Pages

கனவே கலையாதே !

2008ல் நடக்க இருக்கிற ஜனாதிபதிக்கான தேர்தலின் முதல் விவாத களம்/மேடை போன மாதம், தென் கரோலினா (South Carolina) ல் நடந்தது. ஜனநாயக கட்சியில் (Democratic) இருந்து பத்து பேர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக இந்த விவாததில் கலந்து கொண்டனர்.


அதே போல, போன வாரம் கலிபோர்னியாவில் குடியரசு (Republican) கட்சியிலிருந்து பத்து பேர் அவர்களுடைய எண்ணங்களை மக்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

இன்னும் இது போல பல சுற்றுகள் இருக்குது.

முதலில் நடந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பிரைன் வில்லியம்ஸ் (Brian Williams - NBC News Anchor). ரொம்ப நிதானமா, அருமையா வருங்கால ஜனாதிபதிகிட்ட மக்கள் கேட்கணும் நினைச்ச கேள்விகளை கேட்டார். 'ஒரு காலத்தில' ரவி பெர்னாட் எப்படி கேள்வி கேட்பாரு.. இப்ப CNN-IBN ல Devil's Advocate நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிற கரண் (Karan Thapar) மாதிரி ........

பெரிதும் எதிர்பார்க்ககூடிய, ஹிலாரி கிளிண்டன், பராக் ஓபாமா (Obama) சுதந்திர கட்சியை சேர்ந்தவங்க...அது சரி.. அங்க யாரு வந்தா நமக்கென்ன..

அந்த நிகழ்ச்சியை பார்த்தப்ப, நம்ம ஊருலேயேயும் இது மாதிரி ஒரு வழக்கத்தை கொண்டு வந்தா எப்படி இருக்கும்? ஜெயலலிதா, கலைஞர், வைகோ, ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் (!) கிருஷ்ணசாமி, விஜயகாந்த் -னு எல்லாரும் ஒரே மேடையில வந்து ஞாநி அல்லது சுதாங்கன் மாதிரியான ஒருவரை அந்த நிகழ்ச்சியை நடத்த சொன்னா.....எப்படி பதில் சொல்வாங்க...?! அவுங்களுக்கே தெரியாதோ?

1.தமிழ் செம்மொழி, படத்துக்கு தமிழ் பேர வச்சா வரி விலக்கு-னு அபத்தமா தமிழை வளர்க்கிறோம்-னு சொல்லாமா வருங்கால தலைமுறைக்கு தமிழை மிகப்பெரிய தகவல் களஞ்சியமா 'விக்கிபசங்க மாதிரி'.... ச்..சே... 'விக்கிபிடியா' மாதிரி ஏதாவது பண்ணறதா எண்ணம் இருக்கா?

2. இலங்கையில இருக்கிற நம்ம சகோதர, சகோதரிகளுக்கு உதவுணும்-னு அக்கறை உண்டா? அப்படின்னா, இதில அக்கறையிருக்கவங்களைலாம் (நெடுமாறன் அய்யா, கனிமொழி, வைகோ, திருமா, .........) ஒரு அணி-யை உருவாக்கி மத்திய அரசுக்கு 'உண்மையான நிலவரத்தை' எடுத்து சொல்லலாமே?

3. காவிரி பிரச்சனையில ......அட பக்கத்து மாநிலத்த விடுங்க.... முதல நமக்குள்ள ஒற்றுமை இருக்கா? அதுக்கு என்ன பண்ணலாம்?

4. இரண்டு தடவை முதல்வராயிட்டா மத்தவங்களுக்கு வழி விடலாமே? ஏதோ உங்களைவிட்டா தமிழ் நாட்டை யாராலும் 'முன்னேத்த' முடியாதுகிற எண்ணம் உங்களுக்கு ஏன் வந்தது-னு தெரிஞ்சிகிலாமா?

5. இலவசம்-னு ஏதேதோ குடுக்கமா, கல்வியை குடுக்க வழி செய்வீங்களா?

6. 'உங்க குடும்பத்துக்காகதான் தமிழ் நாடு' கிறதை எண்ணத்தை விட்டுட்டு, தமிழ்நாட்டை எப்ப உங்க குடும்பமா பாக்க போறீங்க?

கடைசியா ஒரு சின்ன வேண்டுகோள்...

"இரத்ததின் ரத்தமே, என் உயிரின் மேலான உடன்பிறப்பே, தன்மானச்(?) சிங்கங்களே/தொண்டர்களே, என் ஒரு துளி வியர்வைக்கு தங்க காசு குடித்த தமிழ் மண்ணே" இப்படிபட்ட வார்த்தைகளை பயன்படுத்தாமா நடிக்க ....இல்ல...... பயன்படுத்தாம பேச முடியுமா?

