modern Tamil literature through his post-modernist literature, essays, fictions, translation works, non-fictions, travelogues, dramas and philosophical works. His creative works are being made into movies, his sensational fiction Ezhavathu Ulagam was made into the Tamil movie "Naan Kadavul".
Jeyamohan has written 8 novels, several of them are considered to be the classics in Tamil literature. He has penned 8 books on non-fictions including essays ranging from ancient Tamil literature to Hindu philosophies and authored one novel in Malayalam too. His erudition in Vedhas, Upanishads and Bhagvat Geetha has resulted in several books. His acclaimed novel 'Vishnupuram' revolves around the ' spiritual quest through Indian philosophical schools and also around the great architectures of ancient India. His other great novels like Rubber, Pinthodarum Nizhalin Kural, Kaadu, Ezhavathu Ulagam created rave reviews among the Tamil readers and critics alike.
He shares his thoughts, his creative works, his travel experiences, his spiritual works etc in his web site www.Jayamohan.in , an immensely popular web site among tens of thousands of Tamil readers across the world.
He has written screen plays and dialogues for many Tamil movies - Kasthuri Maan, Naan Kadavul, Angadhi Theru being some of them.
Bharathi Tamil Sangam, a Tamil cultural organization functioning in California's SanFrancisco Bay Area is honouring the author on Saturday the Sep 5th at Fremont Library Hall, Fremont. Mr.Jeyamohan will deliver a speech and answers the questions from the audience on the various topics of his expertise including but not limited to modern and classical literarute, history, Indian philosophies, arts etc. All are welcome.
Event: Honoring Tamil writer Jeyamohan and speech by Jeyamohan
Date: Saturday the 5th Sep, 2009
Time: 2PM - 5 PM
Admission: Free
Venue: Fremont Library Hall
Stevenson Blvd and Paseo Padre intersection
Fremont, CA