Pages

வியாழன், ஜனவரி 31, 2008

ரசித்தது...

சமீபத்தில் நண்பனிடமிருந்து ஒரு மின் அஞ்சல்..

Car, Train . Lorry , Bus or Omnibus , Jeep --- இதலாம் தமிழ்ல என்ன..எப்படி சொல்றது..?

Car - மகிழுந்து
Train -- தொடருந்து
Lorry -- சரக்குந்து
Bus or Omnibus -- பேருந்து
Jeep -- வல்லுந்து

ஏன்னா.....

"Motor என்பதற்கான தமிழ்ச்சொல் - "உந்து" என்பதுதான். அதாவது உந்தித் தள்ளுவது என்று பொருள்படும்."

"I listened to music chosen Randomly in my Car audio cassette"? இதை எப்படி தமிழ்ல சொல்வனு கேள்விவேற... ம்ம்ம்

@


குளிர்சாத பெட்டியின் உள்ள வெள்ளை பலகையில், 'இந்த வாரம் என்ன வாங்க வேண்டும் ' என்று எழுதி வைப்பது என் மனைவியின் வழக்கம். அந்த பட்டியலில் என் ஐந்து வயது மகள் அவளுடைய விருப்பத்தையும் சேர்த்திருந்தாள்.

1. Cordless phone
2. Ipod Cover

3. toyrus
4. kitten
5. baby brother
6.doctor kit
7.yes india

@@


தமிழாக்கம்: "மகிழுந்து ஒலிப் பேழையில் எழுந்தமானமாக தெரிவு செய்யப்பட்ட இசையை செவிமடுத்தேன்."

(இதயும் அவனே சொல்லிட்டால ...தப்பித்தேன்;) ... ம்ம் கஷ்டம்தான்....)

வெள்ளி, ஜனவரி 11, 2008

மணல் கயிறு

புத்தாண்டுல தமிழ் வலைப்பூ 'ஒரு மார்க்கமா'தான் இருக்கு. வருட ஆரம்பத்திலேயே வித விதமான விளையாட்டு.

மொக்கைனு ஒரு விளையாட்டு ஆரம்பிச்சா, அதிலேயும் கலந்து கட்டி அடிக்கிறாங்க. சில பேரு துணுக்கு தோரணங்கள் போட்டா... சில பேரு 'கொசுவத்தி' சுத்துறாங்க...

ஆனா எல்லாரும் 'நாட்டாமை' மாதிரி அவுங்க அவுங்க எழுத்தை பத்தி சொல்ற ஒரே தீர்ப்பு.. 'நான் எப்பவுமே போடுறது மொக்கைதான்.. இதில மொக்கைனு ஒரு தனி பதிவு வேற போடணுமா?' கிறதுதான். (இதிலயாவது நாம ஒத்துமையா இருக்கோமே!!)

மங்கை ஒரு படி மேல போய் "புச்சா" வேற கண்டுபிடிச்சிருக்காங்க.

ஆனா, அவுங்க அவுங்களையே 'நான் போடுறது மொக்கைதான்.' அப்படினு சொல்லவைச்ச அந்த 'நல்லவர்' யாரப்பா?

என்னைகூப்பிட்ட நல்லவங்க.. மங்களூர் சிவா & கண்மணி

இதோ நம்ம பங்குக்கு......




ம்ம்.. நம்மளும் நாலு பேரை கூப்பிடணும்மாமே.....

1. வடுவூர் குமார்
2. நந்தா
2. விமலா
3. மா.சிவக்குமார்

வருவாங்களானு தெரியாது... கூப்பிட்டு வைப்போம்....

இது மொக்கையா இல்லையானு 'தீர்ப்பு' சொல்றது நம்ம கோபியாமே... !!

அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!

செவ்வாய், ஜனவரி 8, 2008

வண்ண வண்ண கோலங்கள் - III

இவ்வளவு பெரிய தொடரா(!!) வரும்னு எதிர்பார்க்கலை...ம்ம்ம்..!

வண்ண வண்ண கோலங்கள் - I

வண்ண வண்ண கோலங்கள் - II


சன் தொலைக்காட்சியில் 'தில்லான மோகனாம்பாள்' பார்த்துட்டு எனக்கு தோன்றியதை எழுத அதே அலைவரிசையில் அதே திரைப்படத்தை பற்றி வந்தது 'மங்கை'யின் பதிவு. அட என்று பார்க்க.... அவருடைய மற்ற பதிவுகள் மிகுந்த சமூக அக்கறையுடனும் விழிப்புணர்வு ஏற்படுத்தகூடியதாக இருக்க அதுவும் கூகுள் ரீடரில் சேர்ந்தது.

Ghost Rider என்ற ஆங்கில படம் என்ற நினைவு. தலைப்பைவைத்தே படம் பார்க்கலாமா வேண்டாமா என்று எளிதாக தீர்மானிக்ககூடிய படங்களில், பார்க்க வேண்டாம் என்று ஒதுக்கிய படம்தான். ஆனால் அந்த படத்தைப் பார்த்துட்டு அதற்கு விறு விறுப்பா விமர்சனம் எழுத முடியுமா...படத்தைவிட அவருடைய விமர்சனம் நன்றாக இருந்தது. அதுதான் "ஜி.ரா". அதுதான் அவருடைய எழுத்துகளில் முதல் அறிமுகம்.

முதல் முதலில் கிறுக்க ஆரம்பித்த பொழுது சில தவறுகளை சுட்டிக்காட்டியது ஜெஸிலா. அதற்குமுன்னே அவர் பதிவு அறிமுகம் என்றாலும் "நன்றி" சொல்ல வைத்தது அவர் சுட்டிகாட்டியவைகள்.

'லேட்டா தெரிந்தாலும் லேட்டஸ்டா' (கூகுள்) ரீடரில் சேர்ந்த பதிவுகள்:

செப்புப்பட்டயம் -- சோழர்கள் (!!)

தருமி -- எளிமை - அனுபவம் - ஊர்கூடி தேர் இழுக்கும் முயற்சி (இந்த வயதிலும் !!)

பூக்கிரி -- ஜாலி

வவ்வால் -- அவர் தலைப்புமாதிரிதான்..

CAP டெக்னாலஜிதான என்று எளிதாக ஒதுக்கிதள்ளமுடியாதது... Snapjudgement. மனுசன் எப்படிதான் இவ்வளவு விசயங்களை சேகரிக்கனும்னு ஆவலும், நேரமும் கிடைக்குதோ.. பெரிய விசயம்! பயங்கரமான சேகரிப்பு... அவருடைய e-tamil சமீபத்தில்தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பட்டாசு பாலு மாதிரி.... பாஸ்டன் பாலா! என்ன காலுல சரவெடி கட்டிட்டு மிரட்டலை...;)

அவர் பொண்ணுகிட்ட ஒரு கேள்வி: 'அப்பா தூங்கிறத பாத்திருக்கியா?'
அவரிடம் ஒரு கேள்வி: 'நீங்க தனிஆள் இல்லையா?'

விரும்பி படிக்கும்.. ஆனால் மறுமொழி போடும் அளவிற்கு 'வளரவில்லை' என்ற காரணத்தினால் கடந்து செல்லும் சில நண்பர்கள் தமிழ்நதி, டிசே தமிழன், அய்யனார் வரிசையில் இப்பொழுது புதுசாக விமலா !

இப்போதைக்கு இது போதும்....

சுபம்!!

பதித்த நாள்: டிசம்பர் 23, 2007