8 மறுமொழிகள்:

  1. said...

    தி.மு.க நடத்துற விழாவுக்கு அ.தி.மு.க. பிரமுகர் போனாலே கட்டம் கட்டி ஓரமா உக்கார வச்சிடுவாங்க. இதுல கருணாநிதி,ஜெயலலிதா எல்லாம் ஒரே மேடையில உக்கார்ந்தா..யாகவா முனிவர், சிவசங்கர் பாபா பேட்டி தான் ஞாபகத்துக்கு வருது. தமிழ்நாட்டையே தூக்கி நிறத்தப் போறோம்னு சொல்லிக்கற ரெண்டு பெரிய கட்சித்தலைவர்களுக்கு ஒரே மேடையில ஒன்னா உக்காந்து ஆரோக்கியமா விவாதிக்கற மனப்பாங்கு,கண்ணியமோ இல்லை, இதுல எங்கேயிருந்து இதுங்கல்லாம் நாட்டை முன்னேற்றப் போகுதுங்க..

  2. said...

    வாங்க, மணிகண்டன்!

    /யாகவா முனிவர், சிவசங்கர் பாபா பேட்டி தான் ஞாபகத்துக்கு வருது./
    :)

    /.... விவாதிக்கற மனப்பாங்கு,கண்ணியமோ இல்லை/
    ம்ம்ம்ம்... அத சொல்லுங்க..

    ஏன் தேர்தல் ஆணையம் இதை வலியுறுத்தக் கூடாது?
    ஒரு காலத்தில் வேட்பாளர்கள் 'கணக்கு காட்டவேண்டும்' என்பதை நம்ப முடியாமல் இருந்தது. இப்பொழுது அது நடைமுறையில் இல்லையா? அதே போல் இதையும் செய்யலாமே?

  3. said...

    நடக்கும் தென்றல். முதல் முறை பார்த்தப்போ, என்னுள்ளும் இதே மாதிரியான ஆசைகள்(?) இருந்தது. மனிதனை மனிதன் என்று மதிக்கிறானோ அன்று இது சாத்தியம் தான். இந்தியாவில் ஒருவரை ஒருவர் ம(மி)திக்கும் நாகரிகம் இருக்கிறதா?

  4. said...

    வாங்க, காட்டாறு!

    /நடக்கும் தென்றல்./
    அதற்கான 'அறிகுறி'யே தெரியலையே-ங்க!
    ராகுல் காந்தியின் பேச்சும், அழகிரியின் 'அட்டகாசங்களும்'...

    நாம எங்கே போயிகிட்டு இருக்கோம்-னு தெரியலை? ம்ம்ம்ம்.. ;(

  5. said...

    நல்ல கற்பனை போங்க !!

    முன்னாள் & இந்நாள் முதல்வர்கள் ஒருத்தர ஒருத்தர் தாக்கி/நக்கலா அறிக்கை விடாம ஆக்கபூர்வமான பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்; வைகோ உணர்ச்சிவசப்பட்டு நடிக்காம (இல்ல பேசாம) இருக்கறதுக்கு வாய்ப்பே இல்ல.

    முதல்ல எல்லாரும் ஒண்ணா மேடைக்கு வந்தா ஒண்ணு யாகவா முனிவர், சிவசங்கர் பாபா பேட்டி மாதிரிதான் ஆகும்..இல்ல, விகடன்ல வர்ற ஜோக்கிரி.காம் மாதிரிதான் இருக்கும் :)

    கடைசியா இருக்கற உங்க வேண்டுகோளைப் படிச்சப்ப 'இருவர்' படத்து வசனம் ஞாபகத்துக்கு வருது "நாம பேச்சால மக்கள மயக்கித்தான் ஆட்சிக்கே வந்தோம்" அதுதான் இவங்களோட தாரக மந்திரம்னு நினைக்கிறேன்:)

  6. said...

    வாங்க, கதிரவன்!

    நம்ம தலைவரு, அப்துல் கலாம் 'கனவு காணுங்கள்' சொன்னாரே-னு.....

    ம்ம்ம்.. நல்ல கற்பனை, காமெடி-னு சொல்லிட்டீங்க.. ;(

  7. said...

    Nice post.

  8. said...

    Thanks, Nanba!

    I like your blog name:
    "Limited edition with Unlimited thoughts"