'தன்மத்ரா' [Thanmathra]
'வாய்ப்பு கிடைத்தால், 'தன்மத்ரா' [Thanmathra] -கிற மலையாள படம் பாரு' நண்பன் ஒருவர் சொல்ல, சமீபத்தில் இந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
இயக்குநர், Blessy..! சிறு வயசு-ஆம்..!! கதாநாயகன் - மோகன்லால்.
இப்படி ஒரு அழுத்தமான திரைக்கதை வைத்து மிக நேர்த்தியாக வடிக்க முடியும் என்பதைப் பார்த்த பொழுது ஆச்சரியமாகதான் இருந்தது.[மலையாளத்தில் மட்டும் எப்படி இது போல ஆட்களாம் வர்றாங்களோ? ]
2005-ல இந்தப் படத்திற்கு 5 கேரள விருதுகள் - சிறந்த படம், நடிகர், இயக்குநர், திரைக்கதை மற்றும் அறிமுக நடிகர் அர்ஜீன் லால்.
ஹ....ய்.... இது திரை விமர்சனம் இல்லைப்பா.... ஆ.....மா...ம்... ;)
இந்தப் படத்தின் நாயகனுக்கு அல்செய்மர்ஸ் (Alzheimer's) நோய்-னு தெரிய வருது. நான் இதுவரைக்கும், இந்த நோய் வயதானவர்களுக்கும் அதுவும் நம்ம மக்களுக்குலாம் வராது-னு நினைத்திருந்தேன்.
சமீபத்தில் இந்த நோயை பற்றி ஒரு கட்டுரை வாசித்தேன். அல்செய்மர்ஸ் (Alzheimer's) நோய் பற்றிய தவறான புரிதலும் சில உண்மைகளும் தெரிந்தது.
முதலில் அல்செய்மர்ஸ் நோய்-னா என்ன? மூளையை பாதிக்கும் இந்த நோய் ஞாபக மறதில் ஆரம்பித்து அவர்களுடைய தினசரி வாழ்க்கையையே பாதிக்கும். இந்த நோய் வயதானவர்களுக்கு மட்டுமே வரும் நோயல்ல... யாரையும் பாதிக்கலாம்.
அமெரிக்காவில் மட்டும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 5 மில்லியன் பேராம். இதில் 65 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம். இந்த நோய் 30 வயதுள்ளவர்களையும் பாதிக்கும் என்பது அதிர்ச்சி தகவல்.
'இந்த நோய் அதிகமான நபர்களுக்குதான் இல்லையே. எங்கேயோ.... எப்பதாவதுதான கேள்விபட்டதுண்டு.' அப்படி நினைச்சிங்கனா அது உண்மையில்லை. மார்பக புற்று நோய் மற்றும் prostate புற்றுநோயை விட இநத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிகம். முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி ரீகன், முன்னாள் இங்கிலாந்து பிரதம மந்திரி ஜேம்ஸ் வில்சன்...('தன்மத்ரா'-வுல மோகன்லால் !!) இப்படி பிரபலமானவர்களும் பாதிக்கப்பட்ட பட்டியலில் உண்டு.
அலுமினிய பாத்திரங்களினால் சமைத்தல், கோக், பெப்சி போன்ற (விஷக் கொல்லி !) குளிர் பானங்களை அலுமினிய கேன்களில் குடிப்பதால் வருகிறது என்று நம்பினார்கள். ஆனால், அலுமினியத்திற்கும் அல்செய்மர்ஸ்-கும் எந்த சம்பந்தமுல் இல்லை என்று சமீபத்தில் கண்டறிந்துள்ளார்கள்.
சரி...'ஞாபக மறதியை மட்டும்தான் பாதிக்கும். இது ஆளை கொல்லும் நோயல்ல-யா?' னா..... கொடுமையான, ஆட்களை கொல்லும் நோயில் இது ஏழாவது இடத்தில் உள்ளது. முதலில் இது மூளையின் செல்களை பாதிக்கும். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் எல்லா செல்களையும் பாதித்து உடம்பையே செயல் இழக்க செய்யும்.
அப்படினா... ஞாபக மறதியை தவிர வேறெந்த அறிகுறியும் இருக்காதா..... ? இந்த நோய் தீவிரமடைந்தால், மற்றவர்களின் உதவியில்லாமல் இவர்களால் நடக்க இயலாது. சிரிக்கவும், தலை தூக்கி பேசவுமே மிகவும் கஷ்டப்படுவார்கள்.
இந்த நோய் எதனால வருது... .. மருத்துவர்களால் இந்த நோயை கண்டறியவே முடியுதாமாமே? இந்த நோய் யாருக்கு எதனால வருது-னு இது வரைக்கும் கண்டு பிடிக்கலை-ங்கிறது உண்மைதான். சமீப காலத்தில் இந்த நோயை பற்றிய பல் வேறு ஆராய்ச்சி, படிப்பின் வழியாக நோயாளியை பல்வேறு பரிசோதனையின் மூலம் மருத்துவர்கள் எளிதாக கண்டறிய முடியும்-கிறது ஒரு ஆறுதலான செய்தி.
இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால், மருத்துவர்களின் ஆலோசனைபடி மருந்து சாப்பிட்டால் இந்த நோயின் தீவிர தன்மையை குறைக்கலாம். இதற்கான மருத்துவச் செலவு ரொம்பவே அதிகம்.
குணப்படுத்ததான் வழியே இல்ல... வராமா தடுக்க முடியமா? ம்ம்ம்... தினமும் உடற்பயிற்சி(?), கொழுப்புச் சத்து குறைவான (low-fat diet) சாப்பாடு, நம்ம சமைக்கிற உணவுல மஞ்சள் சேர்த்துகிறது..... இப்படி மொத்ததில 'நம்ம ஊரு' சாப்பாடு சாப்பிட்டா இதை தடுக்கலாம் போல.....
மேலும் விரிவான விவரங்களுக்கு:
http://www.actionalc.org & http://www.alzfdn.org/