Pages

ஒரு வீடு இரு வாசல்

சமீபத்தில் 'The Hindu' வில் வெளியான ஒரு கட்டுரை....

கட்டுரையின் தொடக்கத்தில்,

''With India turning 60 on August 15, 2007, we have been reviewing the strides we have taken since Independence. On my part, since retirement, I have had the time to ruminate over a few questions that have perturbed me over the years. I cannot say that I have the answers, but I have been on the job of developing my own hypothesis.

It is commonly accepted that one Indian is a genius; two Indians, capable of being friends; three, politicking cannot be far behind; four, rest assured you have chaos. Just how did we acquire this reputation?"
'நண்டு கதையும்' கேள்விப்பட்டு இருக்கிறோம்...

இந்தக் கருத்தும், கதையும் உலகப் பொதுவானதா அல்லது நமக்கே உள்ள 'தனித்தன்மையா ' ?

வேற வேற மொழிகள், ஜாதிகள், மதங்கள், நாகரீகம், கலாச்சாரம், பண்பாடு ...... இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை!

இதலாம் நமது பலமா அல்லது பலவீனமா?

இந்த 'Somehow' என்ற சிந்தனைபோக்கு நம்ம 'இந்தியன் தாத்தா ' சொன்னது போல அலட்சியத்தின் ஆரம்பமா அல்லது நாம் அப்படிதானா?

இறுதியில்,

மாலன் அவர்களின் பதிவில் இராமகி அய்யா அவர்களின் பின்னூட்டம்...

".........................
பட்டால் ஒழிய யாருக்கும் வலி புரியாது.

பாலசுத்தீனர்கள் அடிபடும் போது நக்கல் செய்யும் அரபிகளை விரல்விட்டு எண்ணலாம். "வங்காள தேசிகள் " அடிபட்ட போது நக்கல் செய்த மேற்கு வங்காளிகளும் மிகக் குறைவே. ஒரு நாட்டு இலத்தீன் அமெரிக்க மக்கள் அடிபடும் போது, இன்னொரு நாட்டு இலத்தீன் அமெரிக்க மக்கள் நக்கல் செய்ததில்லை. ஆப்பிரிக்காவின் ஒருபக்கம் அடிபடும் போது இன்னொரு ஆப்பிரிக்கன் நக்கல் செய்ததில்லை . 35 கி.மீ.க்கு அப்பால் தமிழன் அடிபட்டால், இந்தப் பக்கத் தமிழர்கள் அதை அறியாமலும், அறிந்தாலும் புரியாமலும், இருக்கும் படி இங்கு ஒரு நக்கல் பொம்மலாட்டமே, மிடையத் துறையில் (media) நடந்து கொண்டிருக்கிறது.
......................."

மறுக்கமுடியாத வருத்தமான உண்மை...!

@@@

'விடுதலை'யில் மோடி அரசின் பாசிசம் என்ற தலைப்பில் ஒரு தலையங்கம்.

அதில்,
"ஆனாலும், அம்மாநில முதலமைச்சரான நரேந்திர மோடிக்கோ சுனிதா வில்லியம்ஸ் குஜராத் வருவதில் விருப்பமில்லை. ``சுனிதா இந்தியப் பெண் அல்ல - அவர் சாதனையால் நமக்கு ஒன்றும் பெருமை வந்துவிடப் போவதில்லை - அவர் வருகையை நான் அங்கீகரிக்க மாட்டேன்`என்று கூறிவிட்டார். .............

சுனிதாவின் பெயரை ஒட்டி வில்லியம்ஸ் என்று இருப்பது அவர் கண்களை உறுத்தக்கூடும்."
என்று ஆரம்பித்து நரேந்திர மோடியை 'பிடி பிடி' யென்று பிடித்துள்ளார்கள்.

குஜராத் மாநில முதலமைச்சர் சுனிதா வில்லியம்ஸ்யைப் பற்றி சொன்னதில் எது தவறு?

அவர் இந்தியப் பெண் அல்ல! - உண்மை!
அவர் சாதனையால் நமக்கு என்ன பெருமை? -- இதுவும் உண்மை!!

ஒருவரை பிடிக்கவில்லையென்றால் அவர் என்ன பேசினாலும் அதில் ஏதாவது தவறு கண்டுபிடித்து பாசிசம், மதவெறி, இந்துத்துவா பார்வை என்று திசைதிருப்புவதன் நோக்கம்தான் என்ன?

@@@